search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224691"

    • கடந்த 2015-ம் ஆண்டு கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் 8 ஆண்டுகளாகியும் கோவில் திருப்பணிகள் இன்னும் முடியவில்லை.
    • கோவில் புதுப்பிக்கும் பணிக்காக கோவில் வளாகத்தை சுற்றிலும் கட்டுமான பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குமரகிரி மலையில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது . இந்த கோவிலுக்கு சேலம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகனை தரிசனம் செய்து செல்வார்கள்.

    திருப்பணிகள்

    கடந்த 2015-ம் ஆண்டு கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் 8 ஆண்டுகளாகியும் கோவில் திருப்பணிகள் இன்னும் முடியவில்லை. கோவில் புதுப்பிக்கும் பணிக்காக கோவில் வளாகத்தை சுற்றிலும் கட்டுமான பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் கோவில் அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மலை மீதுள்ள குமரகிரி முருகனை தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.

    இதனால் கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    சேலம் ஸ்ரீ ஆய்வு

    இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் சேலம் ஸ்ரீ கோவிலில் நடைபெறும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த கோவில் திருப்பணிகள் கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இன்னும் பணிகள் முடிய பல ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் , கந்தசஷ்டி உள்ளிட்ட விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அந்த நாட்களில் அம்மாபேட்டை, உடையாபட்டி, பொன்னம் மாப்பேட்டை உட்பட சேலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காவடி எடுத்து வந்து மலை மீது ஏறி முருகனை தரிசனம் செய்வார்கள். திருப்பணிகள் காரணமாக திருவிழா காலங்களில் பக்தர்கள் வருகை குறைந்துவிட்டது.

    வருகிற ஏப்ரல் மாதம் பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது. அதற்குள் இந்த கோவில் திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், கோவில் கும்பாபிஷேகம் எப்போது நடைபெறும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இதனால் பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகத்தை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவிலுக்கு செல்லும் மலை சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. அந்த சாலையையும் உடனே சீரமைக்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 6 கடைகளை கொண்ட தனியார் வணிக வளாகம் உள்ளது.
    • திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் கே.வி.ஆர். நகர் பகுதியில் மேற்கு பிரதான சாலையில் 6 கடைகளை கொண்ட தனியார் வணிக வளாகம் உள்ளது. இதில் மளிகை கடை, துணிக்கடை, பேன்சி கடை, இ சேவை மையம் மற்றும் முடி திருத்தகம் என 5 கடைகள் செயல்பட்டு வருகிறது .ஒரு கடை காலியாக உள்ளது.

    இதே வீதியில் திருப்பூர் மத்திய காவல் நிலையம் சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 5 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர் .இதில் மளிகை கடையில் விலை உயர்ந்த சாக்லேட்டுகளை எடுத்து சாப்பிட்டு விட்டு குப்பைகளை அங்கேயே போட்டு விட்டு சென்றுள்ளனர். மேலும் கடைகளில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை அள்ளிச் சென்றுள்ளனர்.

    இன்று காலை கடையை திறக்க உரிமையாளர்கள் வந்த போது அனைத்து கடையின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கொள்ளை போனது தெரியவந்தது .

    இதனையடுத்து கடை உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். மத்திய காவல் நிலையம் அமைந்துள்ள அதே வீதியில் சிறிது தூர இடைவெளியில் நடைபெற்றுள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.17 லட்சத்து 38 ஆயிரத்து 133-க்கு விற்பனையானது.

    பரமத்திவேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 29.36 குவிண்டால் எடை கொண்ட 7,870 தேங்காய் விற்பனைக்கு வந்தது.

    இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.65-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.39-க்கும், சராசரி விலையாக ரூ.25.75-க்கும் என மொத்தம் ரூ.71ஆயிரத்து 113-க்கு தேங்காய் விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 219.07 1/2 குவிண்டால் எடை கொண்ட 445 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.78.12-க்கும், சராசரி விலையாக ரூ.81.69-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.89-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.61.99-க்கும், சராசரி விலையாக ரூ.77.29-க்கும் என மொத்தம் ரூ.16லட்சத்து 67ஆயிரத்து 20-க்கு விற்பனையானது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.17 லட்சத்து 38 ஆயிரத்து 133-க்கு விற்பனையானது.

    • மர்மநபர்கள் கைவரிசை
    • அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே குட்டைக்குழி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டிலுள்ள கும்பளத்தில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலையில் பூஜை நடப்பது வழக்கம்.

    நேற்று கோவிலில் பூஜைகள் முடிந்த பின்னர் பூசாரிகள் கோவில் நடையை அடைத்துவிட்டு சென்றனர்.

    இன்று காலை யில் பூஜை செய்வதற்காக ராமன் போற்றி கோவிலுக்கு சென்றார். உள்ளே சென்று பார்க்கும்போது கோவிலில் இருந்த பெரிய 15 கிலோ எடையிலுள்ள அணையா விளக்கு, மற்றும் 20 கிலோ எடையிலான பெரிய மணி மற்றும் 10 கிலோ மதிப்பிலான சிறிய மணிகள் உட்பட சுமார் 60 கிலோ எடையிலான வெண்கல பொருட்கள் மாயமாகி இருந்தது.

    இதன்மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இதனை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

    இதையடுத்து அர்ச்சகர் ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தார். அவர்கள் சம்பவம் குறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் கொள்ளை நடந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த ஆலயத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது குறிப்பிடதக்கது. அதன் பிறகு தினமும் அதிகளவு பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் அருகே நரசிம்மர் ஆலயத்தில் உண்டியில் பணம் திருட்டு போனநிலையில் தற்போது திருவட்டார் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்,

    • 40 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் துண்டுகள் வழங்கல்.
    • காப்பகத்தில் தங்கியுள்ள அனைவருக்கும் காலை உணவுகளை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பறிமாறினர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருப்பாலைத்துறை ஆபீதீன் மெட்ரிகுலேசன் பள்ளி நிறுவனர் ஓ.எஸ்.ஜெ. சார்பாக தில்லையம்பூர் முதியோர் காப்பகத்திற்கு அரிசி, மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஆபீதீன் மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாக இயக்குனர் சித்தார்த்தன், பள்ளி முதல்வர் செல்வி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் முதியோர் காப்பகத்திற்கு சென்று ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, உள்பட 40 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் துண்டுகள் ஆகியவற்றை முதியோர் இல்ல நிர்வாகியும், காப்பாளருமான எஞ்ஜினியர் நடராஜனிடம் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பேசும்போது, பிறருக்கு உதவும் மனப்பாண்மை நாம் வளர்த்து கொண்டு மற்றவர்களுக்கு நம்மால் முடிந்ததை கொடுத்து உதவ வேண்டுமென மாணவர்களை கேட்டுக்கொண்டனர்.

    இறுதியில் முதியோர் காப்பகத்தில் தங்கியுள்ள அனைவருக்கும் காலை உணவுகளை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பறிமாறி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • விளையாட்டு பொருட்களை காண்பித்து அதில் விளையாடுவது குறித்து விளக்கி கூறினர்.
    • பக்கோடா, பாப்கார்ன், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு தின்பண்டங்கள் கொடுக்கப்பட்டன.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் கல்யாண சுந்தரம் பள்ளியில் டிவாஸ் ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டு பொருட்கள் அடங்கிய பொருட்காட்சி நடைபெற்றது.

    இந்த பொருட்காட்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் முன்னிலை வகித்தார்.

    கல்யாணசுந்தரம் பள்ளி தாளாளர் பன்னீர்செல்வம், திவாஸ் ரோட்டரி சங்க மண்டல துணை கவர்னர் நாராயணன், பள்ளி நிர்வாக தலைவர் அருணபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    திவாஸ் ரோட்டரி சங்கம் தலைவி ரேவதி வேணுகோபாலன், செயலாளர் செல்வவள்ளி சந்திரசேகரன், சாசன தலைவி ஆனந்தி முரளி ஆகியோர் மாற்றுத்திறனாளி மாணவர்கள் விளையாடும் வகையில் அமைக்க ப்பட்டிருந்த ராட்டினம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுப் பொருட்களை காண்பித்து அதில் விளையாடுவது குறித்து விளக்கி கூறினர்.

    இதில் மாற்று திறனாளி மாணவர்கள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். அவர்களுக்கு டெல்லி அப்பளம், காலிபிளவர் பக்கோடா, பாப்கார்ன், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு தின்பண்டங்கள் கொடுக்கப்பட்டன. மதியம் பல வகையான அரிசி சாதம் உணவாக வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் சக்திவேல் மற்றும் ஏராளமான மாற்று திறனாளி மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ஏலம் நடைபெற்றது.
    • ஏலத்தில் மொத்தம் ரூ.8 லட்சத்து 83 ஆயிரத்து 945-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 28.37 1/2 குவிண்டால் எடை கொண்ட 8,616 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.27.89-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.19-க்கும், சராசரி விலையாக ரூ.25.89-க்கும் என மொத்தம் ரூ.66 ஆயிரத்து 904-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 107.66 1/2 குவிண்டால் எடை கொண்ட 235 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.77.89-க்கும், சராசரி விலையாக ரூ.81.36-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.36-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.71-க்கும், சராசரி விலையாக ரூ.71.16-க்கும் என மொத்தம் ரூ.8 லட்சத்து 17ஆயிரத்து 41-க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.8 லட்சத்து 83 ஆயிரத்து 945-க்கு விற்பனையானது. 

    • எங்கள் பகுதியில் அத்தியாவசிய தேவைகளான குடியிருப்பு, பாதை வசதி, குடிநீர் வசதி, மருத்துவமனை வசதி ஆகியவற்றை ஊர் மக்களாகிய நாங்கள் போராடி வாங்கினோம்.
    • இந்த கற்களை தொடர்ந்து இரவில் சேலம் மாநகராட்சி 47-வது கோட்ட கவுன்சிலர் புனிதாவின் கணவர் சுதந்திரம் என்பவர் திருடி செல்கின்றார். இதை தட்டிக்கேட்டபோது ஊர் மக்களையும் திட்டி மிரட்டினர். எனவே அரசு கட்டுமான பொருளை திருடிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    சேலம்:

    சேலம் குகையில் உள்ள ஆண்டிப்பட்டி ஏரி கார்கில் நகரில் சுமார் 3000 பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த நவமணி மற்றும் ஊர் மக்கள் சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

    அதில், எங்கள் பகுதியில் அத்தியாவசிய தேவைகளான குடியிருப்பு, பாதை வசதி, குடிநீர் வசதி, மருத்துவமனை வசதி ஆகியவற்றை ஊர் மக்களாகிய நாங்கள் போராடி வாங்கினோம்.

    இந்த நிலையில் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த தியாகிகளின் நினைவாக தமிழ்நாடு அரசு குடிசை மாற்றுவாரியத்தின் எல்ஐ.ஜி அடுக்குமாடி பகுதிக்கு கார்கில் நகர் என பெயர் சூட்டியுள்ளோம். அந்த பெயரில் தான் மத்திய அரசின் தபால் தொடர்புகளும் உள்ளன.

    இது குறித்து, கார்கில் நகர் பகுதி என அறிமுகப்படுத்தும் 4 பெயர் பலகையும் நிறுவினோம். இதற்கு தேவையான ஜல்லி கற்கள் அந்த பகுதியில் புதிதாக கட்டப்படும் மருத்துவமனை அருகில் குடிசைமாற்று வாரியத்தின் ஒப்பந்ததாரர் குவித்து வைத்திருந்தார்.

    இந்த கற்களை தொடர்ந்து இரவில் சேலம் மாநகராட்சி 47-வது கோட்ட கவுன்சிலர் புனிதாவின் கணவர் சுதந்திரம் என்பவர் திருடி செல்கின்றார். இதற்கு உடந்தையாக கவுன்சிலர் புனிதா மற்றும் அதே பகுதியை சேர்ந்த வி.எம்.துரை, இவரது தங்கை தாமரைச்செல்வி ஆகியோர் இருக்கின்றனர். இதை தட்டிக்கேட்டபோது என்னையும், ஊர் மக்களையும் திட்டி மிரட்டினர். எனவே அரசு கட்டுமான பொருளை திருடிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    கவுன்சிலர் மீது வழக்கு

    இது தொடர்பாக செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் விசாரணை நடத்தி, சுதந்திரம், கவுன்சிலர் புனிதா, வி.எம்.துரை, தாமரைச்செல்வி உள்ளிட்டோர் மீது 294 (பி), 506(1), ஐ.பி.சி.379 போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 50 குழந்தைகளுக்கு கம்பு, நெய் உள்ளிட்ட 7 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றிபெறும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த பில்லாளி ஊராட்சியில் ரூ.28 லட்சம் மதிப்பில் புதிதாய் கட்டப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்து நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார்.

    பின் 50 குழந்தைகளுக்கு கம்பு, நெய் உள்ளிட்ட 7 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

    பின்னர் நிருபர்களிடம் கூறுகையில்:-

    மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 20 மாதம் சிறப்பாக நடத்தி வருவதால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றிபெறும் என்றார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், ஷா நவாஸ் எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அத்தியாவசிய பொருட்களான தேங்காய் எண்ணெய், சீயாக்காய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது.
    • இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தான்பேட்டையில் அன்னை அமைந்துள்ள அனுபவம் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு மக்கள் முன்னேற்ற பொதுநல சங்கத்தின் மாநில தலைவர் சமூக சேவகர் டாக்டர் என் விஜயராகவன், தலைமையில், மாவட்ட ஆலோசகர் பழனிவேல் முன்னிலையில் வேஷ்டி, சர்ட், பனியன், துண்டுகள், மருத்துவ பொருட்கள், வலி நிவாரணி தைலங்கள், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள், தேங்காய் எண்ணெய், சீயாக்காய், ஷாம்பு, துணிசோப், குளியல் சோப், பற்பசை, பிரஷ், உள்ளிட்ட பொருட்களை வழங்கி வழங்கினர்

    இந்நிகழ்வில்.மாவட்ட ஓட்டுனர் அணி தலைவர் திருமலை ஐய்யப்பன், மாவட்ட மீனவரனி, தலைவர் ராஜீ மாவட்ட மகளிரணி செயலாளர், காணிக்கை மேரி ஒன்றிய மகளிரணி பொறுப்பாளர், மாரியம்மாள் ஒன்றிய மீனவரணி தலைவர், சூர்ய மூர்த்தி திருமருகல் ஒன்றிய இணைச்செயலாளர், சந்தோஷ் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், இளைஞர் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.15லட்சத்து 59 ஆயிரத்து 762-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 20.63 1/2குவிண்டால் எடை கொண்ட 5 ஆயிரத்து924 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.28.55-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.22.59-க்கும், சராசரி விலையாக ரூ.26.25-க்கும் என மொத்தம் ரூ.51ஆயிரத்து 441-க்கு விற்பனையானது.

    அதேபோல் 182.59 குவிண்டால் எடை கொண்ட 375-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.887.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.84.89-க்கும், சராசரி விலையாக ரூ.86.89-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.85.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.05-க்கும், சராசரி விலையாக ரூ.75.55-க்கும் என மொத்தம் ரூ.14லட்சத்து 69ஆயிரத்து 136-க்கு விற்பனையானது.

    அதேபோல் 3.10 குவிண்டால் எடை கொண்ட 4 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. எள் அதிகபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ. 132.69 -க்கும், குறைந்த விலையாக 110-க்கும் , சராசரி விலையாக ரூ116.19-க்கும் என ரூ39 ஆயிரத்து 185- க்கு விற்பனையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.15லட்சத்து 59 ஆயிரத்து 762-க்கு விற்பனையானது.

    • 16-ந் தேதி மாட்டுப் பொங்கலன்று, மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவைகளை குளிப்பாட்டி, வர்ணம் பூசி, புது மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு கட்டப்படும்.
    • ஜலங்கை உள்பட பல்வேறு அலங்கார பொருட்கள் குவிக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு கயிறு ரூ.250 முதல் ரூ.750 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.

    சேலம்:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. 16-ந் தேதி மாட்டுப் பொங்கலன்று, மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவைகளை குளிப்பாட்டி, வர்ணம் பூசி, புது மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு கட்டப்படும். இதை யொட்டி, சேலத்தில் பல்வேறு பகுதி களில் மூக்கணாங்கயிறு, கழுத்து

    கயிறு, ஜலங்கை உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளன. இது குறித்து

    வியாபாரிகள் கூறுகையில், அயோத்தியாப்பட்டணத்தை சுற்றியுள்ள

    வலசையூர்,ஆச்சாங்குட்டப்பட்டி, அடி மலைபுதூர், சுக்கம்பட்டி, கூட்டாத்துப்பட்டி, பேளூர் உள்படபல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அயோத்தியாப்பட்டணத்திற்கு வந்து தங்கள் கால்நடைகளுக்கு தேவையான அலங்கார பொருட்களை வாங்கிச் செல்வார்கள். இதற்காக மூக்கணாங்கயிறு, ஜலங்கை உள்பட பல்வேறு அலங்கார பொருட்கள் குவிக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு கயிறு ரூ.250 முதல் ரூ.750 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.

    ×