search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடையம்"

    • பாராட்டு விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் டி .கே .பாண்டியன் தலைமை தாங்கினார்.
    • வெற்றி பெற்ற மாணவி மீனாவுக்கு பதக்கம் அணிவித்து பெரிய பாத்திரம் பரிசாக வழங்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் அருகே கோவிந்த பேரி ஊராட்சியில் ஞானமறவா நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிள்ளை குளத்தை சேர்ந்த சங்கர்- காஞ்சனா தம்பதி மகள் மீனா ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். தற்போது நடந்து முடிந்த தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு பாராட்டு விழா கோவிந்தபேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் டி .கே .பாண்டியன் தலைமை தாங்கினார்.

    துணைத் தலைவர் இசேந்திரன் வரவேற்றார். ஞானம் மறவா நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டீபன் சேவியர் ஞானம் வாழ்த்தி பேசினார். வெற்றி பெற்ற மாணவிக்கு பதக்கம் அணிவித்து பெரிய பாத்திரம் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் இசக்கி பாண்டியன், பொன்னுத்தாய், நாகராஜன், சுகிர்தா விவசாய சங்க தலைவர் சிங்கக்குட்டி,ஆசிரியர்கள் வேலம்மாள், சுப்பையா, அப ராஜிதன், உத்திராட் ஜெயா, லிங்கசாமி, மாலதி,பிரின்ஸ் ஜோசப், விஜி, சுமதி பாலா, ரஜி ஹனிபர் ,மாணவ மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் அன்னகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • சிவா வீட்டின் சமையல் அறையில் தலையில் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
    • பொட்டல் புதூர் கிராம நிர்வாக அலுவலர் , சிவா சாவில் மர்மம் இருப்பதாக கூறி ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.

    நெல்லை:

    கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் புத்தன் தெருவை சேர்ந்தவர் சிவா(வயது 25). இவருக்கு மகேஷ்வரி என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

    நேற்று முன்தினம் நள்ளிரவில் சிவா வீட்டின் சமையல் அறையில் தலையில் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதனை கண்ட அவரது மனைவி மற்றும் பெற்றோர் தங்களது உறவினர்களை அழைத்து இரவோடு இரவாக சிவாவின் உடலை எரித்தனர்.

    இதுகுறித்து பொட்டல் புதூர் கிராம நிர்வாக அலுவலர் சுடர்செல்வன், சிவா சாவில் மர்மம் இருப்பதாக கூறி ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். யாருக்கும் தெரியாமல் உடலை எரித்ததாக கூறி அவரது உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • கடையம் வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி நெல் பயிரில் வரப்பு பயிராக உளுந்து நடவு செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்கி கூறினார்.
    • வேளாண்மை உதவி அலுவலரும் நோடல் அதிகாரியுமான பேச்சியப்பன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    கடையம்:

    பொட்டல்புதூர் கிரா மத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுடன் கலந்து ரையாடல் நிகழ்ச்சி நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்-அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 132 விவசாயிகளுக்கு 3 தென்னங்கன்றுகள், 15 விவசாயிகளுக்கு உளுந்து விதைகள், 5 விவசாயிகளுக்கு மின்கல தெளிப்பான்கள், 5 விவசாயிகளுக்கு கைத் தெளிப்பான்கள் வழங்கப் பட்டது.

    வரப்பு பயிர்

    மேலும் தோட்டக்கலை துறை சார்பில் பழ மரக்கன்றுகள், காய்கறி விதைகள் தொகுப்பு, டிரம்கள் வழங்கப்பட்டது. உளுந்து விதை பெற்ற விவசாயிகள் தற்போது நடவு செய்யப்பட்டிருந்த நெல் பயிரில் வரப்பு பயிராக உளுந்து பயிரை சாகுபடி செய்திருந்தனர்.

    விவசாயிகளுடன் நடத்திய கலந்துரையாடல் மற்ற விவசாயிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் வீடியோ காட்சி பதிவு செய்யப்பட்டது. கடையம் வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி தலைமை தாங்கி நெல் பயிரில் வரப்பு பயிராக உளுந்து நடவு செய்வதால் ஏற்படும் 3 முக்கிய நன்மைகள் பற்றி விளக்கி கூறினார்.

    அதிக நன்மை

    பொட்டல் புதூர் கிராம ஊராட்சி தலைவர் கணேசன் இத்திட்டத்தில் அதிக நன்மைகள் இருப்பதால் மற்ற விவசாயிகளும் இது போன்று நெல் பயிர் வரப்பில் உளுந்து பயிர் சாகுபடி செய்ய வேண்டும் என்று கூறினார். துணை வேளாண்மை அலுவலர் சுப்புராம் வரவேற்று பேசினார்.

    தோட்டக்கலை உதவி இயக்குனர் ஞானசேகரன் தோட்டக்கலை துறையில் செயல்படுத்த படும் திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார். வேளாண்மை அலுவலர் அபிராமி திட்ட விளக்கவுரை ஆற்றினார். வேளாண்மை உதவி அலுவலரும் நோடல் அதிகாரியுமான பேச்சியப்பன் நிகழ்ச்சி ஏற் பாடுகளை செய்திருந்தார்.

    கடையம் வட்டார புள்ளியியல் ஆய்வாளர் சைரஸ் ஆன்ட்ரோ , பொட் டல் புதூர் கிராம நிர்வாக அலுவலர் சுடர் செல்வன், கிராம நிர்வாக உதவியாளர் பாண்டி, வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், ஜெகதீஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, பால்துரை, தீபா, தோட்டக்கலை உதவி அலுவலர்கள், கோவிந்த ராஜ், திருமலைகுமார், இசக்கியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக துணை வேளாண்மை அலுவலர் சுப்பராம் வரவேற்றார்.

    • கொரோனா வைரஸ் பரவி வருவதால் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
    • பொதுமக்களுக்கு முக கவசங்கள் வழங்கப்பட்டது.

    கடையம்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் தமிழக அரசு முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் முக கவசம் அணிவது பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வீராசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜீனத் பர்வீன் யாகூப் வீராசமுத்திரம் கிராம பொது மக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் கூறி முக கவசங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் 3-வது வார்டு உறுப்பினர் ரமேஷா, 6-வது வார்டு உறுப்பினர் பூமணி, 2-வது வார்டு உறுப்பினர் ஜமீலா ஜமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாலிக் நகர்தி.மு.க. கிளை செயலாளர் அகமது இஷாக் கலந்து கொண்டார். ஊராட்சி செயலர் பரமசிவம் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி பணியாளர்கள் அமுதா, நபிஷா ஆகியோர் செய்திருந்தனர்.

    • தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீச தொடங்கி உள்ளது.
    • தர்மபுரம் மடம் ஊராட்சி மன்ற தலைவர் ஜன்னத் சதாம் உசேன் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    கடையம்:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீச தொடங்கி உள்ளது.

    தென்காசி, கடையம், செங்கோட்டை பகுதிகளில் நேற்று பலத்த சூறைக்காற்று வீசியது. ஆழ்வார்குறிச்சி அருகே தர்மபுரம் மடம் ஊராட்சியில் நேற்று இரவு பலத்த சூறைக்காற்று காரணமாக நீலமேகபுரம் பகுதியில் வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன.

    அந்த பகுதியை சேர்ந்த கனகராஜ், ஆறுமுகம், சிதம்பரம், அன்னலெட்சுமி ஆகியோரின் 4 வீடுகளின் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரைகள் முற்றிலுமாக சேதமடைந்தது.

    தகவல் அறிந்த தர்மபுரம் மடம் ஊராட்சி மன்ற தலைவர் ஜன்னத் சதாம் உசேன் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உரிய அதிகாரிகளை சந்தித்து நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தங்குவதற்கு இடம் இல்லாததால் பஞ்சாயத்துக்கு சொந்தமான இ-சேவை மையத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

    • பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் அவரது அறை மற்றும் பஞ்சாயத்து செயலாளர் அறையை பூட்டு போட்டு பூட்டி சென்றுள்ளார்.
    • மனு கொடுக்க வந்த பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலகம் பூட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் யூனியனுக்கு உட்பட்ட திருமலையப்பபுரம் ஊராட்சியின் கீழ் 6 வார்டுகள் செயல்பட்டு வரும் நிலையில் நேற்று கூட்டம் நடைபெற இருப்பதாக பஞ்சாயத்தில் இருந்து வார்டு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    அதன்படி வார்டு உறுப்பினர்கள் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் திடீரென அவரது அறை மற்றும் பஞ்சாயத்து செயலாளர் அறையையும் பூட்டு போட்டு பூட்டி சென்றுள்ளார்.

    இதனால் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலகம் பூட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து வார்டு உறுப்பினர்கள் கூறுகையில், பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் திடீரென புதிய பூட்டுகளை வாங்கி வந்து அறைகளை பூட்டி சென்றுள்ளார். இதனால் இன்று மனுக்கொடுக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.

    இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், பஞ்சாயத்து தலைவர் மாரியப்பனுக்கும், பஞ்சாயத்து செயலாளர் வேலுச்சாமிக்கும் இடையே ஆவணத்தில் கையொப்பம் இடாமல் இருப்பதை தலைவரிடம் தெரிவிக்காதது தொடர்பாக கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது.

    • கடையம் பகுதியில் கல்லூரி அமைக்க வேண்டும் என்று ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி சுவாமிகளிடம் மனு கொடுத்தனர்.
    • ஏழை, எளிய பெண்களுக்கு திருமண உதவி நிதி வழங்க கோரியும் மனு கொடுத்தனர்.

    கடையம்

    சிவசைலம் கோவில் கும்பாபிஷேகம் நடப்பதையொட்டி தருமபுர ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி சுவாமிகள் கடந்த 2 நாட்களாக சிவசைலத்தில் தங்கி உள்ளார்.

    கடையம் ஒன்றியம் 23 பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் கடையம் பகுதியில் கல்லூரி அமைக்க வேண்டும் என்றும், ஏழை, எளிய பெண்களுக்கு திருமண உதவி நிதி வழங்க கோரியும் கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி சுவாமிகளிடம் மனு கொடுத்தனர்.

    அப்போது கீழாம்பூர் மாரிசுப்பு, அணைந்தபெருமாள்நாடானூர் அழகுதுரை, பாப்பாங்குளம் முருகன், அடைச்சாணி மதியழகன், திருமலையப்பபுரம் மாரியப்பன் ஆகிய பஞ்சாயத்து தலைவர்கள் உடன் இருந்தனர்.

    • மாணவி ஷாஜிதா ஸைனப் மதநல்லிணக்கம் வேண்டி ஆணி பலகையில் யோகாசனத்தில் அமர்ந்து அசத்தினார்.
    • ரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன், துணைத்தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கடையம் அருகே ரவணசமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த தொழிலாளி முகம்மது நஸீருதீன்-ஜலிலா அலி முன்னிஸா தம்பதியரின் இளையமகள் மாணவி ஷாஜிதா ஸைனப் என்பவர் 8 -வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதநல்லிணக்கம் மற்றும் வேளாண்மை செழிக்க வேண்டி ஆணி பலகையில் யோகாசனத்தில் அமர்ந்து தேசிய கொடியுடன் உடலில் தீபம் ஏந்தி அசத்தினார்.

    நிகழ்ச்சியில் ரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன், துணைத்தலைவர் ராமலட்சுமி சங்கிலி, சமுதாயத் தலைவர் பரமசிவன், வார்டு உறுப்பினர்கள் முகமது யஹ்யா, மொன்னா முகமது, ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சமூக ஆர்வலர் சேக் முகமது அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை யோகா ஆசிரியர் குருகண்ணன் செய்திருந்தார்.

    • உடையார் பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • நாளை (திங்கட்கிழமை) முதல் 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கீழக்கடையத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது உடையார் பிள்ளையார் கோவில். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் புராணச் சிறப்பு கொண்ட கோவிலாகும். அகஸ்திய ரால் வழிபடப்பட்ட பெரு மை வாய்ந்த ஆலயமாகும்.

    இந்த கோவிலுக்கான கும்பாபிஷேத்திற்காக கடந்த 10-ந்தேதி கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், துர்கா ஹோமம், பிரம்மசாரி பூஜை, கோ பூஜை, கஜபூஜை, தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

    பின்னர் பாபநாசத்தி லிருந்து 108 தீர்த்த குடம் கொண்டு வரப்பட்டது.இதைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் சிலை நிறுவுதல் நடைபெற்றது. பின்னர் இன்று அதிகாலையில் மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், இரண்டாம் கால யாக பூஜை, கண்திறப்பு, தீபாராதனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து விமான கோபுர கும்பாபிஷேகம், உடையார் பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.விழாவில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நாளை திங்கட்கிழமை முதல் 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை 18 பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் யு.சி.சி நண்பர்கள் செய்துள்ளனர்.

    • பாலமுருகன் என்பவரது பழக்கடையில் 5½ கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
    • பாப்பான்குளம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது கடையிலும் 1½ கிலோ குட்கா பறிமுதல் செய்யபட்டது.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள மலையான்குளம் பகுதியிலுள்ள ஒரு பழக்கடையில் குட்கா விற்பதாக ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கடையம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் பாலமுருகன் என்பவரது பழக்கடையை சோதனை செய்தனர். அப்போது தடைசெய்யப்பட்ட குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

    அவரிடமிருந்து 5½ கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்தனர் .மேலும் இதேபோல் பாப்பான்குளம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது கடையிலும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது கடையில் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. அவரிடமிருந்து சுமார் 1½ கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். 

    • நெல்லை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன் கண் சிகிச்சை முகாம்.
    • முகாமில் பலர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்

    கடையம்:

    நெல்லை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன் கிராம உதயம் மற்றும் கடையம் ரிலையபிள் கல்வி நிறுவனம் மற்றும் தனியார் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம், கடையம் ரிலையபிள் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.

    நிறுவன தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத், ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார்,

    கடையம் வட்டார காங்கிரஸ் துணைத்தலைவர் சாத்தா ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் பலர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை கணேசன் ஒருங்கிணைத்தார்.

    ×