search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • திருமணமான 3 வருடத்தில் கோமதி இறந்த தால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
    • கோமதி தனது குழந்தை க்கு கொடுப்பதற்காக உணவு தயார் செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    கோவை:

    திருச்சியை சேர்ந்தவர் சரவணன். டிரைவர். இவரது மனைவி கோமதி (வயது 22). கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. 11 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் கோவை பீளமேடு அருகே உள்ள சின்னி யம்பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர்.

    சம்பவத்தன்று கோமதி தனது குழந்தை க்கு கொடுப்பதற்காக உணவு தயார் செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கோமதியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 3 வருடத்தில் கோமதி இறந்த தால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

    • பரமத்திவேலூர் அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்
    • விவசாயி இறந்துகிடந்தது குறித்து வீட்டின் உரிமையாளர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் அருகே தாளக்கரையில் சுதா என்பவரது வீட்டில் விவசாயி செல்வராஜ் என்பவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். தகவல் அறிந்த செல்வராஜின் மனைவி மற்றும் அவர்களது உறவினர்கள் நல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

    புகாரின் அடிப்படையில் நெல்லூர் போலீசார் சுதாவை கைது செய்து செல்வராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் செல்வராஜ் எப்படி இறந்தார் என்பது தெரியவரும்

    • வாலிபர் டோல்கேட் அருகே ரோட்டை கடக்க முயன்ற பொழுது ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து திடீரென அவர் மீது மோதியது.
    • அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் பகுதியில் டோல்கேட் அமைந்துள்ளது. இந்த டோல்கேட் பகுதியில் அடையாளம் தெரியாத சுமார் 30 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு வாலிபர் அடிக்கடி சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.

    சம்பவத்தன்று இரவு அந்த வாலிபர் டோல்கேட் அருகே ரோட்டை கடக்க முயன்றள்ளார். அப்பொழுது ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து திடீரென அவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலை மற்றும் உடலில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சூறாவளி காற்றால் நிலைதடுமாறி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
    • இந்த சம்பவம் குறித்து அவரது தம்பி முருகன் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ராய பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது65). இவருடைய மனைவி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ராஜேந்திரன் மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ராயபாளையம் கிராமத்தில் நடந்துசென்றார். அப்போது சூறாவளிக்காற்று வீசியுள்ளது. இதில் ராஜேந்திரன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது தம்பி முருகன் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் கிச்சிப்பாளையத்தில் இன்று காலை வாயில் நுரை தள்ளியபடி தொழிலாளி இறந்து கிடந்தார்.
    • மேலும் அதிகமாக மது குடித்ததால் அவர் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் நாராயணநகர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 50), தொழிலாளியான இவர் நேற்றிரவு குடி போதையில் வீட்டில் தூங்கினார்.

    இன்று காலை வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற ேபாலீசார் அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அதிகமாக மது குடித்ததால் அவர் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கிணற்றில் தவறி விழுந்த சலவை தொழிலாளி உயிரிழந்தார்.
    • கல்லூரி வளாக கிணற்றில் தவறி விழுந்தார்

    பெரம்பலூர்:

    சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள உடையார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(வயது 45). இவர், பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சலவைத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில், கல்லூரி வளாகத்தில் உள்ள கிணற்றில் ராஜா நேற்று தவறி விழுந்து உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, ராஜாவின் உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ராஜாவின் மனைவி மணிமேகலை கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • குளத்தில் விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
    • குளத்துப்பகுதியில் சென்றவர் திடீரென காணவில்லை.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் காட்டுப்பட்டி ஊராட்சி நல்லம்மாள் நகர் பகுதி சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் ஆனந்த் (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் புதுவளவு பகுதியில் உள்ள ஹாலோ பிளாக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் பொன்-புதுப்பட்டி அருகே அம்பலகாரன் கண்மாயில் நேற்று மதியம் கடையில் வைத்திருந்த தனக்கு சொந்தமான சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்வதாக கிளம்பி உள்ளார். சேங்கை ஊரணி மேற்கு பகுதியில் உள்ள அம்பலகாரன் கண்மாய் அருகே சென்றதை உறவினர்கள் பார்த்துள்ளனர். மேலும் குளத்துப்பகுதியில் சென்றவர் திடீரென காணவில்லை.

    மேலும் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளும் அவர் அணிந்திருந்த செருப்பும் கரையில் கிடந்தது தெரிய வந்தது. நீண்ட நேரம் ஆகியும் கரைக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினர் ஆனந்தை தேட ஆரம்பித்துள்ளனர். மேலும் தகவல் அறிந்து வந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்புப்படை வீரர்கள் பாதாலக்கரண்டி மூலம் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது ஆனந்த்தின் உடல் சிக்கியது. சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்வம் பொன்-புதுப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

    • வாகனம் மோதி முதியவர்கள் பலியானார்.
    • டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூர் காலனியை சேர்ந்தவர் பிள்ளையார் பாண்டி(78). இவர் தேனீர் அருந்துவதற்காக மதுரை-ராஜபாளையம் சாலையில் நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    டி. கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

    மற்றொரு விபத்து

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள எம்.சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்(80). இவர் வடக்கு காலனி பகுதியில் உள்ள உறவினரை பார்த்து விட்டு திருமங்கலம்- கொல்லம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    எம்.சுப்புலாபுரம் விநாயகர் கோவில் எதிரே நடந்து வந்தபோது சலுப்பபட்டியை சேர்ந்த கோபால்(50) ஒட்டி வந்த இருசக்கர வாகனம் முதியவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முதியவர் ஈஸ்வரனை ஆட்டோ மூலம் பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஈஸ்வரன் மகன் சீனிராஜ் கொடுத்த புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய கோபால் மீது டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்பெண் பஸ் மோதி பலியானார்.
    • நிற்காமல் சென்ற அரசு பஸ் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த முத்து முனியாண்டி மகள் அமிர்தம் (26). இவர் நேற்று இரவு தோழியுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். திண்டுக்கல் மெயின் ரோட்டில் சென்றபோது புது விளாங்குடி அருகே, வேகமாக வந்த அரசு பஸ் மோதியது. இதில் அமிர்தம் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அரசு பஸ் சக்கரத்தில் சிக்கியவர், பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். இருந்தபோதிலும் அரசு பஸ் நிற்காமல் சென்று விட்டது. அமிர்தத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிற்காமல் சென்ற அரசு பஸ் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அவரது உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறி அடுத்த குதிரைப்பந்திவிளை பகுதியை சேர்ந்தவர் செல்லபெருமாள். இவரது மனைவி செல்லதங்கம் (வயது 65). இவர் மகன் ஸ்ரீகுமார் பராமரிப்பில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் செல்லத்தங்கம் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள ஊத்துக்குளி குளத்திற்கு குளிக்க சென்றார்.‌ அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பவே இளைஞர்கள் செல்லதங்கம் உடலை மீட்டு ஆட்டோவில் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், செல்லதங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து ஸ்ரீகுமார் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டத்தில் தந்தையின் இறுதி சடங்கிற்கு செல்லமுடியாததால் விரக்தியில் மது குடித்த வாலிபர் குட்டையில் தவறி விழுந்து பலியானார்.
    • வெங்கடேஷ் லாரிக்கு வடமாநிலம் சென்று விட்ட நிலையில் அவரால் தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள பவளத்தானுர் ரவுண்டானா அருகில் குட்டையில் ஆண் பிணம் கிடப்பதாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தாரமங்கலம் போலீசார் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இறந்தவர் கொங்கணாபுரம் அருகிலுள்ள அத்தியப்பனுர் பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகன் வெங்கடேஷ் (வயது36) லாரி டிரைவர் என்பது தெரியவந்தது. வெங்கடேஷின் தந்தை முத்து கடந்த 15 நாட்களுக்கு முன்னர் இறந்து விட்டார் . அந்த வேளையில் வெங்கடேஷ் லாரிக்கு வடமாநிலம் சென்று விட்ட நிலையில் அவரால் தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.

    பின்னர் தனது வீட்டிற்கு செல்லும் போது பவளத்தானுர் ரவுண்டானா பகுதியில் உள்ள பாலத்தின் மீது அமர்ந்து அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார் .மதுபோதை அதிகமாக மயங்கி குட்டையில் விழுந்தவர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது .

    இதுபற்றி வெங்கடேஷின் தாயார் பாவாய் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மதுரை விடுதியில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லிப்பூடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). இவர் நேற்று மதுரை வந்திருந்தார். அவர் மேல பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கினார்.

    அதன்பிறகு நீண்ட நேரமாக அவர் தங்கிய அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் நிர்வாகிகள் திடீர்நகர் போலீசில் புகார் செய்தனர்.

    அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தனர். அங்கு செந்தில்குமார் படுக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×