search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225386"

    • விண்ணப்பதாரா் கணினியின் திறன்மிக்கவராகவும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
    • தகவல் பகுப்பாளா் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளா் பணியிடத்துக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிவிண்ணப்பிக்கலாம்.இது குறித்து மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளா் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. ஒரு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையிலான இந்தப் பணிக்கு மாதம் ரூ.18,536 தொகுப்பூதியம் வழங்கப்படும்.

    இதில் விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து புள்ளியியல், கணிதம், பொருளாதாரம், கணினி (பிசிஏ) ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் கணினியின் திறன்மிக்கவராகவும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பணியானது மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் என்பதால் இதனை அடிப்படையாக கொண்டு எந்தவிதமான அரசுப் பணியும் கோர இயலாது.

    ஆகவே, இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான நபா்கள் கல்விச் சான்று நகல்கள், அனுபவச் சான்று மற்றும் புகைப்படத்துடன் கீழ்கண்ட முகவரிக்கு டிசம்பா் 10 ந்தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971198 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

    இதற்கான விண்ணப்பங்களை திருப்பூா் மாவட்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்: 633, 6வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூா்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    • தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் பணிக்கு வருகிற 27-ந்தேதி எழுத்துத் தேர்வு நடக்க உள்ளது.
    • காலை 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் பணிக்கு வருகிற 27-ந்தேதி எழுத்துத் தேர்வு நடக்க உள்ளது. இதையொட்டி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இலவச மாதிரி தேர்வு வருகிற 13-ந்தேதி நடத்தப்பட உள்ளது. ஏற்காடு அடிவாரத்தில் உள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரியில் அன்று காலை 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு 9 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வர வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பித்த நகல், 2 பாஸ்போர்ட் போட்டோவை தேர்வை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    • எங்களுக்கு நிரந்தர பணி அமைத்திட அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
    • மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 12 ஆண்டுகளுக்கு லேபர் ஒப்பந்தம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 12 ஆண்டுகளுக்கு லேபர் ஒப்பந்தம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் மாரிமுத்து எம்.எல்.ஏ.விடம் அளித்துள்ள மனுவில்,

    எங்களுக்கு நிரந்தர பணி அமைத்திட அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இதில் மாநிலத் உப தலைவர் செல்வராஜ், காளிமுத்து, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயபால் ,மண்ணை கோட்ட செயலாளர் தம்பு சாமி, திட்ட அமைப்பு செயலாளர் சுப்பையன், இயேசு ராஜன் ,ஒப்பந்த தொழிலாளர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உடனிருந்தனர்.

    • கிறிஸ்துமஸ்-புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது
    • பெரம்பலூர் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனத்தில்

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் கல்பாடி பிரிவு சாலையிலுள்ள அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவன தொழிற்சாலையுடன் ஸ்வீட்ஸ் அன்ட் ஸ்நாக்ஸ், பேக்கரி ஆகியவை செயல்பட்டு வருகிறது. மேலும், திருச்சி, சென்னை, துறையூர், சேலம், ஆத்தூர், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், பாண்டிச்சேரி உள்பட 26 கிளைகளுடன் பேக்கரி செயல்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கேக் தயாரிக்கும் பணி தொடங்குவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு பண்டிகையையொட்டி கேக் தயாரிப்புக்காக செர்ரி, உலர் திராட்சை, பேரிச்சை, வெள்ளிரி விதை, ஆரஞ்சு, முந்திரி, திராட்சை, உலர் வண்ணநிற பழங்கள், ஆப்ரிகாட், டியூட்டி புரூட்டிச் ஆகிய பழங்கள், ஜாதிக்காய் பொடி, அத்திப்பழம், லவங்கப் பட்டைப் பொடி போன்றவற்றை கலந்து, சுமார் ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பாகவே ஒயினில் ஊற வைக்கப்படுகிறது. இவை நன்றாக ஊறிய பிறகு சுவையான, தரமான ரிச் பிளம் கேக் தயாரிக்கப்படுகிறது.

    தற்போது தொடங்கப்பட்டுள்ள ரிச் பிளம் கேக் தயாரிப்பு பணி முடிவடைந்து, பின்னர் டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிக்கைக்காக ரிச் பிளம் கேக் மற்றும் வகை வகையான கேக்குகள் தயாரிக்கப்படவுள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக், குக்கீஸ், சாக்லெட் ஆகியவை தயாராகி வருகிறது.

    தரமாகவும், சுவையாகவும், குறைந்த விலையில் இந்த கேக் வகைகள் அனைத்து கிளைகளிலும் கிடைக்கும் என அஸ்வின்ஸ் நிறுவன தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார். அப்போது அஸ்வின்ஸ் நிர்வாக இயக்குநர் அஸ்வின்ஸ், மனித வள மேம்பாட்டு அலுவலர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரவுண்டானா அமைக்க முடிவு
    • பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டு இருவழிப்பாதையாக மாற்றப்பட இருக்கிறது

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

    கலெக்டர் அலுவலக சாலை, வடசேரி சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் சாலையின் நடுவே கற்களால் ஆன தடுப்புகள் அமைத்து இருபுறமும் வாகனங்கள் செல்லும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் குறுகிய சாலைகள் விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரவுண்டானா அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கலெக்டர் அலுவலக சந்திப்பில் ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதே போல பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு மற்றும் செட்டிகுளம் சந்திப்பிலும் ரவுண்டானா அமைக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் மகேஷ் கூறினார்.

    இந்த நிலையில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே கல்கோவில் முன் ரவுண்டானா அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. இதற்காக அந்த பகுதியை விரிவாக்கம் செய்யும் பணி இன்று நடந்தது.

    முதற்கட்டமாக ரவுண் டானா அமைப்பதற்கு இடையூறாக இருந்த மரங்கள் மற்றும் செடிகள் அப்புறப்படுத்தப்பட்டன. அதன்பிறகு அங்கு அமைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகளால் ஆன சிறிய அளவிலான வேலி இடித்து அகற்றப்பட்டது.

    ஆனால் மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு அங்குள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் மாநகராட்சி மேயர் மகேசும் அங்கு வந்து பேசினார். அப்போது, "மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தான் ரவுண்டானா அமைக்கப்படும். அதற்காக தான் நிலத்தை தயார் செய்யும் பணி நடக்கிறது. தனியாருக்கு சொந்தமான இடத்தில் ரவுண்டானா வராது" என்றார்.

    பின்னர் போலீசார் முன்னிலையில் வேலி மற்றும் அங்கிருந்த கற்கள் அகற்றப்பட்டு ரவுண்டானா அமைக்கும் வகையில் அந்த பகுதியை தயார் செய்யும் பணி தொடர்ந்து நடந்தது.

    ரவுண்டானா பணிகள் முடிந்ததும் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டு இருவழிப்பாதையாக மாற்றப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    வடசேரி காசி விஸ்வநாதர் கோவில் அருகே கழிவு நீர் ஓடை அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்பதாக கோவில் நிர்வாகிகள் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் இன்று அப்பகுதிக்கு குமரி கிழக்கு மாவட்ட செய லாளர் மேயர் மகேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உடனே அதனை சரி செய்ய துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது மாநகராட்சி அதிகா ரிகள், மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

    • கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும்
    • தமிழக அரசுக்கு கோரிக்கை

    திருச்சி:

    தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் யு.ஜி.சி.தகுதியுடைய கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்திடவேண்டும் என்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, கடந்த 10 ஆண்டுகளாக அரசு கலைக்கல்லூரிகளில் நிரந்தர உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததனால் சற்றேறக்குறைய 9000 உதவிப்பேராசிரியர் பணிக்கான காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது.

    தற்போது தமிழக அரசு 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நீண்ட காலமாக (ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேலாக) தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் கவுரவ வரிவுரையாளர்கள் 40 முதல் 50 வயதை கடந்தவர்களாகவும் மாதந்திர ஊதியமாக 20,000 பெற்று வரக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.

    எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ள 4000 

    • சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு டன் கணக்கில் அனுப்பப்பட்டு, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை என தயாரிக்கப்படுகிறது.
    • இந்நிலையில் வருகிற திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இனிப்பு பலகாரம் செய்யும் நிறுவனங்கள், அதிக அளவில் இனிப்புகளை செய்வர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.இவை மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு டன் கணக்கில் அனுப்பப்பட்டு, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை என தயாரிக்கப்படுகிறது.

    தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல சந்தைக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதனை வியாபாரிகள் வாங்கி பல்வேறு மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் வருகிற திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இனிப்பு பலகாரம் செய்யும் நிறுவனங்கள், அதிக அளவில் இனிப்புகளை செய்வர். இதனால் அதிக அளவில் வெல்லம் தேவைப்படுவதால், வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு வெல்ல சிப்பங்களை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். எனவே வெல்லம் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 200க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் தொழிலாளர்கள் இரவு, பகலாக உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் தயார் செய்து அவ்வப்போது வியாபாரிகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர்.

    • சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தென் மண்டல ஐ.ஜி. பாராட்டு தெரிவித்தார்.
    • இந்த இரட்டை கொலை சம்பவம் போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதிகளான ஜோதி மணி (60), சங்கரபாண்டியன் (65)இருவரும் எம்.டி.ஆர்.நகர் 2-வது தெருவில் வசித்து வந்த நிலையில் கடந்த 18.7.22 அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

    இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி உத்தரவின் பேரில், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் அறிவுறுத்தலின் பேரில் சிவகாசி டி.எஸ்.பி. பாபு பிரசாத் தலைமையில் சிறப்பு படை நியமிக்கப்பட்டு இரட்டை கொலை செய்த குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது.

    சம்பவம் நடந்த வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகள் மூலம் போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த கொலை வழக்கில் ஜோதி புரம் 7-வது தெருவில் வசிக்கும் தனியார் மில் ஊழியர் சங்கர் (42), அவரது மனைவி பொன்மணி (35) ஆகியோரை கைது செய்தனர்.

    ஆசிரியர் தம்பதிகளை சங்கர் பணத்திற்காக கொலை செய்தார். இதற்கு அவரது மனைவி உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. கணவன்-மனைவி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சிறப்பு காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய சிவகாசி டி.எஸ்.பி. பாபு பிரசாத், காவல் ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் நாகராஜ பிரபு, தலைமை காவலர் அன்பழகன் மற்றும் காவலர்களை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

    • துப்பாக்கி சுடுதல், கலவர தடுப்பு, யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது.
    • பயிற்சி நிறைவு பெற்ற, 97 போலீசாரும் கோவையில் உள்ள சிறப்பு காவல் படைக்கு செல்ல உள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காங்கயம் ரோடு நல்லூரில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் தற்காலிக போலீஸ் பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு தேர்ச்சி பெற்ற 97 இரண்டாம் நிலை போலீசார் கடந்த மார்ச் மாதம் முதல் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இவர்களுக்கு கவாத்து, சட்டப் பயிற்சி, துப்பாக்கி சுடுதல், கலவர தடுப்பு, யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 7மாதமாக அளிக்கப்பட்ட பயிற்சி நிறைவு பெற்றது.

    பயிற்சி நிறைவு விழா மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடந்தது. திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரபாகரன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கோவை சரக டி.ஐ.ஜி., முத்துசாமி, திருப்பூர் எஸ்.பி., சஷாங் சாய் ஆகியோர் பங்கேற்றனர். போலீசாரின் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.மேலும், பயிற்சி நிறைவு பெற்ற, 97 போலீசாரும் கோவையில் உள்ள சிறப்பு காவல் படைக்கு செல்ல உள்ளனர்.

    • நகர்மன்ற கூட்டத்தில் ஒப்புதலின் படி நவீன தகன மேடை அமைக்கும் பணி ரத்தானது.
    • நூலகம் கட்ட நிலம் வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானம் கூட்ட த்தில் நிறைவேற்ற ப்பட்டது.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் செகானாஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் செல்வராஜ், துணைத்தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார்.

    பணிகள் ரத்து

    கீழக்கரை இந்துக்கள் மயானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன தகனமேடை அமைக்க அப்பகுதி பொதுமக்களால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை ஏற்று பணி உத்தரவு மற்றும் பணி ஒப்பந்தம் ஆகியவற்றினை ரத்து செய்ய மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்க ப்பட்டது.

    கீழக்கரை நகரில் அமைந்து உள்ள நூலகம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத இட நெருக்கடி யான வாடகைக் கட்டி டத்தில் இயங்கி கொண்டி ருக்கிறது. எனவே நகராட்சிக்கு சொந்தமான கீழக்கரை செம்பி ஆயில் கம்பெனி அருகில் உள்ள இடத்தில் நூலகம் கட்ட நிலம் வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானம் கூட்ட த்தில் நிறைவேற்ற ப்பட்டது.

    கூட்டத்தில் நகர் மன்ற துணை தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான் பேசுகையில், கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகளில் சில வார்டுகளை தவிர மற்ற வார்டுகளுக்கு சரிவர பணிகள் நிறைவேற்ற வில்லை. அனைத்து கவுன்சி லர்களிடமும் நகராட்சி தலைவர் ஆலோசனை செய்து பாரபட்சமில்லா மல் நிதியை அனைத்து வார்டு களுக்கும் பகிர்ந்து ஒதுக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கவுன்சிலர்கள் ஷேக் ஹுசைன், முகமது பாதுஷா ஆகியோர் பேசினர். அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கை நிறைவேற்ற விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைவர் செகா னாஸ் ஆபிதா கூறி னார்.

    பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் பரகத்துல்லா, மேலாளர் தமிழ்ச் செல்வன், உதவியாளர் உதயா, நகராட்சி அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்கள் எம்.எம்.கே. முகமது காசிம், சுஐபு, மீரான் அலி, நசீருதீன், பயாஸ்தீன், நவாஸ் உள்பட அனைத்து கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • மேட்டூர் அருகே பி.என்.பட்டி தேர்வுநிலை பேரூராட்சி 7-வது வார்டு கருப்புரெட்டியூர் வண்டிக்காரன்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு பாதை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
    • பொதுமக்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றம்.

    சேலம்:

    மேட்டூர் அருகே பி.என்.பட்டி தேர்வுநிலை பேரூராட்சி 7-வது வார்டு கருப்புரெட்டியூர் வண்டிக்காரன்காடு பகுதியை சேர்ந்தவர் சுவாதி. இவரும், அப்பகுதி பொதுமக்களும் தங்களுக்கு பாதை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனை தொடர்ந்து முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி மாவட்ட கலெக்டர் கார்மேகம் மேற்பார்வையில் சேலம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர், மேட்டூர் தாசில்தார், வருவாய் ஆய்வாளர், பி.என்.பட்டி பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர், 7-வது வார்டு உறுப்பினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கொண்ட அலுவலர்கள் கடந்த 11-ந் தேதி சம்பந்தப்பட்ட வண்டிக்காரன்காடு பகுதியில் சாலை வசதி ஏற்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட விவசாய நில உரிமையாளர்களுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று பொதுமக்களின் வசதிக்காக ரூ.15 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டதாக மாவட்ட கலெக்டர் கார்மே கம் தெரி வித்துள்ளார்.

    முன்னதாக, பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மண் சாலை அமைத்து கொடுக்கும் பணியை தொடங்க உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    • திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • பல்வேறு இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்தநிலையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாமல் சாரல் மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று காலை 8மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

    திருப்பூர் வடக்கு-20,அவினாசி-38.40, பல்லடம் -45, ஊத்துக்குளி-4, காங்கயம்-1.40, தாராபுரம்-20, மூலனூர்-40, குண்டடம்-27, அமராவதி அணை-2, உடுமலை-2, மடத்துக்குளம்-4, திருப்பூர் கலெக்டரேட்- 16, வெள்ள கோவில்-6, திருப்பூர் தெற்கு-5, கலெக்டர் முகாம் அலுவலகம்-45.50. மொத்தம் 276.30 மி.மீ. மழை பெய்துள்ளது.

    இதனிடையே திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றும் பணியில் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ளன. 

    ×