search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224691"

    • குடும்ப அட்டைதாரர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள உணவு பொருட்களின் விவரங்களை கேட்டறிந்தார்.
    • காலதாமதமின்றி பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு பகுதியில் உள்ள ரேசன்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு பொருட்கள் மற்றும் மின் எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, ரேசன் கடையில் உள்ள அரிசி, கோதுமை, உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்கள் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள உணவு பொருட்களின் விவரங்களை கேட்டறி ந்தார்.

    தொடர்ந்து, பணியாளர்க ளிடம் காலதாம தமின்றி பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும் என உத்தரவி ட்டார்.

    ஆய்வின்போது மன்னா ர்குடி கோட்டா ட்சியர் கீர்த்தனா மணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். 

    • ரேஷன் பொருட்கள் வாங்க 3 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது.
    • திருவோடை தூக்கி தரையில் போட்டு உடைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா புளியக்குடி ஊராட்சி வடக்கு தோப்பு புளியக்குடியில் 300-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தற்போது உள்ள அங்காடியில் ரேஷன் பொருட்கள் வாங்க 3 கிலோமீட்டர் தூரம் ரெயில்வே இருப்புப் பாதையை கடந்து நடந்து செல்ல வேண்டி உள்ளது.

    இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டுமென்றால் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. எனவே வடக்கு தோப்பு புளியக்குடியில் பகுதி நேர அங்காடி அமைத்து தர வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் இதுவரை கோரிக்கை நிறைவேறாததால் இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு

    புளியக்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுசீந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று திருவோடு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பகுதி நேர அங்காடி அமைக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

    பின்னர் திருவோடை தூக்கி தரையில் போட்டு உடைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    அப்போது போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.

    பொதுமக்களின் இந்த நூதன போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் பொருட்கள் மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக காய்கறிகள் லாரிகளில் கொண்டுவந்து இறக்கி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கனி மார்க்கெட் கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் இருந்த கட்டிடங்களை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக மார்க்கெட் கட்டப்பட்டது.

    ரூ.20.26 கோடி செலவில் 4.1 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 87 பெரிய கடைகளும், 201 சிறிய கடைகளும் கட்டப்பட்டன. இது தவிர வாகனங்கள் நிறுத்துமிடம், ஏ.டி.எம். மையம், கழிவறை வசதிகளும் கட்டப்பட்டுள்ளன.

    இதையடுத்து கடந்த மாதம் 22-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் காமராஜர் மார்க்கெட்டை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து கடைகள் ஏலம் விடப்பட்டன. தொடர்ந்து ஏலம் எடுத்த கடை வியாபாரிகளுக்கு, சாவிகள் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் பொருட்கள் மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டான இன்று முதல் மார்க்கெட் செயல்பாட்டுக்கு வந்தது. காலை முதலே வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் காய்கறிகளை குவித்து வைத்து விற்பனையில் ஈடுபடத் தொடங்கினர்.

    மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக காய்கறிகள் லாரிகளில் கொண்டுவந்து இறக்கி வைக்கப்பட்டது. காய்கறிகள் விற்பனை நடைபெறுவதை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏராளமான பொதுமக்கள் காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வாங்க வந்தனர்.

    • அத்தியாவசிய பொருட்கள் அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுகிறதா?
    • ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பாளர் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த எருக்கூரில் உள்ள ரேசன் கடையை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் அமுதவல்லி மற்றும் கலெக்டர் லலிதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ரேசன் கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகள் மற்றும் அரிசி நல்ல முறையில் வழங்கப்படுகிறதா என்றும், அத்தியாவசிய பொருட்கள் அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தனர்.

    அதனை தொடர்ந்து கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ப எடை அளவு சரியாக உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர்.

    பின்னர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி நிருபர்களிடம் கூறுகையில்:-

    முதல்-அமைச்சர் ஆலோசனைபடி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பாளர் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மாதம் ஒரு முறை எல்லா துறைகளிலும் ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் உத்தரவிட்டதன் பேரில், ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் விடுதி, ரேஷன்கடைகள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பணிகளை ஆய்வு செய்து குறைபாடுகளை களைந்து சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஆய்வின்போது சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், குடிமை பொருள் வழங்கல் தாசில்தார் சபிதா தேவி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் மணிகண்டன், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பிடிஓ அருள்மொழி, ஒன்றிய பொறியாளர் தாரா, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அமலாராணி, ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், துணைத்தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    • தமிழக அரசின் பொங்கல் பரிசாக அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கப்பணம், தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 2-ந்தேதி அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் இதனை தொடங்கி வைக்க உள்ளனர்.

    சேலம்:

    பொங்கல் பண்டி கையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு தமிழக அரசின் பொங்கல் பரிசாக அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கப்பணம், தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பரிசு வினி

    யோகத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 2-ந்தேதி தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே அந்தந்த மாவட்டங்க ளில் அமைச்சர்கள் இதனை தொடங்கி வைக்க உள்ளனர்.

    இந்த நிலையில் சீனா, அமெரிக்கா போன்ற நாடுளில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா பி.எப்.7 தொற்று இந்தியாவிலும் நுழைந்துள்ளது. கொரோனா முதல் அலை போன்று இந்த தொற்று உயிர் சேதத்தையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றன.

    புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் புதிய வகை கொரோனாவுக்கு கொண்டாட்டமாக அமைந்து விடாத வகையில் மக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    இதையடுத்து தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன்

    கடைகளில் கூட்ட நெரிசல்

    இன்றி எவ்வாறு வினியோகம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு பெற தகுதியானவர்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    ரேஷன் கார்டுதாரர்கள் எத்தனை பேர் உள்ளனர்? அவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு எவ்வாறு வழங்குவது என்பதுபற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் சுமார் 10 லட்சத்து 58 ஆயிரம் ரேசன் கார்டுகள் உள்ளன. இவர்கள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.

    • நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.12 லட்சத்து 84 ஆயிரத்து 557-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 22.45 குவிண்டால் எடை கொண்ட 6 ஆயிரத்து 103 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.20-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.00-க்கும், சராசரி விலையாக ரூ.25.20-க்கும் என மொத்தம் ரூ.48 ஆயிரத்து 764-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு,

    அதேபோல் 107.32 குவிண்டால் எடை கொண்ட 224 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.89.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.80.69-க்கும், சராசரி விலையாக ரூ.88.36-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.89.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.99-க்கும், சராசரி விலையாக ரூ.80.89-க்கும் என மொத்தம் ரூ.8 லட்சத்து 75 ஆயிரத்து 495-க்கு விற்பனையானது.

    அதேபோல் 21.36 குவின்டால் எடை கொண்ட 29 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.136.19-க்கும், குறைந்த விலையாக ரூ.110.69 -க்கும், சராசரி விலையாக ரூ.132.39-க்கும் என ரூ. 2 லட்சத்து 65 ஆயிரத்து 590-க்கு விற்பனையானது.

    12.69 1/2 குவிண்டால் எடை கொண்ட 39 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. நிலக்கடலைக்காய் அதிக விலையாக கிலோ ஒன்று இருக்கு ரூ.75.60-க்கும், குறைந்த விலையாக ரூ.71.50-க்கும், சராசரி விலையாக ரூ.74.50-க்கும் என ரூ. 94 ஆயிரத்து 708-க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.12 லட்சத்து 84 ஆயிரத்து 557-க்கு விற்பனையானது.

    • மேச்சேரியில் இருந்து சாத்தப்பாடி செல்லும் வழியில், சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த மினி லாரியை சோதனை செய்தார்.
    • ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவன் தேவ் (வயசு 24) என்பவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகிறார். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி இன்ஸ்பெக்டர் சண்முகம் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மேச்சேரியில் இருந்து சாத்தப்பாடி செல்லும் வழியில், சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த மினி லாரியை சோதனை செய்தார்.

    அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்தார். இதையடுத்து அந்த வண்டியின் ஓட்டுநர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவன் தேவ் (வயசு 24) என்பவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகிறார். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 

    • பள்ளியில் உடைந்த பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே கட்டிடத்தில் குவித்து வைக்கபட்டுள்ளது.
    • பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறுகாட்டுத்துறையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களின் குழந்தைகள் இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் முழுவதும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.

    இதனால் பள்ளியில் உடைந்த பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே கட்டிடத்தில் குவித்து வைக்கபட்டுள்ளது. இந்நிலையில், கடந்த

    2017-ம் ஆண்டுபேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்காக பல்நோக்கு சேவை மையம் கட்டப்பட்டது. இக்கட்டிடத்தில், தற்போது வகுப்பறைகள் இயங்கி வருகின்றன.

    பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆறுகாட்டுத்துறை கிராம பஞ்சாயத்தார்கள் சார்பில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே, மாணவர்களின் நலன் கருதி அரசு பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான பொருட்கள் வாங்க முன்கூட்டியே திட்டம்.
    • பொருட்கள் மற்றும் செலவின தொகையை எமிஸில் பதிவு செய்ய வேண்டும்.

    சீர்காழி:

    ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு பள்ளி மானியம் அனுப்பப ட்டுள்ளது. கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள சுமார் 94 பள்ளிகளுக்கு மானியம் விடுவிக்கபட்டுள்ளது.

    இந்த மானிய தொகையை பள்ளியின் வளர்ச்சிக்கு செலவு செய்தல் சார்ந்த கூட்டம் கொள்ளிடம் வட்டார வளமையத்தில் நடைபெற்றது. இக்கூட்ட த்திற்க்கு ஆசிரியர் பயிற்றுநர் ஐசக் ஞானராஜ் வரவேற்புரை ஆற்றினர். வட்டார வளமைய மேற்பா ர்வையாளர் ஞானபுகழேந்தி தலைமை யேற்று பேசும் பொழுது,

    இந்த ஆண்டு புதியதாக தொடங்கப்பட்டுள்ள வங்கி கணக்கினை தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் இணைந்து பராமரிக்கபடவேண்டும்.

    அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான பொருட்கள் வாங்க முன்கூட்டியே திட்டமிட பட்டு பள்ளி மேலாண்மை குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தரமான பொருட்களை வழங்க வேண்டும்.

    'வழங்கப்பட்டுள்ள மொத்த தொகையில் 10 சதவீதத்தை கழிவறை சுத்தம் செய்யவும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யவும் பயன்படு த்தி கொள்ளலாம். பள்ளி மானியத்தில் வாங்க ப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் செலவின தொ கையை எமிஸில் பதிவு செய்ய வேண்டும் என்றார்.

    இப்பயிற்சியின்கருத்தா ளர்களாக மாவட்ட தணிக்கையாளர் மோகன், வட்டார தணிக்கையாளர்கள் ராஜீவ்காந்தி சிவனேசன் ஆகியோர் ஈடுபட்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் கவிதா நன்றி கூறினார்.

    • போலீசில் புகார்
    • போலீஸ் தடய அறிவியல் நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் பக்கம் உள்ள மகாராஜபுரம் கீழஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று இருந்தார். இதை பயன்படுத்தி அவரது வீட்டை யாரோ சிலர் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் வீட்டிலிருந்து பணம் மற்றும் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ள னர்.

    இது குறித்து அவர் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் தடய அறிவியல் நிபுணர்களும் அங்கு வர வழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகை களை பதிவு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.24 லட்சத்து 33 ஆயிரத்து 682-க்கு ஏலம் போனது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் எள், நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் பரமத்திவேலூர் மற்றும் கரூர் ஒன்றிய பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில்16.85 குவிண்டால் எடை கொண்ட 4 ஆயிரத்து 636 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 28.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.22.49-க்கும், சராசரி விலையாக ரூ.27.35-க்கும் என மொத்தம் ரூ.40ஆயிரத்து 947-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 238.13 குவிண்டால் எடை கொண்ட 500 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.89.36-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.84.70-க்கும், சராசரி விலையாக ரூ.88.60-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 84.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.75-க்கும், சராசரி விலையாக ரூ. 80.86-க்கும் என மொத்தம் ரூ.19 லட்சத்து 82 ஆயிரத்து 146-க்கு விற்பனையானது.

    எள்

    மேலும் 3.76 குவின்டால் எடை கொண்ட 5 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ. 96.99-க்கும், குறைந்த விலையாக ரூ.94.09-க்கும், சராசரி விலையாக ரூ.95.88-க்கும் என ரூ.36 ஆயிரத்துக்கு விற்பனையானது.

    நிலக்கடலை காய்

    அதேபோல் 130 மூட்டை நிக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.82.56-க்கும், குறைந்த விலையாக ரூ.71.69-க்கும், சராசரி விலையாக ரூ.78.36-க்கும் என ரூ.3 லட்சத்து 74 ஆயிரத்து 586-க்கு விற்பனை ஆனது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.24 லட்சத்து 33 ஆயிரத்து 682-க்கு ஏலம் போனது.

    • ஒவ்வொரு பொருளுக்கும், பில்லுக்கும் வரி செலுத்த வேண்டிய கட்டாயம்.
    • தமிழகத்தில் வணிக வரித்துறையில் புதிதாக பறக்கும் படை.

    திருப்பூர்:

    வணிக வரித்துறை சார்பில் பறக்கும் படை அமைத்துள்ளதால் தொழில் துறையினர் அச்சத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஒரு தொழிற்சாலையில் இருந்து வேறு தொழிற்சாலைக்கு ஜாப் ஒர்க் செய்ய பொருட்கள் எடுத்துச் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி., நடைமுறை அமல்படுத்திய பின், ஒவ்வொரு பொருளுக்கும், பில்லுக்கும் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொழில் நிறுவனங்களில், வணிக வரித்துறையினரின் நேரடி சோதனை முறை முற்றுப்பெற்றது.

    ஜி.எஸ்.டி., வரி விதிப்பால் பில் இல்லாமல் வணிகம் இல்லை என்ற நிலை உருவானது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட இம்முறையால் வரி விதிப்பில் இருந்த பல்வேறு சிக்கல்கள் தீர்வுக்கு வந்தன. இச்சூழலில், தமிழகத்தில் வணிக வரித்துறையில் புதிதாக பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    இப்படையினரால் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சோதனையிட்டு, அபராதம் விதிக்க முடியும். குறைந்தபட்சம் ஒவ்வொரு மாதமும், 339 சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படையை வழிநடத்த, ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு இணை கமிஷனர் அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதியதாக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையால், தொழில்துறையினர் மிரட்சியில் உள்ளனர். ஏனெனில், பொருட்களை தொழிற்சாலைக்கு வெளியே எடுத்துச் செல்ல ஜி.எஸ்.டி., பில் தேவை. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல இ வே பில் தேவை. அவ்வாறு பில் இல்லாமல் பொருட்களை எடுத்துச் சென்றால், கடுமையாக அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதம் விதிப்பால் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் வைத்திருப்போர் பெரும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.

    சிறிய தவறுக்கும் பெரும் அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த, 15 நாட்களில் பல லட்சம் ரூபாய் அபராதமாகவும், முன் வரியாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பூர், ேகாவை தொழில்துறையினர் அதிருப்தியில் உள்ளனர். 

    ×