search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சம்பவத்தன்று 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சிகிச்சை பெற வந்திருந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சம்பவத்தன்று 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சிகிச்சை பெற வந்திருந்தார். இந்த நிலையில் அவர் மருத்துவமனை வளாகத்திலேயே திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அந்த முதியவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம்-கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் சாலையை கடக்க முயற்சித்த போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஸ்கூட்டர் மீது மோதியது.
    • இதில், சாந்தி கண்ணெதிரே தங்கமணி சம்பவ இடத்தில் உடல்நசுங்கி பலியானார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம், கொல்லப்பட்டி பகுதியில் வசிப்பவர் சாந்தி(வயது 42). டைலர். இவரது தங்கை தங்கமணி(38). இவர்கள் இருவரும் குமார பாளையம் வந்து விட்டு, ஊருக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றனர்.

    சேலம்-கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் சாலையை கடக்க முயற்சித்த போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், சாந்தி கண்ணெதிரே தங்கமணி சம்பவ இடத்தில் உடல்நசுங்கி பலியானார்.

    சாந்தி படுகாயங்களுடன் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • ஆரூர்பட்டி கிராமம், சேடப்பட்டி வாடன்வளவு பகுதியை சேர்ந்த விவசாயி வெள்ளைய கவுண்டர் (வயது 70). இவர் வீட்டில் 10 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.
    • ஆடுகள் கழுத்து, தொடை ஆகிய இடங்களில் ரத்த காயங்களுடன் கீழே விழுந்து துடி துடித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    தாரமங்கலம்,:

    தாரமங்கலம் அருகிலுள்ள ஆரூர்பட்டி கிராமம், சேடப்பட்டி வாடன்வளவு பகுதியை சேர்ந்த விவசாயி வெள்ளைய கவுண்டர் (வயது 70). இவர் வீட்டில் 10 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார், நேற்றுமுன்தினம் வழக்கம் போல் ஆடுகளை இரவு வீட்டிற்கு வெளியே கட்டி வைத்து விட்டு தூங்க சென்றுள்ளார், பிறகு அதிகாலை நான்கு மணியளவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வெள்ளைய கவுண்டர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளார், அப்போது ஆடுகள் கழுத்து, தொடை ஆகிய இடங்களில் ரத்த காயங்களுடன் கீழே விழுந்து துடி துடித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கம் உறவினர்களை அழைத்து பார்த்த போது ஏற்கனவே நான்கு ஆடுகள் இறந்து விட்ட நிலையில் மூன்று ஆடுகள் பலத்த காயங் களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆடுகளை காப்பாற்ற வேண்டி அமரகுந்தி அரசு கால்நடை மருத்துவர்களுக்கு கொடுத்த தகவளின் படி சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர், சம்பவம் குறித்து கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பீதியில் உள்ளனர்.

    • தொட்டியம் அருகே நீரில் மூழ்கிய மாமியாரை காப்பாற்ற முயன்ற மருமகன் பலியானார்
    • விஜயாவை காப்பாற்ற வந்த போது செந்தில்குமார் ஆழமான பகுதிக்கு சென்று எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர் அருகே உள்ள மேலமஞ்சமேட்டு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் பாலாஜி (வயது30). இவரது தம்பி கோகுல் மனைவி வளைகாப்பிற்கு சென்னை முகப்பேர் 13வது குறுக்குத் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மனைவி விஜயா (48) மற்றும் இவரது மருமகன் காஞ்சிபுரம் மாவட்டம் புதிய பெரும் களத்தூர் சீனிவாசன் தெருவை சேர்ந்த அருணாச்சலம் மகன் செந்தில்குமார்(30) ஆகிய இருவரும் சென்னையில் இருந்து வந்துள்ளனர்.

    செந்தில்குமார் சென்னையில் ஒரு தனியார் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். வளைகாப்பு முடிந்தவுடன் விஜயா, செந்தில்குமார், பாலாஜி மற்றும் அவரது நண்பன் தனசேகரன் ஆகியோர் ஸ்ரீராம சமுத்திரம் பெரிய வாய்க்காலில் குளித்துள்ளனர். இதில் விஜயா ஆழமான பகுதிக்குச் சென்று மாட்டிக்கொண்டு சத்தம் போடவே செந்தில்குமார் மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் விஜயாவை காப்பாற்ற வந்த போது செந்தில்குமார் ஆழமான பகுதிக்கு சென்று எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

    பின்பு அவர் ஸ்ரீராமசமுத்திரம் மருதாயி கோயில் அருகே பெரியவாய்க்காலில் பிணமாக மிதந்துள்ளார். இவருக்கு தாரணி என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. தாரணி தற்பொழுது 8 மாத கர்ப்பிணியாக உள்ளதால் வளைகாப்புக்கு வரவில்லை. இதுகுறித்து விஜயா காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காட்டுப்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    • தாரமங்கலம் அருகே பாப்பம்பாடி கிராமம் கரட்டூர் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகில் ஓடும் சரப்பங்கா நதியில் இன்று காலை 6 மணியளவில் ஆண் உடல் ஒன்று மிதந்தது.
    • இவர் கடந்த 2 வருடங்களாக குடும்பத்தை பிரிந்து தனியாக பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்துள்ளார் என்பதும், இந்த நிலையில் அவர் மர்மமான முறையில் இறந்துள்ளதும் தெரியவந்தது.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பாப்பம்பாடி கிராமம் கரட்டூர் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகில் ஓடும் சரப்பங்கா நதியில் இன்று காலை 6 மணியளவில் ஆண் உடல் ஒன்று மிதந்தது.

    இதை கண்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பாப்பாம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாரமங்கலம் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் ஆற்றில் இறங்கி கயிறு கட்டி உடலை மீட்டனர். தொடர்ந்து அவரது பேண்ட், சட்டையை சோதனை செய்ததில் அவரது பாக்கெட்டில் இருந்த ஆதார் அட்டை, வாக்காளர் அட்டையை கைப்பற்றினர்.

    சேலத்தை சேர்ந்தவர்

    விசாரணையில் அவர், சேலம் எருமாபாளையம், களரம்பட்டி பகுதியை சேர்ந்த சுப்ரமணி- வசந்தி தம்பதியரின் மகன் சங்கர் (வயது 38) என்பதும், திருமணம் ஆகாதவர் என்பதும் தெரியவந்தது. இவர் கடந்த 2 வருடங்களாக குடும்பத்தை பிரிந்து தனியாக பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்துள்ளார் என்பதும், இந்த நிலையில் அவர் மர்மமான முறையில் இறந்துள்ளதும் தெரியவந்தது.

    சங்கர் பிணமாக மிதந்த இடத்தின் அருகில் அரசு மதுபான கடை உள்ளது. இதனால் சங்கர் மதுகுடிக்க வந்த இடத்தில் போதையில் தவறி ஆற்றில் விழுந்து விட்டாரா? அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து ஆற்றில் வீசினார்களா? என பல்வேறு கோணங்களில் தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த சங்கர் உடலை ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

    • சாமியார்மடம் சந்திப்பு பகுதியில் சென்ற போது விபத்து
    • தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து தொடர்பாக விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள ஏற்றக்கோடு கண்ணன்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகண்டன் (வயது 31), தொழிலாளி.

    இவர் நேற்று தக்கலையில் பணி செய்துள்ளார். பின்னர் இரவில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குப் புறப்பட்டார். தக்கலையில் இருந்து மார்த்தாண்டம் சாலையில் ஸ்ரீகண்டன் சென்றார்.

    சாமியார்மடம் சந்திப்பு பகுதியில் சென்ற போது, பின்னால் டாரஸ் லாரி வந்தது. அந்த லாரி எதிர்பா ராதவிதமாக, ஸ்ரீகண்டன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்ரீகண்டன் பலத்த காயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிேசாதனை செய்த டாக்டர்கள், ஸ்ரீகண்டன் இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து அவரது சகோ தரர் மஞ்சாடி பாலு, தக்கலை போலீசில் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த விரிகோடு பகுதியைச் சேர்ந்த டிரைவர் தனேந்திரன் (36) என்பவரை கைது செய்தனர்.

    • விருதுநகர் அருகே நடந்த விபத்தில் ஆட்டோ டிரைவர்-முதியவர் பலியாகினர்.
    • வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்,

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 38). ஆட்டோ டிரைவர். இவர் விருதுநகர் அருகில் உள்ள வச்சககாரப்பட்டிக்கு சவாரி சென்று விட்டு மீண்டும் பந்தல்குடி திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையை கடக்க முயன்றார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக ஆட்டோவை மாரிமுத்து வேகமாக திருப்பினார். இதில் ஆட்டோ நிலைதடுமாறி முதியவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

    மேலும் இந்த விபத்தில் ஆட்டோவை திருப்ப முயன்ற போது ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் மாரிமுத்துவின் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து மாரிமுத்துவின் மனைவி தனலட்சுமி அளித்த புகாரின் பேரில், வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • திருச்சி பஞ்சப்பூரில் வடநாட்டு இளம்பெண் பரிதாப உயிழப்பு
    • போலீசார் தீவிர விசாரணை

    திருச்சி, 

    மேற்கு வங்காளம் மாநிலம் தஸ்தின் தினாஸ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் குர்குரு சுரைன்.இவரது மகள் கோனிகா (வயது 19). இவர் திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணியில் உறவினர்களுடன் ஈடுபட்டு வந்தார். மேலும் கோனிகா உள்ளிட்ட தொழிலாளர்கள் அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் கோனிகா கோழிக்கறி சாப்பிட்டுள்ளார். பின்னர் அடுத்த சில நிமிடங்களில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மீண்டும் உடல்நிலை சரியில்லாததால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர் .இது குறித்து கே.சாத்தனூர் கிராம நிர்வாக அதிகாரி குமாரவேல் கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த கோனிகா ஹோட்டலில் சிக்கன் கறி வாங்கி சாப்பிட்டாரா அல்லது வீட்டுக்கு கறி வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டாரா என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.திருச்சியில் கோழிக்கறி சாப்பிட்டு இளம்பெண் இறந்த பரிதாப சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
    • சாலை விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.

    கரூர்

    திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 71). இவர் சம்பவத்தன்று தனது மொபட்டில் பெட்ரோல் போடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி மொபட்டில் இருந்து கீழே விழுந்த சின்னச்சாமி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயம் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சின்னச்சாமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து சின்னச்சாமியின் மனைவி காமாட்சி கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்துள்ளது.
    • மாநகராட்சி தூய்மை பணியாளர் ஆசிட் குடித்து உயிரிழந்தார்.

    திருச்சி:

     திருச்சி கல்லுக்குழி 1-வது தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 49). திருச்சி மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் விரக்தி அடைந்த சிவலிங்கம் வீட்டு பாத்ரூமுக்கு வைத்திருந்த ஆசிட்டை எடுத்து குடித்தார்.உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சிவலிங்கம் இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி தேன்மொழி கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

    • கல்லூரியில் படிக்கும் சகோதரியை பார்க்க தந்தையுடன் வந்த போது விபத்தில் பலியான சோகம்
    • டிரைவர் மீது போலீசார் வழக்கு

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சை இறச்சகுளம் சாஸ்தா நகரைச் சேர்ந்த சொக்கலிங்கம் ஓட்டிச் சென்றார். பெரு விளையை சேர்ந்த பத்ம குமார் கண்டக்டராக பணி யாற்றினார். பஸ்சில் 50- க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    ஆரல்வாய்மொழி பஸ் நிறுத்தம் அருகே பஸ் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சாலையோர கடைகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், கார் மற்றும் ஆட்டோ மீது பஸ் அடுத்தடுத்து மோதியது.

    இதையடுத்து பொது மக்கள் சிதறி ஓடினார்கள்.அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் நெல்லை மாவட்டம் மூலக்கரைபட்டியைச் சேர்ந்த ஜெயபால் (வயது 46) தனது மகள் மகராசி (23)யுடன் வந்தார். அவர்கள் மீதும் தாறுமாறாக ஓடிய பஸ் மோதியது. இதில் அவர்கள் இருவ ரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த மகராசி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார். தன் கண் முன்பு மகள் இறந்ததை பார்த்து ஜெயபால் கதறி அழுதார். அக்கம் பக்கத்தினர் விரைந்து செயல்பட்டு படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆரல்வாய் மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள். மகராசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் பஸ் டிரைவர் சொக்கலிங்கம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜெயபாலின் 3-வது மகள் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். அவரை பார்ப்ப தற்காக தனது 2-வது மகள் மகராசியுடன் ஜெயபால் வந்துள்ளார். அப்போது தான் விபத்தில் சிக்கி மகராசி பலியாகி உள்ளார்.

    சகோதரியை பார்க்க வந்த இடத்தில் மகராசி பலியான சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படு த்தி உள்ளது. பலியான மகராசியின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

    • மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை போலீசார் தேடுகிறார்கள்
    • தக்கலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடக்கிறது

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே முளகுமூடு, மணலிவிளை பகுதியை சேர்ந்தவர் டக்ளஸ் (வயது 55). கூலி தொழிலாளி.

    டக்ளசின் மனைவி வனஜா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று இரவு டக்ளஸ் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு பொருள் வாங்க முளகுமூட்டுக்கு சென்றார். அப்போது முப்பதாங்கல் மெயின் ரோட்டில் வரும் போது எதிரே வந்த வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட டக்ளசை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது சம்மந்தமாக மனைவி வனஜா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் உடலை கைப்பற்றி தக்கலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் டக்ளஸ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் ஏது என அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×