search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225970"

    • பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கபடும்
    • கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் கலெக்டர் கூறும்போது, 2023-2024 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் முடிய நெல் 2,720 ஹெக்டேர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 153 ஹெக்டேர், பயறுவகைப் பயிர்கள் 80 ஹெக்டேர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 188 ஹெக்டேர் பரப்பிலும், கரும்பு 12 ஹெக்டேர் பரப்பளவிலும், பருத்தி 2 ஹெக்டேர், தென்னை 12,584 ஹெக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 68.675 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 49.896 மெ.டன் பயறு விதைகளும், 24.365 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 5.151 மெ.டன் சிறுதானிய விதைகளும்,0.050 மெ.டன் எள் விதைகளும் இருப்பில் உள்ளன. யூரியா விநியோகத் திட்ட இலக்கின்படி 2750 மெ.டன்களுக்கு,இதுவரை 2652 மெ.டன் யூரியா பெறப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக ஏப்ரல் – செப்டம்பர், ஆகஸ்ட்- நவம்பர் மற்றும் டிசம்பர் - மார்ச் மாதங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் தங்களது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைத்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அவர் கூறினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்இராஜேந்திர பிரசாத், மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் தனலெட்சுமி, மேற்பார்வை பொறியாளர் (மின்சார வாரியம்) சேகர் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • கடந்த 24-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகையுடன் வழங்கப்படும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது-

    கடலூர் மாவட்டத்தில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கடலூர், கடலூர் (மகளிர்), சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், மங்களுர் மற்றும் நெய்வேலி தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023-ம் ஆண்டு பயிற்சியா ளர்கள் சேர்க்கை இணை யவழிக் கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது. இதற்காக இணைதளம் வாயிலாக கடந்த 24-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவ, மாணவியர் இந்ந வாய்ப்பினை பயன்படுத்தி அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்ந்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மாணவர்களின் விண்ண ப்பங்கள் அடிப்படையில் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இணையதளத்தில் வெளியிட ப்படும். தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவ ர்களுக்கு மாதந்தோரும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா மிதிவண்டி, புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் ஆகியவை வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு (மின்சாரப்பணியாளர் மற்றும் பொருத்துனர் பிரிவு) சுய வேலை வாய்ப்பு செய்திடும் கைகருவிகள் அடங்கிய தொகுப்பு இலவ சமாக வழங்கப்படுகிறது. மாறிவரும் தொழிற்சா லைகளின் நவீன தொழில்நு ட்பத்திற்கு ஏற்றவாறு முன்னனி தனியார் நிறுவன ங்ளுடன் இணைந்து தொழிற்நுட்ப மையங்களாக உயர்த்த ப்பட்டு பயிற்சியளிக்க ப்படுகிறது. மேலும் பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியா ளர்களுக்கு பிரபல தொழில் நிறுவன ங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் 07.06.2023 ஆகும். இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.

    • மொத்தம் 225 மனுக்கள் பெறப்பட்டன.
    • வேலைவாய்ப்பற்ற 26 இளைஞர்களுக்கு ரூ.36 ஆயிரத்து 600 உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது.

    மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகைபுரிந்து மாவட்ட கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர்.

    கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், வேலைவாய்ப்பு், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகை, புகார் தொடர்பான மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள், அடிப்படை வசதிகோரியும் என மொத்தம் 225 மனுக்கள் பெறப்பட்டன.

    இம்மனுக்களை கலெக்டர் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தவிபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்றார்.

    முன்னதாக, மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பற்ற 26 இளைஞர்களுக்கு ரூ.36 ஆயிரத்து 600 உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், தனித்துணை கலெகடர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கண்மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    • இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர்.
    • இதர மனுக்கள் 129 என மொத்தம் 282 மனுக்கள் வரப்பெற்றன.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரேஷன் அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். இதில் பட்டா தொடர்பான 53 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 27 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 17 மனுக்களும், போலீஸ் துறை தொடர்பாக 41 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 15 மனுக்களும் மற்றும் இதர மனுக்கள் 129 என மொத்தம் 282 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதா ரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள ப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் தனி த்துணை கலெக்டர் கற்பகம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஷ்வரன், மாவட்ட வழங்கல் உதயகுமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்.

        சேலம்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுகள் மட்டும்) - எலைட், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் (எம்ஐஎம்எஸ்), வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் (சிடிஎஸ்) என 3 வகைகளில் செயல்படுத்தப்படுகிறது.

    மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்று, பதக்கம் வென்றிருக்க வேண்டும்.

    இந்த திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் sdat@tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை வருகிற 20-ந்தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். இணைய வழியில் வரும் விண்ணப்பங்களைத் தவிர, பிற விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

    தகுதியான வின்ணப்பங்கள், அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும். பின்னர், நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, இறுதியாக தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர். அதிகபட்சம் அவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

    இந்த 3 திட்டங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 22-ந்தேதி வரை ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் கடந்த 4 மாதங்களில் பெற்ற பன்னாட்டு, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி விவரங்களை ஏற்கனவே உள்ள பதிவு ஐ.டி. மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்து உள்ளார்.

    • உதவித்தொகை வேண்டி மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பம் செய்திருந்தார்.
    • ரூ.1500-க்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் ஆணையை மாற்றுத்திறனாளியிடம் வழங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, நல்லாடை கிராமத்தில் வசித்து வரும் கதிரேசன் என்பவரின் மகன் சுமன். இவர் 2 கால்களும் செயல் இழந்தவர் (மாற்றுத்தி றனாளி).

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதவித்தொகை வேண்டி மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில், விண்ணப்பத்தை பரிசீலனை செய்த கலெக்டர் மகாபாரதி உட னடியாக மாற்றுத்திறனாளி வீட்டிற்கே சென்று, நலம் விசாரித்து சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.1500-ற்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் ஆணையை வழங்கினார்.

    அப்போது தரங்கம்பாடி தாசில்தார் காந்திமதி, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சுந்தரி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவதால் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை.
    • விவசாயிகள், பொதுமக்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    சேலம்:

    ஏழை, எளிய விவசாயிகள் தங்களது விவசாயத்தை சிரமின்றி மேற்கொள்ளும் வகையிலும், விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், பிரதமர் நரேந்திரமோடி பி.எம். கிசான் திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு கொண்டு வந்தார். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. அதாவது ஆண்டுக்கு 6 ஆயிரம் மத்திய அரசு வழங்குகிறது.

    இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவதால், பணம் முழுவதும் விவசாயிகளுக்கு அப்படியே கிடைக்கிறது. வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவதால் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. இதனால் இந்த திட்டம் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 3 லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி 13-வது தொகை பிரதமர் நரேந்திரமோடி, விவசாயிகளுக்கு வழங்கினார். இந் நிலையில் 14-வது தொகை மே மாதம் இறுதியில் விடுவிக்கப்படும் என தெரிகிறது. இந்த தொகையை பிரதமர் மோடி வழங்க உள்ளார்.

    • பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம்
    • தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிக்க விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் பின்வரும் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம்தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம்(ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளை யாட்டுக்கள் மட்டும்), பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் ஆகும். இதற்கு தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுபோட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் இந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

    பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான வின்ணப்பங்கள் இதற்கென அரசால் அமைக்கப் பட்ட உயர்மட்ட குழு மூலம் ஆய்வு செய்யப்ப டும். அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இறுதி யாக தேர்ந்தெடுக்கப்படும் விண் ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர். அதிக பட்சம் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு 2 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படும்.

    இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்புமுள்ள விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை வருகிற 20-ந்தேதி மாலை 5 மணிக்குள் சமப்பிக்க வேண்டும். தபால் மற்றும் நேரடி விண்ணப் பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது.

    மேற்காணும் 3 திட்டங்களுக்கு கடந்த 30.11.2022 முதல் 22.12.2022 வரை ஏற்கனவே, விண்ணப்பங்களை விண்ணப்பித்தவர்கள் கடந்த 4 மாதங்களில் பெற்ற பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி விவரங்களை ஏற்கெனவே உள்ள தங்களு டைய பதிவு கணக்கு மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தகவல் மையம் எண்களான 95140 00777 மற்றும் 78258 83865 தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசி நாள்.
    • புதிய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம், தலைச்சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டங்களில் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் சேர்ந்து உதவித்தொகை பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

    மேற்காணும் 3 திட்டங்களுக்கு கடந்த 30.11.2022 முதல் 22.12.2022 வரை ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் கடந்த 4 மாதங்களில் பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி விவரங்களை ஏற்கனவே உள்ள தங்களுடைய பதிவெண் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம். மேலும் புதிய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவ, மாணவிகள் தங்களுடைய ஆதார் மற்றும் மொபைல் போன் எண்ணை பயன்படுத்தி, கைவிரல் ரேகை பதிவு செய்து, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கலாம்.
    • இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில், 2022-–23-ம் கல்வியாண்டில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கல்வி உதவித் தொகை பெறும் வகையில், ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால், இதுவரை ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள், அருகில் உள்ள அஞ்சலகத்திற்கு சென்று, அஞ்சலகம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோ மெட்ரிக் சாதனத்தின் மூலம், மாணவ, மாணவிகள் தங்களுடைய ஆதார் மற்றும் மொபைல் போன் எண்ணை பயன்படுத்தி, கைவிரல் ரேகை பதிவு செய்து, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கலாம். அந்த கணக்கு எண் மூலம் கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்
    • விண்ணப்பங்களை வருகிற 20-ந் தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

    புதுக்கோட்டை:

    மாவட்ட கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் பின்வரும் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.

    ஊக்கத்தொகை பெறுவதற்கான தகுதிகள், மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை வருகிற 20-ந் தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

    மேற்காணும் மூன்று திட்டங்களுக்கு கடந்த 30.11.2022 முதல் 22.12.2022 வரை ஏற்கனவே விண்ணப்பங்களை விண்ணப்பித்தவர்கள் கடந்த 4 மாதங்களில் பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி விபரங்களை ஏற்கனவே உள்ள தங்களுடைய பதிவெண் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம். மேலும் புதிய விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம். மேற்காணும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் தொடர்பு மையம் 9514000777 மற்றும் 7825883865 என்ற எண்களை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் 2022-23-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் அருகிலுள்ள தபால்நிலையம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் மாணவர்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை பயன்படுத்தி விரல் ரேகை மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கி கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×