search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடையம்"

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
    • திறப்பு விழாவிற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.

    கடையம்:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கடையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, கடையம் தெற்கு ஒன்றியம் சார்பாக அமைக்கப்பட்டிருந்த தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    விழாவிற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். விழாவில் கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட துணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன், கடையம் ஒன்றிய நிர்வாகிகள் சசிகுமார், புகாரி மீரா சாகிப், வின்சென்ட் பால், முல்லையப்பன் சுரேஷ், கோபி, கமல், முருகன், தமிழரசி, ரம்யா, ஆவுடை கோமதி, பிரமு, பிரபா, அந்தோணிசாமி,சதாம் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குளத்தில் இருந்து செங்கல் சூளைகளுக்கு மண் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • தப்பியோட முயன்ற 3 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

    நெல்லை:

    கடையம் அருகே உள்ள மாதாபுரத்தில் உள்ள ஒரு குளத்தில் சட்டவிரோதமாக செங்கல் சூளைகளுக்கு குளத்து மண் அள்ளப்படுவதாக கடையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஜே.சி.பி. எந்திரம் மூலமாக டிராக்டர் மற்றும் டிப்பர் லாரியில் குளத்து மண்ணை சிலர் அள்ளிக்கொண்டிருந்தனர்.

    போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்ற நிலையில் அவர்களில் 3 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். ஒருவர் தப்பியோடிவிட்டார்.

    பிடிபட்ட 3 பேரிடமும் நடத்திய விசாரணையில், ஜே.சி.பி. உரிமையாளர் கீழமாதாபுரத்தை சேர்ந்த குருபிரசாத்(வயது 23), லாரி டிரைவர் சென்னல்தா புதுக்குளத்தை சேர்ந்த அய்யாத்துரை, டிராக்டர் டிரைவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த கொல்லன் சர்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து அவர் களை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக லாரி மற்றும் டிராக்டர் உரிமை யாளரான கடையம் அருகே உள்ள செட்டியூரை சேர்ந்த பொன்ராஜை வலைவீசி தேடி வருகின்றனர். மண் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி., டிராக்டர், டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • பாரதி நினைவு நகர் பகுதியில் அரசு அனுமதி பெறாமல் ‘அண்டர்கிரவுண்ட்’ கட்டிடம் கட்டப்பட்டதாக தெரிகிறது.
    • அண்டர்கிரவுண்ட் கட்டிடத்தால் அருகே உள்ள வீடுகள், மருத்துவமனைக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    கடையம்:

    முதல் -அமைச்சரின் தனிப்பிரிவுக்கு கடையம் பகுதி பொதுமக்கள் சார்பாக அனுப்பபட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடையம்-தென்காசி சாலையில் மருத்துவமனை அருகே சேர்வைகாரன்பட்டி ஊராட்சி பாரதி நினைவு நகர் பகுதியில் அரசு அனுமதி பெறாமல் 'அண்டர்கிரவுண்ட்' கட்டிடம் கட்டப்பட்டதாக தெரிகிறது. இந்த கட்டிடத்தால், மழை பெய்யும் நாட்களில் அருகே உள்ள குளத்தில் மழைநீர் தேங்கும் போது கட்டிடத்தின் அண்டர் கிரவுண்ட் பகுதியில் நீர் கசிந்து மண்சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் அருகே உள்ள வீடுகள் மற்றும் மருத்துவமனை பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் இது குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • கோவிந்தபேரி நடுத்தெருவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
    • புதிய சிமெண்ட் சாலையை ஊராட்சிமன்ற தலைவர் டி.கே. பாண்டியன் திறந்து வைத்தார்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட கோவிந்தபேரி ஊராட்சியில், நடுத்தெருவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 17.48 லட்சத்தில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. ஊராட்சிமன்ற தலைவர் டி.கே. பாண்டியன் தலைமை தாங்கி சிமெண்ட் சாலையை திறந்து வைத்தார்.

    விழாவில் துணைத்தலைவர் இசேந்திரன், வார்டு உறுப்பினர் இளவரசி பார்த்திப கண்ணன், பொன்னுத்தாய் முருகன், ஓய்வு பெற்ற ஆசிரியர் பூலோக பாண்டியன் மாணிக்கம், மக்கள் நலப்பணியாளர் கிருஷ்ணன், மாரித்துரை, குமார், தங்கசாமி பாண்டியன், தங்க தேவர், வெள்ளத்துரை பாண்டியன், சுப்பையா பாண்டியன், என்.எஸ். மணியன், காளிமுத்து, முப்புடாதி கணேசன், சப்ரி, சாமுவேல், அந்தோணி, பிரியா, அன்னம்மான், தேன்மொழி, இசக்கியம்மாள், ராணி லெட்சுமி, சத்யா, ஊராட்சி செயலர் மூக்காண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தோரணமலை விலக்கு அருகே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.

    கடையம்:

    கடையம் வடக்கு ஒன்றியம் பெரும்பத்து ஊராட்சி மாதாபுரம் சோதனைசாவடி தோரணமலை விலக்கு அருகே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்றது.

    கனிமொழி எம்.பி.

    மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளரும் கடையம் யூனியன் துணை சேர்மனுமான மகேஷ்மாயவன் வரவேற்றார். இதில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகச்சாமி, ஒன்றிய அவைத்தலைவர் ரவி, ஒன்றிய துணைசெயலாளர்கள் பிரமநாயகம், கஸ்தூரி சுடலைமணி, ஸ்டெல்லா முருகன், பொருளாளர் அஜிஸ், மாவட்ட பிரதிநிதிகள் மதிவாணன், ரவி சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர்கள் அற்புதராஜ், ஆதம் சுபைர், விவசாய அணி துணை அமைப்பாளர்கள் குமார், கருணாநிதி, விளையாட்டு மேம்பாட்டு அணி முத்தரசி, காளித்துரை, ஹிலால் பள்ளி செயலாளர் அகமது ஈசாக், ஒன்றிய கவுன்சிலர் பாலக செல்வி பாலமுருகன் மற்றும் ஊராட்சி தலைவர்கள் மதியழகன், ஜீனத்பர்வின் யாகூப், கிளை செயலாளர்கள் லெட்சுமணன், நவாஸ்கான், நிர்வாகிகள் ரவிசங்கர், பாலாஜி, அலி, முகம்மது நூர், ஆறுமுகம், குணா, கபடி மகேஷ், ராம்ராஜ், தளபதி மணி, காமாட்சி, ராஜசிவகணேஷ், முத்துகிருஷ்ணன், சங்கர்ராம், அஸ்லிம், சைமன்ஜோ, கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாப்பான்குளம் கிராமத்தில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்ட ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • கட்டிடம் கட்டும் இடத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடையம்:

    கடையம் யூனியன் பாப்பான்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ. 20 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்ட மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கி உள்ளார். இதையடுத்து பாப்பான்குளம் கிராமத்தில் பல்நோக்கு கட்டிடம் கட்டும் இடத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது, அமைப்பு செயலாளர் ராதா, மாவட்ட செயலாளர் கணபதி மற்றும் கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பலர் உடன் சென்றனர்.

    • சவுந்தரராஜன் தனது வீட்டின் சுற்றுபுறம் தென்னந் தட்டிகளால் வேலி அமைத்துள்ளார்.
    • தீ மளமளவென பரவி தென்னந்தட்டிகள் முழுவதும் எரிந்து சாம்பலாயின.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள மேட்டூர் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது53). பாத்திர வியாபாரி. இவரின் வீட்டின் சுற்றுபுறம் தென்னந் தட்டிகளால் வேலி அமைத்துள்ளார்.

    இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர், தென்னந்தட்டிகள் மீது தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதில் தீ மளமளவென பரவி தட்டிகள் முழுவதும் எரிந்து சாம்பலாயின. தட்டிகள் முழுவதும் எரிந்து சாம்பலாகி கிடப்பதை கண்ட சவுந்த ரராஜன் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் கடையம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஞாயிறு பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • 3-ந் தேதி சேகர அளவிலான பெண்கள் பண்டிகை நடைபெற்றது.

    கடையம்:

    கடையம் அருகே மேட்டூர் பரி.திரித்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை நடைபெற்றது. கடந்த 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் ஆயத்த ஆராதனை நடைபெற்றது. இதில் செங்கோட்டை சேகர தலைவர் கலந்து கொண்டு செய்தி அளித்தார். பின்னர் ஞாயிறு பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 3-ந் தேதி (சனிக்கிழமை) காலையில் சேகர அளவிலான பெண்கள் பண்டிகை நடைபெற்றது. இதில் அருள் சோபா குழுவினர் கலந்து கொண்டு பண்டிகையை நடத்தினர். இதையடுத்து நேற்று காலையில் நடை பெற்ற பண்டிகை ஆராதனையில் இந்திய மிஷனெரி சங்க தேசிய பணித்தள ஒருங்கிணைப்பாளர் குரு இம்மானுவேல் பால் செய்தி அளித்தார். தொடர்ந்து ஐக்கிய விருந்து நடை பெற்றது. பண்டிகை ஆரா தனையில் சேகர தலைவர் கிங்ஸ்லி ஜான் ஸ்டீபன், கவுரவ குரு லதா கிங்ஸ்லி, குரு வானவர்கள் சில்வா ன்ஸ், ராபர்ட் ,ஜெயமணி மேட்டூர் சேகர குரு ஜோயல் ஷாம் மெர்வின்,ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், சேகர செயலர் செல்வராஜ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் டேவிட் செல்வராஜ், சிம்சோன் தேவதாசன் மற்றும் சேகர கமிட்டி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சியில் 7 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டது.
    • பயனாளிகளுக்கு கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் பெரும்பத்து ஊராட்சியில் இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தலைமை தாங்கி சபரி நகர், மேட்டூர், ஸ்டாலின் நகர், கானாவூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 7 பேருக்கு இலவச பட்டாக்களை வழங்கினார். கிராம நிர்வாக அதிகாரி அரிகரன் முன்னிலை வகித்தார். பயனாளிகளுக்கு கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில் கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகியும், தொழிலதிபருமான பரமசிவன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • விழாவில் சிறுவர்-சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • 100-க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு பகவத்கீதை இலவசமாக வழங்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள மயிலப்பபுரம் பெரியம்மன் கோவிலில் இந்து சமய பண்பாட்டு வகுப்பு 15 நாட்கள் நடைபெற்றது. விழாவில் இந்து சமய பண்பாடு குறித்து விளக்கப்பட்டது. நிறைவு விழா நிகழ்ச்சியாக சிறுவர்-சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் கவுன்சிலர் பிரபாகரன், சந்திரசேகர், வெங்கடாம்பட்டி ஊராட்சி தலைவர் சாருகலாரவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    விழாவில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு பகவத்கீதை இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் மதிய உணவு வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை திருமால், அசோக், முத்துகுமார், கொடியரசன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • கோவிலூற்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள் உள்ளிட்டோருக்கு மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • மருத்துவர் பாண்டியராஜன், செவிலியர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சைகள் அளித்தனர்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டி ஊராட்சி கோவிலூற்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோர்களுக்கான மருத்துவ சிகிச்சை முகாம் ஊராட்சிமன்ற தலைவர் சாருகலா ரவி தலைமையில் நடைபெற்றது.

    ஊராட்சிமன்ற துணைத் தலைவர் சித்ரா பாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் அரசு மருத்துவர் பாண்டியராஜன் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சைகள் அளித்தனர்.

    • கண் பரிசோதனை முகாமை முன்னாள் எம்.பி. ராமசுப்பு தொடங்கி வைத்தார்.
    • கண் குறைபாடுகள் உள்ள நோயாளிகளை கண்டறிந்து இலவச கண்ணாடிகளும், பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட கோவிந்தபேரி ஊராட்சியில் ஐஸ்வர்யா கண் பரிசோதனை மையம் மற்றும் கோவிந்தபேரி ஊராட்சி மன்றம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் டி.கே. பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு முகாமினை தொடங்கி வைத்தார்.

    இதில் கண் குறைபாடுகள் உள்ள நோயாளிகளை கண்டறிந்து இலவச கண்ணாடிகளும், பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் ஊராட்சி துணைத் தலைவர் இசேந்திரன், சுப்பையா பாண்டியன், சுடலை முத்துப்பாண்டியன், மாரித்துரை, சிங்ககுட்டி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×