search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடையம்"

    • கூட்டமைப்பு தலைவர் டி.கே .பாண்டியன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

    கடையம்:

    கடையம் யூனியன் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் 14 -வது கூட்டம் யூனியன் வளாகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் டி.கே .பாண்டியன் தலைமை தாங்கினார்.மூத்த தலைவர்கள் அழகு துரை, ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் முகமது உசேன் வரவேற்றார். கூட்டத்தில், ஊராட்சிகளில் நிலுவையில் உள்ள நிதி பற்றாக்குறையை தமிழக அரசு உடனடியாக சீரமைக்க வேண்டும், கலைஞர் வீடு, பிரதமர் வீடு, இலவச ஆடு, மாடு ஆகியவற்றை வழங்க வேண்டும், ஊராட்சி மன்ற தலைவருக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும், குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளையும் மற்றும் அனுமதிச்சீட்டு ஆய்வு ,அனுமதி வழங்க ஊராட்சி மன்ற தலைவருக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொட்டல் புதூர் கணேசன், தெற்கு கடையம் முத்துலட்சுமி ராமதுரை, கீழாம்பூர் மாரிசுப்பு, மேலாம்பூர் குயிலி லட்சுமணன்,திருமலையப்பபுரம் மாரியப்பன், பாப்பான்குளம் முருகன், தெற்கு மடத்தூர் பிரேம ராதா ஜெயம், மடத்தூர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், துப்பாக்குடி செண்பகவல்லி ஜெகநாதன் , மந்தியூர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் நன்றி கூறினார்.

    • கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை, நோய்களுக்கு சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து டானிக் வழங்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட கடையம் பெரும்பத்து ஊராட்சி அலுவலக வளாகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமை கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை, நோய்களுக்கு சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து டானிக் முதலானவைகளை மருத்துவ அலுவலர் சகானா வழங்கினார்.முகாமில் கடையம் பெரும் பத்து தி.மு.க நிர்வாகி பரமசிவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன் மூலம் மேட்டூர், வெய்க்காலிப்பட்டியைச் சேர்ந்த கால்நடை விவசாயிகள் 30க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

    • சனிப்பிர தோஷத்தை யொட்டி சுவாமி -அம்பாள் மற்றும் நந்திக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது.
    • பிரதோஷத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பின்னர் சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியை தரிசனம் செய்தனர்.

    கடையம்:

    கடையம் நித்திய கல்யாணி அம்பாள் உடனு றை வில்வவன நாத சுவாமி கோவிலில் சுவாமி அம்பாளுக்கு வருடந்தோறும் ஐப்பசி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் சனிப்பிரதோஷத்தை யொட்டி சுவாமி -அம்பாள் மற்றும் நந்திக்கு மஞ்சள் அபிஷேகம், தயிர் அபி ஷேகம், பால் அபிஷேகம், தேன் அபிஷேகம், சந்தன அபிஷேகம், பன்னீர் அபி ஷேகம், இளநீர் அபிஷேகம், விபூதி அபிஷேகமும் நடை பெற்றது. பின்னர் புஷ்ப அலங்காரம்,ஆராதனைகள் நடைபெற்றது.

    பிரதோஷத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பின்னர் சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியை தரிசனம் செய்தனர்.

    சுவாமி- அம்பாள் திருக்கல்யாணத்தை கல்யாணசுந்தர பட்டர் நடத்தி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரி சனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    • கடையம் பெரும்பத்து ஊராட்சியில் பனை விதை நடும் விழா நடைபெற்றது.
    • பனைவிதைகளை ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் நட்டு தொடங்கி வைத்தார்.

    கடையம்:

    கடையம் யூனிய னுக்குட்பட்ட கடையம் பெரும்பத்து ஊராட்சியில் பனை விதை நடும் விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தலைமை தாங்கி பனைவிதைகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    மேட்டூர் - தோரணமலை செல்லும் சாலையில் சுமார் 800 பனைவிதைகள் நடப்பட்டது.இதில் வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன் ராணி, வேளாண்மை அதிகாரி அபிராமி, இணை வேளாண்மை அலுவலர் சுப்புராம், உதவி வேளாண்மை அலுவலர் கிருஷ்ண மூர்த்தி, தொழில் நுட்ப அதிகாரி கிருஷ்ணமூர்த்தி , கடையம் பெரும்பத்து தொழிலதிபர் பரமசிவன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தேசிய நீடித்த நிலையான வேளாண் இயக்கம் திட்டத்தின் கீழ் விவசாயிகள் மேளா நடைபெற்றது.
    • அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் நாகராஜன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    கடையம்:

    கடையம் வேளாண்மை -உழவர் நலத்துறை சார்பில் அணைந்த பெருமாள்நாடானூர் ஊராட்சிக்குட்பட்ட செல்லப்பிள்ளையார்குளம் கிராமத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண் இயக்கம் திட்டத்தின் கீழ் விவசாயிகள் மேளா நடைபெற்றது. தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் நல்லமுத்துராஜா (மத்திய, மாநில திட்டங்கள்) தலைமை தாங்கினார். துணை வேளாண்மை அலுவலர் சுப்ராம் வரவேற்று பேசினார். கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி இத்திட்டம் பற்றி விளக்க உரையாற்றினார்.

    அணைந்த பெருமாள்நாடானூர் ஊராட்சி மன்ற தலைவர் அழகுதுரை, மாவட்ட கவுன்சிலர் சுதா, ஒன்றிய கவுன்சிலர் பாலகசெல்வி ஆகியோர் வாழ்த்தி பேசினர். வேளாண்மை துணை இயக்குனர் நல்லமுத்துராஜா, தென்காசி மண்பரிசோதனை கூடம் வேளாண்மை அலுவலர் மகேஷ் இத்திட்டம் பற்றி தொழில்நுட்ப உரையாற்றினார். ஓய்வுபெற்ற துணை வேளாண்மை அலுவலர் ராஜகோபால் சிறப்புரையாற்றினார். வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், பேச்சியப்பன், அட்மா தொழில்நுட்ப மேலாளர் பொன்னாசீர் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் நாகராஜன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.விழாவிற்கு முன்னோடி விவசாயிகள் தங்ககிருஷ்ணன், சர்க்கரை குமரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை உதவி அதிகாரி தீபா நன்றி கூறினார்.

    • பனையாண்மை தோட்டத்தில் கருவியைக் கொண்டு பனையேற்ற பயிற்சி நடைபெற்றது.
    • காலத்திற்கேற்ற மாற்றமும் தேவையுமாயிருக்கிறது என்று பனை ஆய்வாளர் பேசினார்.

    கடையம்:

    கடையம் அணைக்கட்டு சாலையில் உள்ள பனையாண்மை தோட்டத்தில் கருவியைக் கொண்டு பனையேற்ற பயிற்சி நடைபெற்றது. பனையேற்ற பயிற்சியை தொடங்கி வைத்து சுற்றுசூழல் மற்றும் பனை ஆய்வாளர் பாமோ பேசியதாவது:-

    உலகமயமாகளாலும், புது நாகரீக கவர்ச்சியினாலும் மக்களிடையே பனை பொருட்கள் பயன்பாடு குறைந்துபோனது. நிறைய பனைவீரர்கள் பனையேறி பனை பொருட்களை உருவாக்கும் சூழலில் பனையின் சூழல், சமூக, பொருள்சார் மதிப்பு கூடும். அதனால் பனைகள் அழிப்பு தானாகவே குறையும். பனை சார் தொழிலும் வாழ்வியலுமான பனையேற்றம் எனும் நலிவூற்று வரும் கலையானது அழியாமல் பாதுகாக்கப்பட இளைஞர்கள் பனையேற்றத்தை கற்றுக்கொள்வது இன்றைய தேவையாகும். இன்றைய சூழலில் மரபு வழி பனையேற்றம் பழகி தினமும் 10 சிறந்த பனைகளை ஏறி பனம்பால் இறக்கினால் ஒருவர் வலிமையான ஆறடுக்கு உடலையும், குடும்பத்துக்கு தேவையான பொருள் வளத்தையும் உருவாக்கிட முடியும் . ஆனால் பனையேற்றம் கடினமாக இருப்பதால் பனையேற்றத்தை எளிதாக்கிட இன்று கருவிகளை பயன்படுத்துவது காலத்திற்கேற்ற மாற்றமும் தேவையுமாயிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து பனைவீரர் கிங்சுலியும், பனை ஆய்வாளர் பாமோவும் கருவியைக் கொண்டு பனையேறும் முறையை செய்து காட்டி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் உடற்கல்வி ஆசிரியர் அலெக்ஸ், சிலம்ப பயிற்சியாளர் முத்தரசன், வயர்மன் சுந்தர், கல்லூரி மாணவர்கள் பவித்ரன், பூபதி, பிரவீன், பள்ளி மாணவர்கள் நாவினி, ஹரிணி, ஜெப்வின், பொன்ராம், ஜெனி, விஷ்ணு மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் அந்தோணிராஜ் நன்றி கூறினார்.

    • மகேந்திரன் கறி வெட்டும் தொழில் செய்து வருகிறார்
    • இரவு வழக்கம் போல் டேபிள் மின்விசிறி அருகில் மகேந்திரன் தூங்கிக் கொண்டிருந்தார்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள கேளையாபிள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 35). கறி வெட்டும் தொழில் செய்துவரும் இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் டேபிள் மின்விசிறி அருகில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாரத விதமாக மின்விசிறி திடீரென தீப்பிடித்தது. மின்விசிறியின் ஒயருக்கு அடியில் படுத்திருந்த மகேந்திரன் மீது மின்சாரம் தாக்கி தீ பிடித்துள்ளது. இதில் மகேந்திரன் போர்த்தியிருந்த போர்வை முழுவதும் தீப்பிடித்ததால் படுகாயம் ஏற்பட்டது.

    அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மகேந்திரனை மீட்டு கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தென்காசி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • சிறு கிழங்கு விவசாயிகளின் நண்பன். இதன் உற்பத்தி குறைவாக இருப்பதால் சந்தையில் விலை சற்று கூடுதலாக இருக்கும்.
    • அண்டை மாநிலமான கேரளாவில் அதிக தேவை இருப்பதால் கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் அறுவடையாகும்.

    கடையம்:

    கடையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஞானசேகரன் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சிறு கிழங்கு விவசாயி களின் நண்பன். மணமும் சுவையும் நுகர்வோரை கவரக்கூடியது இக்கிழங்கு. இதன் உற்பத்தி குறைவாக இருப்பதால் சந்தையில் விலை சற்று கூடுதலாக இருக்கும்.

    அண்டை மாநிலமான கேரளாவில் அதிக தேவை இருப்பதால் கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் அறுவடையாகும். புரதம் மற்றும் தாதுக்கள் நிரம்பி இருக்கும் இந்த சிறுகிழங்குகள், மருத்துவ பலன்கள் அதிகம் கொண்ட காரணங்களினால் அரபு நாடுகள், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை நட்ட 2 மாதங்கள் கழித்து எக்டேருக்கு 30 கிலோ தழைசத்து, 60 கிலோ மணிச்சத்து, 150 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை இடவேண்டும். நட்ட இரண்டு மாதங்கள் கழித்து மண் அணைக்க வேண்டும்.

    பயிர் பாதுகாப்பு

    சிறு கிழங்கு நன்றாக வளர்ந்து வரும் நேரத்தில் மழை பெய்து குளிர்ந்த காலநிலை வரும்போது நூற்புழுக்கள் தாக்கி தவளைக் கிழங்கு உண்டாகும் அபாயம் உண்டு. நூற்புழு தாக்கிய செடிகளின் வேர்களில் முடிச்சுகள் உண்டாகி, வளர்ச்சி குன்றி செடிகள் குட்டை ஆகிவிடுகின்றன. கண்ணுக்கு தெரியாத நூற்புழுக்கள் நாற்றுப்பருவத்திலேயே செடிகளின் வேர்களின் உள்ளே சென்று விடுவதால் புழு தாக்காத நாற்றுகளை மட்டுமே நட வேண்டும்.

    நூற்புழுக்கள் தாக்குதலை தாங்கி வளரக்கூடிய ரகமான ஸ்ரீதாரா ரகத்தை நடவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • போட்டியினை தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்பநாபன் தொடங்கி வைத்தார்.
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    கடையம்:

    கடையம் அருகேயுள்ள ஆசீர்வாதபுரத்தில், 7 கிங்ஸ் கபடி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக 15 - வது ஆண்டு மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. போட்டியினை தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்பநாபன் தொடங்கி வைத்தார்.

    வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ்மாயவன் தலைமை தாங்கினார். கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி தொழிலதிபர் பரமசிவன் முன்னிலை வகித்தார். போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றன. இதில் பல்வேறு பகுதியை சேர்ந்த கபடி வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    முதல் பரிசை கருத்த பிள்ளையூர் அணியும், 2-வது பரிசை ஆசீர்வாதபுரம் அணியும், 3-வது பரிசை மடத்தூர் அணியும் , 9-வது பரிசை மேட்டூர் அணியும், 10-வது பரிசை வெய்க்கால்பட்டி அணியினரும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

    • மரத்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட கடந்தை வண்டுகள் பாபநாசத்தை கொட்டியது.
    • ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். ஆனால் அதற்குள் பாபநாசம் இறந்துவிட்டார்.

    நெல்லை:

    கடையம் அருகே உள்ள தெற்கு மடத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபநாசம்(வயது 69). விவசாயி.

    இவர் சம்பவத்தன்று ஊருக்கு அருகே உள்ள புளியந்தோப்புக்கு சென்று புளி பறித்துக்கொண்டிருந்தார். அப்போது மரத்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட கடந்தை வண்டுகள் பாபநாசத்தை கொட்டியது. இதனால் வலியால் துடித்த அவரை, உறவினர்கள் அங்குள்ள ஒரு நாட்டு வைத்தியரிடம் அழைத்து சென்றுள்ளர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். ஆனால் அதற்குள் பாபநாசம் இறந்துவிட்டார். இதுதொடர்பாக கடையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள புளியமரங்களில் உள்ள கடந்தை கூடுகளை ஆலங்குளம் தீயணைப்பு வீரர்கள் தேடி கண்டுபிடித்து அகற்றி வருகின்றனர். 

    • கடையம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விரிவான திட்ட அறிக்கைகள் ஆய்வு நடைபெற்றது.
    • ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி, வேளாண்மை அலுவலர் அபிராமி உள்பட பலர் இருந்தனர்.

    கடையம்:

    கடையம் வட்டாரத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை சென்னை வேளாண்மை இயக்குனர், தென்காசி மாவட்ட மண்டல அலுவலரும், வேளாண்மை உதவி இயக்குனருமான அருள்நங்கை மற்றும் தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய, மாநில திட்டங்கள்) நல்லமுத்துராஜா ஆகியோர் கடையம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விரிவான திட்ட அறிக்கைகள் ஆய்வு செய்தனர்.

    பின்னர் திட்டத்தில் 2022-2023-ம் ஆண்டு ஊரக வளர்ச்சி துறை மூலம், சேர்வைகாரன்பட்டி, ரவணசமுத்திரம், வீராசமுத்திரம் ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்ட பணிகள் கள ஆய்வு செய்தனர். 2021-2022-ம் ஆண்டு பொட்டல்புதூர் ஊராட்சியில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட தென்னங்கன்றுகள், மின்கல விசை தெளிப்பான், நெல் பயிரில் வரப்பு பயிராக உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை கள ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி, வேளாண்மை அலுவலர் அபிராமி, தோட்டக்கலை அலுவலர் சபா பாத்திமா, துணை வேளாண்மை அலுவலர் சுப்ராம், உதவி அலுவலர்கள் கமல்ராஜன், ஜெகதீஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, பேச்சியப்பன், பால்துரை, தீபா, தோட்டக்கலை உதவி அலுவலர்கள் திருமலைக்குமார், பானுமதி, இசக்கியம்மாள், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் பொன்ஆசீர், உதவி தொழில்நுட்ப மேலாளர் நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • கடனா அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.

    கடையம்:

    கடையம் வட்டாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கடந்த சில தினங்களாக பெய்து வருவதால் ராமநதி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடனா அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் ஆற்று ஓரம் தாழ்வான பகுதியில் இருக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கார் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், உளுந்து, நிலக்கடலை, சோயாபீன்ஸ், சிறுகிழங்கு போன்ற பயிர்களை மழை வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பது குறித்து தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.

    இதில் வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி, துணை வேளாண்மை அலுவலர் சுப்ராம், வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், ஜெகதீஸ்வரன், பேச்சியப்பன் மற்றும் வேளாண் துறையினர் ராமநதி அணை, கடனா அணை மற்றும் அதை சுற்றியுள்ள விவசாய நிலங்களையும் ஆய்வு செய்து தற்போது கார் பருவத்தில் நெல் பயிர் சாகுபடி பரப்பு குறைந்ததற்கான காரணங்களை விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினர்.

    கலந்துரையாடலில் பருவம் தவறி தாமதமாக மழை பெய்வதால் நெல் பயிர் சாகுபடி செய்ய முடியவில்லை என்று விவசாயிகள் கூறினார்கள். வேளாண்மை இணை இயக்குநர் பசுந்தாள் உரப் பயிர் தக்கைப்பூண்டு சாகுபடி செய்ய அறிவுரை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் தர்மபுரமடம் ஊராட்சி மன்ற தலைவர் ரூஹான் ஜன்னத் சதாம், நீர்பாசனகமிட்டி தலைவர் கண்ணன் தலைமையில் சிவசைலம் விவசாயிகளும், சுடலையாண்டித்தேவர் தலைமையில் பெத்தான் பிள்ளைகுடியிருப்பு விவசாயிகளும், சதாம் உசேன் தலைமையில் தர்மபுரமடம் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

    கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யபட்டுள்ள வீராசமுத்திரம் ஊராட்சி மன்ற பகுதிகளில் மேற்படி திட்டம் செயல்படுத்துவது குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடப்பட்டது. மேலும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் செயல்படுத்தபட வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கலந்துரையாடலின் போது ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பூமணி மற்றும் முன்னோடி விவசாயி சொல்லின்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.

    ×