search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225867"

    • போபாலில் ஏழுவர் விளையாடும் சிறுவர்களுக்கான தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.
    • 12 மாநிலத்தை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.

    திருப்பூர் :

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஏழுவர் விளையாடும் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம், மணிப்பூர் உள்பட 12 மாநிலத்தை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இந்த போட்டி லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு அணிக்கும், மத்திய பிரதேச அணிக்கும் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் மத்திய பிரதேச அணி வென்றது. தமிழ்நாடு அணி 2-வது இடத்தை பிடித்தது.தமிழ்–நாடு, ஆந்–திரா பேரில் 8 சிறுவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தேசிய அளவில் சிறந்த கோல் கீப்பர் பட்டத்தை திருப்பூர் வீரர் முகுந்தன் ஆதித்யா வென்றார். மத்திய பிரதேசத்தில் இருந்து ரெயில் மூலம் நேற்று மாலை திருப்பூர் வந்த வீரர்களுக்கு பல்வேறு கட்சியினர், முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். அகில இந்திய ஏழுவர் கால்பந்து கழக மாநில செயலாளர் ஹரிகரசுதன், துணை செயலாளர் திவ்யபாரதி, வீரர்களின் பெற்றோர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு தேர்வில் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி அடைய வைத்து சாதனை படைத்து வருகிறார்.
    • தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பன்னாள் உயர்நிலைப் பள்ளியில் மோகனசுந்தரம் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவர் 1992ம் ஆண்டு ஆசிரியராக பணியில் சேர்ந்து 8 பள்ளிகளில் கணித ஆசிரியராக பணியாற்றி சுமார் 7 ஆயிரம் மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையாக கற்றுக் கொடுத்து அரசு தேர்வில் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி அடைய வைத்து சாதனை படைத்து வருகிறார்.

    கணித பாடத்தை எளிமை யாக கற்றுத் தந்து அனைத்து மாணவர்களையும் தேர்ச்சிடைய செய்த காரணத்தால் மோகன சுந்தரம் ஆசிரியருக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

    நல்லாசிரியர் சான்றிதழ் உடன் அரசு வழங்கிய 10,000 காசோலையை பள்ளி நிதிக்காக அர் வழங்கியுள்ளார்.

    இதேபோல் மோகனசுந்த ரத்திடம் படித்த பன்னாள் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற மாணவர் கோகூர் பள்ளியில் கணித ஆசிரியராக தற்போது பணியாற்றி வருகிறார்.

    மாணவர்களின் பன்முகத்திறனை வெளிப்ப டுத்தும் வகையில் இவர் கல்வி கற்பித்து வருவதால் இவருக்கும் தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

    ஒரே கிராமத்தில் ஆசிரியர் மோகனசுந்தரத்திற்கும், இவரது மாணவர் ஆசிரியர் சதீஷ் ஆகிய இருவருக்கும் ஒரே மேடையில்நல்லாசி ரியர் விருது வழங்கியதை அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வந்தார்.
    • தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் நெல்லை வழியாக கன்னியாகுமரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.

    தூத்துக்குடி:

    நெல்லை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். மேலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை முதல் மேற்கொள்ள உள்ள இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை தேசிய கொடி வழங்கி தொடங்கி வைக்க உள்ளார்.

    இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், அனிதா ராதா கிருஷ்ணன், கீதாஜீவன், மனோ தங்கராஜ், கலெக்டர் செந்தில்ராஜ், டி.ஆர்.பாலு எம்.பி. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.

    வரவேற்பு நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன், மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., ராதாபுரம் அலெக்ஸ் அப்பாவு, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.,

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர், இ.நடராஜன், நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் காசி ராஜன், அரசு ஒப்பந்ததாரர் மனோஜ்,

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் செல்வ லெட்சுமி அமிதாப், சுற்றுசூழல் அணி மாவட்ட அமைப்பாளர் அமிதாப், நெல்லை மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெல்லை மாநகர துணைச்செயலாளர் சுதா மூர்த்தி, பாளை யங்கோட்டை ஒன்றிய குழு தலைவர் கே.எஸ். தங்கப்பாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன், முன்னாள் எம்.பி. ஜெயத்துரை, மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் வக்கீல் ஜோயல்,

    தென்காசி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிவபத்ம நாதன், செல்லத்துரை, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், கரையாளனூர் அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேலு, முன்னாள் எம்.பி.விஜிலா சத்தியானந்த், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, தச்சை பகுதி செயலாளர் சுப்பிரமணியன், அம்பை நகர்மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, ஆறுமுக ராஜா,

    நெல்லை கிழக்கு மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் எரிக்ஜூட் பாண்டியன், வள்ளியூர் தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் இளங்கோவன், கிழக்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மந்திரம், தகவல் தொழில் நுட்ப அணி லெட்சுமணன், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் சந்திரசேகர், பிரம்மதேசம் ஊராட்சி தலைவர் ராமசங்கர், துணை தலைவர் கோமதி, தெற்கு நாங்குநேரி ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா பாபு, தென்காசி வடக்கு மாவட்ட புன்னயைாபுரம் ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன், கண்ணநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜன், துணைத்தலைவர் ராணி செல்வி,

    தூத்துக்குடி யூனியன் சேர்மன் வசுமதி அம்பா சங்கர், பஞ்சாயத்து தலைவர்கள் சரவணகுமார், ஹரி பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அவர் கார் மூலம் நெல்லை வழியாக கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது சாலையின் இருபுறமும் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
    • பாண்டிகோவில் அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

    அவனியாபுரம்

    மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி இல்ல திருமண விழாவை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதுரை வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பாண்டி கோவில் அருகில் பிரமாண்டமாக அமைந்துள்ள கலைஞர் அரங்கம் முன்பாக எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சருமான பி.மூர்த்தி (எனது) இல்லத் திருமண விழா மதுரையில் வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9மணி முதல் 10.30 மணிக்குள் பாண்டிகோவில் அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

    இவ்விழாவில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்து மண மக்களை வாழ்த்துவதற்காக தலைவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (8-ந்தேதி) மாலை மதுரை வருகை தர உள்ளார்.

    மதுரைக்கு வரும் முதல்- அமைச்சருக்கு மாலை 7மணியளவில் கலைஞர் அரங்கம் முன்பாக வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு வழங்கப்பட உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் , கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழகத்தினர் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

    • அமைச்சர் மனோதங்கராஜ்-மேயர் மகேஷ் கூட்டறிக்கை
    • தேசிய கொடியை ராகுல்காந்தியிடம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாத யாத்திரை செல் கிறார். இந்த நிகழ்ச்சி நாளை கன்னியாகுமரியில் தொடங்குகிறது. இந்த பாத யாத்திரையை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக் கிறார். இது குறித்து தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சரும், குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாள ருமான மனோதங்கராஜ், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான வக்கீல் மகேஷ் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரியில் நடை பெறும் காங்கிரஸ் பேரியக் கத்தின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாத யாத்திரை நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக நாளை (7-ந்தேதி) குமரிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குமரி வருகிறார். குமரி வருகை தருவதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தடைகிறார். அங்கிருந்து சாலை மார்க்க மாக குமரிக்கு வருகை தரும் தமிழக முதல்-அமைச்சருக்கு குமரி எல்லையான காவல்கிணறு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் வைத்து குமரி மாவட்ட தி.மு.க. சார்பில் எங்களது தலைமையில் காலை 11 மணிக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    ஆகவே குமரிக்கு வருகை தரும் தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சரை வரவேற்பதற் காக மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட, கிளைக்கழக நிர்வாகிகளும் மற்றும் அனைத்து அணிகளின் நிர் வாகிகளும், பொதுமக்க ளும் பெருந்திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளிக்க வேண்டும் எனவும், அதன்பிறகு மாலையில் நடைபெறும் ராகுல்காந்தி யின் பாதயாத்திரை நிகழ்ச்சி யில் தேசிய கொடியை ராகுல்காந்தியிடம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி யிலும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கை யில் அவர்கள் கூறி உள்ளனர்.

    • மாநகர தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு
    • நாளை (7-ந் தேதி) கன்னியாகுமரியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நடை பயண யாத்திரை தொடங்குகிறார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகர தி.மு.க. நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் மாநகர மாவட்ட பிரதிநிதிகள், வட்டச் செய லாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை ஒழுகினசேரியில் உள்ள குமரி கிழக்கு தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    அவை தலைவர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். மாநகர துணை செயலாளர்கள் வேல்முரு கன், ராஜன், மாநகர பொரு ளாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில மாநகர செயலா ளர் வக்கீல் ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் நாளை (7-ந் தேதி) கன்னியாகுமரியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நடை பயணம் யாத்திரை தொடங்குகிறார்.

    நடை பயணம் யாத்திரையை தொடங்கி வைக்க வருகை தரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மாவட்ட ெபாறுப்பாளர் மேயர் மகேஷ் ஆலோசனையின் பேரில் மாநகர தி.மு.க. சார்பாக மாவட்ட எல்லை யான காவல் கிணறு சந்திப் பில் 3 ஆயிரம் ெதாண்டர் களுடன் வரவேற்பு அளிப் பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

    கூட்டத்தில் பகுதி செயலாளர் துரை, ஜீவா மற்றும் 52 வட்டச் செயலா ளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ- மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதியடைந்து வந்தனர்.
    • முதல்- அமைச்சர் தங்கள் தொகுதியில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனைகளை பட்டியலிட அறிவுறுத்தியுள்ளார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து காத்திருப்பு கண்டமங்கலம், கொண்டத்தூர், பாகசாலை, கதிராமங்கலம், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக மயிலாடுதுறைக்கு அரசு பஸ் இயங்கி வந்தது.

    இந்த அரசு பஸ் சேவை 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது.

    இதனால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கும், கிராம மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கும் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதி அடைந்து வந்தனர்.

    இது குறித்து சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்திடம் கிராம மக்கள் சார்பில் காத்திருப்பு ஊராட்சி மன்ற தலைவர் அன்புமணிமணிமாறன் கோரிக்கை விடுத்தார்.

    இதனை அடுத்து நிறுத்தப்பட்ட அரசு பஸ் சேவை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட பஸ் சேவை தொடக்க விழா காத்திருப்பு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அன்புமணிமணிமாறன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் காத்திருப்பு ஊராட்சி மன்ற தலைவர் அன்புமணி மணிமாறன் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் மகேந்திர குமார், மயிலாடுதுறை கிளை மேலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

    பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பஸ் சேவை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசுகையில், தமிழக முதல் அமைச்சர் தொகுதியில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனைகளை பட்டியலிட அறிவுறுத்தியுள்ளார்.

    அதன்படி சீர்காழி சட்டமன்றத் தொகுதியிலும் நீண்ட ஆண்டு பிரச்சனைகள் பட்டியலிடப்பட்டு வருகிறது. மக்களின் தேவைகளை அறிந்து முதல் அமைச்சர் சிறப்பாக சேவையாற்றி வருகிறார் என்றார்.

    பின்னர் அதே பஸ்சில் காத்திருப்பில் இருந்து சீர்காழி வரை 4 கிலோமீட்டர் தூரம் மக்களோடு எம்.எல்.ஏ பயணம் செய்தார்.

    இதில் தொ.மு.ச மத்திய சங்க பொறுப்பாளர்கள் இளங்கோவன், வெங்கடேசன், பத்மநாபன் மற்றும் திமுக நிர்வாகி மணிமாறன் பங்கேற்றனர்.

    • ராஜராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்கப்பட்டது.
    • அட்மிஷன் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை மீனாதேவி நன்றி கூறினார்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூர் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழிற்நுட்பக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மற்றும் 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கை மாணவர்களை வரவேற்கும் விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் வடிவாம்பாள் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், ராஜராஜன் கல்விக்குழுமத்தின் ஆலோசகருமான சுப்பையா தலைமை தாங்கினார். சிறப்புவிருந்தினராக அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டுக்கோட்டை கேம்பஸ் சிவில் துறைத்தலைவர்-ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி ஆங்கிலப்பேராசிரியர் அய்யாவு வாழ்த்துரை வழங்கினார். இதில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கை மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முதல்வர் (பொறுப்பு) பேராசிரியர் மகாலிங்க, சுரேஷ், துறைத்தலைவர்களை அறிமுகம் செய்தார். அட்மிஷன் ஒருங்கிணைப்பாளர். பேராசிரியை மீனாதேவி நன்றி கூறினார்.

    • பவானி நகர் அந்தியூர் பிரிவு ரோட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பட்டு ஜமக்காளம் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பின்னர் அவர் பொது மக்களிடம் வாகனத்தில் அமர்ந்தபடி மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    பவானி, ஆக. 26-

    ஈரோடு மாவட்டத்திற்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அரசின் முடிக்கப்பட்ட பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு கோபிசெட்டி பாளையம் வருகை தந்தார்.

    கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார். பின்னர் அவர் வாகனத்தில் அத்தாணி, ஆப்பக்கூடல், ஜம்பை வழியாக பவானி நகருக்கு வருகை தந்தார்.

    பவானி நகர் அந்தியூர் பிரிவு ரோட்டில் நகரச் செயலாளர் நாகராசன் தலைமையிலும், பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோ முன்னிலையில் பட்டு ஜமக்காளம் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர் பொது மக்களிடம் வாகனத்தில் அமர்ந்தபடி மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
    • காரைக்கால் மார்க்கத்திலிருந்து நிரவி, சேஷமுலை, இடையாத்தாங்குடி, பண்டாரவாடை, திருப்பட்டினம் வழியாக காரைக்கால் சென்றடைகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் உள்ள புதிய வழித்தடத்தில் புதுச்சேரி போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பஸ் இயக்கப்பட்டது.இதற்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மார்க்கத்தில் இருந்து நிரவி, சேஷமுலை, இடையாத்தாங்குடி, பண்டாரவாடை, திருமருகல், திட்டச்சேரி, திருப்பட்டினம் வழியாக காரைக்கால் சென்றடைகிறது.இந்த புதிய வழித்தடத்தை காரைக்கால் மாவட்டம் விழுதியூரில் புதுச்சேரி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, நிரவி சட்டமன்ற உறுப்பினர் நாகதியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

    அதைத் தொடர்ந்து நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சேஷமுலை, இடையாத்தாங்குடி, திருமருகல், திட்டச்சேரி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு பஸ்சை வரவேற்றனர். இடையாத்தாங்குடியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்திரகலா கிருஷ்ணமூர்த்தி, முருகன், சிவகாமிஅன்பழகன், இடையாத்தங்குடி சுப்பிரமணியன், சேஷமூலை திருநாவுக்கரசு, விழுதியூர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    திட்டச்சேரி பஸ் நிலையம் அருகில் பேரூர் திமுக செயலாளர் முகமது சுல்தான் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு புதிய வழித்தடத்தில் இயக்கிய பஸ்சை வரவேற்றனர்.

    இதில் புதுச்சேரி மாநில போக்குவரத்து கழகத்தின் காரைக்கால் கிளை மேலாளர் அருள்ஜோதி, திருமருகல் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் இந்திரா அருள்மணி, பெரியமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வருகையையொட்டி சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு மலர் அஞ்சலி செலுத்துகிறார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட பா. ஜனதா தலைவர் கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகிறார். அவர் நாளை (13-ந்தேதி) மாலை ராமநாதபுரம் மாவட்டம் வருகிறார்.

    அவருக்கு ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூர் மரிச்சுக்கட்டியில் மாலை 6 மணிக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவு குமரையா கோவில் அருகில் உள்ள தனியார் லாட்ஜில் தங்குகிறார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் ராமநாதபுரம் முதல் தனுஷ்கோடி வரை 60 கி.மீ., தூரம் சாலையின் இருபுறமும் மூவர்ண தேசிய கொடிகள் கட்டி பறக்க விடப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. 14-ந்தேதி காலையில் மூவர்ண தேசிய கொடியுடன் ராமேசுவரம் துறைமுகத்திலிருந்து கோதண்டராமர் கோவில் வரை கடலை சுற்றி வருகிறார்.

    அதன் பின்பு பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து 75 தேசிய கொடி ஏந்தி 75 நாட்டுப்படகில் குந்துகால் செல்கிறார். சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாடு சென்று விட்டு குந்துகால் வந்து இறங்கிய போது மன்னர் பாஸ்கர சேதுபதி எவ்வாறு வரவேற்பு அளித்தாரோ? அதே போன்று வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அதனை தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை பார்வை யிட்டு மலர் அஞ்சலி செலுத்துகிறார்.பின்பு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாநில தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ராமேசுவரம் விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்களுடன் மதிய உணவு அருந்து கின்றனர்.

    குந்துகால் பகுதியில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு ராமநாதபுரம் பட்டிணம்காத்தானில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராமநாதபுரம் பாராளுமன்ற மையக்குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    அதன் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், பூத் சஷக்திகரன் பொறுப்பாளர்கள் கூட்டம், பிரவாஸ் யோஜனா பொறுப்பாளர்கள் கூட்டம் முடித்து விட்டு மாலை 5.30 மணி அளவில் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் நாட்டுபடகு மீனவ பிரதிநிதிகளை சந்தித்து விட்டு அவர் சென்னை திரும்புகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள், சாலையின் இருபுறங்களிலும் கட்சி கொடி கம்பங்கள் நடப்பட்டிருந்தன.

    தாராபுரம் :

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, பழனி முருகன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்து விட்டு சேலத்திற்கு புறப்பட்டார்.

    உற்சாக வரவேற்பு :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காங்கயம் வழியாக சேலம் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று முதல் முறையாக வருகை தந்ததால் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காங்கயம் பஸ் நிலையம் அருகில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு பொன்னாடை அணி வித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.

    பிளக்ஸ் பேனர்கள் :

    தாராபுரம் பஸ் நிலையம் அருகே திருப்பூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையொட்டி உடுமலை ரவுண்டானாவில் இருந்து அமராவதி சிலை வரை தாராபுரம் அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள், சாலையின் இருபுறங்களிலும் கட்சி கொடி கம்பங்கள் நடப்பட்டிருந்தன. எடப்பாடி பழனிசாமி வருகையால் தாராபுரம், காங்கயம் நகரம் இன்று விழாக்கோலம் பூண்டன. காங்கயம் நகர்ப்பகுதி முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன. காங்கயம் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகம் அருகே பெரிய அளவில் 40 அடி நீள பேனரும், மேடையும் அமைக்கப்பட்டு இருந்தது. காங்கயத்தில் இருந்து சென்னிமலை வழியாக எடப்பாடி பழனி சென்றதால் அந்த சாலையின் இருபுறங்களிலும் அ.தி.மு.க. கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தன. ஒட்டுமொத்தமாக .அதி.மு.க. நிர்வாகிகள்,தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க தடபுடலாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ×