search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டோரோலா"

    • மோட்டோரோலா நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
    • புதிய மோட்டோ G53 5ஜி மாடலின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

    மோட்டோரோலா நிறுவனம் பல்வேறு மோட்டோ G சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், மோட்டோ G13, மோட்டோ G23, மோட்டோ G53 மற்றும் மோட்டோ G73 5ஜி போன்களின் விவரங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. பலமுறை இந்த ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் லீக் ஆகி இருக்கின்றன.

    அந்த வரிசையில், தற்போது மோட்டோ G53 ஸ்மார்ட்போன் லைவ் படங்கள் வெளியாகி உள்ளது. டிப்ஸ்டர் பரஸ் குக்லனி மற்றும் மைஸ்மார்ட்-ப்ரைஸ் இணைந்து இதனை வெளியிட்டுள்ளன. இத்துடன் ஸ்மார்ட்போனின் ரிடெயில் பாக்ஸ் படங்களும் வெளியாகி உள்ளன. முன்னதாக மோட்டோ G23 ரெண்டர்கள் லீக் ஆன நிலையில், தற்போது இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

    தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் அதன் சீன மாடல் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதன் ஹார்டுவேர் அம்சங்கள் சர்வதேச சந்தைக்கு ஏற்ப மாற்றப்பட்டு இருக்கிறது. டிசைனை பொருத்தவரை மோட்டோ G53 5ஜி மாடலில் செவ்வக கேமரா மாட்யுல், எல்இடி ஃபிலாஷ் உள்ளிட்டவை காணப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இன்க் புளூ நிறம் கொண்டிருக்கிறது.

    மோட்டோ G53 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    புதிய மோட்டோரோலா மோட்டோ G53 5ஜி மாடலில் 6.53 இன்ச் HD+ IPS டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 1600x720 பிக்சல், பன்ச் ஹோல் கட்அவுட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 480+ பிராசஸர், அட்ரினோ GPU, 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.

    கனெக்டிவிட்டியை பொருத்தவரை 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது. புதிய மோட்டோ G53 5ஜி மாடல் 180 கிராம் எடை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இதன் ரிடெயில் பாக்ஸ் விவரங்களின் படி மோட்டோ G53 5ஜி ஸ்மார்ட்போனுடன் சார்ஜிங் அடாப்டர், யுஎஸ்பி டைப் சி கேபிள், சிம் எஜெக்டர் டூல் மற்றும் போன் வழங்கப்படுகிறது. இத்துடன் மேனுவல் புக்லெட் இடம்பெற்று இருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் பிலாஸ்டிக் கவரில் உள்ள விவரங்களின் படி இந்த மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 5ஜி பிராசஸர், 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    மேலும் இந்த ஸ்மார்ட்போன் "XT2335-2" எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என்றும் இது சீனாவில் உற்பத்தி செய்யப்படும் என்றும் உறுதியாகி இருக்கிறது.

    Photo Courtesy: MySmartPrice

    • மோட்டோரோலா நிறுவனத்தின் புது 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
    • புது 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ G53 மற்றும் G73 ஸ்மார்ட்போன்கள் மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகமாக இருக்கின்றன. புது ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் மற்றும் நிறங்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர ஸ்மார்ட்போனின் விலை மற்றும் மோட்டோ G53 அம்சங்கள் வெளியாகி இருக்கிறது.

    அதன்படி மோட்டோ G53 மாடலில் 6.53 இன்ச் IPS LCD பேல், HD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MyUX ஒஎஸ் வழங்கப்படுகிறது. மோட்டோ G53 மாடலில் 8MP செல்ஃபி கேமரா, 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ் வழங்கப்படுகிறது.

    இதுதவிர 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், டால்பி அட்மோஸ், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இ-சிம் வசதி, என்எஃப்சி மற்றும் கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் மோட்டோ G53 ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மாடலில் உள்ளதை போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    புதிய மோட்டோ G53 ஸ்மார்ட்போனின் விலை 209 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 18 ஆயிரத்து 349 வரை நிர்ணயம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் புளூ, பேல் பின்க் மற்றும் ஆர்க்டிக் சில்வர் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

    • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய எட்ஜ் 30 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் தற்போது மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
    • கடந்த மாதம் மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ எட்ஜ் 30 ஃபியுஷன் 32MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

    மோட்டோரோலா நிறுவனம் தனது எட்ஜ் 30 ஃபியுஷன் ஸ்மார்ட்போனினை மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்தது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் கிரே மற்றும் சோலார் கோல்டு என இருவித நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் விவா மக்னெடா ஸ்பெஷல் எடிஷன் மாடல் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    விவா மக்னெடா 2023 ஆண்டின் பண்டோன் நிறம் ஆகும். பண்டோன் 18-1750 நிறத்தில் அறிமுகமாகி இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் இது என மோட்டோரோலா தெரிவித்துள்ளது. இயற்கையை சார்ந்து அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் இந்த நிறம் பல்வேறு விதங்களை பிரதிபலிக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மென்மையான சைவ லெதர் மூலம் உருவாக்கப்பட்ட பாகம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது பாலிஷ்டு சாண்ட்பிலாஸ்ட் செய்யப்பட்ட அலுமினியம் ஃபிரேம், 3D கிலாஸ் கொண்டிருக்கிறது. இவைதவிர இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் எட்ஜ் 30 ஃபியுஷன் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியுஷன் அம்சங்கள்:

    6.55 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 10-பிட் OLED எண்ட்லெஸ் எட்ஜ் டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் பிராசஸர்

    அட்ரினோ 660 GPU

    8ஜிபி LPDDR5 ரேம்

    128ஜிபி UFS 3.1 மெமரி

    ஆண்ட்ராய்டு 12

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS

    13MP அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன்

    2MP டெப்த் சென்சார், எல்இடி ஃபிலாஷ்

    32MP AF செல்ஃபி கேமரா

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    4400 எம்ஏஹெச் பேட்டரி, 68 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    மோட்டோரோலா எட்ஜ் 30 ஃபியுஷன் விவா மக்னெடா ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் ஜனவரி 12 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ. 42 ஆயிரத்து 999 ஆகும். எனினும், அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 39 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.

    இதுதவிர புது மோட்டோ எட்ஜ் ஸ்மார்ட்போன் வாங்குவோர் இண்டஸ்இண்ட் வங்கி கிரெடிட் கார்டு கொண்டு மாத தவணை முறையை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி பெறலாம். இத்துடன் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ. 7 ஆயிரத்து 699 மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    • மோட்டோரோலா நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் மிகவும் வித்தியாச அம்சங்களை கொண்டிருக்கிறது.
    • புது ஸ்மார்ட்போன் உருவாக்குவதற்காக மோட்டோரோலா மற்றொரு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனம் முற்றிலும் புதிய ரக்கட் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. டெஃபி 5ஜி என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்போனை மோட்டோரோலா மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் சாடிலைட் மெசேஜிங் அம்சத்தை வழங்குவதற்காக பிரத்யேக சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    பிரிட்டனை சேர்ந்த புல்லிட் குழுமத்துடன் கூட்டணி அமைத்து இருக்கும் மோட்டோரோலா நிறுவனம் புதிதாக ரக்கட் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. இதுதவிர CAT உடனும் மோட்டோரோலா இணைந்துள்ளது. கடந்த ஆண்டே இருவழி சாடிலைட் மெசேஜிங் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் திட்டம் இருப்பதாக மோட்டோரோலா அறிவித்து இருந்தது.

    அந்த வகையில், அந்த ஸ்மார்ட்போன் மோட்டோரோலா டெஃபி 5ஜி-யாக இருக்கும் என கூறப்படுகிறது. புல்லிட் நிறுவனம் பிரபல சிப் உற்பத்தியாளர் மற்றும் சாடிலைட் நெட்வொர்க் உள்கட்டமைப்பு நிறுவனங்களுடன் இரு ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி புது தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது. இது புது ஸ்மார்ட்போனை செல்லுலார், வைபை மற்றும் சாடிலைட் கனெக்டிவிட்டி இடையே சீராக மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்கும்.

    இந்த அம்சம் புல்லிட் சாடிலைட் கனெக்ட் எனும் பெயரில் அழைக்கப்பட இருக்கிறது. இது புல்லிட், மீடியாடெக் மற்றும் ஸ்கைலோ என மூன்று நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் கொண்ட சாதனம் வைபை அல்லது செல்லுலார் நெட்வொர்க் உடன் இணைக்க முடியாத பட்சத்தில் புல்லிட் மெசேஜிங் சிஸ்டம் சாடிலைட் உடன் இணைந்து கொள்ளும்.

    குறிப்பாக, மறுபுறம் குறுந்தகவலை பெறுவோருக்கு வழக்கமான எஸ்எம்எஸ் போன்றே செல்லும். இதற்கு புல்லிட் சாடிலைட் மெசஞ்சர் செயலி மூலம் பதில் அனுப்பவும் முடியும். இந்த அம்சம் பற்றிய முழு விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், குருந்தகவல்களுக்கான கட்டணம் சாடிலைட் மெசேஜிங் சந்தாதாரர் திட்டத்தில் இருந்து கழிக்கப்பட்டு விடும் என தெரிகிறது. இதற்கான கட்டணங்கள் மாதம் 4.99 டாலர்களில் இருந்து துவங்கலாம்.

    புதிய மோட்டோரோலா டெஃபி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இந்த ஆண்டு முதல் காலாண்டிற்குள் டெஃபி 5ஜி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய E சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • மோட்டோரோலா நிறுவனத்தின் E13 ஸ்மார்ட்போன் விவரங்கள் ஏற்கனவே பல்வேறு வலைதளங்களில் லீக் ஆகி இருந்தது.

    மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மோட்டோரோலா E13 எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருந்தது. விரைவில் அறிமுகமாகும் என கூறப்பட்ட நிலையில், மோட்டோரோலா E13 ஸ்மார்ட்போன் ரெண்டர்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

    அந்த வகையில் mysmartprice வெளியிட்டு இருக்கும் ரெண்டர்களில் புதி மோட்டோரோலா மோட்டோ E13 ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் ரக நாட்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதன் கீழ்புறத்தில் தடிமனான சின் பகுதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கோல்டு நிறம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதுதவிர மேலும் சில நிறங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம்.

    மோட்டோ E13 பின்புறத்தில் இரண்டு கட்-அவுட்கள் உள்ளன. எனினும், இவற்றின் ஒன்றில் மட்டுமே கேமரா சென்சார் இடம்பெற்று இருக்கிறது. மற்றொன்றில் எல்இடி ஃபிலாஷ்லைட் உள்ளது. ஸ்மார்ட்போன் பின்புறம் இடதுபுற ஓரத்தில் கட்-அவுட்-ஐ சுற்றி செவ்வக பம்ப் காணப்படுகிறது. ரெண்டர்களின் படி புது மோட்டோ E13 ஸ்மார்ட்போன் யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டிருக்கிறது. இதன் அருகிலேயே ஸ்பீக்கர் கிரில் மற்றும் மைக்ரோபோன்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி இந்த ரெண்டர்களில் எவ்வித தகவலும் இடம்பெறவில்லை. எனினும், முந்தைய தகவல்களின் படி புதிய மோட்டோ E13 மாடலில் யுனிசாக் T606 பிராசஸர், அதிகபட்சம் 2 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • முன்னதாக மோட்டோ X40 ஸ்மார்ட்போனின் டீசர்களை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

    மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ X40 ஸ்மார்ட்போனினை டிசம்பர் 15 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியுடன், டீசர்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு விட்டன. இந்த நிலையில், மோட்டோ X40 ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி புதிய மோட்டோ X40 ஸ்மார்ட்போனின் விவரங்களும் தெரியவந்துள்ளது.

    கீக்பென்ச் 5 டேட்டாபேஸ்-இல் இடம்பெற்று இருந்த மோட்டோ X40 ஸ்மார்ட்போன் XT2301-5 எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது. லிஸ்டிங்கின் படி இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. புது ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

    புதிய மோட்டோ X40 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13, 12 ஜிபி ரேம் கொண்டிருகும் என கீக்பென்ச் விவரங்களில் தெரியவந்து இருக்கிறது. சிங்கில் கோரில் இந்த ஸ்மார்ட்பஓன் 1471 புள்ளிகளையும், மல்டி கோரில் 4683 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. இவை திவர மோட்டோ X40 பற்றி கீக்பென்ச் தளத்தில் வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    எனினும், முந்தைய தகவல்களில் மோட்டோ XT2301-5 மாடலில் 125 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுவரை வெளியான விவரங்களின் படி மோட்டோ X40 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், LPDDR5X ரேம், 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • இது 2021 வாக்கில் அறிமுகமான மோட்டோ ஜி பிளே மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

    மோட்டோரோலா நிறுவனம் சீன சந்தையில் புதிய மோட்டோ X40 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி டிசம்பர் 15 ஆம் தேதி மோட்டோ X40 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அமெரிக்காவில் புது மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் 2nd Gen மோட்டோ ஜி பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 6.5 இன்ச் IPS TFT LCD HD+ 720x1600 பிக்சல் ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 16MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 2MP டெப்த் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்டராய்டு 12 ஒஎஸ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் 3.5mm ஹெட்போன் ஜாக், பின்புறம் கைரேகை சென்சார், IP52 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    மோட்டோ ஜி பிளே 2023 அம்சங்கள்:

    6.5 இன்ச் IPS TFT LCD HD+ 720x1600 பிக்சல் ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர்

    3 ஜிபி ரேம்

    32 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    16MP பிரைமரி கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    2MP டெப்த் கேமரா

    5MP செல்ஃபி கேமரா

    ஆண்டராய்டு 12 ஒஎஸ்

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    3.5mm ஹெட்போன் ஜாக்

    பின்புறம் கைரேகை சென்சார்

    IP52 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    மோட்டோரோலா மோட்டோ ஜி பிளே 2023 ஸ்மார்ட்போன் டீப் இண்டிகோ எனும் ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை 170 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 13 ஆயிரத்து 992 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை டிசம்பர் 12 ஆம் தேதி துவங்குகிறது.

    • மோட்டோரோலா நிறுவனத்தின் பட்ஜெட் ரக E40 ஸ்மார்ட்போனிற்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • சிறப்பு சலுகை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் பிளாக் ஃபிரைடே சேல் அங்கமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்திய சந்தையில் மோட்டோ E40 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9 ஆயிரத்து 499-இல் இருந்து ரூ. 8 ஆயிரத்து 299 ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் பிளாக் ஃபிரைடே சேல் அங்கமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ E40 மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட LCD ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், ஆக்டா-கோர் யுனிசாக் T700 பிராசஸர், மெமரியை 1TB வரை நீட்டிக்கும் வசதி, நியர்-ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    சலுகை விவரங்கள்:

    மோட்டோ E40 ஸ்மார்ட்போனிற்கு ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 1200 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு பிளாக் ஃபிரைடே சேல் அங்கமாக வழங்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு தவிர இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 7 ஆயிரத்து 750 வரை எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. எக்சேன்ஜ் சலுகையில் அதிக தொகை பெற ஸ்மார்ட்போன் சீரான நிலையில் இருப்பது அவசியம் ஆகும்.

    அம்சங்களை பொருத்தவரை மோட்டோ E40 மாடலில் 6.5 இன்ச் மேக்ஸ் விஷன் ஹெச்டி பிளஸ் 720x1600 பிக்சல் IPS டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் T700 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 48MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 64 ஜிபி மெமரி, மெமரியை 1TB வரை கூடுதலாக நீட்டித்துக் கொள்ளும் வசதி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    • மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் எட்ஜ் 30 அல்ட்ரா பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை விற்பனை செய்து வருகிறது.
    • புதிய எட்ஜ் 30 அல்ட்ரா 200MP கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை கொண்டிருக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு தான் எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. 200MP பிரைமரி கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா பெற்றது. இந்த நிலையில், மோட்டோரோலா நிறுவனம் தனது எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்குகிறது.

    ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் மோட்டோ டேஸ் சேலின் அங்கமாக இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. முன்னதாக மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 54 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 64 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    தற்போது ரூ. 5 ஆயிரம் தள்ளுபடியுடன் இதன் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது. இந்த தள்ளுபடி ப்ளிப்கார்ட் மோட்டோ டேஸ் சேல் நிறைவு பெறும் வரை வழங்கப்படுகிறது.

    மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா அம்சங்கள்:

    மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 6.73 இன்ச் பன்ச் ஹோல் கொண்ட OLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், HDR10+, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 4500 எம்ஏஹெச் பேட்டரி, 125 வாட் வயர்டு, 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 200MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12MP டெலிபோட்டோ கேமரா, 60MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. ஸ்டாக் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா 5ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • மோட்டோராலா நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் பற்றி விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • புது மோட்டோ X சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கான டீசரை லெனோவோ நிறுவன அதிகாரி வெளியிட்டு இருக்கிறார்.

    மோட்டோரோலா நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போனினை X சீரிஸ் பிராண்டிங்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் மோட்டோ X40 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசரை லெனோவோ நிறுவன அதிகாரி வெளியிட்டு இருக்கிறார். டீசரில் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

    கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ எட்ஜ் X30 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷாக மோட்டோ X40 அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதே தகவலை உறுதிப்படுத்தும் வகையில் சீனாவின் 3சி வலைதளத்தில் XT2301-5 எனும் மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டது.

    லெனோவோ மொபைல் வியாபார குழுதமத்திற்கான பொது மேலாளர் சென் ஜின் மோட்டோ X40 ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெய்போவில் வெளியிட்டு இருக்கிறார். டீசருடன் புது ஸ்மார்ட்போனில் பயனர்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார். இந்த X சீரிஸ் ஸ்மார்ட்போன் பிளாக்‌ஷிப் ரக மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.

    அதன்படி புதிய மோட்டோ X40 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், FHD+ டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் 3சி வலைதளத்தில் இதே ஸ்மார்ட்போன் தான் XT2301-5 எனும் மாடல் நம்பருடன் பட்டியலிடப்பட்டதாக தெரிகிறது. அதில் இந்த ஸ்மார்ட்போன் 68 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • மோட்டோரோலா நிறுவனம் முற்றிலும் புதிய மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
    • முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது.

    மோட்டோரோலா நிறுவனம் தனது முற்றிலும் புதிய மோட்டோரோலா ரேசர் போல்டபில் ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. ஆகஸ்ட் மாத வாக்கில் சீன சந்தையில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது உலகளவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.7 இன்ச் FHD+ மடிக்கக்கூடிய POLED ஸ்கிரீன், 144Hz ரிப்ரெஷ் ரேட், 2.7 இன்ச் FHD+ வெளிப்புறம் GOLED ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் பிராசஸர், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மூலம் பாதுகாக்கப்படுகிறது. இத்துடன் 7000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம், மேட் பினிஷ் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஹின்ஜ் வழங்கப்பட்டுள்ளது.

    மோட்டோரோலா ரேசர் 2022 அம்சங்கள்:

    6.7 இன்ச் 2400x1080 பிக்சல் POLED 144Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன்

    2.7 இன்ச் 800x573 பிக்சல் GOLED, 60Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் பிராசஸர்

    அட்ரினோ 730 GPU

    8 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 12

    50MP பிரைமரி கேமரா

    13MP அல்ட்ரா வைடு + மேக்ரோ கேமரா

    32MP செல்பி கேமரா கேமரா

    ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

    வாட்டர் ரெசிஸ்டண்ட்

    5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    3500 எம்ஏஹெச் பேட்டரி

    30 வாட் ட்ர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்

    புதிய மோட்டோரோலா ரேசர் 2022 ஸ்மார்ட்போன் சாடின் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 1119 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 98 ஆயிரத்து 440 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய கான்செப்ட் போன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
    • முன்னதாக எல்ஜி நிறுவனம் செய்ய நினைத்ததை மோட்டோரோலா தற்போது சாத்தியப்படுத்தி இருக்கிறது.

    எல்ஜி நிறுவனம் உலகின் முதல் ரோலபில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. எனினும், தொடர் இழப்பு காரணமாக ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எல்ஜி விலகிக் கொள்வதாக அறிவித்தது. கடந்த மாதம் 6.8 இன்ச் ஸ்கிரீனில் இருந்து 7.4 இன்ச் அளவுக்கு நீளும் வகையில் உருவாக்கப்பட்ட சாதனத்தின் வீடியோவை கொரிய நபர் ஒருவர் யூடியூபில் வெளியிட்டு இருந்தார்.

    சாம்சங் நிறுவனமும் ரோலபில் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில், மோட்டோரோலா நிறுவனம் தனது ரோலபில் போன் கான்செப்ட்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. "லெனோவோ டெக் வொர்ல்டு" நிகழ்வில் மோட்டோரோலா இந்த சாதனத்தை அறிமுகம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ரோலபில் கான்செப்ட் போன் 4 இன்ச்-இல் இருந்து 6.5 இன்ச் வரை நீளும் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது.

    மோட்டோரோலா அறிமுகம் செய்து இருக்கும் ரோலபில் கான்செப்ட் ஏற்கனவே மற்ற நிறுவனங்கள் அறிமுகம் செய்த ரோலபில் மாடல்களை விட வித்தியாசமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. வழக்கமான ரோலபில் ஸ்மார்ட்போன்களின் ரோலபில் ஸ்கிரீன் அகல வாக்கில் நீண்டு டேப்லெட் அளவு டிஸ்ப்ளே போன்று மாறும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. எனினும், மோட்டோரோலா கான்செப்ட் ரோலபில் போன் சிறிய ஸ்கிரீன் கொண்ட சாதனமாக இருந்து நீள வாக்கில் நீண்டு சற்றே பெரிய டிஸ்ப்ளேவாக மாறுகிறது.

    இந்த ரோலபில் போன் பொது மக்கள் கைகளுக்கு கிடைக்க மேலும் பல ஆண்டுகள் ஆகும் என டிஸ்ப்ளே செயின் கண்சல்டண்ட் தலைமை செயல் அதிகாரி ரோஸ் யங் தெரிவித்து உள்ளனர். எனினும், தற்போது விற்பனைக்கு கிடைக்கும் கேலக்ஸி Z போல்டு 4 மாடலுடன் ஒப்பிடும் போது புதிய ரோலபில் கான்செப்ட் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    முன்னதாக மோட்டோரோலா நிறுவனம் தனது மூன்றாம் தலைமுறை ரேசர் கிளாம்ஷெல் ரக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. எனினும், இந்த மாடல் சீன சந்தையில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இந்த மாடல் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய ரேசர் போல்டபில் போன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கிறது.

    ×