search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்கூட்டர்"

    • டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஜூப்பிட்டர் கிளாசிக் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது.
    • புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரில் டைமண்ட் கட் அல்ய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் ஜூப்பிட்டர் கிளாசிக் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டிவிஎஸ் ஜூப்பிட்டர் கிளாசிக் டாப் எண்ட் வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இது சாலையில் அதிவேகமாக 50 லட்சம் வாகனங்கள் எனும் மைல்கல்லை எட்டியதை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய டிவிஎஸ் ஜூப்பிட்டர் கிளாசிக் மாடல் விலை ரூ. 85 ஆயிரத்து 866 ஆகும்.

    இந்த ஸ்கூட்டரின் பெண்டர் கார்னிஷ், டிண்ட் செய்யப்பட்ட வைசர், மிரர் ஹைலைட் உள்ளிட்டவைகளை சுற்றி பிளாக் தீம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் 3டி பிளாக் லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது. ஹேண்டில்பார் எண்ட், டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரிச் டார்க் பிரவுன் பேனல்கள், பிரீமியம் லெதர் இருக்கை மேற்கவர்கள், பேக் ரெஸ்ட் போன்ற அம்சங்கள் உள்ளன .இந்த ஸ்கூட்டர் மிஸ்டிக் கிரே மற்றும் ரீகல் பர்ப்பில் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    டிவிஎஸ் ஜூப்பிட்டர் கிளாசிக் மாடலில் புதிய தலைமுறை அலுமினியம், லோ-ஃப்ரிக்‌ஷன் 110சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் சீரான செயல்திறன், பிக்கப் மற்றும் மைலேஜ் உள்ளிட்டவைகளை வழங்குகிறது. இத்துடன் டிவிஎஸ் மோட்டார் காப்புரிமை பெற்ற எகனோமீட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது இகோ மோட் மற்றும் பவர் மோட் ஆப்ஷன்களை வழங்குகிறது. இவற்றில் இகோ மோட் அதிக மைலேஜ் வழங்கும்.

    இந்திய சந்தையில் டிவிஎஸ் மோட்டார்ஸ் விற்பனை செய்து வரும் பிளாக்‌ஷிப் ஜூப்பிட்டர், என்டார்க், வீகோ மற்றும் பெப் பிளஸ் என நான்கு ஐசி என்ஜின் ஸ்கூட்டர்களும் தொடர்ந்து அமோக வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. ஜூப்பிட்டர் மற்றும் வீகோ மாடல்கள் 3 லட்சத்து 64 ஆயிரத்து 095 யூனிட்களும், பெப் பிளஸ் 28 ஆயிரத்து 913 யூனிட்களும் விற்பனையாகி உள்ளன. டிவிஎஸ் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 15 ஆயிரத்து 028 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.

    • டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது என்டார்க் 125 ஸ்கூட்டர் சீரிசில் புது மாற்றம் செய்து இருக்கிறது.
    • அதன்படி புது ஸ்கூட்டர் விலை முந்தைய நிற ஆப்ஷன்களை விட அதிக விலை கொண்டிருக்கிறது.

    டிவிஎஸ் நிறுவனம் தனது என்டார்க் 125 ஸ்கூட்டரை தற்போது புளூ நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. இத்துடன் செக்யுர்டு பிளாட் கிராபிக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. என்டார்க் 125 ஸ்கூட்டரின் புதிய நிறத்தின் விலை ரூ. 87 ஆயிரத்து 011, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    என்டார்க் 125 ஸ்கூட்டரின் புளூ நிற வேரியண்டில் புது நிறம் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் டிவிஎஸ் என்டார்க் மாடலில் 124.8சிசி, மூன்று வால்வுகள் கொண்ட ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9.25 ஹெச்பி பவர், 10.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.


    இந்த ஸ்கூட்டரில் 12 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டெலிஸ்கோபிக் போர்க், மோனோஷாக் சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் டிஸ்க் பிரேக், டிரம் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது. இதே ஸ்கூட்டர் டூயல் டிரம் பிரேக் வேரியண்டிலும் கிடைக்கிறது.

    டிவிஎஸ் என்டார்க் புதிய புளூ நிற வேரியண்ட்டுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் வரும் நாட்களில் துவங்கும் என தெரிகிறது.

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் புதிய ஹீரோ ஸ்கூட்டர் 110 சிசி பிரிவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டர் மாடல் விவரங்களை டீலர்களுக்கும் தெரிவிக்கும் நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியது. இந்த நிகழ்ச்சி மற்றும் புது ஸ்கூட்டர் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி புதிய ஹீரோ ஸ்கூட்டர் மேஸ்ட்ரோ சூம் 110 எனும் பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது.

    புதிய மேஸ்ட்ரோ சூம் 110 இளமை மிக்க தோற்றம், ஸ்போர்ட் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் X வடிவ எல்இடி லைட், கூர்மையான டெயில் லைட் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்டாண்டர்டு மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 110 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் தான் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 8.04 ஹெச்பி பவர், 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.


    அம்சங்களை பொருத்த வரை இந்த மாடலில் எல்இடி இலுமினேஷன் மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடத் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், டெலிஸ்கோபிக் போர்க், சிங்ரிவ் ரியர் ஷாக், முன்புறம் டிஸ்க் மற்றும் பின்புறம் டிரம் பிரேக் செட்டப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் புது மாடல் 12 இன்ச் வீல்களுடன் வருகிறது.

    ஹீரோ நிறுவனம் புது மேஸ்ட்ரோ சூம் 110 மாடலை விரைவில் இந்தியாவில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் புதிய மேஸ்ட்ரோ சூம் 110 விலை ரூ. 75 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்பட்டலாம். இந்தியாவில் புதிய ஹீரோ மேஸ்ட்ரோ சூம் 110 மாடல் ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜூப்பிட்டர் மற்றும் ஹோண்டா டியோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Photo Courtesy: Gaadiwaadi

    • லம்ப்ரெட்டா ஸ்கூட்டர் மாடல்கள் மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • இதற்காக லம்ப்ரெட்டா நிறுவனம் பேர்டு மொபிலிட்டி நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கிறது.

    இந்திய இருசக்கர வாகன சந்தையில் அதிக பிரபல பிராண்டாக லம்ப்ரெட்டா இருந்து வந்தது. இத்தாலி நாட்டு நிறுவனமான லம்ப்ரெட்டா இந்திய சாலைகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் லம்ப்ரெட்டா மீண்டும் இந்தியாவில் களமிறங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரி எண்ட்ரி கொடுக்க பேர்டு மொபிலிட்டி எனும் நிறுவனத்துடன் லம்ப்ரெட்டா கூட்டணி அமைப்பதாக தெரிகிறது.

    அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 200 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய லம்ப்ரெட்டா திட்டமிட்டுள்ளது. லம்ப்ரெட்டா பிராண்டின் தாய் நிறுவனமான இன்னோசெண்டி எஸ்ஏ இந்தியாவில் பல்வேறு மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. 2024 வாக்கில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. லம்ப்ரெட்டா பிராண்டின் பெரும்பாலான மாடல்கள் 200 சிசி முதல் 300 சிசி வரையிலான திறன் கொண்டிருக்கும்.


    இந்தியாவில் களமிறங்குவதன் மூலம் உள்நாட்டிலேயே தனது வாகன உற்பத்தியை துவங்க லம்ப்ரெட்டா முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை வெளிநாட்டு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். அறிமுகமாகும் போது இந்திய சந்தையில் குறைந்த விலை ஸ்கூட்டர்களாக லம்ப்ரெட்டா மாடல்கள் நிச்சயம் இருக்காது. இது தற்போது விற்பனையாகும் பிரீமியம் ஸ்கூட்டர்களை போன்ற விலையிலேயே அறிமுகமாகும்.

    பேர்டு மொபிலிட்டி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதை அடுத்து லம்ப்ரெட்டாவிடம் 51 சதவீத பங்குகளும், பேர்டு மொபிலிட்டி 49 சதவீத பங்குகளை கொண்டிருக்கும். உலகம் முழுக்க சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிக ஸ்கூட்டர்களை லம்ப்ரெட்டா விற்பனை செய்து இருக்கிறது. இந்தியாவில் களமிறங்குவதன் மூலம் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது. தற்போது உலகின் 70 நாடுகளில் லம்ப்ரெட்டா வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    • அசத்தலான டீசர்களை தொடர்ந்து ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா 6ஜி பிரீமியம் மாடலை அறிமுகம் செய்தது.
    • புது ஸ்கூட்டரின் விலை டீலக்ஸ் வேரியண்டை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா 6ஜி பிரீமியம் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த ஸ்கூட்டருக்கான டீசர்கள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இதன் அம்சங்கள் மற்றும் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    அந்த வகையில் ஹோண்டா ஆக்டிவா 6ஜி பிரீமியம் மாடல் விலை ரூ. 75 ஆயிரத்து 400 ஆகும். இது டீலக்ஸ் வேரியண்டை விட ரூ. 1000 ஆயிரம் அதிகம் ஆகும். ஆக்டிவா 6ஜி டீலக்ஸ் விலை ரூ. 74 ஆயிரத்து 400 ஆகும். இரு விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    தோற்றத்தில் இந்த ஸ்கூட்டர் கோல்டன் வீல்கள், 3டி கோல்டு பினிஷ் செய்யப்பட்ட லோகோ, பிரவுன் நிற இன்னர் பாடி மற்றும் சீட் கவர், முன்புற அப்ரன் மீது கோல்டன் அக்செண்ட்கள் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் இந்த ஸ்கூட்டர் புதிதாக மேட் சங்கிரா ரெட் மெட்டாலிக், மேட் மார்ஷல் கிரீன் மெட்டாலிக் மற்றும் பியல் சைரன் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. பிரீமியம் எடிஷனில் வேறு எந்த புது அம்சங்களும் சேர்க்கப்படவில்லை.

    ஹோண்டா ஆக்டிவா 6ஜி மாடலில் 109.51சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7.68 ஹெச்பி பவர், 8.79 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் சிவிடி கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 12-10 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் இருபுறங்களிலும் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் எக்ஸ்டெர்னல் பியூவல் பில்லர் கேப், என்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் ஸ்விட்ச், சைலண்ட் ஸ்டார்டர், சீட் மற்றும் எக்ஸ்டெர்னல் பியூவல் பில்லர் கேப் உள்ளிட்டவைகளை திறக்க டூயல் பன்ஷன் ஸ்விட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா பிரீமியம் எடிஷன் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • இந்த பிரீமியம் எடிஷன் ஸ்கூட்டர் ஆக்டிவா 6ஜி மாடலை தழுவியே உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் CB300F மாடலை அறிமுகம் செய்ததில் இருந்தே புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்வதற்கான டீசர்களை தனது சமூக வலைதளம் மற்றும் வலைதளங்களில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், புது ஸ்கூட்டர் விவரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்கூட்டர் ஆக்டிவா பிரீமியம் எடிஷன் பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. புதிய பிரீமியம் எடிஷன் ஸ்கூட்டர் ஆக்டிவா 6ஜி மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. பெயருக்கு ஏற்றார் போல் இந்த மாடலின் தோற்றத்தில் பிரத்யேக டிசைன் டச்கள் செய்யப்பட்டு உள்ளன. இவை ஸ்கூட்டரை தனித்துவமாக காட்டுகிறது.


    முன்புற அப்ரானில் உள்ள ஃபௌக்ஸ் வெண்ட் மற்றும் வீல்கள் தற்போது கோல்டு பினிஷ் செய்யப்பட்டு உள்ளன. பிளாஸ்டிக் மற்றும் சீட் லெதர் உள்ளிட்டவை பிரவுன் நிற ஷேட் கொண்டிருக்கிறது. இத்துடன் பின்புற கிராப் ஹேண்டில் பாடி நிறம் கொண்டிருக்கிறது. முன்புற சஸ்பென்ஷன் மற்றும் டிரைவ்டிரெயின் கவர் உள்ளிட்டவை பிளாக் பினிஷ் கொண்டிருக்கிறது.

    புதிய ஆக்டிவா பிரீமியம் எடிஷன் மாடல் விலை விவரங்களை ஹோண்டா இதுவரை அறிவிக்கவில்லை. எனினும், தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஆக்டா 6ஜி மாடல்களை விட பிரீமியம் எடிஷன் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    இந்திய சந்தையில் ஹோண்டா ஆக்டிவா 6ஜி மாடல் விலை ரூ. 72 ஆயிரத்து 400-இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 74 ஆயிரத்து 500 வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    • ஹோண்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஆக்டிவா 6ஜி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய ஸ்கூட்டர் காஸ்மெடிக் மாற்றங்களுடன் விற்பனைக்கு வருகிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் ஆக்டிவா மாடலின் புது வெர்ஷனை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முதன் முதலில் வெளியான டீசர்களில் இது ஆக்டிவா 7ஜி மாடலாக இருக்கும் என கூறப்பட்டது. எனினும், புதிய டீசரில் இது ஆக்டிவா 6ஜி மாடலின் புது வேரியண்ட் என தெரியவந்துள்ளது.

    புது வேரியண்ட் காஸ்மெடிக் மாற்றங்களுடன் அறிமுகமாகும் என தெரிகிறது. இந்த மாடலின் முன்புற அப்ரோன், பக்கவாட்டு பகுதிகளில் கோல்டன் நிற ஆக்டிவா மற்றும் பிரீமியம் பேட்ஜ்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் டோன் மிரர்கள், டூயல் டோன் சீட் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிதாக மேட் கிரீன் நிற பெயிண்ட் கொண்டிருக்கிறது.


    தற்போதைய ஆக்டிவா 6ஜி மாடலில் எக்ஸ்டர்னல் பியூவல் பில்லர் கேப், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் ஸ்விட்ச், சைலண்ட் ஸ்டார்டர், 5.3 லிட்டர் பியூவல் டேன்க், சீட் மற்றும் எக்ஸ்டெர்னல் பில்லர் மூடியை கழற்றும் டூயல் பன்ஷன் ஸ்விட்ச் வழங்கப்பட்டு உள்ளது. புதிய பிரீமியம் வேரியண்டில் கூடுதல் அம்சங்கள் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    ஹார்டுவேரை பொருத்தவரை புதிய ஆக்டிவா 6ஜி பிரீமியம் எடிஷனிலும் 109.5சிசி என்ஜினே வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 7.68 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த என்ஜினுடன் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 12-10 இன்ச் வீல்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க், மோனோ ஷாக் யூனிட், இருபுறங்களிலும் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    • ஹோண்டா நிறுவனம் விரைவில் புதிய ஆக்டிவா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய ஆக்டிவா 7ஜி மாடலுக்கான டீசர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    ஹோண்டா நிருவனம் தனது ஆக்டிவா 7ஜி மாடலுக்கான இரண்டாவது டீசரை வெளியிட்டு உள்ளது. இது ஆக்டிவா 6ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய டீசர் ஸ்கூட்டரின் முன்புற தோற்றத்தை ஓரளவு வெளிப்படுத்துகிறது. அதன்படி ஸ்கூட்டரின் முன்புற அப்ரன் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இதன் மூலம் புதிய ஸ்கூட்டரின் அழகு அங்கங்கு மெருகேற்றப்படும் என எதிர்பார்க்கலாம்.


    மற்றொரு டீசரில் இருப்பது தற்போது விற்பனை செய்யப்படும் ஆக்டிவா 6ஜி மாடலின் ஸ்பெஷல் எடிஷனாக இருக்கும் என தெரிகிறது. இதில் முன்புற தோற்றம் அப்படியே ஆக்டிவா 6ஜி மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிப்பதோடு, கோல்டு மற்றும் பெய்க் நிற அக்செண்ட்கள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஸ்கூட்டரின் பாடி நிறம் மேட் பினிஷ் கொண்டுள்ளது. இவை ஸ்கூட்டர் ஸ்பெஷல் எடிஷன் மாடலாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

    டீசரில் இருப்பது ஹோண்டா ஆக்டிவா 7ஜி மாடல் என்ற பட்சத்தில் இதன் விலை ஆக்டிவா 6ஜி மாடலை விட ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 6 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். தற்போதைய ஹோண்டா ஆக்டிவா 6ஜி விலை ரூ. 72 ஆயிரத்து 400, எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    • ஹோண்டா நிறுவனத்தின் டியோ லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டர் இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த மாடலின் என்ஜின் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக டியோ ஸ்போர்ட்ஸ் மாடல் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் லிமிடெட் எடிஷன் மாடல் ஆகும். இது ஹோண்டா நிறுவனத்தின் ரெட் விங் விற்பனை மையங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. புதிய ஹோண்டா டியோ ஸ்போர்ட்ஸ் மாடல் ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    பேஸ் மாடலுடன் ஒப்பிடும் போது டியோ ஸ்போர்ட்ஸ் மாடல் ஸ்டிராண்டியம் சில்வர் மெட்டாலிக் - பிளாக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் - பிளாக் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. இவை தவிர புதிய லிமிடெட் எடிஷன் மாடலிலும் 110சிசி சிங்கில் சிலிண்டர் மோட்டார் தான் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7.6 ஹெச்.பி. பவர், 9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.


    ஹோண்டா டியோ ஸ்போர்ட்ஸ் மாடலில் அதே ஸ்போர்ட்ஸ் டிசைன், எல்இடி ஹெட்லைட், எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மூன்று வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷாக் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு 130 மில்லிமீட்டர் அளவில் இரண்டு புறமும் டிரம் பிரேக்குள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்திய சந்தையில் புதிய ஹோண்டா டியோ ஸ்போர்ட்ஸ் ஸ்டாண்டர்டு வேரியண்ட் விலை ரூ. 68 ஆயிரத்து 317 என்றும் டீலக்ஸ் வேரியண்ட் விலை ரூ. 73 ஆயிரத்து 317 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பேஸ் வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது ஸ்போர்ட்ஸ் ஸ்டாண்டர்டு வேரியண்ட் விலை ரூ. 500, ஸ்போர்ட்ஸ் டீலக்ஸ் மாடல் விலை ரூ. 2 ஆயிரம் அதிகரித்து இருக்கிறது.

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது வாகனங்கள் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது.
    • விலை உயர்வு இந்த மாதமே அமலுக்கு வந்துள்ளது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்கூட்டர் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. விலை உயர்வில் ஹீரோ பிளெஷர் பிளஸ், மேஸ்ட்ரோ எட்ஜ் 110, மேஸ்ட்ரோ எட்ஜ் 125, டெஸ்டினி 125 மற்றும் டெஸ்டினி 125 XTEC போன்ற மாடல்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. விலை உயர்வு தவிர ஸ்கூட்டர்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    புதிய விலை விவரம்:

    பிளெஷர் பிளஸ் ஷீட் மெட்டல் வீல் ரூ. 64 ஆயிரத்து 548

    பிளெஷர் பிளஸ் கேஸ்ட் வீல் ரூ. 66 ஆயிரத்து 948

    பிளெஷர் பிளஸ் XTEC டிரம் ரூ. 73 ஆயிரத்து 400

    பிளெஷர் பிளஸ் XTEC டிரம் ஜூபிலண்ட் எல்லோ ரூ. 75 ஆயிரம்

    மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ZX டிரம் ரூ. 66 ஆயிரத்து 820

    மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ZX டிஸ்க் ரூ. 73 ஆயிரத்து 489

    மேஸ்ட்ரோ எட்ஜ் 125 டிரம் ரூ. 76 ஆயிரத்து 878

    மேஸ்ட்ரோ எட்ஜ் 125 டிஸ்க் ரூ. 81 ஆயிரத்து 328

    மேஸ்ட்ரோ எட்ஜ் 125 டிஸ்க் ப்ரிஸ்மேடிக் ரூ. 81 ஆயிரத்து 748

    மேஸ்ட்ரோ எட்ஜ் 125 கனெக்டெட் ரூ. 85 ஆயிரத்து 748

    டெஸ்டினி 125 LX ரூ. 70 ஆயிரத்து 950

    டெஸ்டினி 125 VX ரூ. 75 ஆிரத்து 250

    டெஸ்டினி 125 100 மில்லியன் ரூ. 76 ஆயிரத்து 800

    டெஸ்டினி 125 பிளாட்டினம் ரூ. 77 ஆயிரத்து 200

    டெஸ்டினி 125 XTEC STD ரூ. 70 ஆயிரத்து 290

    டெஸ்டினி 125 XTEC LX ரூ. 75 ஆயிரத்து 500

    டெஸ்டினி XTEC அலாய் வீல் ரூ. 81 ஆயிரத்து 990

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    தற்போதைய சூழலில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களின் வாகன விலையை உயர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. உற்பத்தி செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதையே பல நிறுவனங்களும் விலை உயர்வுக்கான காரணமாக தெரிவித்து வருகின்றன.

    • யமஹா நிறுவனம் தனது பசினோ 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
    • இந்த மாடல் தற்போது புதிய நிறத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் பசினோ 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் முற்றிலும் புதிய சில்வர் நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய யமஹா பசினோ 125 Fi ஹைப்ரிட் மாடலின் விலை ரூ. 78 ஆயிரத்து 098, எக்ஸ்-ஷோரூம் சென்னை என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    தி கால் ஆப் தி புளூ திட்டத்தின் கீழ் பசினோ 125 Fi ஹைப்ரிட் மாடல் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ் நாட்டு ஸ்கூட்டர் சந்தையில் யமஹா நிறுவனம் பத்து சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. தற்போது முற்றிலும் புது நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து இந்த மாடலின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.


    யமஹா பசினோ 125 Fi ஹைப்ரிட் மாடலில் ஏர் கூல்டு, பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட 125சிசி புளூ கோர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் 8.2 பி.எஸ். பவர் மற்றும் 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் இதன் டிஸ்க் வேரியண்ட் மாடல் தற்போது விவிட் ரெட் ஸ்பெஷல், மேட் பிளாக் ஸ்பெஷல், கூல் புளூ மெட்டாலிக், டார்க் மேட் புளூ, சாவ் காப்பர், எல்லோ காக்டெயில், சியான் புளூ, விவிட் ரெட் மற்றும் மெட்டாலிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் டிரம் பிரேக் வேரியண்ட் விவிட் ரெட், கூல் புளூ மெட்டாலிக், எல்லோ காக்டெயில், டார்க் மேட் புளூ, சாவ் காப்பர், சியான் புளூ மற்றும் மெட்டாலிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

    • யமஹா நிறுவனம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மைலேஜ் சேன்ஜ் நிகழ்வை நடத்தியது.
    • இதில் மொத்தம் நூறு வாடிக்கையாள்கள் கலந்து கொண்டனர்.

    யமஹா நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் மத்தியில் 125சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர் ரேன்ஜ் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மைலேஜ் சேலன்ஜ் ஆக்டிவிட்டி பெயரில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் நூறு யமஹா வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்திய சந்தையில் யமஹா நிறுவனத்தின் 125சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடல்களின் கீழ் பசினோ 125 Fi ஹைப்ரிட், ரே ZR 125 Fi ஹைப்ரிட் மற்றும் ஸ்டிரீட் ரேலி 125 Fi ஹைப்ரிட் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. மைலேஜ் சேலன்ஜ் நிகழ்ச்சி தொடங்கும் முன் வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர் பயன்பாடு பற்றி செய்யக் கூடிய மற்றும் செய்யக் கூடாத விஷயங்கள் விவரிக்கப்ட்டன.


    இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கும் இலவச வாட்டர் வாஷ், பத்து பாயிண்ட் வாகன செக்கப் உள்ளிட்டவை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. கலந்து கொண்டவர்களில் அதிக மைலேஜ் பெற்று அகத்திய ஐந்து வெற்றியாளர்கல் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பரிசு கோப்பை, சான்றிதழ் மற்றும் கிப்ட் கார்டுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்வில் கலந்து கொண்டு அதிக மைலேஜ் பெற்று முதலிடம் பெற்றவர் தனது ஹைப்ரிட் ஸ்கூட்டர் கொண்டு 105.9 கி.மீ. மைலேஜ் பதிவு செய்து இருந்தார். இவரை தொடர்ந்து மற்ற நான்கு இடங்களை பிடித்தவர்கள் முறையே 97.86 கி.மீ., 97.56 கி.மீ, 96.69 கி.மீ மற்றும் 96.3 கி.மீ. மைலேஜ் பெற்றனர்.

    ×