search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225846"

    • நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
    • நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்தில் இதுவரை நிரந்தர பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தொகுதியில் மின்சார துறையில் உள்ள தேவைகள் குறித்து ராஜா எம்.எல்.ஏ. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எனவே தென்காசி மின் பகிர்மான வட்டமாக அறிவித்திட வேண்டும். நெல்லை மாவட்டம், தென்காசி மாவட்டத்தில் கேங்மேன் பற்றாக்குறை உள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கேங்மேன்கள் பிற மாவட்டங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களை தென்காசி மாவட்டத்தில் பணி அமர்த்திட வேண்டும். குருக்கள்பட்டி கிராம மின் நிலையத்தில் நிரந்தர களப்பணியாளர்கள் நியமனம் செய்திட வேண்டும். மேலும் குருக்கள்பட்டி கிராமத்தில் உப மின் நிலையத்திற்கான அறிவிப்பு வெளியான நிலையில் இன்னும் அதற்கான பணிகள் தொடங்கவில்லை. அப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.

    நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்தில் இதுவரை நிரந்தர பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. விரைந்து நிரந்தர பணியாளர்கள் நியமித்திட ஆணை பிறப்பித்திட வேண்டும். குருக்கள்பட்டி மின் அலுவலகத்தில் பொறியாளர் நியமனம் செய்திட ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
    • கொப்பரை தேங்காய் வருடம் முழுவதும் கொள்முதல் செய்து தேங்காய் அதிகம் விளையும் ஊர்களில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தென்னை விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அப்போது தேங்காய் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் தேங்காய் எண்ணெய் நியாய விலை கடைகளில் வழங்க வேண்டும். மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். மாநில அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தென்னை சார்ந்த தொழில் பூங்கா அமைத்து தர வேண்டும். தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும்.

    கொப்பரை தேங்காய் வருடம் முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும் தேங்காய் அதிகம் விளையும் ஊர்களில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். தேங்காய் நார் தொழிற்சாலைகளை பாதுகாக்க வேண்டும். மதிப்புக் கூட்டப்பட்ட தேங்காய் பொருட்களின் ஏற்றுமதிக்கு உதவி செய்ய வேண்டும். தென்னங்கன்றுக்களுக்கு பராமரிப்பு மானியம் வழங்க வேண்டும்‌ என 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, தென்னை விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • வரையறுக்கப்பட்ட ஊதியமும், ஓய்வூதியமும் கேட்டு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பேரணி வாயிற் கூட்டம் நடத்தி வருகின்றனர்.
    • குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்கிட வேண்டும்,

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் முதலமைச்சரின் கவன ஈர்ப்பு பேரணி மற்றும் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன முழக்க வாயிற்கூட்டம் நடத்தினர்.

    வரையறுக்கப்பட்ட ஊதியமும், ஓய்வூதியமும் கேட்டு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மாவட்ட தலைநகரங்களில் பேரணி வாயிற் கூட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மயிலாடுதுறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன வாயிற் கூட்டம் நடத்தினர்.

    மாவட்டத் தலைவர் சிவபழனி பேரணியை தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துவங்கிய பேரணியானது நகரின் முக்கிய விதிகள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து கண்டன வாயிற் கூட்டம் நடத்தினர். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் ஒன்பதாயிரம் வழங்கிட வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.

    • குறைந்தபட்ச ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தொட்டியை சுத்தம் செய்ய மாதம் ரூ. 1000 அலவன்ஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று கிராம ஊராட்சி ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை (காவலர்) பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    உள்ளாட்சி சங்க மாநிலக்குழு நிர்வாகி நல்மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தங்கவேல்பாண்டியன், துணை தலைவர் ஆஞ்சி, பொதுச்செயலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

    சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் அரவிந்தன், மாவட்ட தலைவர் கண்ணன், பொருளாளர் கவுரி, துணை செயலாளர்கள் பொன்ராஜ், காளிராஜன் மற்றும் மணவாளன், ஆண்டவர், சேதுராமு, பூமிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ஊராட்சி ஊழியர்களான ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள் ஓய்வு பெறும்போது பணிக்கொடை, ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும், ஓ.எச்.டி. ஆபரேட்டர்களுக்கு ரூ.1,400 ஊதிய உயர்வு அரசாணையை திருத்தம் செய்து வெளியிட வேண்டும்.

    7-வது ஊதியக்குழு நிலுவை ஊதியம் 55 மாதங்களாகியும் வழங்கப்படவில்லை. அதை உடனே வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியத்தை ஓ.எச்.டி. ஆபரேட்டர்களுக்கு நிர்ணயம் செய்ய வேண்டும்.

    தூய்மை காவலர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 600 ஊதியத்தை உயர்த்தி, ஊராட்சிகள் மூலமாக நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொட்டியை சுத்தம் செய்ய மாதம் ரூ. 1000 அலவன்ஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன.

    ×