search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225386"

    • காலியிடங்களை விட பல மடங்கு விண்ணப்பங்கள் திருப்பூர் கல்வி மாவட்டத்தில் பெறப்பட்டுள்ளன.
    • ஒரு பணியிடத்திற்கு சராசரியாக 10 பேர் வீதம் விண்ணப்பித்துள்ளனர்.

    திருப்பூர் :

    தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தின் கீழ் நிரப்பப்பட உள்ளன. இதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பம் கடந்த 3 நாட்களாக பெறப்பட்டன. ஒருவரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்துள்ளதால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    டி.டி.எட்., படித்தவர்கள் துவக்க பள்ளிக்கும், பி.எட்., படித்தவர்கள் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட டிகிரிகளுடன் பி.எட்., மற்றும் எம்.எட்., படித்தவர்கள் உயர்நிலை, மேல்நிலை பள்ளிக்கும் விண்ணப்பித்தனர். ஒருவர் எத்தனை பணியிடங்களுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்பதால், காலியிடங்களை விட பல மடங்கு விண்ணப்பங்கள் திருப்பூர் கல்வி மாவட்டத்தில் பெறப்பட்டுள்ளன.

    திருப்பூர் தெற்கு, வடக்கு, அவிநாசி மற்றும் ஊத்துக்குளி ஒன்றியங்கள் முறையேஇடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆயிரத்து 407 விண்ணப்பங்களும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 405 விண்ணப்பங்களும், முதுகலை ஆசிரியர் பணிக்கு 401 விண்ணப்பங்களும் பெறபட்டுள்ளன. ஒரு பணியிடத்திற்கு சராசரியாக 10 பேர் வீதம் விண்ணப்பித்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பாலம் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • இந்த பணி நடைபெறுவதையொட்டி சேலம்-சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் 4 ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் அடுத்துள்ள ரெட்டிபட்டி அம்பேத்கார் நகர் அருகே உள்ள சேலம்- சென்னை மார்க்க ரெயில் பாதையில் பழைய பாலத்தை அகற்றி புதிய பாலம் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதற்காக 18 ராட்சத கான்கிரீட் பாக்ஸ் தயாரிக்கப்பட்டது, கடந்த 4-ந் தேதி 6 கான்கிரீட் பாக்ஸ் பொருத்தப்பட்டு பணி நடைபெற்றது. மீதமுள்ள 12 பாக்ஸ் பொருத்துவதற்கான பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்தப் பனியின் போது சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ், கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்து கவனித்து வருகின்றனர், இந்த பணி நடைபெறுவதை–யொட்டி சேலம்-சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் 4 ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • வக்கீல்கள் கோர்ட்டு பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
    • போலீசாரை கண்டித்து நடைபெற்றது

    பெரம்பலூர்

    கன்னியாகுமரி மாவட்டம், இரணியலை சேர்ந்த வக்கீல்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்து, வக்கீல்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் போலீசாரை கண்டித்தும், அவர்கள் மீதும், தொடர்புடைய அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பார் அசோசியேசன் தலைவர் வள்ளுவன் நம்பி, பெரம்பலூர் அட்வகேட்ஸ் அசோசியேசன் தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் அந்தந்த அசோசியேசனை சேர்ந்த வக்கீல்கள் பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டையில் உள்ள அனைத்து கோர்ட்டுகளில் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் அந்த கோர்ட்டுகளில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    • மதுரையில் நாளை மின்தடை செய்யப்படுகிறது
    • விராட்டிபத்து உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    மதுரை

    விராட்டிபத்து உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சம்மட்டிபுரம்மெயின்ரோடு, ஸ்ரீராம் நகர், எம்.எம்.நகர், எச்.எம்.எஸ். காலனி, டோக்நகர் 7- வது தெரு முதல் 15-வது தெரு வரை, கோ-ஆப்டெக்ஸ் காலனி, ஜெய் நகர், ராஜராஜேஸ்வரி நகர், இருளாண்டி காலனி, கிருதுமால் நகர், ஜானகி நகர், ஆனந்தா நகர்,தேவகி ஸ்கேன், வெள்ளக்கண்னு தியேட்டர் ரோடு, பிக்பஜார், பொன்மேனிபுதூர், அமிர்தா நகர், தேனி மெயின்ரோடு முதல் ஈத்கா பில்டிங் வரை, பாண்டியன்நகர் ஆகிய பகுதிகளில் நாளை (4-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    மதுரை தெப்பக்குளம் துணை மின்நிலையம் கேட்லாக் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் புது மீனாட்சி நகர், கேட்லாக் ரோடு, மேல அனுப்பானடி, சின்ன கண்மாய், ஜோசப் பார்க், சி.எம்.ஆர்.ரோட்டின் ஒரு பகுதி, சண்முகா நகர் ஆகிய பகுதிகளில் நாளை (4-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    சமயநல்லூர் துணைமின்நிலையம் வைரவநத்தம் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சித்தாலங்குடி, ஆணைக்குளம், வைரவநத்தம், வயலூர், சித்தன்குளம் ஆகிய பகுதிகளில் நாளை (4-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

    • ஈரோடு மாவட்ட மலைவாழ் மக்களின் 70 ஆண்டு கால கோரிக்கையினை ஏற்று கத்திரிமலை பகுதியில் சாலை அமைக்க முடிவு வெசய்யப்பட்டது.
    • இச்சாலைப் பணி இன்னும் 4 மாதங்களில் நிறைவு பெற்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கத்திரி பட்டி மலை கிராமம் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3500 அடிஉயரத்தில் கத்திரிபட்டி மலை உள்ளது.

    இங்கு மாதம்பட்டி, மலையம்பட்டி என 2 பகுதிகள் உள்ளது. இதில் 76 குடும்பங்களும், சுமார் 279 மக்களும் வசிக்கின்றனர். இந்த மலைப்பகுதி 45 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது.

    இந்த பகுதிக்கு செல்வதற்கு ரோடு வசதி இல்லாமல் இருந்தது. இதையடுத்து கத்திரிபட்டி கிராமத்துக்கு ரோடு அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்ட மலைவாழ் மக்களின் 70 ஆண்டு கால கோரிக்கையினை ஏற்று அந்த பகுதியில் சாலை அமைக்க முடிவு வெசய்யப்பட்டது.

    இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி மாதம் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கத்திரிப்பட்டி வன எல்லை முதல் ஈசலாங்காடு வரை கப்பி சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

    அதனைத் தொடர்ந்து கடந்த 27.4.2022 அன்று ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் கத்திரி மலைப்பகுதி சாலையின் இரு புறங்களிலும் அமைந்துள்ள பாறைகளை முழுமையாக அகற்றி சாலை சமன் செய்யப்பட்டது.

    ஆரம்ப நிலைப் பணிைய கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சாலை அமைக்கும் பணியினை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இச்சாலை 8.10 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்படுகிறது.

    கலெக்டர் உத்தரவுப்படி கத்திரிபட்டி முதல் கத்திரி மலை சாலை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தற்போது மண்சாலை மேம்பாடு பணிகள் முடிந்துள்ளது. கரடு முரடான பாறைகள் உடைத்து மக்கள் சிரம மின்றி சாலையில் பயணம் செய்வதற்கு ஏதுவாக சீர் செய்யப்பட்டுள்ளது.

    கான்கிரீட் பணிகள் மற்றும் அடித்தளம் பொருட்கள் சேகாரம் நடைபெற்று வருகிறது. இச்சாலைப் பணி இன்னும் 4 மாதங்களில் நிறைவு பெற்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் கத்திரிமலை ப்பகுதியில் 8 ஆட்டு கொட்டகை அமைக்க ப்பட்டுள்ளது. 18 மாட்டு கொட்டகை அமைக்கும் பணியும், சூரிய மின் சக்தியுடன் கூடிய 20 பசுமை வீடுகள் மற்றும் பிரதான் மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 7 வீடுகள் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது.

    அதனைத் தொடர்ந்து கத்திரிப்பட்டி வன எல்லை முதல் ஈசலாங்காடு வரை கப்பி சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின் போது, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர், உதவி செயற்பொறியாளர் சிவபிரசாத் உள்பட அலுவலர்கள் பலர் உடனி ருந்தனர்.

    • யூனியன் பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை விடுத்தனர்.
    • தலைவர் ஜெயந்தன் தலைமையில் நடைபெற்றது.

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியின் பெற்றோர் ஆசிரிய கழகக் கூட்டம் தலைவர் ஜெயந்தன் தலைமையில் நடைபெற்றது.

    பேரூராட்சி உறுப்பினர்கள் மஹ்ஜபின் சல்மா, ஷமீமா பானு, பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா முன்னிலை வகித்தனர். ஆசிரியை சுபஸ்ரீ வரவேற்றார்.250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கும் நிலையில் தலைமை ஆசிரியை உட்பட 4 ஆசிரியைகளே பணியாற்றுவதால் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் குறைய வாய்ப்பு உள்ளது.

    எனவே இங்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிரப்ப அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றினர். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கி சீர்வரிசையாக கொண்டுவந்தனர். மக்கள் சட்ட உரிமைகள் கழக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளரும், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினருமான சுந்தூஸ்கான் மாணவ, மாணவிகள் ஒளி, ஒலி வழி கல்வி பயில பள்ளிக்கு புரொஜெக்டரை வழங்கினார்.

    மாவட்ட செயலாளர் ஹாஜா முகைதீன், மாவட்ட அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட போக்குவரத்து அணி அமைப்பாளர் மனோகரன், திருவாடானை ஒன்றிய அணி அமைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.முடிவில் ஆசிரியை புஷ்பா நன்றி கூறினார்.

    • சாத்தான்குளம் பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கப்பட்டது.
    • முட் செடிகள் இல்லாத சாத்தான்குளமாக மாற்றிட நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பேரூ ராட்சியில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி நேற்று தொடங்கப்பட்டது

    சாத்தான்குளம் பேரூராட்சியில் 15-வார்டு பகுதிகள் உள்ளன. அனைத்து பகுதியில் உள்ள சீமைக் கருவேல் மரங்களை மு ழுவதுமாக அழிக்கும் நோக்கத்தோடு சாத்தான்குளம் பேரூராட்சி நிர்வாகமும் - சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றமும் இணைந்து அதனை அகற்றும் பணிநேற்று தொடங் கப்பட்டது.

    முதற்கட்டமாக சாத்தான்குளம் பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கப்பட்டது. இப்பணிக்கு சாத்தான்குளம் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜோசப் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்ற தலைவர் மலையாண்டி பிரபு முன்னிலை வகித்தார்.

    முதற்கட்டமாக அரசுக்கு சொந்தமான இடங்களில் முட் செடிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. படிப்படியாக அனைத்து பகுதியிலும் முட்செடி களையும் அகற்றி முட் செடிகள் இல்லாத சாத்தான்குளமாக மாற்றிட நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதில் முன்னாள் பேரூ ராட்சி மன்ற உறுப்பினர் சரவணன், சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றம் நிர்வாகிகள் அய்யா குட்டி, முத்து இசக்கி, முத்துராமலிங்கம், வீரபுத்திரன், 11-வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் மகாராஜன், ஜமாத் தலைவர் மகதூம், சுகாதார மேற்பார்வையாளர் தங்கமுத்து ,சாத்தான்குளம் நகர தி.மு.க. துணைத் செயலாளர் மணிகண்டன், நகர பொருளாளர் சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆடிப்பூர கொட்டகையில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • ஆடிப்பூர கொட்டகையில் தான் ஆண்டாள் தேர் திருவிழா கருட சேவையின் போது காலையில் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெறும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தன்று பெரிய தேரில் ஆண்டாளும், ரங்க மன்னாரும் காட்சியளிப்பார்கள்.

    பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து நிலைக்கு சேர்ப்பார்கள் இந்த ஆண்டு ஆடித் தேர் திருவிழா வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதி நடைபெறுகிறது.

    தேர் திருவிழாவை முன்னிட்டு ஆண்டாள் கோவிலுக்கு முன்புறம் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் மாலை தொடங்கி இரவு வரை பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, பரதநாட்டிய நிகழ்ச்சிகளை பக்தர்கள் கண்டு களிப்பதற்காக 9 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் ஆடிப்பூர கொட்டகையின் உள்ளே கண் கவரும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணியில் இரவு பகலாக 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கண்ணைக் கவரும் வண்ண துணிகள், பூக்களைக் கொண்டு பிரமாண்டமான முறையில் சுமார் 5 ஆயிரம் பேர் அமரும் வகையில் இந்த பந்தலும், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்காக பெரிய மேடையும் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆடிப்பூர கொட்டகையில் தான் ஆண்டாள் தேர் திருவிழா கருட சேவையின் போது காலையில் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெறும்.அதேபோல் தேர் திருவிழாவை முன்னிட்டு ஆண்டாளுக்கு திருப்பதி திருமலை, ஸ்ரீரங்கம், மதுரை அழகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்து பட்டு, மாலை ஆகிய மரியாதைகள் கொண்டுவரப்பட்டு இந்த பந்தலின் கீழ் வைக்கப்பட்ட பின்னர்தான் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும்.

    அதேபோல் பங்குனி மாதம் உத்திர நன்னாள் அன்று ஆண்டாள்- ரங்கமன்னார் திருக்கல்யாணம் இந்த கொட்டகையின் கீழ் நடைபெறும். சிறப்பு வாய்ந்த ஆடிப்பூர கொட்டகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணியை உள்ளூர் மட்டுமல்லாது கோவிலுக்கு வந்து செல்லும் வெளியூர் பக்தர்களும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    ஆடிப்பூர திருவிழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்து ராஜா மற்றும் கோவில் அலுவலர்களும், பணியாளர்களும் செய்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்ட திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 7 தடுப்பணைகள் கட்டும் பணி இந்த ஆண்டு தொடங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
    • இந்த தடுப்பணை ரூ.5.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம், ஒ.சிறுவயல் கிராமம் அருகே, தேனாற்றின் குறுக்கே ஒய்யகொண்டான் கண்மாய்க்கு பாசன வசதி அளிக்கும் வகையில் தடுப்பணை கட்டப்படுகிறது.

    தடுப்பணைக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் பெரியகருப்பன் கலந்து கொண்டு தடுப்பணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துத்தரப்பு மக்களும் சமமான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகவும், அனைத்துறைகளையும் வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்பதற்காகவும் பாடுபட்டு வருகிறார். குறிப்பாக, வேளாண்துறைக்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சிவகங்கை மாவட்டம் ஏராளமான விளைநிலைங்களையும் ஏரி, குளம், கண்மாய்கள் நிறைந்த மாவட்டமுமாக உள்ளது. மேலும், பாலாறு, தேனாறு, வைகையாறு, மணிமுத்தாறு போன்ற ஆறுகள் சிவகங்கை மாவட்டத்தை கடந்து செல்கின்றன. இருப்பினும் கடைமடை பகுதியாக இருப்பதால் போதுமான அளவு நிரந்தரமான நீர் ஆதாரம் இல்லாமல் வறட்சி சூழ்ந்த மாவட்டமாக உள்ளது.

    இதனைக் கருத்தில் கொண்டு சிவகங்கை மக்களின் வேளாண் சார்ந்த தொழிலை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்தாண்டு 7 தடுப்பணைகள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட உள்ளன. ஏற்கனவே 4 தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இந்த தடுப்பணை ரூ.5.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. 380 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசன வசதி பெற உள்ளன. 7 கண்மாய்களுக்கு இதில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்பட உள்ளது. மேலும் மறைமுகமாக இந்த பகுதிகளில் உள்ள அரண்மனைப்பட்டி, பலவான்குடி, ஒ.சிறுவயல், குன்றக்குடி, பாதரக்குடி போன்ற கிராமங்கள் பாசன வசதி பெற உள்ளன. ஏக்கர் ஒன்றுக்கு இதற்காக ரூ.1.42 லட்சம் செலவிடப்படவுள்ளது.

    இந்த திட்டத்தில் தடுப்பணை, மணல்போக்கி கட்டுதல் மற்றும் ஒய்யகொண்டான் கண்மாய்க்கும் சிறுவயல் கண்மாய்க்கும் புதிய தலைமதகுகள் கட்டுதல், வௌ்ளக்கரைகளை உயர்த்தி புனரமைத்தல், கால்வாய் மராமத்து பணி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதோடு, வேளாண் சார்ந்த தொழில்க ளுக்கு உறுதுணையாக உள்ள ஆடு, மாடுகளுக்கு போன்ற கால்நடைகளுக்கும் கூடுதல் நீர் ஆதாரமாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரத்துறை) கார்த்திகேயன், கோட்டையூர் பேரூராட்சித் தலைவர் கார்த்திக் சோலை, உதவி செயற்பொறியாளர்கள் பஞ்சவர்ணம், சங்கர், சீனிவாசன், விக்னேஸ்வரன், சரவணன், காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம், உதவிப்பொறியாளர்கள் பாலமுருகன், கலைவாணி, பிரகாஷ், ஆனந்த மாரியவளவன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியம், ஊராட்சி மன்றத்தலைவர் குழந்தைவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மேட்டூர் காவிரி ஆற்றில் ெவல்டிங் தொழிலாளி மூழ்கினார்.
    • அவரது உடலை 2-வது நாளாக தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    மேட்டூர், ஜூன்.20-

    ஈரோடு பெரியசேமூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). வெல்டிங் தொழிலாளி–யான இவர் நேற்று மேட்டூர் ராமமூர்த்தி நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தார். பின்னர் உறவினருடன் அந்த பகுதியில் காவிரி ஆற்றில் குளித்தார்.

    அப்போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். அங்கு நின்றவர்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை.

    இதையடுத்து அவருடைய உறவினர்கள் மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் தண்ணீரி ல் மூழ்கிய மணிகண்டனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இதையடுத்து 2-வது நாளாக இன்றும் அவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கருமைைலக்கூடல் போலீ–சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்குறிச்சி சமத்துவபுரத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • இதனை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் மேகநாத ரெட்டி ஆய்வு செய்தார்.

    காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி ஊராட்சி யில் உள்ள சமத்துவபுரத்தில் வீடுகள், பள்ளிகள், கழிப்பறைகள், நுழைவு வாயில் உள்ளிட்டவைகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதனைதொடர்ந்து, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் எஸ்.கல்லுபட்டி ஊராட்சியில் ரூ.1.84 லட்சம் மதிப்பில் மறுசீரமைத்து புதுப்பிக்கப்பட்ட நூலகத்தையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.1.15 இலட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் முருங்கை நர்சரி அமைக்கும் பணியையும், கம்பிக்குடி ஊராட்சியில் ரூ.4.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணை யை(நர்சரி)யும், வினோபா நகரில் பிரதான் மந்திரி ஆவாஸ் பிளஸ் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீட்டையும் பார்வை யிட்டார்.

    சத்திரபுளியங்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.7.68 லட்சம் மதிப்பில் மியாவாக்கி முறையில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளையும், முடுக்கன்குளம் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி கட்டிடத்தையும், சூரனூர் ஊராட்சி, உவர்குளம் கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.4.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணையினையும், உவர்குளம் கண்மாயில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.15.55 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் நீர்உறிஞ்சி குழிகளையும் கலெக்டர் மேகநாத ரெட்டி பார்வையிட்டு இந்த பணிகளை விரை வாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் திலகவதி, உதவி செயற்பொறியாளர் கருப்பையா, உதவி பொறி யாளர்கள் சுப்பையா, காஞ்சனாதேவி, காரியா பட்டி ஊராட்சி ஒன்றியகுழு துணைத்தலைவர் ராஜேந்தி ரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்க தமிழ்வாணன், பிரமுகர் கண்ணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • சங்கரன்கோவில் நகரசபை தலைவி உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.
    • பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகரசபைக்குட்பட்ட 20-வது வார்டில் அமைந்துள்ள காயிதே மில்லத் இரண்டாம் தெருவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் நகரசபை தலைவி உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். நகரசபை பொறியாளர் ஜெயப்பிரியா முன்னிலை வகித்தார். பின்னர் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    இதில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணன், 20-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஷேக் முகம்மது, சுகாதார அலுவலர் பாலச்சந்தர், தி.மு.க. நிர்வாகிகள் பிரகாஷ், செய்யது அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×