என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 224813"
- வங்காள தேச அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை
- 2-வது போட்டிகளில் இலக்கை எட்ட முடியாமல் 5 ரன்னில் இந்தியா தோல்வி அடைந்தது.
இந்தியா- வங்காள தேச அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால், கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தோல்வியை சந்தித்தது.
மெஹிதி ஹசன் ஆட்டமிழக்காமல் 39 பந்தில் 38 ரன்கள் சேர்க்க, வங்காள தேசம் கடைசி விக்கெட்டுக்கு 51 ரன்கள் எடுத்தது.
நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் வங்காளதேசம் 69 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்திருந்தது. அதன்பின் மெஹிது மெஹ்முதுல்லா ஜோடி அபாரமாக விளையாடியது, மெஹிதி சதம் அடிக்க வங்காளதேசம் 271 ரன்கள் குவித்துவிட்டது.
பின்னர் களம் இறங்கிய இந்திய அணி 266 ரன்கள் அடித்தது. இதனால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. இந்த நிலையில் இந்திய வீரர்களின் ஃபார்ம் குறித்து சேவாக் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் ''நம்முடைய பெர்ஃபார்மன்ஸ் கிரிப்டோ கரன்சியை விட வேகமாக சரிந்து விட்டது. அதில் இருந்து மீண்டு வர வேண்டியது அவசியம். எழுந்திருங்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தவிர்த்து மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
- சச்சின், சேவாக் சாதனையை சுப்மன் கில் முறியடித்துள்ளார்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய துவக்க வீரராக யாரும் படைக்காத சாதனையை இவர் படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துவக்க வீரராக வாய்ப்பினை பெற்ற சுப்மன் கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற 1-வது ஒருநாள் போட்டியில் அரை சதமும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் குவித்து அசத்தி இருந்தார். 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் சுப்மன் கில் விளையாடிய போது நியூசிலாந்தில் தான் அறிமுகமானார்.
அந்த வகையில் தற்போதும் நியூசிலாந்து நாட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் எதிர்கால இந்திய ஒருநாள் அணியின் துவக்க வீரராக தனது இடத்தினை உறுதி செய்யும் வகையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
எனவே ரோகித் சர்மா மற்றும் தவானுக்கு பிறகு இந்திய ஒருநாள் அணியின் துவக்க வீரராக இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர். அதோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய துவக்க வீரராக யாரும் படைக்காத சாதனையை இவர் படைத்துள்ளார்.
அந்த வகையில் துவக்க வீரராக இந்திய அணிக்காக விளையாடிய முதல் 10 இன்னிங்ஸ்களில் சுப்மன் கில் 495 ரன்களை குவித்துள்ளார். இதற்கு முன்னதாக சச்சின் துவக்க வீரராக முதல் 10 இன்னிங்ஸ்களில் 478 ரன்களையும், ராகுல் டிராவிட் 463 ரன்களையும், ஷிகார் தவான் 432 ரன்களையும், சேவாக் 425 ரன்கள் அடித்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது சுப்மன் கில் 14 இன்னிங்ஸ்களில் 674 ரன்கள் குவித்து மிகச் சிறப்பான துவக்க வீரராக மாறியுள்ளார். அதோடு முதல் 14 இன்னிங்ஸ்களில் இந்திய அணிக்காக அதிக ஸ்கோர் அடித்தவர்களின் பட்டியலிலும் ஷ்ரேயாஸ் ஐயரை (634) அவர் பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அவருடன் சென்ற மேலும் 3 பேர் இந்த விபத்தில் பலியானார்கள்.
- அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்.
கேப்டவுன்:
தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் நடுவர் 73 வயது ரூடி கோயர்ட்சென். 1992-ம் ஆண்டு, முதல் முறையாக நடுவராக பணியாற்றிய அவர் மொத்தம் 331 சர்வதேச போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளார். 2010-ம் ஆண்டுக்கு பிறகு நடுவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். கேப்டவுனில் குடும்பத்துடன் வசித்து வந்த ரூடி கோயர்ட்சென், நண்பர்களுடன் ஜாலியாக கோல்ப் விளையாட சென்று விட்டு நேற்று காலை காரில் திரும்பிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அவருடன் சென்ற மேலும் 3 பேர் இந்த விபத்தில் பலியானார்கள். கோயர்ட்சென் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் அவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு' ரூடி கோயர்ட்செனுடன் எனக்கு நல்ல உறவு உண்டு. களத்தில் நான் அவசரகதியில் ஷாட்டுகள் அடிக்கும் போதெல்லாம் சத்தம் போடுவார். புத்திசாலித்தனமாக விளையாடு. உனது பேட்டிங்கை பார்க்க விரும்புகிறேன் என்று சொல்வார்.
ஒரு முறை தனது மகனுக்கு தரமான ஒரு காலுறை (பேடு) வாங்க வேண்டும் என்று கூறி அது பற்றி விசாரித்தார். அவருக்கு அதை பரிசாக அளித்தேன். பழகுவதற்கு இனிமையான அற்புதமான மனிதர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். ஓம் சாந்தி' என்று கூறியுள்ளார். இதே போல் முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ்சிங், காலிஸ், சங்கக்கரா, வாசிம் அக்ரம் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலகினால் இந்த வயதில் அவர் தனது பணிச்சுமையையும், மனச்சோர்வையும் நிர்வகிக்க நன்றாக இருக்கும்.
- மூன்று வடிவிலான இந்திய அணியையும் ஒருவரே வழிநடத்த வேண்டும் என்ற கொள்கையை அணி நிர்வாகம் இன்னும் விரும்பினால் அதற்கு ரோகித் சர்மாவே சிறப்பானவர் என்று நான் நம்புகிறேன்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக் அளித்த ஒரு பேட்டியில், ' 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக புதிதாக ஒருவரை கொண்டு வர அணி நிர்வாகம் மனதில் நினைத்தால் 35 வயதான ரோகித் சர்மா அந்த பதவியில் இருந்து விலக வேண்டும். அப்படி செய்தால் இந்த வயதில் அவர் தனது பணிச்சுமையையும், மனச்சோர்வையும் நிர்வகிக்க நன்றாக இருக்கும்.
அத்துடன் 20 ஓவர் போட்டிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டால், ரோகித் சர்மா நல்ல ஓய்வு எடுத்து கொண்டு புத்துணர்ச்சியுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை சிறப்பாக வழிநடத்த உதவிகரமாக இருக்கும். மூன்று வடிவிலான இந்திய அணியையும் ஒருவரே வழிநடத்த வேண்டும் என்ற கொள்கையை இந்திய அணி நிர்வாகம் இன்னும் விரும்பினால் அதற்கு ரோகித் சர்மாவே சிறப்பானவர் என்று நான் நம்புகிறேன்.
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் பேட்டிங்கில் முதல் 3 வரிசையில் ரோகித் சர்மா, இஷான் கிஷான், லோகேஷ் ராகுல் ஆடினால் நன்றாக இருக்கும். இளம் வேகப்பந்து வீச்சாளர்களில் உம்ரான் மாலிக் பந்து வீச்சு தான் என்னை அதிகம் கவர்ந்ததாகும். அவரது திறமைக்கு மூன்று வடிவிலான இந்திய அணியிலும் நீண்ட காலம் இடம் பெறுவார்' என்று தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்