search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவின்"

    • வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கலாம்.
    • ஓய்வூதியதாரர்கள் வயதான காலத்தில் அலையக்கூடாது என்பதற்காக புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஆவின் பால் நிறுவனத்தில் 4500 ஓய்வூதியதாரர்களும் 3500 குடும்ப ஓய்வூதியதாரர்களும் மொத்தம் 8 ஆயிரம் பேர் உள்ளனர். இதுநாள் வரையில் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழ் வருடத்திற்கு ஒரு முறை நேரில் சென்று புதுப்பிக்க வேண்டும்.

    இந்த நடைமுறை தற்போது மாற்றம் செய்யப்பட்டு வீட்டில் இருந்தபடியே தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் புதிய திட்டம் இந்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையா கூறியதாவது:

    ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், வாழ்நாள் சான்றிதழ் சமர்பிக்க இனிமேல் ஆவின் அலுவலகத்திற்கு நேரில் வரத் தேவையில்லை. தாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்தவாறே செல்போன் மூலமாக வாழ்நாள் சான்றை சமர்ப்பிக்கும் டிஜிட்டல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் வயதான காலத்தில் அலையக்கூடாது என்பதற்காக இந்த வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 8 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • சமன்படுத்திய பால், நிலைப்படுத்திய பால், பசும் பால் என ஒவ்வொரு வகையிலான பால் வினியோகம் நடைபெற்று வருகிறது.
    • கோவை மாவட்டத்தில் புதிதாக பசும்பால் 3½ சதவீதம் கொழுப்பு சத்துடன் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    ஆவின் நிர்வாகம் பல்வேறு நிலைகளில் கொழுப்பு சத்து சதவீதத்துக்கு ஏற்ப பால் விற்பனையை செய்து வருகிறது.

    சமன்படுத்திய பால், நிலைப்படுத்திய பால், பசும் பால் என ஒவ்வொரு வகையிலான பால் வினியோகம் நடைபெற்று வருகிறது.

    சென்னையில் பச்சைநிற பால் பாக்கெட் (4½ சதவீத கொழுப்பு சத்து), அரை லிட்டர் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால் கோவை மாவட்ட ஆவின் நிர்வாகம் இப்போது பசும்பாலை 3½ சதவீதம் கொழுப்புசத்துடன் அரை லிட்டர் பால் பாக்கெட் 22 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது.

    கொழுப்பு அடர்த்தி குறைக்கப்பட்ட பச்சை பாக்கெட் பசும்பால் 22 ரூபாய்க்கு விற்கப்படுவதால் மற்ற ஊர்களிலும் இந்த விலை உயர்வு விரைவில் அமல்படுத்தப்படும் என்ற பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    இதுபற்றி ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ஆவின் பால் விலையில் இப்போது எந்த மாற்றமும் செய்யவில்லை. கோவை மாவட்டத்தில் புதிதாக பசும்பால் 3½ சதவீதம் கொழுப்பு சத்துடன் விற்பனை செய்யப்படுகிறது. அங்குள்ள மக்கள் பசும் பாலை விரும்புவதால் அந்த மாவட்டத்தில் மட்டும் 22 ரூபாய் விலையில் அரை லிட்டர் பாக்கெட் பால் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் இதை நடைமுறைப்படுத்தவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்க தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:-

    கோவை மாவட்ட பால் ஒன்றியத்தில் தற்போது கொழுப்பு சத்து குறைத்து பழைய விற்பனை விலையிலேயே பசும்பால் என கொண்டு வந்துள்ளதை நிறுத்தி பழைய நடைமுறையில் அதாவது நிலைப்படுத்தப்பட்ட பாலாகவே பொது மக்களுக்கு வினியோகம் செய்ய உத்தரவிட வேண்டும் அல்லது புதிய வகை பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 13 ஒன்றியங்களிலும் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை முகவர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது.
    • பால் உபபொருட்களான நெய், பால்கோவா, பாதாம் பவுடர், வெண்ணெய், ஐஸ்கீரீம் வகைகள், போன்ற பொருள்கள் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூா் ஒன்றியத்தில் ஆவின் முகவராக தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இது குறித்து ஆவின் பொது மேலாளா் எ.பி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் ஒன்றியத்தில் 431 கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 2.05 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு 34 ஆயிரம் லிட்டா் பால் பாக்கெட்டாக உள்ளூரில் விற்பனை செய்யப்படுகிறது.

    இதில், மீதமுள்ள பால் கோவை, ஈரோடு மற்றும் சென்னை இணையத்துக்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் (ஆவின்) பால் மற்றும் பால் உபபொருட்களின் விற்பனையினை அதிகரிக்கும் நோக்கத்துடன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 13 ஒன்றியங்களிலும் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை முகவர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பூர் ஒன்றியத்தின் மூலம் பால் உபபொருட்களான நெய், பால்கோவா, பாதாம் பவுடர், வெண்ணெய், ஐஸ்கீரீம் வகைகள், பன்னீர், டெட்ரா மில்க், டிலைட் பால் மற்றும் குலோப் ஜாம் மிக்ஸ் போன்ற பொருள்கள் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஆகவே விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் வீரபாண்டி பிரிவிலுள்ள ஆவின் தலைமை அலுவலக மேலாளர்களை அணுகி முகவர் விண்ணப்பம் பெற்று முகவராக நியமனம் பெற்று பயனடையலாம். மேலும் சரண்யா ,மேலாளர்(விற்பனை) 9080294484, டாக்டர் சுரேஷ், மேலாளர்(விற்பனை) 9865254885 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என ஆவின் பொதுமேலாளர் எ.பி.நடராஜன் தெரிவித்துள்ளார்.

    • ஒரு லிட்டர் ஆவின் நெய் ரூ.580 ரூபாயில் இருந்து, ரூ.630 ஆக உயர்ந்துள்ளது.
    • வாக்களித்த மக்களை திமுக அரசு வஞ்சித்துள்ளதாக அண்ணாமலை கண்டனம்

    சென்னை:

    பால் விலையை தொடர்ந்து, நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது. ஆவினில், 5 லிட்டர் நெய், 2,900 ரூபாயில் இருந்து 3,250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் நெய் ரூ.580 ரூபாயில் இருந்து, ரூ.630 ஆக உயர்ந்துள்ளது. 500 மி.லி நெய் 290 ரூபாயில் இருந்து ரூ. 315 ஆக உயர்ந்துள்ளது என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. 200 மி.லி நெய் 130 ரூபாயில் இருந்து ரூ.145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ.70ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

    ஆவின் பால் விலையை உயர்த்தி வாக்களித்த மக்களை வஞ்சித்து வந்த இந்த திறனற்ற திமுக அரசு, இது போதாதென்று மீண்டும் ஒருமுறை ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 9 மாதத்தில் மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு ஆவின் ஆரஞ்சு நிற பால் விலையை 12 ரூபாய் உயர்த்தியதன் விளைவாக அதன் விற்பனை சரிந்தது.

    தனியார் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டு ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதா திறனற்ற திமுக அரசு?.

    இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேக்கினை பதப்படுத்தக்கூடிய குளிர்சாதன வசதி உள்ள பார்லர்களில் மட்டும் தான் கிறிஸ்துமஸ் கேக் விற்பனை செய்யப்பட உள்ளது.
    • பொங்கலுக்கு 100 கிராம் நெய் பாக்கெட் 50 லட்சம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசின் நிறுவனமான ஆவின் மூலம் கிறிஸ்துமஸ் கேக் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக்கு பல்வேறு விதமான இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்யும் ஆவின் நிறுவனம் இந்த முறை கேக் தயாரிப்பிலும் ஈடுபடுகிறது.

    சென்னையில் மட்டும் கிறிஸ்துமஸ் கேக் மற்றும் பிளம் கேக் விற்பனை செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டு உள்ளது. 5 சுவைகளில் கேக் தயாரிக்கவும், தனியார் கேக்கை விட குறைந்த விலையில் விற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கேக் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. சென்னையில் உள்ள முக்கிய ஆவின் பார்லர்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

    கேக்கினை பதப்படுத்தக்கூடிய குளிர்சாதன வசதி உள்ள பார்லர்களில் மட்டும் தான் கிறிஸ்துமஸ் கேக் விற்பனை செய்யப்பட உள்ளது.

    இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையா கூறியதாவது:-

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி ஆவின் சார்பில் 5 சுவைகளில் கேக் தயாரிக்கப்பட உள்ளது. இது தவிர பிளம் கேக்கும் தயாரிக்கப்படும். மற்ற நிறுவனங்களை விட தரத்துடன் விலை குறைவாக விற்கப்படும்.

    பொங்கலுக்கு 100 கிராம் நெய் பாக்கெட் 50 லட்சம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏழை-எளிய மக்கள் பொங்கலை கொண்டாட நெய்யை பயன்படுத்தும் விதமாக அதிகளவில் தயாரிக்கப்பட உள்ளது. தற்போது 100 கிராம் நெய் 10 ஆயிரம் தான் தயாரிக்கப்படுகிறது.

    சேலத்தில் புதிய ஐஸ்கிரீம் பண்ணை நிறுவப்பட்டு உள்ளது. அதன் மூலம் தினமும் 6000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆவின் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
    • ஊக்கத்தொகை வழங்கும் விழா

    அரியலூர்:

    அரியலூர் பால் உற்பத்தி–யாளர்கள் கூட்டு–றவு சங்கத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் எம்.எல.ஏ. வக்கீல் கு.சின்னப்பா, திருச்சி ஆவின் பொது மேலாளர் பெருமாள், துணை பொது மேலாளர் நந்தகோபால், உதவி பொது மேலாளர் முனுசாமி, அரியலூர் பால்வளத் துணைப் பதிவாளர் பார்த்திபன், பால் சொசைட்டி செயலாளர் கொளஞ்சிநாதன், சங்க தலைவர் பன்னீர்செல்வம், மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கலந்து கொண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி சிறப்புரையாற்றினார். பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மிகப் பழமையானது. தனியார் பால் பண்ணைகள் பல இருந்த போதும் கூட்டுறவு சங்கத்தை நாடி வருகிறார்கள் என்பது பெரிய விஷயமாகும்.

    2020-21ஆம் ஆண்டி–ற்கான சுமார் 3,420 உற்பத்தியாளர்களுக்கு சுமார் 95 லட்சத்தில்ஊக்க தொகை வழங்க–ப்படுகி–ன்றது, பால்வள–த்துறை அமைச்சரிடமும், தமிழக முதலமைச்சர் கவன–த்தில் கொண்டு சென்று அரிய–லூரில் ஆவின் பால் பொருட்கள்உற்பத்தி தொழிற்சாலை அமைக்க பெரும் முயற்சி மேற்கொ–ள்வேன் என பேசினார்.

    • அரசுத்துறை நிறுவனமான ஆவினும் தனது உபபொருட்களின் விலைகளை உயர்த்தியது.
    • விலை உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வந்தது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பல தனியார் நிறுவனங்கள் தங்களது தயிர், லஸ்சி, மோர் ஆகியவற்றின் விலையை ரூ.4 முதல் ரூ.10 வரை உயர்த்தி உள்ளன.

    இந்த நிலையில் அரசுத்துறை நிறுவனமான ஆவினும் தனது உபபொருட்களின் விலைகளை உயர்த்தியது. இந்த விலை உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வந்தது.

    பொருட்கள்

    பழைய விலை

    புதிய விலை

    தயிர் ஸ்பெஷல் (100 கிராம்)

    ரூ.10

    ரூ.12

    தயிர் ஸ்பெஷல் (200 கிராம்)

    ரூ.25

    ரூ.28

    பாக்கெட் தயிர் (500 மி.லி.)

    ரூ.30

    ரூ.35

    பிரீமியம் கப் தயிர் (400 கிராம்)

    ரூ.40

    ரூ.50

    பிரீமியம் தயிர் (ஒரு கிலோ)

    ரூ.100

    ரூ.120

    பிரோபயாடிக் லஸ்சி (200 மி.லி.)

    ரூ.27

    ரூ.30

    மேங்கோ லஸ்சி (200 கிராம்)

    ரூ.23

    ரூ.25

    சாக்கோ லஸ்சி (200 மி.லி.)

    ரூ.23

    ரூ.25

    பாக்கெட் மோர் (200 மி.லி.)

    ரூ.7

    ரூ.8

    நெய் (ஜார்-ஒரு லிட்டர்)

    ரூ.535

    ரூ.580

    நெய் (ஜார்-அரைகிலோ)

    ரூ.275

    ரூ.290

    நெய் (ஜார் 200 மி.லி.)

    ரூ.120

    ரூ.130

    நெய் (ஜார் 100 மி.லி.)

    ரூ.65

    ரூ.70

    நெய் (ஜார் 5 லிட்டர்)

    ரூ.2650

    ரூ.2900

    நெய் (டின் 15கிலோ)

    ரூ.8680

    ரூ.9680

    நெய் (அட்டைப்பெட்டி-1 லிட்டர்)

    ரூ.530

    ரூ.575

    பிரீமியம் நெய் டின் (1 லிட்டர்)

    ரூ.585

    ரூ.630

    நெய் பாக்கெட்-(100 மி.லி.)

    ரூ.60

    ரூ.65

    நெய் பாக்கெட்- (15 மி.லி.)

    ரூ.10

    ரூ.12


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த மார்ச் மாதத்தில் தான் ஆவின் நெய், வெண்ணெய், தயிர், ஐஸ்கிரீம் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டன.
    • விலை உயர்வை ஆவின் நிறுவனம் திரும்ப பெற வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ஆவின் தயிர், நெய் ஆகியவற்றின் விலைகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.45 வரை உயர்த்தப்பட்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில், ஏழை மக்களை பாதிக்கும் வகையிலான இந்த விலை உயர்வு நியாயமற்றது. ஏற்றுக்கொள்ள முடியாதது.

    கடந்த மார்ச் மாதத்தில் தான் ஆவின் நெய், வெண்ணெய், தயிர், ஐஸ்கிரீம் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டன. அதன்பின் 4 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் மீண்டும் ஒரு விலை உயர்வை தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

    தயிருக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டது தான் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. 5 சதவீதம் மட்டும் வரி விதிக்கப்பட்ட நிலையில், 20 சதவீதம் விலையை உயர்த்துவதும், நெய் மீதான வரி உயர்த்தப்படாத நிலையில் அதன் விலையையும் அரசு உயர்த்துவதும் எந்த வகையில் நியாயம்?

    குஜராத்தின் அமுல், கர்நாடகத்தின் நந்தினி போன்ற பால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி வரி விலக்கு பெறப்பட்டுள்ள நிலையில், அதே போல் ஆவினுக்கும் பெற வேண்டுமே தவிர விலையை உயர்த்தக்கூடாது. விலை உயர்வை ஆவின் நிறுவனம் திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தயிர், மோர், லஸ்சிக்கு தான் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. ஆனால் நெய் விலையையும் உயர்த்தி விட்டனர்.
    • விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தயிர், லஸ்சி, மோர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு மத்திய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் தயிர் பாக்கெட்ட்டிற்கான விலையை ரூ.4 முதல் ரூ.10 வரை உயர்த்தியது.

    இந்த நிலையில் ஆவின் நிறுவனமும் தயிர், நெய், லஸ்சி, மோர் ஆகிய பால் பொருட்களுக்கு இன்று முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது.

    ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.45 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.535 ஆக இருந்த நெய் பாட்டில் இன்றுமுதல் ரூ.580 ஆக அதிகரித்துள்ளது. அரை லிட்டர் நெய் பாட்டில் ரூ.15-ம், 200 மில்லி நெய் ரூ.10-ம், 100 மில்லி ரூ.5-ம் உயர்ந்தது. 5 லிட்டர் நெய் ரூ.2,900, 15 கிலோ ரூ.9,680 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதேபோல் ஆவின் தயிர் விலை 500 மில்லி பாக்கெட் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆகவும், 200 மில்லி ரூ.18 ஆகவும், 400 கிராம் பிரிமியம் கப் தயிர் ரூ.40-ல் இருந்து 50 ஆகவும், பிரிமியம் தயிர் ஒரு கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆகவும் அதிகரித்துள்ளது. 50 கிராம் தயிர் விலை உயர்த்தப்படாமல் ரூ.5-க்கு விற்கப்படுகிறது.

    200 மில்லி பாக்கெட் லஸ்சி ரூ.20, புரோபயோடிக் லஸ்சி ரூ.27-ல் இருந்து ரூ.30 ஆகவும், 200 மில்லி மோர் ரூ.15-ல் இருந்து ரூ.18 ஆகவும், 200 மில்லி மோர் பாட்டில் ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த விலை உயர்வு இன்று முதல் அனைத்து ஆவின் விற்பனை மையங்கள் மற்றும் முகவர் மையங்களில் நடைமுறைக்கு வந்தது.

    இந்த விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்க தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:-

    தயிர், மோர், லஸ்சிக்கு தான் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. ஆனால் நெய் விலையையும் உயர்த்தி விட்டனர். கடந்த மார்ச் மாதம் தான் நெய் விலை உயர்த்தப்பட்டது. இப்போது மீண்டும் கிலோவுக்கு ரூ.45 வரை உயர்த்தி உள்ளனர்.

    பால் கொள்முதல் விலையை உயர்த்தாமலேயே நெய், தயிர், லஸ்சி, மோர் விலையை உயர்த்தி இருப்பது பொதுமக்களை பாதிக்கும். இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். மேலும் இந்த விலை உயர்வு உடனே அமலாக்கப்பட்டுள்ளதால் முகவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×