search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • கொலை வழக்காக மாற்றம்
    • ஆரல்வாய் மொழி போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    பூதப்பாண்டி அருகே சீதப்பால் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஆன்றோ செபஸ்தியான் (வயது 50).

    இவர் சீதப்பால் பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இவரது கோழிபண்ணையில் இருந்த தார்ப்பாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது.இது தொடர்பாக சீதப்பால் மேற்கு தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணிய பிள்ளை (50) அவரது மகன் சங்கர் (30) ஆகியோருக்கும் ஆன்றோ செபஸ்டியானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த 17-ந்தேதி தந்தை-மகன் இருவரும் ஆன்றோ செபஸ்தியானிடம் தகராறு செய்தனர். ஆத்திரமடைந்த அவர்கள் இரும்பு கம்பியால் ஆன்றோ செபஸ்தியானை சரமாரியாக தாக்கினார்கள். காயமடைந்த ஆன்றோ செபஸ்தியானை சங்கர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆன்றோ செபஸ்தியன் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டார்.

    இது குறித்து ஆரல்வாய் மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சங்கர், சிவசுப்பிரமணிய பிள்ளை மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.சங்கரை போலீசார் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆன்றோ செபஸ்தியான் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. பலியான ஆன்றோ செபஸ்தியான் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கி றது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் துறைமங்கலம் அணுகு சாலை அருகே நேற்று மதியம் 3 மணியளவில் நின்று கொண்டிருந்த லாரியில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, பெரம்பலூர் போலீசார் லாரியில் இறந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் திருப்பத்தூர் மாவட்டம், சித்தேரியை சேர்ந்த பாபு (வயது 55) என்பதும், அவர் தான் அந்த லாரி டிரைவர் என்பதும் தெரியவந்தது. பாபு நேற்று முன்தினம் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இருந்து லாரியில் கண்ணாடி பொருட்களை ஏற்றி கொண்டு மதுரையில் இறக்கி விட்டு மீண்டும் சென்னை செல்வதற்காக நேற்று அதிகாலை புறப்பட்டார். அப்போது காலை 11 மணியளவில் பாபு தனது லாரி மேலாளருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். அதற்கு மேலாளர் பாபுவிடம் பெரம்பலூரிலேயே லாரியை நிறுத்தி விட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓய்வெடுக்கும்படி கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதியம் லாரியிலேயே பாபு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார் என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

    • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர்

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ராஜமணி (வயது 75).

    இவர் சம்பவத்தன்றுஇரவு கொட்டாரம் பெருமாள்புரம் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் இவர் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்ப த்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனும திக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில்கன்னியாகுமரி போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

    பின்னர் அவரது உடல்ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்பிரேதபரிசோதனைசெய்யப்பட் டது. இது குறித்து கன்னியா குமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.
    • எதிர்பாராதவிதமாக தவறி உள்ளே விழுந்தவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகேயுள்ள பெத்தனபள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). இவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக தவறி உள்ளே விழுந்தவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி மங்கம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல கோவிந்தன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் (64) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பெங்களூரு-சேலம் சாலையில் ஆவின் மேம்பாலம் அருகே சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து அடிபட்டு உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது உறவினர் கார்த்திக் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இளையபெருமாள் நல்லூர் கிராமத்தைச் சேர்ந் தவர் கொளஞ்சி. இவருக்கும் இவரது மனைவி ராணி. இவர்களுக்கு திருமணமாகி சுமார் 28 ஆண்டுகள் ஆகி–றது. இந்த தம்பதியருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில் இரண்டு பேருக்கு திருமணம் ஆகிவிட்டது.இந்த நிலையில் கொளஞ்சி குவைத் நாட்டில் கடந்த 12 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற் பட்டது. இதையடுத்து மேற் கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இரு–தயத்தில் ரத்த அடைப்பு இருந்தது கண்டு–பிடிக்கப் பட்டது. இதற்காக அவர் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண் டார். அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்து, பூரண குணமடைந்தால் மலேசியாவில் உள்ள முருகன் கோவிலுக்கு வரு–வதாக கொளஞ்சி வேண்டி–யிருந்தார். இதையடுத்து அவர் ரூ.40 ஆயிரம் செலவு செய்து சுற்றுலா விசாவில் மலேசியா முருகனை வழிப–டுவதற்காக கடந்த 8 -ந்தேதி புறப்பட்டு சென்றார். இதற்கிடையே மலேசியா–வில் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அங் குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனும–திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கேயே உயிரிழந்தார். இந்நிலையில் இறந்த கொளஞ்சி உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்து முறைப்படி அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனைவி ராணி மற்றும் மகன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குமாரபாளையம் நாராயண நகர் பகுதியில் வசிப்பவர் கணேசன் (வயது 70). இவரது மனைவி தங்கம்மாள் (65). இருவரும் கூலி வேலை செய்பவர்கள். வயது முதிர்வின் காரணமாக இருவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் முடியாமல் போகவே தற்கொலை செய்து கொள்ள இருவரும் முடிவு செய்துள்ளனர்.
    • கடந்த 13-ந் தேதி மாலை இருவரும் ஒன்றாக விஷம் குடித்து உள்ளனர். இதனால் வீட்டில் மயங்கி கிடந்தனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நாராயண நகர் பகுதியில் வசிப்பவர் கணேசன் (வயது 70). இவரது மனைவி தங்கம்மாள் (65). இருவரும் கூலி வேலை செய்பவர்கள். வயது முதிர்வின் காரணமாக இருவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் முடியாமல் போகவே தற்கொலை செய்து கொள்ள இருவரும் முடிவு செய்துள்ளனர்.

    கடந்த 13-ந் தேதி மாலை இருவரும் ஒன்றாக விஷம் குடித்து உள்ளனர். இதனால் வீட்டில் மயங்கி கிடந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், கணேசன்-தங்கம்மாள் தம்பதியின் மகன் சரவணனுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த சரவணன், பெற்றோரை மீட்டு, பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தங்கம்மாள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவ குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பஸ் ஒன்று அவர்கள் மீது மோதிவிட்டது.
    • இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    கிருஷ்ணகிரி, 

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் அசோக் (வயது 32). இவரது நண்பர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விஜய் (20). இருவரும் தனியார் நிறுவன தொழிலாளிகள்.

    நேற்று தங்களது புல்லட்டில் தளி-ஓசூர் சாலையில் சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் ஒன்று அவர்கள் மீது மோதிவிட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த தளி போலீசார் விரைந்து சென்று அசோக், விஜய் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து அசோக்கின் தந்தை நாகப்பா கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    கரும்பாலை எஸ்.எம்.பி. காலனியை சேர்ந்த ரங்கநாதன் மகன் மகேஸ்வரன் (30).இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்தார்.

    இந்த நிலையில் மீண்டும் சேர்ந்து வாழ மனைவிக்கு அழைப்பு விடுத்தார். அதற்கு அவர் மறுத்துவிட்டார்.மனமுடைந்த மகேசுவரன் வீட்டில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தாயார் சிவகாமி கொடுத்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    நடத்தினர்.

    மேல பொன்னகரம் 5-வது தெருவை சேர்ந்தவர் விக்டர் பால்ராஜ்(70). இவர் தத்தனேரி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி முன்பு சைக்கிளில் சென்றபோது தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.அவரை சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மகன் பிராங்கிளின் டேவிட் ஜெபராஜ் கொடுத்த புகாரின்பேரில் செல்லூர்போலீசார் வழக்குப்பதிவு செய்து மு விசாரணை நடத்தினர்.

    தத்தனேரி களத்துப்பொட்டல் பர்மா காலனியை சேர்ந்தவர் செல்லதுரை(51). டிரைவர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. கொன்னவாயன் சாலையில் சென்றபோது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    வைகை வடகரை ஆர்.ஆர்.மண்டபம் மேளக்கார தெருவை சேர்ந்த முத்துமணி மகன் யோகேசுவரன் (14). மாற்றுத்திறனாளியான இவர் வீட்டில் இருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே சிறுவன் யோகேசுவரன் பரிதாபமாக உயிரிழந்தான். மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாற்றுத்திறனாளி சிறுவனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • கடந்த 7 வருடங்களாக குடும்ப பிரச்சினை காரணமாக ஜோதி கணவரை பிரித்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
    • பூச்சி மருந்து குடித்து மணிகண்டன் மயங்கி விழுந்து கிடந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது35). இவரது மனைவி ஜோதி (30). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் கடந்த 7 வருடங்களாக குடும்ப பிரச்சினை காரணமாக ஜோதி கணவரை பிரித்து தனது தாய் வீடான ஜக்கசமுத்திரம் கூட்ரோடு பகுதியில் வசித்து வருகிறார்.

    குடும்பம் நடத்த வருமாறு அடிக்கடி ஜோதியை வீட்டிற்கு சென்று கணவர் அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார்.

    நேற்று மீண்டும் மணிகண்டன் தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அங்கு அவர் மறுத்துள்ளதால் ஜக்கசமுத்திரம் கூட்ரோடு பகுதியில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.

    இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நட்தி வருகின்றனர்.

    • திருச்சி அருகே ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிகிச்சை பெற்ற பெண் பலியானார்
    • இந்த சம்பவம் குறித்து நம்பர் ஒன் டோல்கேட் போலீசார் தொடர்ந்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சியை அடுத்த நம்பர் ஒன் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் பிச்சை. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவரது மனைவி புஷ்பம் (வயது 64). நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த புஷ்பத்திற்கு இன்று அதிகாலை 1.30 மணி அளவில் திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவரை கணவர் பிச்சை மற்றும் மகன் அசோக் ஆகிய இரு–வரும் நம்பர் ஒன் டோல் கேட் பகுதியில் உள்ள தனி–யார் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திடீரென்று மேல் சிகிச்சைக்காக செக்போஸ்ட் அருகில் உள்ள அவர்களுடைய மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் புஷ்பத்தை அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புஷ்பத் திற்கு தொடர்ந்து மூச்சு திணறல் ஏற்பட்டு கொண்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு ஆக்சிஜன் செலுத்த அந்த மிஷினை செயல்படுத்தும் பொழுது திடீரென்று பிரசர் அதிகமாகி ஆக்சி–ஜன் வெளியேறும் சிலிண்டர் வெடித்தது. இந்த சம்ப–வத்தில் புஷ்பா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புஷ்பாவின் மகன் அசோக் நம்பர் ஒன் டோல்கேட் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தனியார் மருத்துவமனை தனது தாய்க்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்றும், மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் ஊழியர்கள் இல்லாமல் அலட்சியமாக செயல்பட்டதால் இந்த சம்பவம் நடந்தது என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து நம்பர் ஒன் டோல்கேட் போலீசார் தொடர்ந்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.


    • பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • பேக்கரி குடோனில் பூச்சி மருந்து குடித்து விட்டு மயங்கி விழுந்து கிடந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், வெள்ளோலை பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மகன் சுரேஷ் (வயது26). இவர் கிருஷ்ணாபுரம் அருகே ஏ.முருக்கம்பட்டி பகுதியில் உள்ள பேக்கரியில் வேலைபார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அங்குள்ள பேக்கரி குடோனில் பூச்சி மருந்து குடித்து விட்டு மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த உடன் இருந்தவர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதியவர் திடீரென பரிதாபமாக இறந்தார்.
    • இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் திருமலைசாமி (வயது 72). இவர் தனது வீட்டில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    ×