என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆரல்வாய்மொழியில் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்
- போலீசார் வராததால் சாலை மறியல்
- ஆரல் வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டதை யடுத்து ஒரு மணி நேரமாக நடந்த மறியல் போராட்டம் கை விடப்பட்டது. பொது மக்கள் பிடியில் இருந்த வாலிபர்கள் இருவரையும் போலீசார் அழைத்துச் சென்றனர்.
கன்னியாகுமரி,
ஜூன்.17-
ஆரல்வாய்மொழி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மோட்டார் சைக்கிள் மற்றும் நகைகள் திருடப்பட்டு வந்தது. தொடர்ந்து நடந்து வந்த கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பெருமாள்புரம் பகுதி யில் இரண்டு வாலி பர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் என்பரின் மோட்டார் சைக்கிளை திருட முயன்றனர். இதைப்பார்த்த அக்கம் பககத்தினர் சத்தம் போட்டனர். இதையடுத்து ஊர் பொதுமக்கள் அந்த இரு வாலிபர்களை பிடித்தனர்.
பிடிபட்ட வாலிபர்களை அந்தபகுதியில் உள்ள மின் கம்பத்தில் கட்டிவைத்தனர். பின்னர் இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அதிகாலை வரை போலீசார் அங்கு வரவில்லை.
இதனால் ஆத்திர மடைந்த ஆண்களும், பெண்களும் நாகர்கோவில்- திருநெல்வேலி ரோட் டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத்தின் காரண மாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நெல்லையில் இருந்து வந்த பஸ்கள் அனைத்தும் ஆரல்வாய்மொழியில் இருந்து செண்பகராமன்பு தூர், லாயம் வழியாக திருப்பி விடப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ெபாதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்திருந்த வாலிபர்கள் இருவரையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதித்த பிறகுதான் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் பிறகு ஆரல் வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டதை யடுத்து ஒரு மணி நேரமாக நடந்த மறியல் போராட்டம் கை விடப்பட்டது. பொது மக்கள் பிடியில் இருந்த வாலிபர்கள் இருவரையும் போலீசார் அழைத்துச் சென்றனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் ரெத்தினபுரத்தைச் சேர்ந்த ஜோசப் (வயது 20) என்பதும், மற்றொருவர் தடிக்காரன்கோணத்தைச் சேர்ந்த ஆகாஷ் (21) என்பதும் தெரிய வந்தது. இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்