search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் பகுதியில் தனது உறவினர்களுடன் கடந்த 3 மாதங்களாக கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
    • சம்பவத்தன்று இவர் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தபோது கரும்பு சருகுக்குள் இருந்த கட்டுவிரியின் பாம்பு இவரை கடித்துள்ளது.

    பரமத்தி வேலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே துறையூர் பகுதியை சேர்ந்தவர் ஆதிசிவம். இவரது மகன் சக்திவேல் ( வயது 22 ), கூலித்தொழிலாளி.

    இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் பகுதியில் தனது உறவினர்களுடன் கடந்த 3 மாதங்களாக கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று இவர் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தபோது கரும்பு சருகுக்குள் இருந்த கட்டுவிரியின் பாம்பு இவரை கடித்துள்ளது. அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சக்திவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி கண் எதிரே பரிதாபம்
    • கன்னியா குமரி போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    மத்தியபிரதேசம் மாநிலம் தார் திரியா பகுதியைச் சேர்ந்தவர் மதன்சிங் தாகூர் (வயது 72).

    இவர் மனைவி நர்மதா தாகூர் உள்பட 120 பேருடன் 2 பஸ்களில் நேற்று மதியம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார் வையிட்டனர்.

    அதன்பிறகு அவர்கள் கன்னியாகுமரியி ல் உள்ள சன்செட் பாயிண்ட் கடலில் குளித்துஉள்ளனர். அப்போது "திடீர்"என்று மதன்சிங் தாகூர் தனது மனைவி கண் எதிரே மயங்கி விழுந்து உள்ளார்.

    இதைப் பார்த்து அவரது மனைவி மற்றும் அவருடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை அவரது உறவினர்கள் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் கன்னியா குமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால் மதன் சிங் தாகூர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார்அங்குவிரைந்து சென்று பிணத்தைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கன்னியா குமரி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறியபோது நிலைதடுமாறி காவலாளி பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் வீரணன் (வயது 58). இவர் கப்பலூரில் உள்ள உணவ கத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

    நேற்று இரவு பணிக்கு சென்றிருந்த வீரணன் இன்று அதிகாலை 5 மணிக்கு வேலையை முடித்துக் கொண்டு உறவி னர் சிங்கம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். வீரணன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணம் செய்தார்.

    மறவன்குளம் மெயின் ரோட்டில் சென்றபோது அங்குள்ள வேகத்தடை மீது மோட்டார் சைக்கிள் ஏறியது. அப்போது வீரணன் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி ரோட்டில் தவறி தலைகுப்புற விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த வீரணன் சம்பவ இடத்திலயே பரிதாப மாக இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுந்தரம் நகரை சேர்ந்தவர் குடும்ப பிரச்சினையில் மகனுடன் விஷம் குடித்த பெண் பலியானார்.
    • குடும்ப பிரச்சினை காரண மாக தேவராஜை மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் மன முடைந்த தேவராஜ் தனது தாயுடன் சேர்ந்து விஷம் குடித்தது தெரிய வந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுந்தரம் நகரை சேர்ந்தவர் கிருஷ்ண வேணி (வயது 65). இவரது மகன் தேவராஜ் (24). இவர்கள் இருவரும் நேற்று வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு அவர்க ளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் கிருஷ்ணவேணி உயிரி ழந்தார். தேவராஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.குடும்ப பிரச்சினை காரண மாக தேவராஜை மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் மன முடைந்த தேவராஜ் தனது தாயுடன் சேர்ந்து விஷம் குடித்தது தெரிய வந்தது. இந்த சம்பவம்

    குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணைநடத்தி வருகிறார்கள்.

    • வாகனம் மோதி இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
    • மேலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலூர்

    மதுரை-திருச்சி 4 வழிச்சாலை கூத்தப்பன்பட்டிபகுதியில் சர்ச் உள்ளது. இந்த சர்ச் அருகே நேற்று இரவு நடந்து சென்ற இளம்பெண் மீது நாகர்கோவிலில் இருந்து திருச்சி சென்ற மினி வேன் மோதி சென்றது. இதில் அந்த இளம்பெண் படுகாயம் அடைந்தார். அந்த இடத்தில் நிற்காமல் சென்ற மினி வேன் டிரைவர் திருச்சி முண்டூரை சேர்ந்த இருதயராஜ் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். சம்ப2வ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் கலா சேகர் உள்ளிட்ட போலீசார் படுகாயம் அடைந்த அந்த பெண்ணை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த பெண் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என தெரியவில்லை.

    மேலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சம்ப–வம் குறித்து பாலக்கரை போலீ–சார் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.
    • பாலக்கரை மேம்பாலத்தின் மையப்பகுதியில் வைத்து வழிம–றித்து தலை மற்றும் உடல் உள்ளிட்ட பல்வேறு பகு–திகளில் சரமாரியாக வெட்டினர்.

    திருச்சி:

    திருச்சி பீமநகர் யானைக் கட்டி மைதானம் பகுதி–யைச் சேர்ந்தவர் சிவனேசன் (வயது 55). உறையூர் பகு–தியில் அரிசி ஆலை வைத்துள்ளார். சில தினங்க–ளுக்கு முன்பு இவர் தனது வீட்டிலிருந்து பாலக்கரை நோக்கி இருசக்கர வாக–னத்தில் சென்றுள்ளார். அவரைப் பின்தொடர்ந்து 2 இருசக்கர வாகனங்களில் சென்ற 6 பேர், பாலக்கரை மேம்பாலத்தின் மையப் பகுதியில் வைத்து வழிம–றித்து தலை மற்றும் உடல் உள்ளிட்ட பல்வேறு பகு–திகளில் சரமாரியாக வெட்டினர்.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவனேசனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். பின்னர் தேவேந்தி–ரகுல வேளாளர் அமைப்பைச் சேர்ந்த திருச்சி மாவட்டம் லால்குடி நடராஜபுரத்தை சேர்ந்த கலைபுலி ராஜா (27) தஞ்சாவூர் சேர்ந்த வீரமணி (26) முசிறியை சேர்ந்த அமர்நாத் (24) மண்ணச்சநல்லூர்ரை சேர்ந்த பரமகுரு (22) மங்கானத்தை சேர்ந்த மணிகண்டன் (22) ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் சென்னையை சேர்ந்த நவீன் (25) என்பவரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனை–யில் சிகிச்சை பெற்று வந்த சிவனேசன் சிகிச்சை பலன–ளிக்காமல் இன்று பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சம்ப–வம் குறித்து பாலக்கரை போலீ–சார் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.


    • சேலம் அம்மாபேட்டை சாமிநாதபுரம் பகுதியில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.
    • இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி, கணேசன் சாமிநாதபுரம் பகுதியில் மயங்கி கிடந்தார். போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். இன்று அதிகாலை கணேசன் பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை ராஜ கணபதி நகரை சேர்ந்தவர் கணேசன். இவர் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து சேலம் பள்ளப்பட்டி பகுதியில் தனியாக வசித்து வந்தார். மேலும் பழைய இரும்பு பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி, கணேசன் சாமிநாதபுரம் பகுதியில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அந்த பகுதியினர் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இன்று அதிகாலை கணேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆடிட்டர் தீக்குளித்து உயிரிழந்தார்
    • உடல் கருகிய அவரை ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

    திருச்சி,

    திருச்சி கே.கே.நகர் பெரியார் நகர் ஆர்.பி.எப்.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தேவசகாயம். இவரது மகன் அமுல்ராஜ்(வயது 36). ஆடிட்டரான இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், பெரம்பலூர் மாவட்டம் புது பஸ் நிலையம் அருகில் வெங்கடேசபுரத்தைச் சேர்ந்த ரோஸ்லின் சுகன்யா (வயது 30) என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அவரது மனைவி ரோஸ்லின் சுகன்யா தனியாக பிரிந்து தாய் வீட்டில் சென்று வசித்து வருகிறார். இதற்கிடையில் அவரது குடும்பத்தில் சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த நிலையில் இருந்த ஆடிட்டர் அமல்ராஜ் சம்பவத்தன்று திருச்சி ரயில்வே ஜங்ஷன் நுழைவாயில் அருகே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவர் ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருச்சி கண்ேடான்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார். இறந்து போன ஆடிட்டர் அமுல்ராஜ் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    • சம்பவத்தன்று சுப்பிரமணி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
    • டாக்டர் பரிசோதனை செய்து விட்டு சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள விண்ணப்பள்ளி தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (63). இவருக்கு கடந்த ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லை.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சுப்பிரமணி திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரது மனைவி சுசீலா சுப்பிரமணியை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • டிப்பர் லாரி எதிர்ப்பாராத விதமாக டூவீலர் மீது மோதியது
    • சிகிச்சை பலனின்றி பிரசன்னா பரிதாபமாக இறந்தார்

    திருச்சி :

    திருச்சி திருவாசி அருகே உள்ள மான்பிடி மங்கலம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் பிரசன்னா (வயது 27) தங்கை மோனிகா (25). இரண்டு பேரும் வேலை விஷயமாக இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டு திருச்சி ஓயாமரி சுடுகாட்டு சாலையில் வந்து கொண்டு இருந்தனர். அப்பொழுது அவர்களின் பின்புறம் வந்த டிப்பர் லாரி எதிர்ப்பாராத விதமாக இவர்கள் மீது மோதியது. இதில் பிரசன்னா தலையில் பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பிரசன்னா பரிதாபமாக இறந்தார். மோனிகா லேசான காயத்துடன் உயிர்த்தபினார். இந்த விபத்து சம்பவம் குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரி, டிரைவரை தேடி வருகின்றனர்.


    • சீருடை அணிந்த நிலையிலே தூய்மை பணியாளர் பட்டு உயிரிழந்தார்
    • ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை சேர்ந்தவர் பட்டு(வயது 53). இவர் வேப்பந்தட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். அப்போது தனது சக தூய்மை பணியாளர்களிடம், தனது உயிர் பிரிந்தாலும், துப்புரவு பணியாளர் சீருடையில் இருக்கும்போதே பிரிய வேண்டும் என்று பலமுறை கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென பட்டுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவரை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பட்டு உயிரிழந்தார். அவர் உயிர் பிரியும் நிலையில் தூய்மை பணியாளர் சீருடையிலேயே இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


    • வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது விபரீதம்
    • தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழந்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் தெற்கு பகுதியை சேர்ந்த தம்பதியர் மகாவிஷ்ணு, காளியம்மாள். இவர்களுக்கு சாகீப்தியா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சாகீப்தியா அருகில் தண்ணீர் நிரப்பப்பட்ட அன்ன கூடையில் தலைக்குப்புற விழுந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். வீட்டில் விளையாடிய குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    ×