search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    தாரமங்கலம் அருகே குடிபோதையில் மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி பலியானர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள பாப்பம்பாடி சந்தை பேட்டை அருகே உள்ள அரசு மதுபான கடை அருகே நேற்று மாலை 48 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார்.

    இது குறித்து குடிமகன்கள் தாரமங்கலம் போலீசாறுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி அங்கு சென்று தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம் (48) என்பதும், அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் போதையில் மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. ஆறுமுகம் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

    தாரமங்கலம் அருகே தனியார் பஸ் மோதி தொழிலாளி பலியானார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி–லுள்ள சின்னசோரகை கிராமம் தேங்காய் கோட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் கோபி (வயது 25) கல் உடைக்கும் தொழிலாளி.

    நேற்று இவர் நாயக்கன்பட்டி சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். சின்னப்–பம்பட்டி அருகிலுள்ள அய்யனாரப்பன் கோவில் அருகில் வந்தபோது ஈரோட்டில் இருந்து ஓமலூர் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து கோபியின் மோட்டார்சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது.

    இதில் தூக்கி வீசப்பட்ட கோபி தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குமாரபாளையத்தில் விஷம் குடித்து தொழிலாளி இறந்தார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சாலையில் வசித்து வந்தவர் நந்தகுமார் (வயது 45), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் கண் பார்வை சரியாக தெரியாது என்று கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று மது குடித்து விட்டு வந்த நந்தகுமாரை வீட்டில் கண்டித்தனர். இதனால் நந்தகுமார் மதுவுடன், விஷம் கலந்து குடித்ததாக தெரிகிறது. சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளி அவர் மயங்கி விழுந்தார்.

    பின்னர் அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்–பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று நந்தகுமார் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருமங்கலம் அருகே தொட்டிலில் இருந்து தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.
    • ஜீவ புனிதா தனது மகளை வீட்டில் கட்டி இருந்த தொட்டிலில் தூங்க வைத்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள செங்கபடையை சேர்ந்தவர் சரவணக்குமார், தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஜீவபுனிதா. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. 2 வயதில் பிரியதர்ஷினி என்ற மகள் இருந்தாள்.

    சம்பவத்தன்று ஜீவ புனிதா தனது மகளை வீட்டில் கட்டி இருந்த தொட்டிலில் தூங்க வைத்தார். அப்போது திடீரென பிரியதர்ஷினி தொட்டிலில் தவறி விழுந்தாள். தலையில் பலத்த காயம் அடைந்த குழந்தை அழுதது.

    உடனே ஜீவபுனிதா மற்றும் அக்கம் பக்கத்தினர் குழந்தையை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட குழந்தை பிரியதர்ஷினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள்.

    இதுதொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் திடீர் சாவு உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர்.

    சேலம்:

    சேலம் தாசநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்.இவரது மனைவி கலைவாணி (வயது 34). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கலைவாணி மீண்டும் கர்ப்பமானார்.

    நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து கடந்த 24-ந் தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் பரிதாபமாக இறந்தார். இதனைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    டாக்டர்களின் தவறான சிகிச்சையால் தான் அவர் இறந்து விட்டதாக புகார் கூறினர். மேலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விவரங்களை அளிக்க வேண்டும் என்றும் கூறினர். இதை அடுத்து கலைவாணி உடல்சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

    பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் உடலை வாங்க மறுப்பதால் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதையொட்டி கூடுதல் போலீசார் அரசு ஆஸ்பத்திரியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • கோவிந்தராஜை பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • பெயர் பலகை கான்கிரீட் திட்டின் மீது கார் மோதியது.

    காங்கயம்:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள பெரும்மாயூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 42). இவர் குண்டடம் அருகே உள்ள காடைபண்ணையில் மேலாளராக வேலை செய்து வந்தார். இவர் சொந்த ஊரில் நடைபெறும் திருவிழாவுக்கு செல்ல முடிவு செய் தார். அதன்படி கோவிந்தராஜ், அவருடைய மனைவி கோமதி (38), மகன் நிரஞ்சன் (10) ஆகியோருடன் கோவில் திருவிழாவுக்கு சென்றார்.

    பின்னர் அங்கிருந்து காரில் கொடுவாய் புறப்பட்டனர். இவர்களுடைய கார் தாரா புரம் - திருப்பூர் சாலை கொடுவாய், வெங்கடாஜலபதி தோட்டம் அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக நெடுஞ்சாலையில் அமைக்கப்பட் டுள்ள பெயர் பலகை கான்கிரீட் திட்டின் மீது கார் மோதியது.

    இந்த விபத்தில் கோவிந்தராஜூக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கோவிந்தராஜை பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    காயம் அடைந்த கோமதி மற்றும் நிரஞ்சன் இருவரும் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஊதியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார்

    கோவை,

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 63). இவர் கடந்த 2015-ம் ஆண்டு அங்கு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. முதலில் சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.பின்னர் கனகராஜ் கடந்த ஜனவரி மாதம் முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் அவர் நீரிழிவு, வலிப்பு உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு அவர் சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிறையில் இருந்த அவர் திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார்.

    இதனை கண்ட சிறை அதிகாரிகள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் கைதிகளுக்கான வார்டில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×