search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொல்லிமலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்
    X

    கொல்லிமலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்

    • கொல்லிமலை செல்லும் பகுதியில் காரவள்ளி, முள்ளுக்குறிச்சி, வேலிக்காடு வழி ஆகிய இடங்களில் வனத்துறை மற்றும் காவல்துறையினரால் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும்.
    • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.

    நாமக்கல், ஆக.1-

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நாளை யும், நாளை மறுநாளும் வல்வில் ஓரிவிழா அரசின் சார்பில் நடைபெற உள்ளது. வல்வில் ஓரி விழாவை ஒட்டி மலர் கண்காட்சி, அரசு துறைகளின் பணி விளக்க முகாம் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை நடைபெற உள்ளன.

    கொல்லிமலை செல்லும் பகுதியில் காரவள்ளி, முள்ளுக்குறிச்சி, வேலிக்காடு வழி ஆகிய இடங்களில் வனத்துறை மற்றும் காவல்துறையினரால் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும்.

    இந்த ஆய்வின்போது வாகனங்களில் கொண்டு வரப்படும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே சுற்றுலா பயணிகள் எக்கா ரணம் கொண்டும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவர வேண்டாம்.

    சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை மட்டும் சேகரிக்க ஆங்காங்கே தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மட்டுமே பயன்ப டுத்திய குடிநீர் பாட்டில்களை போடவேண்டும். கடைகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். எனவே கடைக்காரர்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது.

    கொல்லிமலையில் கடத்த ஒரு மாத காலமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஆகாய கங்கை, மாசிலா அருவி, நம் மருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அருவிகளுக்கு செல்லவோ, குளிக்கவோ சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி கிடையாது. இருசக்கர வாகனங்களில் கொல்லிமலைக்கு வருபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வர வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×