search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225012"

    • எடப்பாடி நகராட்சி கூட்டத்தில் தள்ளுமுள்ளு-மோதலில் அ.தி.மு.க.வினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதில் குடிநீர், கழிவு நீர் கழிவுநீர் வெளியேற்றம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்காக 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.

    எடப்பாடி:

    எடப்பாடி நகராட்சி கூட்டம் இன்று காலை நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் குடிநீர், கழிவு நீர் கழிவுநீர் வெளியேற்றம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்காக 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.

    நகரமன்ற கூட்டத்தில் தீர்மானங்கள் குறித்து விவரம் வாசிக்கப்பட்ட பொழுது, பூலாம்பட்டி குடிநீர் உந்து நிலையத்தில், மின்மோட்டார் பராமரிப்பதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை வாசித்த நகராட்சி வருவாய் ஆய்வாளரிடம் அ.தி.மு.க. நகரமன்ற உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய முற்பட்டனர். அப்போது அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    இதனையடுத்து தி.மு.க. வினர் எடப்பாடி நகராட்சியில் பல்வேறு நிதி ஈடுபடுவதாகவும் ,அதுகுறித்த விவரங்களை கோரும் தங்களை தாக்க வருவதாகவும் இதற்கு தி.மு.க.வினர் மன்னிப்பு கேட்கும் வரை நகர மன்ற கூட்ட அரங்கிலிருந்து வெளியேறப் போவதில்லை என அ.தி.மு.க. நகர மன்ற உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஊர்வலத்தில் தூய்மை மக்கள் இயக்கம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
    • தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகராட்சி வளாகத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார்.

    நகராட்சி ஆணையாளா் பார்கவி, மேலாளா் கண்ணன், பொறியாளா்கண்ணன், சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி வரவேற்று பேசினார்.

    அதனைத்தொடா்ந்து தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னா் நகராட்சி பகுதிகளில் அனைத்து வார்டுகளிலும் எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு ஊர்வலம் நடந்தது.

    ஊர்வலத்தில் தூய்மை மக்கள் இயக்கம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. வீடுகள்தோறும் சென்று பொதுமக்களுக்கு குப்பைகளை வாங்கும் இடத்திலேயே மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினா்கள் முத்துப்பாண்டி, முருகையா, வேம்புராஜ், செண்பகராஜ், பேபிரெசவுபாத்திமா, மேரிஅந்தோணிராஜ், சுகாதார மேற்பார்வையாளா்கள், தூய்மை இந்திய திட்ட பணியாளா்கள், பள்ளி மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • ராமநாதபுரம் நகராட்சி பள்ளிகளில் இடநெருக்கடி காரணமாக கூடுதல் கட்டிடங்கள் கட்ட அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • போதிய இடவசதியின்றி ஒரு வகுப்பறையை இரண்டாக பிரித்து மாணவர்களை அமர வைத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகே நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இங்கு பயன்பாட்டில் இருந்த சேதமடைந்த வகுப்பறை கட்டிடங்கள் அகற்றப்பட்டன. இதனால் போதிய இடவசதியின்றி ஒரு வகுப்பறையை இரண்டாக பிரித்து மாணவர்களை அமர வைத்துள்ளனர். நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் மரத்தடி நிழலில் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தப்படுகிறது.

    கடும் வெயில், பலத்த காற்று வீசும்போது ஆசிரியர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அண்ணா நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 400 மாணவர்கள் படிக்கின்றனர். அங்கும் போதிய வகுப்பறைகள் இல்லாமல் கலையரங்கத்தில் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்துகின்றனர்.

    இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் வரை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என பெற்றோர் குற்றம் சாட்டினர்.

    மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கு தேவையான நிதி ஒதுக்கி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • மக்கள் பணிக்கான தூய்மை இயக்க விழிப்புணர்வு ஊர்வலம் நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சியில் மக்கள் பணிக்கான தூய்மை இயக்க விழிப்புணர்வு ஊர்வலம் சுரண்டை மகாத்மா காந்தி பஸ் நிலையத்தில் நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமையில் நடைபெற்றது.

    துணை தலைவர் சங்கராதேவி முருகேசன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பாரிஜான் தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம் குறித்து விளக்க உரையாற்றி, தூய்மை பணிக்கான மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றி, மக்களின் பங்கு குறித்து விளக்கினார்.

    தொடர்ந்து ஆணையாளர் உறுதிமொழி வாசிக்க மஸ்தூர் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    தொடர்ந்து சுரண்டை பஸ் நிலையத்திலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் அண்ணாசிலை வழியாக நகராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது. நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சாந்தி தேவேந்திரன், அருணகிரி சந்திரன், பாலசுப்பிரமணியன், கல்பனா அன்ன பிரகாசம், உஷா பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×