என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இயர்பட்ஸ்"
- புதிய போட் ஏர்டோப்ஸ் ஆல்பா மாடலில் 13mm டிரைவர்கள் உள்ளன.
- இதன் சார்ஜிங் கேசில் 300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய நுகர்வோர் மின்சாதன பிரான்டு, போட் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய போட் ஏர்டோப்ஸ் ஆல்பா மாடலில் IPX5 சான்று, அதிகபட்சம் 35 மணி நேரத்திற்கான பிளேடைம் வழங்குகிறது.
போட் ஏர்டோப்ஸ் ஆல்பா மாடலில் 13mm டிரைவர்கள் உள்ளன. இவை தலைசிறந்த ஆடியோ அனுபவத்துடன், சக்திவாய்ந்த பேஸ் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ்-இல் ENx தொழில்நுட்பம் உள்ளது. இது அழைப்புகளின் போது ஆடியோ தரத்தை மேம்படுத்துகிறது. இதற்காக டூயல் மைக்ரோபோன் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.
ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் ஏர்டோப்ஸ் ஆல்பா, டச் கண்ட்ரோல் வசதியை வழங்குகிறது. இத்துடன் செமி இன்-இயர் டிசைன் கொண்டுள்ளது. இதன் சார்ஜிங் கேசில் 300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.
இதன் இயர்பட் ஒவ்வொன்றிலும் 35 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 35 மணி நேரத்திறகு பிளேடைம், பத்து நிமிட சார்ஜிங்கில் இரண்டு மணி நேர பிளேபேக் வசதி வழங்கப்படுகிறது. இதில் உள்ள பீஸ்ட் மோட், லேடன்சியை 50ms வரை குறைக்கும்.
இந்திய சந்தையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை அறிமுக சலுகையாக ரூ. 799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது. விற்பனனை போட், ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறும். இந்த இயர்பட்ஸ் டார்க் சியான், ஜெட் பிளாக் மற்றும் ஸ்வீடிஷ் வைட் நிறங்களில் கிடைக்கிறது.
- நாய்ஸ் பட்ஸ் ஏரோ மாடல் பிரத்யேக கேமிங் மோட் மற்றும் 50ms லோ லேடன்சி வசதி உள்ளது.
- இந்த இயர்பட்ஸ் சார்கோல் பிளாக் மற்றும் ஸ்னோ வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நாய்ஸ் பட்ஸ் ஏரோ பெயரில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. மெல்லிய மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கும் நாய்ஸ் பட்ஸ் ஏரோ மாடலில் க்ரோம் அக்சென்ட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த இயர்பட்ஸ் அழகிய தோற்றம் மற்றும் அசத்தலான ஆடியோ அனுபவம் வழங்குகிறது.
இசை ப்ரியர்கள், கேமர்கள் மற்றும் பலருக்கும் பயனளிக்கும் அம்சங்களை இந்த இயர்பட்ஸ் கொண்டிருக்கிறது. நாய்ஸ் பட்ஸ் ஏரோ மாடலில் உள்ள பிரத்யேக கேமிங் மோட் மற்றும் 50ms லோ லேடன்சி வசதியை வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ்-ஐ முழு சார்ஜ் செய்தால் 45 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.
இத்துடன் 13mm டிரைவர்கள், ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இதில் உள்ள ஹைப்பர்சின்க் தொழில்நுட்பம் இயர்பட்ஸ்-ஐ வேகமாக ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொள்ளும் வசதியை வழங்குகிறது. இத்துடன் IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் நாய்ஸ் பட்ஸ் ஏரோ மாடலின் விலை ரூ. 799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் சார்கோல் பிளாக் மற்றும் ஸ்னோ வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஜூலை 1-ம் தேதி துவங்குகிறது.
- மிவி டுயோபாட்ஸ் A850 மாடல் 50 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது.
- புதிய மிவி இயர்பட்ஸ் ஐந்து விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
மிவி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய டுயோபாட்ஸ் A850 மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் டுயோபாட்ஸ் K1 மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, புதிய மிவி டுயோபாட்ஸ் A850 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை புதிய இயர்பட்ஸ் கேசில் 'தி ஸ்டேரி நைட் எஃபெக்ட்' (The Starry Night Effect) வழங்கப்பட்டு இருக்கிறது. இது இயர்பட்ஸ்-க்கு சிறப்பான மெட்டாலிக் ஃபினிஷ் வழங்குகிறது. இதன் காரணமாக பாட்ஸ் அதிக பிரீமியம் தோற்றம் பெற்றுள்ளது. இதில் உள்ள 13mm எலெக்ட்ரோபிலேட் செய்யப்பட்ட டீப் டிரைவர்கள் சிறப்பான ஆடியோ அனுபவம் வழங்குகின்றன.
இந்த இயர்பட்ஸ்-இல் Ai-ENC அம்சம் உள்ளது. இது அழைப்புகளின் போது தெளிவான ஆடியோ கேட்பதை உறுதிப்படுத்துகிறது. மிவி டுயோபாட்ஸ் A850 மாடலில் உள்ள பேட்டரி 50 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது. இத்துடன் ஸ்விஃப்ட் சார்ஜ் தொழில்நுட்பம், டைப் சி சார்ஜிங், 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 500 நிமிடங்களுக்கு பிளேடைம் வழங்குகிறது.
புதிய மிவி டுயோபாட்ஸ் A850 இயர்பட்ஸ்-இல் அல்ட்ரா லோ லேடன்சி கேமிங் மோட் வசதி, டூயல் கனெக்ஷன் மோட் மற்றும் IPX4 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய மிவி டுயோபாட்ஸ் A850 மாடல் புளூ, பிளாக், கோரல், ஐவரி மற்றும் மின்ட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1299 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் வலைதளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ் விரைவில் அறிமுகமாகிறது.
- புதிய சாதனங்களுக்கென ஒன்பிளஸ் நிறுவனம் பிர்தயேகமாக மைக்ரோசைட் உருவாக்கி இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு 3 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் ஜூலை 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இதே நிகழ்வில் ஒன்பிளஸ் நார்டு CE3 5ஜி, ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 2R மற்றும் புல்லட்ஸ் Z2 ANC இயர்பட்ஸ் உள்ளிட்ட சாதனங்களையும் அறிமுகம் செய்வதாக ஒன்பிளஸ் அறிவித்து இருக்கிறது.
ஒன்பிளஸ் நார்டு 3 5ஜி மற்றும் நார்டு பட்ஸ் 2R மாடல்கள் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஒன்பிளஸ் நார்டு 3 5ஜி மற்றும் நார்டு CE 3 5ஜி ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நார்டு 2 மற்றும் நார்டு CE 2 ஸ்மார்ட்போன்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
It's coming. Another generation of Nord smartphones are coming. Join us, July 5th at 7PM IST, as we drop the all-new #OnePlusNord3 5G and the #OnePlusNordCE3 5G along with the new #NordBuds2R!
— OnePlus India (@OnePlus_IN) June 26, 2023
Know more: https://t.co/IPgfOh7UpP pic.twitter.com/slDp2cRlmQ
புதிய சாதனங்களுக்கென ஒன்பிளஸ் நிறுவனம் பிர்தயேகமாக மைக்ரோசைட் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இதில் சாதனங்கள் எப்படி காட்சியளிக்கும் என்று தெரியவந்துள்ளது. ஒன்பிளஸ் நார்டு 3 5ஜி மற்றும் நார்டு CE 3 5ஜி மாடலின் பின்புறம் இரண்டு ரிங்குகள் உள்ளன. இவற்றில் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் அலர்ட் ஸ்லைடர் காணப்படுகிறது.
நார்டு CE 3 5ஜி மாடலின் மேல்புறம் ஐ.ஆர். பிலாஸ்டர் உள்ளது. நார்டு 3 5ஜி மாடல் டெம்பஸ்ட் கிரே மற்றும் மிஸ்டி கிரீன் நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. நார்டு CE 3 5ஜி மாடல் அக்வா சர்ஜ் நிறத்தில் கிடைக்கும். ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 2R மாடல் டீப் கிரே மற்றும் டிரிபில் புளூ நிறங்களில் கிடைக்கிறது.
நார்டு பட்ஸ் 2 இயர்போன் அதன் முந்தைய மாடலை போன்ற டிசைன் கொண்டிருக்கிறது. ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் Z2 ANC மாடல் பற்றி ஒன்பிளஸ் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. பெயருக்கு ஏற்றார்போல் இந்த இயர்பட்ஸ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
- நாய்ஸ் பட்ஸ் வெர்வ் இயர்பட்ஸ் ENC மற்றும் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.
- சார்ஜிங் கேஸ் சேர்த்து, இந்த இயர்பட்ஸ்-ஐ முழு சார்ஜ் செய்தால் 45 மணி நேர பேக்கப் பெறலாம்.
நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. நாய்ஸ் பட்ஸ் வெர்வ் என்று அழைக்கப்படும் புதிய இயர்பட்ஸ் ரூ. 2 ஆயிரத்து 500 விலை பிரிவில் விற்பனைக்கு கிடைக்கிறது.
புதிய நாய்ஸ் பட்ஸ் வெர்வ் மாடலில் இன்-இயர் ரக டிசைன், ஸ்டெம் மற்றும் சிலிகான் இயர் டிப்கள் வழங்கப்படுகின்றன. இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டு பிரீமியம் தோற்றம் கொண்டிருக்கிறது. IPX5 தர சான்று பெற்று இருக்கும் நாய்ஸ் பட்ஸ் வெர்வ் மாடலின் பல்வேறு அம்சங்களை, இயர்பட்ஸ்-இன் ஸ்டெம் பகுதியில் டச் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
ஆடியோவை பொருத்தவரை நாய்ஸ் பட்ஸ் வெர்வ் மாடலில் 10mm டிரைவர், குவாட் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அழைப்புகளின் போதும், ஆடியோ தரம் மேம்படும். இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் லோ-லேடன்சி வசதியை கொண்டிருக்கிறது.
நாய்ஸ் பட்ஸ் வெர்வ் மாடலில் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி வசதி உள்ளது. இத்துடன் வாய்ஸ் அசிஸ்டன்ட், 10mm டிரைவர், குவாட் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் உடன் பெபில் வடிவம் கொண்ட ஸ்டோரேஜ் மற்றும் சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது. இதை கொண்டு இயர்பட்ஸ்-இல் 45 மணி நேரத்திற்கு பேக்கப் பெற முடியும்.
இந்திய சந்தையில் புதிய நாய்ஸ் பட்ஸ் வெர்வ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் கார்பன் பிளாக், கிளவுட் வைட் மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் என மூன்றுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் நாய்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது.
- ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலில் 11mm டைனமிக் டிரைவர் உள்ளது.
- சர்வதேச சந்தையில் புதிய இயர்பட்ஸ் குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது.
ரியல்மி நிறுவனம் அடுத்த மாதம் ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் வெளியீட்டின் போதே ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலும் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலின் வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை.
எனினும், ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடல் பிஐஎஸ் சான்று பெற்று இருக்கிறது. இந்த நிலையில், ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலுக்கான சர்வதேச வெளியீட்டை உணர்த்தும் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் புதிய இயர்பட்ஸ் குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது. டீசரில் ஜூன் 10-ம் தேதி அறிமுகமாகும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், இதற்கு வாய்ப்பில்லை என்பதால், ஜூலை 10-இல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கலாம்.
டீசர் தவிர புதிய இயர்பட்ஸ் பற்றி வேறு எந்த தகவலும் இல்லை. ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலில் 11mm டைனமிக் டிரைவர், 6mm இரண்டாவது டிரைவர்கள் உள்ளன. இந்த இயர்பட்ஸ் 50db வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கிறது. அழைப்புகளின் போது சிறப்பான ஆடியோவுக்காக புதிய இயர்பட்ஸ் மூன்று பில்ட்-இன் மைக்ரோபோன்களை கொண்டுள்ளது.
இந்த இயர்பட்ஸ் ஸ்பேஷியல் சவுண்ட் எஃபெக்ட்ஸ் மற்றும் LDAC கோடெக் கொண்டிருக்கிறது. இவை ஆடியோ தரத்தை மேம்படுத்துகிறது. இதன் இயர்பட்களில் 60 எம்ஏஹெச் செல் பேட்டரியும், கேசில் 460 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 40 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.
- ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 180 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம்.
- இந்த இயர்பட்ஸ் அழகிய சார்ஜிங் கேஸ் உடன் வழங்கப்படுகிறது.
போட் நிறுவனம் இந்திய சந்தையில் இம்மார்டல் 150 ட்ரூ வயர்லெஸ் கேமிங் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக போட் நிர்வானா 525 மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, புதிய கேமிங் இயர்பட்ஸ் வெளியாகி உள்ளது.
புதிய போட் இம்மார்டல் 150 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அதிக சவுகரியமான அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் சிறப்பான நாய்ஸ் கேன்சலேஷன் வசதி உள்ளது. இந்த இயர்பட்ஸ் அழகிய சார்ஜிங் கேஸ் உடன் வருகிறது. இத்துடன் 10 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை போட் நிறுவனத்தின் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.
இந்த இயர்பட்களில் எல்இடி லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்துகிறது. இதில் மியூசிக் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆக்டிவேட் செய்ய டச் கண்ட்ரோல் வசதி உள்ளது. இத்துடன் 40ms வரையிலான லோ லேடன்சி வசதி BEAST மோடில் வழங்கப்படுகிறது.
புதிய ப்ளூடூத் இயர்பட்ஸ் மாடலில் ப்ளூடூத் 5.3 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இன்ஸடன்ட் வேக் அன்ட் பேர் (IWP) அம்சம் உள்ளது. இது மிக விரைவில் ஸ்மார்ட்போன்களுடன் இணைய செய்கிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 180 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும்.
போட் இம்மார்டல் 150 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அம்சங்கள்:
10mm டிரைவர்கள்
எல்இடி லைட்கள்
கேமிங் சார்ந்த டிசைன்
ப்ளூடூத் 5.3
போட் சிக்னேச்சர் சவுன்ட்
டச் கண்ட்ரோல்
குவாட் மைக் மற்றும் ENx தொழில்நுட்பம்
400 எம்ஏஹெச் பேட்டரி (கேஸ்)
40 எம்ஏஹெச் பேட்டரி (இயர்பட்ஸ்)
ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
யுஎஸ்பி டைப் சி கனெக்டர்
BEAST மோட் மற்றும் 40ms வரையிலான லோ லேடன்சி
IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
போட் இம்மார்டல் 150 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுக சலுகையாக ரூ. 1199 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை போட் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது. இத்துடன் பிளாக் சாபர் மற்றும் வைட் சாபர் நிறங்களில் கிடைக்கிறது.
- சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ரெட்மி இயர்பட்சை அறிமுகம் செய்தது.
- புதிய இயர்பட்ஸ் லோ லேடன்சி மோட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
சியோமி நிறுவனம் தனது பேட் 6 டேப்லெட் உடன் புதிய ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலில் 12 மில்லிமீட்டர் டிரைவர்கள், கூகுள் ஃபாஸ்ட் பேர் சப்போர்ட், ப்ளூடூத் 5.3 மற்றும் IPX4 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டச் கன்ட்ரோல்கள் மற்றும் லோ லேடன்சி ஆப்ஷன் உள்ளது.
புதிய ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் முழு சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கு தேவையான பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இதன் சார்ஜிங் கேசில் 440 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருப்பதால், பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்து 90 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும்.
ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் அம்சங்கள்:
ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, SBC கோடெக், கூகுள் ஃபாஸ்ட் பேர்
12 மில்லிமீட்டர் டிரைவர்கள்
என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன்
லோ லேடன்சி கேமிங் மோட்
டச் கன்ட்ரோல்கள்
IPX4 ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட்
ஹெட்செட்டில் 34 எம்ஏஹெச் பேட்டரி
சார்ஜிங் கேசில் 440 எம்ஏஹெச் பேட்டரி
ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடல் ஏர் வைட் மற்றும் பேஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1399 ஆகும். அறிமுக சலுகையாக ஜூன் 20-ம் தேதி முதல் ஜூன் 23-ம் தேதி வரை இந்த இயர்பட்ஸ் ரூ. 1199 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை அமேசான், சியோமி வலைதளங்கள் மற்றும் சியோமி ரிடெயில் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.
- ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் இயர்பட்ஸ் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்த இயர்பட்ஸ்-இல் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த இயர்பட்ஸ் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலில் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி புதிய பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலில் 12mm டிரைவர்ள், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, டிரான்ஸ்பேரண்ட் மோட்கள் உள்ளன. முந்தைய பட்ஸ் 4 மாடலில் 10mm டிரைவர்கள் வழங்கப்பட்டு இருந்தது. மேலும் நாய்ஸ் கேன்சலேஷன் ஆப்ஷன் வழங்கப்படாமல் இருந்தது. ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலில் IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
டிசைனை பொருத்தவரை புதிய பட்ஸ் 4 ஆக்டிவ் மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இதில் அளவில் பெரிய இயர்பட்ஸ், வட்ட வடிவிலான சார்ஜிங் கேஸ் உள்ளது. இந்த இயர்பட்ஸ்-ஐ முழுமையாக சார்ஜ் செய்தால் 28 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இயர்பட்ஸ் மட்டும் ஐந்து மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.
ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு பிளேடைம் கிடைக்கும். இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி மற்றும் கூகுள் ஃபாஸ்ட் பேர் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இத்துடன் ஏராளமான டச் கண்ட்ரோல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலின் மொத்த எடை 42 கிராம் ஆகும். இதன் சார்ஜிங் கேசில் 440 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் எஸ்.பி.சி. கோடெக் மட்டுமே சப்போர்ட் செய்கிறது. மேலும் இது பிளாக் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. புதிய ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலின் விலை விவரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.
- இந்திய சந்தையில் ஜூன் 8-ம் தேதி ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல்கள் அறிமுகம் என தகவல்.
- ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல் இரண்டு வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தகவல்.
ரியல்மி 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. ஜூன் மாத வாக்கில் இந்த ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது. இதைத் தொடர்ந்து ரியல்மி இந்தியா வலைதளம் மற்றும் ஃப்ளிப்கார்டில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கான வலைப்பக்கம் லைவ் செய்யப்பட்டது.
புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்களின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையில் ஜூன் 8-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று டிப்ஸ்டர் தெரிவித்து இருக்கிறார்.
டிப்ஸ்டர் சுதான்ஷூ அம்போர் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் மாடல்களின் அறிமுக தேதி, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய சந்தையில் ஜூன் 8-ம் தேதி ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களுடன் ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம்.
ரியல்மி 11 ப்ரோ மாடல் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இரண்டு வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்கள்: ஆஸ்ட்ரல் பிளாக், சன்ரைஸ் பெய்க் மற்றும் ஒயசிஸ் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் என இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களிலும் 6.7 இன்ச் AMOLED ஸ்கிரீன், FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர் வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க ரியல்மி 11 ப்ரோ மாடலில் 100MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
- பிடிரான் பாஸ்பட்ஸ் நியோ இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.
- இந்த இயர்பட்ஸ் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
பிடிரான் பேஸ்பட்ஸ் என்கோர் மாடலை தொடர்ந்து பிடிரான் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ்- பேஸ்பட்ஸ் நியோ என்ற பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வயர்லெஸ் இயர்பட்ஸ் பயனர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது அதிக சவுகரியமானதாகவும், அதிக தரமுள்ள ஆடியோ அனுபவத்தை வழங்கும் அம்சங்களை கொண்டிருக்கிறது.
இந்த இயர்பட்ஸ் அதன் சார்ஜிங் கேஸ் உடன் எளிதில் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த இயர்பட்ஸ் அன்றாட பயன்பாடுகளுக்கும் சவுகிரயமானதாக இருக்கும். இதில் 13 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர்கள் உள்ளன. இது தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
இத்துடன் ட்ரூ டாக் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம், அழைப்புகளின் போது பின்னணியில் ஏற்படும் சத்தத்தை பெருமளவில் குறைக்கிறது. இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 தொழில்நுட்பம் உள்ளது. இதன் காரணமாக ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் இதர ப்ளூடூத் மோடம் கொண்ட சாதனங்களில் பயன்படுத்தலாம்.
பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் இந்த இயர்பட்ஸ்-ஐ 150 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம். இத்துடன் போர்டபில் சார்ஜிங் கேஸ், டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது இயர்பட்ஸ்-ஐ மேலும் 35 மணி நேரத்திற்கு பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. டச் கண்ட்ரோல் வசதி மூலம் அழைப்புகள், மியூசிக் உள்ளிட்ட அம்சங்களை எளிதில் இயக்க முடியும்.
பிடிரான் பாஸ்பட்ஸ் நியோ இயர்பட்ஸ் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 899 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் பிளாக், புளூ மற்றும் கிரே என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
- அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகம் சார்பில் இந்த காப்புரிமை ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
- இதன் மூலம் ஏர்பாட்ஸ்-இல் பயனர் இசையை கேட்கும் அனுபவம் முற்றிலும் புதிதாக மாறும்.
ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் பெற்றுருக்கும் காப்புரிமையில், புதிய தொழில்நுட்பம் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. இந்த தொழில்நுட்பம் அந்நிறுவனம் ஏற்கனவே வழங்கி வரும் ஸ்பேஷியல் ஆடியோ அம்சத்தை மேம்படுத்தும்.
மெஷர்மண்ட் ஆஃப் விர்ச்சுவல் லிசனிங் என்விரான்மெண்ட் (measurement of virtual listening environment) என்று அழைக்கப்படும் புதிய தொழில்நுபட்பம் ஏர்பாட்ஸ் ப்ரோ-வில் உள்ள பிரத்யேக சிப்செட்களை பயன்படுத்துகிறது. பின் சாஃப்ட்வேர் ஆக்மெண்டேஷன் மற்றும் ஆடியோ சிக்னல் பிராசஸருடன் இணைத்து பயனர் இருக்கும் சூழலுக்கு ஏற்ற வகையில் ஆடியோ அனுபவத்தை மேம்படுத்துகிறது.
அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகம் சார்பில் இந்த காப்புரிமை ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஆடியோ பாராமீட்டர்களை அட்ஜஸ்ட் செய்கிறது. இதன் மூலம் ஏர்பாட்ஸ்-இல் பயனர் இசையை கேட்கும் அனுபவம் முற்றிலும் புதிதாக மாறும்.
திறந்தவெளி, அரங்கம், வீட்டின் உள்புறம், பொது போக்குவரத்து வாகனங்கள் என பல்வேறு வகையான சூழலுக்கு ஏற்ற வகையில் புதிய தொழில்நுட்பம் பயனருக்கு ஆடியோ அனுபவத்தை மேம்படுத்தி கொடுக்கும். இது போன்ற அம்சம் பயனர் இசையை ஆழ்ந்து அனுபவிக்க செய்கிறது.
மற்ற காப்புரிமை விவரங்களை போன்றே புதிய தொழில்நுட்பம் எப்போது பயனருக்கு வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த அம்சம் ஏர்பாட்ஸ் எதிர்கால மாடல்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்