search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224799"

    • ஜெனகை மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது.
    • கடந்த ஜூன் 6-ந்தேதி கொடியெற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் இந்து சமய அறநிலைய துறை கட்டுபாட்டின் கீழ் உள்ள ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த ஜூன் 6-ந்தேதி கொடியெற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவையொட்டி நேற்று முன்தினம் சோழவந்தான் சங்ககோட்டை பகுதியில் உள்ள மந்தைதிடலில் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், குழந்தைகளை தோளில் சுமந்தபடியும், பெண்கள் தீசட்டியை கையில் ஏந்தியபடியும், திருநங்கைகள் உள்பட பலர் வரிசையாக பூக்குழி இறங்கினர்.

    இதற்கான ஏற்பாடு களைகோவில் செயல் அலுவலர் இளமதி தலைமையில் கோவில் பணியாளர்களும், சுகாதார பணியினை பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன் தலைமையில் பணியாளர்களும்.பாதுகாப்பு பணி ஏற்பாடுகளை சோழவந்தான் போலீஸ்இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசாரும், தீயணைப்புத் துறை நிலைய அதிகாரி பசும்பொன் தலைமையில் செய்திருந்தார்கள்.

    • சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு வைகாசி மாதம் அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடந்து, 17 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான கொடியேற்று விழா தொடங்கியது. அர்ச்சகர் சண்முகவேல் திருவிழா கொடியேற்ற பொருட்களுடன் மேளதாளத்துடன் நான்குரதவீதி வலம் வந்து கோவில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்று விழா நடந்தது.சிறப்பு பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.

    பேரூராட்சிமன்ற தலைவர்கள் சோழவந்தான் ஜெயராமன, வாடிப்பட்டி பால்பாண்டி, கவுன்சிலர்கள் சத்யபிரகாஷ்குருசாமி, செந்தில்வேல், கொடியேற்றஉபயதாரர் சிங்கம் என்ற மந்தையன் சேர்வை குடும்பத்தார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கோவில் செயல்அலுவலர் இளமதி, தக்கார் கமலா உட்பட பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பால்குடம், அக்னிச்சட்டி, பூக்குழி இறங்குதல் போன்ற நேர்த்தி கடன்களுக்காக காப்பு கட்டினர்.

    ×