search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225972"

    • தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என மொத்தம் 18 வங்கிகள் பங்கேற்றன.
    • கலந்தாய்வு உடனடியாக நடத்தப்பட்டு 3 வாரங்களில் கல்வி கடன் வழங்க நடவடிக்கை.

    நாகப்பட்டினம்:

    குடும்ப சூழல் மற்றும் பொருளாதார பின்னடைவின் காரணமாக உயர்கல்வியை தொடர்வதில் நெருக்கடியை சந்திக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கல்விக் கடன் முகாம் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் அருண் தம்புராஜ், எம்.எல்.ஏ.க்கள் முகம்மது ஷா நவாஸ், நாகை மாலி ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களை வழங்கினர்.

    தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என மொத்தம் 18 வங்கிகள் இதில் பங்கேற்றன.

    மாணவர்கள் அதிக அளவில் வருகை தந்து, கல்விக் கடன் குறித்த விபரங்களை கேட்டறிந்தனர். மொத்தம் 304 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அதற்கான கலந்தாய்வு உடனடியாக நடத்தப்பட்டு 3 வாரங்களில் கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கலெக்டர் தெரிவித்தார்.

    கல்விக் கடன் கேட்டு வங்கிகளுக்கு அலையும் நிலையை மாற்றி, ஒரே இடத்தில் வங்கிகளை வரவைத்து, கடன் வழங்கும் முறையில் ஒரு நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்தியதற்காக மாணவர்களும் பெற்றோரும் மகிழ்ச்சியடைந்தனர் என்று ஷா நவாஸ் எம்.எல்.ஏ தெரிவித்தார்.

    • அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பகல்வேளையில் கடுமையான வெப்பம் காணப்பட்டது.
    • ரோட்டின் பள்ளமான இடங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது.

    திருப்பூர்:

    திருப்பூர், அவினாசி, காங்கயம் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் 4 மணிக்கு லேசான தூறலுடன் மழை பெய்தது. இந்த மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்த ஓடியது. அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பகல்வேளையில் கடுமையான வெப்பம் காணப்பட்டது. மாலை 4 மணி முதல் 5 மணிவரை அவினாசி, வேலாயுத ம்பாளையம், பழங்கரை, தெக்கலூர், கருவலூர், ஆட்டையாம்பாளையம், உள்வட்ட பல கிராமங்களில் கனமழையும், சிறிது நேரம் சாரல் மழையும் பெய்தது. விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் ரோட்டின் பள்ளமான இடங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது. காங்கயம் காங்கயத்தில் மாலை 3.30 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து காங்கயம் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளான நெய்க்காரன்பாளையம், ஆலம்பாடி, நால்ரோடு, கீரனூர், பரஞ்சேர்வழி உட்பட பல்வேறு கிராமப் பகுதிகளில் 4 மணியளவில் தூறலாக தொடங்கிய மழை படிப்படியாக வேகமெடுத்து கனமழை பெய்தது. மழையானது 1½ மணி நேரத்துக்கும் மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் கிராமப்புறங்களில் உள்ள முக்கிய சாலைகள், கால்வாய்கள் ஆகிய இடங்களில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காங்கயம் நகர பகுதிகளில் லேசான தூறல் மழையே பெய்தது. தூறல் மழையானது இரவு முழுவதும் தூறிக்கொண்டே இருந்தது. இதனால் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டிலேயே முடங்கினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காங்கயம் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நூல் விலை அதிரடியாக குறைப்பு காரணமாக ராஜபாளையம் வட்டார பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
    • ஒரு கேண்டி நூல் விலை ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ. 75 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ராஜபாளையம்

    சர்வதேச அளவில் பேண்டேஜ் மருத்துவ துணி உற்பத்தியில் 90 சதவீத உற்பத்தி தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டாரத்தில் உள்ள சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் பகுதிகளில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

    சமீப காலமாக நூல் விலை திடீரென்று உயர்ந்து 356 கிலோ கொண்ட ஒரு கேண்டி நூல் விலை ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் வரை உயர்ந்தது. இதன் காரணமாக ஆர்டர் எடுத்த நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்து கொடுக்க இயலாத நிலையில் கடுமையான நஷ்டத்தை பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் சந்தித்தனர்.

    ஒரு மாத காலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது ஒரு கேண்டி நூல் விலை ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ. 75 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ராஜபாளையம் வட்டார பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    கடந்த 6 மாத காலத்திற்கு முன்பு வரை ஒரு கேண்டி விலை ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை இருந்து வந்த நிலைக்கு மீண்டும் விலை குறைய வேண்டும் என பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து விலை குறைந்து சர்வதேச சந்தையில் உயர்ந்த இடத்தை தொடர்ந்து பிடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யு மாறு பேண்டேஜ் உற்பத்தி யாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • பள்ளியில் படித்த வகுப்பில் மீண்டும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தி தங்களுடைய ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
    • மேம்பாட்டுக்கான பணிகளை செய்வது என உறுதிமொழி ஏற்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூரில் பழமை வாய்ந்த அரசு உதவி பெறும் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.

    இப்பள்ளியில் 1974-75 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சுமார் 48 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினரோடு சந்தித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    பள்ளியில் தங்கள் அமர்ந்து படித்த வகுப்பில் மீண்டும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தி தங்களுடைய தற்போதைய சூழ்நிலைகள் குறித்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து தங்கள் படித்த பள்ளியின் மேம்பாட்டிற்காக ஏதேனும் செய்ய வேண்டுமென முடிவு செய்து அதன்படி தனி வாட்ஸ் அப் குழு அமைத்து அதன் மூலம் முன்னாள் மாணவர்களையும் ஒன்றிணைத்து பள்ளி மேம்பாட்டுக்கான பணிகளை செய்வது என உறுதிமொழி ஏற்றனர்.

    இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போதைய தலைமை ஆசிரியருமான நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் நாகராஜன் நன்றி தெரிவித்தார்.

    • திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழையே அதிக மழைப்பொழிவை தரும்.
    • ஆடி மாதத்தில் வறண்ட வானிலை காணப்படும்.

    திருப்பூர் :

    விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் கணிசமான வருமானம் ஈட்டி வருகின்றனர். மழை குறைவாக பெய்யும் காலங்களில் தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டு கால்நடை விவசாயிகள் பெரும் துயரத்தை அனுபவிக்கின்றனர். இந்த ஆண்டு கால்நடை விவசாயிகளுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழையே அதிக மழைப்பொழிவை தரும். ஆடி மாதத்தில் வறண்ட வானிலை காணப்படும். இதனால், புல்வெளிகள் காய்ந்து பசுந்தீவனங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்.ஆனால் இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக தென்மேற்கு பருவமழை கை கொடுத்ததால் ஆடி மாதத்தில் நல்ல மழை பெய்தது. இது புல்வெளிகளை செழிப்படையச் செய்துள்ளது. கோரை, கொழுக்கட்டை, அருகு போன்ற புல் வகைகள் நன்கு வளர்ந்துள்ளது. தீவன பற்றாக்குறை நீங்கி உள்ளதால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கு சுரங்கப்பாலம் அமைக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு தொடர்ந்து 12 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • மேட்டுப்பட்டி கிராமத்திற்குள் செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சுரங்கப்பாலம் அமைக்க உத்தரவிட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகிலுள்ள மேட்டுப்பட்டி மற்றும் எம்.பெருமாபாளையம் கிராம மக்கள், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கு பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.

    எனவே, இப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கு சுரங்கப்பாலம் அமைக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு தொடர்ந்து 12 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து மேட்டுப்பட்டி கிராமத்திற்குள் செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சுரங்கப்பாலம் அமைக்க உத்தரவிட்டது. இப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கு இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், பாலம் அமைக்கக்கோரி போராடிய அனைத்து கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நேற்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து, மேட்டுப்பட்டி மற்றும் எம்.பெருமாபாளையம் ஆகிய கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    • அலங்கார தேர்பவனி புனித வனத்து சின்னப்பர் கல்லறை தோட்டத்திலிருந்து புறப்பட்டு வடக்கு வாசல் கல்லுக்கட்டித்தெரு விற்கு வந்தடைந்தது.
    • சுதந்திரம் பெற்றதற்கு முன்பிருந்தே, இவ்விழா கொண்டாடப்பட்டு வருவது தெரு மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு வாசல் கல்லுகட்டி தெரு, புனித வனத்து சின்னப்பர் 109ம் ஆண்டு அன்னதான விழா மற்றும் அலங்கார தேர்பவனி நடந்தது.

    கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக நடக்காமல் இருந்த விழா, இந்த ஆண்டு அரசின் வழிகாட்டுதல் படியும், மக்கள் பேராதரவோடும், வெகு விமர்சையாக நடந்தது.

    விழாவில் முக்கிய நிகழ்வாக ஆலய பங்கு தந்தை அருள், உதவி பங்கு தந்தை ஜோகிளமென்ட், நடத்திய கூட்டுத் திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    சுதந்திர தினத்தன்று நடந்த விழாவில் நிறைவாக, புனித வனத்து சின்னப்பரின் திருஉருவம் தாங்கிய அலங்கார தேர்பவனி புனித வனத்து சின்னப்பர் கல்லறை தோட்டத்திலிருந்து புறப்பட்டு வடக்கு வாசல் கல்லுக்கட்டித்தெரு வந்தடைந்தது.

    ஏராளமான பொது–மக்கள், புனிதரின் நல் ஆசியை பெற்றதுடன் ஆலயம் சார்பில் வழங்கப்பட்ட அன்னதானத்திலும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    ஏற்பாடுகளை, தெரு தலைவர்கள், இளைஞர், நற்பணி மன்றத்தினர், மாதர் மன்றத்தினர் மற்றும் வடக்குவாசல் கல்லுக்கட்டி தெருவாசிகள் ஒன்று சேர்ந்து ஆலய பங்கு தந்தை அருள், உதவி பங்கு தந்தை ஜோகிளமென்ட் தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர்.

    இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் சுதந்திரம் பெற்றதற்கு முன்பிருந்தே, இந்த விழா தொடர்ந்து 109 ஆண்டாக கொண்டாடப்பட்டு வருவது தெரு மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

    தஞ்சை மாவட்ட நிர்வாகம் அனுமதியுடன், அரசின் வழிகாட்டுதல் படியும் நடந்த இந்த விழாக்களில், தஞ்சை ஆயர் இல்ல வேந்தர் ஜான் சக்கிரியாஸ் தலைமை வகித்து சிறப்பித்து விழாவை மேலும் சிறப்படைய செய்ததுடன், நல்லாசி கிடைத்ததாக பொது–மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்

    பாதுகாப்பு ஏற்பாடுகளை கள்ளப்பெரம்பூர் காவல் துறையினர் செய்திருந்தனர். தெருவாசிகள் டோமினிக், அற்புதராஜ், லியோ, ஜான்சன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

    பரமத்தி வேலூர் பகுதிகளில் வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டு உள்ளது.

    இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு ,கரூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை தவிர தினந்தோறும் நடைபெறும் வாழைத்தார் ஏல சந்தைக்கு வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.250-க்கும்,கற்பூரவள்ளி வாழைத்தார் தார் ஒன்று ரூ.350-க்கும் மொந்தன் காய் ஒன்று ரூ.5-க்கும் விற்பனையானது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.300-க்கும்,கற்பூரவள்ளி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.450-க்கும் , மொந்தன் காய் ஒன்று ரூ.6- க்கும் விற்பனையானது.

    வாழைத்தார்கள் வரத்து குறைந்ததால் வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர் பகுதிகளில் உற்பத்தி குறைவால் வெற்றிலை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், செல்லப்பம்பாளையம், வெங்கரை, நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், குப்பிச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்றவற்றை பயிர் செய்துள்ளனர்.

    வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் வெற்றிலைகளை பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர்.

    பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்திவேலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிக்கும், பரமத்திவேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து இருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெற்றிலை சுமைகளை வாங்கி லாரிகள் மூலம் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா , மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், மும்பை போன்ற பெரு நகரங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் 104 கவுளி கொண்ட இளம் பயிர் வெள்ளைக்கொடி ஒரு சுமை ரூ 6 ஆயிரத்திற்கும், 104 கவுளி கொண்ட இளம் பயிர் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ 2,500-க்கும் விற்பனையானது. 104 கவுளிகொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமைரூ 2,500-க்கும் ,104 கவுளி கொண்ட முதிகால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ1,400-க்கும்விற்பனையானது.

    நேற்று 104 கவுளி கொண்ட இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ 8,500-க்கும், 104 கவுளி கொண்ட இளங்கால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.4 ஆயிரத்திற்கும் விற்பனையானது. வெற்றிலை உற்பத்தி குறைவின் காரணமாக வெற்றிலை விலை உயர்ந்துள்ளது. வெற்றிலை விலை உயர்வால் வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×