என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224691"

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.28லட்சத்து 67 ஆயிரத்து 146-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 20.54குவிண்டால் எடை கொண்ட 6 ஆயிரத்து92தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.23.89-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.17.66-க்கும், சராசரி விலையாக ரூ.23.15-க்கும் என மொத்தம் ரூ.45ஆயிரத்து 149-க்கு விற்பனையானது.

    அதேபோல் 264.44½ குவிண்டால் எடை கொண்ட 527 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.73.99-க்கும், சராசரி விலையாக ரூ.78.40-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.74.11-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.11-க்கும், சராசரி விலையாக ரூ.73.79-க்கும் என மொத்தம் ரூ.19 லட்சத்து 93 ஆயிரத்து 581-க்கு விற்பனையானது.

    அதேபோல் 131.77½வரை குவின்டால் எடை கொண்ட430 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. நிலக்கடலைக்காய் அதிக விலையாக ரூ73.90-க்கும், குறைந்த விலையாக 63.40 -க்கும், சராசரி விலையாக 72.20 -க்கும் என ரூ8 லட்சத்து 73 ஆயிரத்து 565 க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.28லட்சத்து 67 ஆயிரத்து 146-க்கு விற்பனையானது.

    • அக்டோபர் 4-ம் தேதி ஆயுதபூஜையும், 5-ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது.
    • இவ்விழாவை முன்னிட்டு வட மாநிலங்களில் வெள்ளி கொலுசு, மெட்டி, அரைஞான் கொடி, குங்குமசிமிழ் உள்பட பல வெள்ளிப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெறும்.

    சேலம்:

    வெள்ளி கொலுசு உற்பத்தி தொழில் சேலத்தில் பிரசித்தி பெற்ற தொழிலாக விளங்குகிறது. சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப் பொருட்கள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

    இந்த நிலையில் வருகிற அக்டோபர் 4-ம் தேதி ஆயுதபூஜையும், 5-ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு வட மாநிலங்களில் வெள்ளி கொலுசு, மெட்டி, அரைஞான் கொடி, குங்குமசிமிழ் உள்பட பல வெள்ளிப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெறும். இதையொட்டி வெள்ளிப் பொருட்கள் கேட்டு வட மாநில வியாபாரிகள் ஆர்டர் கொடுத்துள்ளனர்.

    இதனால் சேலம் செவ்வாய்ப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிப் பொருட்கள் உற்பத்தியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நவராத்திரி விழாவின் போது வடமாநிலங்களில் பெண்கள் லைட் வெயிட் கொலுசு, குங்குமச்சிமிழ், மெட்டி அதிகளவில் வாங்குவார்கள். இதையொட்டி வெயிட் கொலுசு, குங்குமச்சிமிழ், மெட்டி அதிகளவில் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடக,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இந்த தகவலை சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை சங்க தலைவர் ஆனந்தராஜன் தெரிவித்தார்.

    • பரமத்திவேலூர் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.11 லட்சத்து 72 ஆயிரத்து 661-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம்,.பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணை நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 25.40குவிண்டால் எடை கொண்ட 7 ஆயிரத்து 194தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.23.06-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.18.06-க்கும், சராசரி விலையாக ரூ.22.59-க்கும் என மொத்தம் ரூ.53 ஆயிரத்து 372-க்கு விற்பனையானது.

    அதேபோல் 153.51½ குவிண்டால் எடை கொண்ட 322 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.76-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.74.10-க்கும், சராசரி விலையாக ரூ.77.99-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.48-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.99-க்கும், சராசரி விலையாக ரூ.72.12-க்கும் என மொத்தம் ரூ.11 லட்சத்து 19 ஆயிரத்து 289-க்கு விற்பனையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.11 லட்சத்து 72 ஆயிரத்து 661-க்கு விற்பனையானது.

    • 35 மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • மூங்கில் கூடைகள், பனைப்பொருட்கள், விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் கைவினை பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடி தொடங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி புன்னைந ல்லூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் மகளிர் சுய உதவி குழு விற்பனை அங்காடியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

    அப்போது கலெக்டர் கூறியதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்குசிறந்த ஒரு விற்பனை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் பொருட்டு தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் அங்காடி என்ற சிறப்பு அடையாளத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைத்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு கூடுதல் விற்பனை வாய்ப்பும், கூடுதல் வருவாயும் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தித் தரும் வகையில் ஒரு இலக்குடன் உருவாக்கப்படுகிறது.

    ஏற்கனவே தஞ்சை மாநகராட்சியில் பூ மாலை வணிக வளாகத்தில் தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் மகளிர் சுய உதவி குழு விற்பனை அங்காடி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து.

    கல்லணையிலும் விற்பனை அங்காடி தொடங்கப்பட்டன. இதன் மூலம் 35 மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் 125 குழு உறுப்பினர்கள் நேரடியாகவும், மறைமுகமா கவும் வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர்.

    தற்போது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் தஞ்சை தாரகைகள் கைவினை பொருட்கள் மகளிர் சுயஉதவி க்குழு விற்பனை அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.

    இதில் தஞ்சை தலையாட்டி பொம்மைகள், பொய்க்கால் குதிரைகள், கால் மிதியடி, பொம்மை வகைகள், பைகள், மூங்கில் கூடைகள், பனைப்பொருட்கள், விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்டவை விற்பனை க்காக வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் பக்தர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் இதனை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, தாசில்தார் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம், மகளிர் திட்ட உதவி அலுவலர் சிவா, ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா தனசேகர், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் அருளானந்த சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அரிசி, மாவு, தயிர், வெண்ணை, நெய் போன்ற உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.
    • ஈமச்சடங்கு மற்றும் மயான செலவின் மீது போடப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும்.

    தரங்கம்பாடி:

    ஒன்றிய பிஜேபிஅரசின் மக்கள் விரோத கொ ள்கையை கண்டித்து செம்பனார்கோயில் பி எஸ் என் எல் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம் செய்தனர்.

    போராட்டத்திற்கு மாவட்ட விவசாய சங்க செயலாளர் வீரராஜ், செம்பனார்கோயில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் தாங்கினர்.

    அப்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது.

    அரிசி மாவு தயிர் வெண்ணை நெய் போன்ற உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி ரத்து செய்ய வேண்டும்.

    ஈமச்சடங்கு மற்றும் மயான செலவின் மீது போடப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும்.

    உயிர் காக்கும் மருந்து மீது விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும்.

    மின்சார விநியோகத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழ ங்காதே. உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் செய்தனர்.

    நிகழ்ச்சியில் வேதநாயகம், சின்னத்துறை, இராதா கிருஷ்ணன், தவசிமுத்து, தரணி, தமிழ்ச்செல்வி, உள்ளிட்டோர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்.

    • குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. யாக மகாலட்சுமி சமீபத்தில் பொறுப்பேற்றார்.
    • இவர் நேற்று குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. யாக மகாலட்சுமி சமீபத்தில் பொறுப்பேற்றார். இவர் நேற்று குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமாரபாளையம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனையை முழுவதுமாக தடுக்க நடவடிக்கை எடுப்பேன். விசைத்தறி, கைத்தறி கூலி தொழிலாளர்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பேன்.

    பொதுமக்கள் உங்கள் பிரச்சினைகளை, சமூக விரோத செயல்கள் குறித்த தகவல்களை என்னிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு உதவி பொருட்கள், இனிப்பு வழங்கினார்.
    • இதில் மாணவ- மாணவிகள், பொதுமக்கள், பணிதள பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ஒன்றியம் நுணாக்காடு ஊராட்சி ஆட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சா.சின்னையன் மாணவர்களுக்கு உதவி பொருட்கள், இனிப்பு வழங்கினார்.

    இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் துரைராஜ், தலைமை ஆசிரியர் ஜாசி, ஆசிரியர் முத்துக்குமரன், ஊராட்சி மக்கள் பிரதிநிதி பொன் இளையகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இதில் ஊராட்சி மக்கள் பிரதிநிதி அ.மேனகா, வி.கோவிந்தராஜ், சாமூண்டீஸ்வரி, ஆ.ஜெயந்தி, செ.சத்யா மற்றும் உறுப்பினர்கள் , ஊராட்சி செயலர் தெ.இளங்கோவன், மக்கள் நல பணியாளர் செல்வி மற்றும் மாணவ மாணவிகள் , பொதுமக்கள், பணி தள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக ஆசிரியர் முத்துகுமரன் நன்றி கூறினார்.

    • நேற்றிரவு ஓட்டலின் பின்பக்கம் உள்ள கீற்று சமையல் கூடம் தீடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
    • தீ விபத்தில் பல லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து முற்றிலும் நாசமாயின.

    வேதாரண்யம்:

    வேதாரணியம் சேதுர ஸ்தாவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 67). இவர் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலின் அருகில்மே லமட வளாகத்தில் 40 ஆண்டுகளாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு இவரது ஓட்டலின் பின்பக்கம் உள்ள கீற்று சமையல் கூடம் தீடீரென்று தீப்பிடித்து எரிந்தது தீ மளமள என்று பரவி சமையல் கொட்டகை முற்றிலும் எரிந்து சாம்பலானது.

    தகவல் அறிந்த வேதாரண்யம் தீயணைப்புத் துறையினர் மேலும் பரவாமல் அணைத்தனர். டிஎஸ்பி முருகவேல் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வந்து பார்னவையிட்டனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து முற்றிலும் நாசமாயின.

    • டாக்டர் பாபு மற்றும் ரம்யா தேவி கலந்துகொண்டு தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் அவசியத்தை எடுத்து கூறினர்.
    • தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கத்தில் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் ரொட்டேரியன் பிவி. ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. மண்டல உதவி ஆளுநர் சிவக்குமார் முன்னிலையில் டாக்டர் பாபு மற்றும் ரம்யா தேவி கலந்துகொண்டு தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் அவசியத்தை எடுத்துக் கூறினார்.

    நிகழ்ச்சியில் ரோட்டரி டெல்டா சங்க முன்னாள் தலைவர் சீனிவாசன் காளிதாஸ், செல்வகுமார் மற்றும் உறுப்பினர்கள் மாணிக்கவாசகம், மதன் அழகரசன் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது. இறுதியில் செயலர் ரொட்டேரியன் ராஜதுரை நன்றி கூறினார்.

    • செறிவூட்டப்பட்ட உணவு பொருளின் பயன்பாடு குறித்த செயல்முறை விளக்க கூட்டம் வர்த்தக சங்கத் தலைவா் தென்னரசு தலைமையில் நடந்தது.
    • உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்தோனி, அன்பழகன் ஆகியோர் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு உணவு பொருட்களை காட்சிப்படுத்தி விளக்கினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வர்த்தக சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் வேதாரண்யம் வர்த்தக சங்கம் இணைந்து செறிவூட்டப்பட்ட உணவு பொருளின் பயன்பாடு குறித்த செயல்முறை விளக்கக் கூட்டம் வர்த்தக சங்கத் தலைவா் தென்னரசு தலைமையில் நடந்தது. சங்க செயலாளர் சுபஹானி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாகை மாவட்டத் தலைவா் வேதநாயகம் வாழ்த்துரை வழங்கினார். நாகை மாவட்ட நியமன அலுவலா் டாக்டர் புஷ்பராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செறிவூட்டப்பட்ட உணவு பொருளின் பயன்பாடு குறித்து சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் எப்.எஸ்.எஸ்.ஐ டெக்னிக்கல் ஆலோசகர் செய்யது அகமது, உணவுபாதுகா ப்பு ஆலோசகர் ஜெகதீ ஸ்வரி ஆகியோர் விளக்க வுரையாற்றினர். ஜி.டி.பி அலுவலா் சித்ரா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்தோனி, அன்பழகன் ஆகியோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவு பொருட்களை காட்சிப்படுத்தி விளக்கினர்.

    மேலும் கூட்டத்தில் வர்த்தக சங்க துணைத் தலைவா் சுப்பிரமணியன், துணைச் செயலாளர்கள் தங்கதுரை, தமிழழகன் உட்பட செயற்குழுஉறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். சங்க பொருளாளா் சீனி வாசன் நன்றி கூறினார்.

    • வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க வேண்டும்.
    • வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    அகில இந்திய விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஒன்றிய நகரம் சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் உலகநாதன் முன்னாள் எம்.எல்.ஏ. குமரராஜா விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சாமிநாதன் விவசாய சங்க மாவட்ட பொருளாளர் ஜவகர் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் முத்து செல்வன் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாலு விவசாய சங்க ஒன்றிய தலைவர் வேதரத்தினம் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சுந்தர் விவசாய சங்க நகர செயலாளர் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க விவசாய சங்க பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதில் வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க வேண்டும், வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கொல்லிமலை செல்லும் பகுதியில் காரவள்ளி, முள்ளுக்குறிச்சி, வேலிக்காடு வழி ஆகிய இடங்களில் வனத்துறை மற்றும் காவல்துறையினரால் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும்.
    • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.

    நாமக்கல், ஆக.1-

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நாளை யும், நாளை மறுநாளும் வல்வில் ஓரிவிழா அரசின் சார்பில் நடைபெற உள்ளது. வல்வில் ஓரி விழாவை ஒட்டி மலர் கண்காட்சி, அரசு துறைகளின் பணி விளக்க முகாம் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை நடைபெற உள்ளன.

    கொல்லிமலை செல்லும் பகுதியில் காரவள்ளி, முள்ளுக்குறிச்சி, வேலிக்காடு வழி ஆகிய இடங்களில் வனத்துறை மற்றும் காவல்துறையினரால் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும்.

    இந்த ஆய்வின்போது வாகனங்களில் கொண்டு வரப்படும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே சுற்றுலா பயணிகள் எக்கா ரணம் கொண்டும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவர வேண்டாம்.

    சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை மட்டும் சேகரிக்க ஆங்காங்கே தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மட்டுமே பயன்ப டுத்திய குடிநீர் பாட்டில்களை போடவேண்டும். கடைகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். எனவே கடைக்காரர்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது.

    கொல்லிமலையில் கடத்த ஒரு மாத காலமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஆகாய கங்கை, மாசிலா அருவி, நம் மருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அருவிகளுக்கு செல்லவோ, குளிக்கவோ சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும்  அனுமதி கிடையாது. இருசக்கர வாகனங்களில் கொல்லிமலைக்கு வருபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வர வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×