search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழை"

    • வாழை படம் பார்த்து பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாருக்கு என் நன்றியையும் ப்ரியத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது வாழை திரைப்படம். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

    மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தை பார்த்து பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்தி இருந்தார்.

    இந்நிலையில், வாழை படம் பார்த்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், " படம் பார்த்த அனைவரையும் பசித்த சிவனணைந்தானாக்கியது வாழை!

    'திரைப்படத்தின் வெற்றி' என்ற இலக்கைத் தாண்டி சமூகத்தில் 'வாழை' ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளை சுட்டிக்காட்டி அதன் இயக்குநர் மாரி செல்வராஜ் சாரை இன்று நேரில் வாழ்த்தினோம்.

    விளிம்பு நிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் - அவர்களின் வலிகளையும் அனுபவங்களின் வாயிலாகத் திரைமொழியில் பேசுகின்ற மாரி சாரின் கலை மென்மேலும் சிறக்கட்டும்!" என குறிப்பிட்டிருந்தார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், " வாழை திரைப்படத்தை ஓராண்டுக்கு முன்பே முதல் ஆளாய் பார்த்து பாராட்டியதோடு இன்று வாழை பெற்றிருக்கும் மாபெரும் வெற்றிக்காக என்னை நேரில் அழைத்து பாராட்டி கொண்டாடிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார் அவர்களுக்கு என் நன்றியையும் ப்ரியத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். (இன்று நீங்கள் கொடுத்த அந்த குட்டி பரிசு அவ்வளவு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. )" என்றார்.

    • இன்று பெங்களூரில் உள்ள திரையரங்கில் தங்கலான் படத்தை திருமாவளவன் பார்த்தார்.
    • தங்கலான் திரைப்படம் உழைப்பின் மேன்மையை உணர்த்துகிறது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அப்படத்தை விசிக தலைவர் திருமாவளவன் பார்த்துவிட்டு மாரி செல்வராஜின் வீட்டிற்கே சென்று அவரை பாராட்டியிருந்தார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார். அவரது பதிவில், "போதாது கூலியென போர்க்குரல் வெடித்தெழும் பொருளியல் முரண் விளக்கும் புரட்சிகரப் படைப்பு! வறுமையை எதிர்த்து வலிகளைச் சுமந்து வாழ்க்கையைத் தேடும் வரலாற்றுக் குறிப்பு. விபத்தில்தான் பலி என்றாலும், இது வெண்மணி வெங்கொடுமையின் வேறொரு வடிவம்" என்று தெரிவித்திருந்தார்.

    வாழை படத்தை பாராட்டிய திருமாவளவன் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வெளியான பா ரஞ்சித்தின் தங்களின் படத்தை ஏன் பாராட்டவில்லை என்று விமர்சனம் எழுந்தது.

    இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "வாழை' படத்தை பார்த்தேன். படம் நன்றாக இருந்ததால், அதன் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டினேன். 'தங்கலான்' படத்தை பார்க்கவில்லை. அதனால் இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்திக்கவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று பெங்களூரில் உள்ள திரையரங்கில் தங்கலான் படத்தை திருமாவளவன் பார்த்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "அண்ணன் புகழேந்தி அவர்களோடு தங்கலான் திரைப்படம் காணும் வாய்ப்பு இன்று கிடைத்தது. தங்கலான் திரைப்படம் உழைப்பின் மேன்மையை உணர்த்துகிறது. சாதி வர்ணம் போன்ற்வற்றால் அடிமைப்பட்டு கிடந்த மக்களை விடுவிப்பதற்கு தங்களின் இருப்பிடத்திலிருந்து வெளியேறி கோலார் பகுதியில் புதைந்து கிடைக்கும் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியை தங்கலான் தலைமை தாங்கி மேற்கொள்கிறார்.

    அதில் அந்த மக்கள் சந்திக்கிற அவலங்களை வெளிப்படுத்தும் திரைப்படமாக இப்படம் அமைந்துள்ளது. ஒருபுறம் நிலக்கிழார்கள் செய்கிற கொடுமை இன்னொருபுறம் பிரிட்டிசார் செய்கிற அடக்குமுறை, இவற்றை எல்லாம் தாண்டி வேலூர் மாவட்டத்தை சேர்ந்த உழைக்கும் மக்கள் மேற்கொண்ட இந்த கடுமையான தங்கம் வெட்டி எடுக்கிற பணியை இந்த திரைப்படம் உணர்த்துகிறது.

    இயக்குநர் பா ரஞ்சித் அவருக்கே உரிய பாணியில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். புனைவுகள் கலந்திருப்பது இப்படத்திற்கு கூடுதல் சிறப்பை தருகிறது" என்று தெரிவித்தார்.

    • வாழை படத்தை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன்.
    • காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கி உள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில் வாழை திரைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,

    உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழையை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜூக்கு அன்பின் வாழ்த்துகள்.

    பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!

    பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!

    தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜூக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    • வாழை படத்தின் கதையை 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதியுள்ளதாக எழுத்தாளர் சோ. தர்மன் தெரிவித்துள்ளார்.
    • சோ தர்மன் எழுதிய வாழையடி சிறுகதையை தனது எக்ஸ் பக்கத்தில் மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் கதையை 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதியுள்ளதாக சாதிக்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள்.வாழை படம் பாருங்கள். உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்று.இன்று படம் பார்த்தேன்.

    என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி. வாழைதான் பிரதான விவசாயம்.நான் அங்கு போகும் போதெல்லாம் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கஷ்டத்தை பார்த்து எழுதியதுதான் என்னுடைய"வாழையடி......" என்கிற சிறுகதை.

    என் கதையில் லாரி, டிரைவர், கிளீனர், இடைத்தரகர், முதலாளி, சிறுவர்கள், சிறுமிகள், அவர்கள் படுகின்ற கஷ்டம், கூலி உயர்வு எல்லாம் உண்டு. ஆனால் டீச்சர், கர்ச்சீப், காலாவதியாகிப் போன பொருட்கள், கம்னியூஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல் விபத்து கிடையாது.

    வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என்கதை இலக்கியமாகவே நின்று விட்டது. இன்று கொண்டாடப்படுகின்ற ஒரு கதையை பத்தாண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன்.

    ஒருபடைப்பாளி என்கிற வகையில் கர்வமும் கொள்கிறேன். இச்சிறுகதை என்னுடைய "நீர்ப் பழி"என்கிற சிறுகதைத் தொகுப்பில் இரண்டாம் கதையாக இடம் பெற்றிருக்கிறது.

    கிராமங்களில் வாழையைப் பற்றி ஒரு சொலவடை உண்டு.

    "வாழை வாழவும் வைக்கும்.தாழவும் வைக்கும்."

    என்னை வாழை வாழ வைக்கவில்லை" என்று பதவியிட்டுள்ளார்.

    1999ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அருகே நடைபெற்ற லாரி விபத்தை மையமாக வைத்து வாழை திரைப்படத்தை இயக்குநர் மாரிசெல்வராஜ் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் சோ தர்மன் எழுதிய வாழையடி சிறுகதையை தனது எக்ஸ் பக்கத்தில் மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார்.

    அவரது பதிவில், "வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன் அவர்கள் எழுதிய வாழையடி என்கிற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை… அனைவரும் வாசிக்க வேண்டும் . எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி" பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வாழை திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
    • வாழை திரைப்படத்தை திரையரங்குகளில் வந்து பாருங்கள் என்று விஜய் சேதுபதி கோரிக்கை.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இத்திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில் வாழை படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய் சேதுபதி, "மாரி செல்வராஜின் 'வாழை' திரைப்படம் மிக அற்புதமான திரைப்படம். படத்தை பார்த்த பிறகு படம் முடிந்தது போல தெரியவில்லை, இன்னும் அந்த படத்துடன் இருப்பது போன்றே இருக்கிறது. வாழை திரைப்படத்தில் பேசப்பட்ட அரசியல், வசனம், நடித்த அனைவரும், அந்த ஊரில், அவர்களின் வாழ்க்கைக்கு மத்தியில் அந்த ஊர்காரர்களில் ஒருவராக அங்கிருந்து இன்னும் வெளி வர முடியாமல் மாட்டிக் கொண்டு இருக்கிறேன்.

    வாழை திரைப்படம் எடுத்ததற்கு மாரி செல்வராஜுக்கு நன்றி. இந்த மாதிரி ஒரு வாழ்க்கையை பதிய வைத்ததற்கும் நன்றி. சாதாரணமாக கடந்து போகிற செய்திகளுக்கு பின்னால் இருக்கும் வாழ்க்கையை அழுத்தம் திருத்தமாக பதிய வைத்ததற்கு நன்றி. இப்படி ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது, நம் வாழ்க்கையின் மீது நமக்கு உள்ள சில கேள்விகளை எழுப்பும் என நம்புகிறேன். வாழை திரைப்படத்தை திரையரங்குகளில் வந்து பாருங்கள். உங்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைக்கும்" என்று பேசினார்.

    விஜய் சேதுபதி பேசிய இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார். அந்த எக்ஸ் பதிவில், வாழை திரைப்படத்தை பார்த்த பின் தன் உணர்வை பெரும் உருக்கத்தோடு பகிர்ந்துகொண்ட தமிழ்சினிமாவின் மக்கள் செல்வன் அவர்களுக்கு எங்கள் நன்றியும் ப்ரியமும் " என்று பதிவிட்டுள்ளார்.

    • வாழை திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
    • வாழை படத்தை பாராட்டி இசையமைப்பாளர் ஹிப்பாப் ஆதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இத்திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில் வாழை படத்தை பாராட்டி இசையமைப்பாளர் ஹிப்பாப் ஆதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "நம் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை படமாக எடுக்கும் போது நாம் வாழ்ந்த தருணங்கள் மீண்டும் கண் முன் வந்து போகும். வலி நிறைந்த ஒரு தருணத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் கலையாக படைத்து நெஞ்சத்தை கலங்க வைத்து விட்டார். ! All the love to you brother" என்று பதிவிட்டுள்ளார்.

    • வாழை படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • மண்ணிலிருந்து மக்களை எடுத்து நடிக்க வைத்திருக்கிறார், மாரி, நமக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷம்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில் வாழை படத்தை இயக்குநர் பாரதிராஜா பாராட்டி பேசியுள்ளார். அந்த வீடியோவின் லிங்க்கை மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த வீடியோவில் பேசிய பாரதிராஜா, "சினிமா துறைக்கு வந்ததே புண்ணியம் என சில படங்களை பாரத்து யோசித்தது உண்டு. 'வாழை' அப்படியொரு படம். படத்தைப் பார்த்து பல இடங்களில் கண்ணீர் விட்டேன். ஒப்பனைகள் இல்லாத முகம், சுத்தம் இல்லாத தெருக்கள் என அச்சு பிசகாமல் நம் கிராமங்களை கண் முன் கொண்டு வந்திருக்கிறார். மண்ணிலிருந்து மக்களை எடுத்து நடிக்க வைத்திருக்கிறார், மாரி, நமக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷம்.

    சத்யஜித் ரே, ஷியாம் பெனெகல் படங்களை பார்க்கையில் பொறாமையாக இருக்கும். அப்படியான படங்களை எடுக்க தமிழனுக்கு தகுதி இல்லையோ என ஆதங்கப்படுவேன். ஆனால், இவர்களை எல்லாம் விஞ்சுகிற வகையில் என் நண்பன், என் மாரி செல்வராஜ் அற்புதமாக ஒரு படம் பண்ணியிருக்கான். எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கான் என மார்தட்டி சொல்லுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

    மாரி செல்வராஜ் அவரது பதிவில், "நிறைய தருணங்கள் என்னை பற்றியான உங்கள் சொற்களில் நின்று இளைப்பாறியிருக்கிறேன். இன்று நானே ஒரு செடியாய் துளிர்க்கிறேன். இயக்குனர் இமயத்திற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

    • வாழை படத்தை சிவகார்த்திகேயன் பாராட்டி பேசியுள்ளார்.
    • அந்த வீடியோவை மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    வாழை படத்தை சிவகார்த்திகேயன் பாராட்டி பேசியுள்ளார். அந்த வீடியோவை மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த வீடியோவில், "மிக நெருக்கமான ஒருவரின் கதையை கேட்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மாரி செல்வராஜ் மீண்டும் மீண்டும் தான் ஒரு strong-ஆன இயக்குநர் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். 'வாழை' என்னுடைய favourite படமாக மாறியுள்ளது. பல விருதுகள் பெற தகுதியுள்ள படம் இந்த வாழை" என்று சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

    மாரி செல்வராஜ் அவரது பதிவில், "பரியேறும் பெருமாள் வெளியாவதற்கு முன்பே என்னை நேசிக்க ஆரம்பித்த ஆன்மா நீங்கள் …கர்ணன் மாமன்னன் என்று என் ஒவ்வொரு படைப்பு வரும்போதும் முதல் ஆளாய் நீங்கள் என் கைபிடித்து கொண்டாடி தீர்த்த வார்த்தைகளை பத்திரப்படுத்தியதை போலவே இன்று வாழைக்கு நீங்கள் இவ்வளவு ப்ரியத்தோடு தந்திருக்கும் வார்த்தைகளையும் நல்ல தோழனாக பத்திரப்படுத்திகொள்கிறேன். நன்றி" பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை.
    • இப்படம் இன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    இப்படம் இன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் பாடல் ஜூக் பாக்ஸ் மற்றும் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

    மாரி செல்வராஜ் அவரது சிறு வயதில் நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் வரும் நாட்களில் மக்களின் ஆதரவை இன்னும் அதிகமாக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை.
    • மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை திரைக்கு வர இருக்கிறது.

    இதையொட்டி படத்தின் Pre Release விழா சென்னையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஷ்கின், அருண் மாதேஸ்வரன், பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வாழை படத்தை பார்த்து விட்டு சோகத்துடன் வெளியே வந்த இயக்குநர் பாலா, மாரிசெல்வராஜை கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். பின்பு சிறிது நேரம் மாரி செல்வராஜ் பக்கத்தில் அமர்ந்த பாலா தன்னை ஆசுவாசப்படுத்தினார்.

    மேலும் படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் மாரி செல்வராஜுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன், சிலம்பரசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் படம் குறித்து தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

    இந்நிலையில் தற்பொழுது நடிகர் கார்த்தி , அனுபமா பரமேஸ்வரன், தனுஷ், மணி ரத்னம், போன்ற திரைப்பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாழை படம் நாளை வெளியாகிறது.
    • வாழை படத்தின் Pre Release விழா சென்னையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடந்தது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை திரைக்கு வர இருக்கிறது.

    இதையொட்டி படத்தின் Pre Release விழா சென்னையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஷ்கின், அருண் மாதேஸ்வரன், பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வாழை படத்தை பார்த்து விட்டு சோகத்துடன் வெளியே வந்த இயக்குநர் பாலா, மாரிசெல்வராஜை கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். பின்பு சிறிது நேரம் மாரி செல்வராஜ் பக்கத்தில் அமர்ந்த பாலா தன்னை ஆசுவாசப்படுத்தினார்.

    மேலும் படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் மாரி செல்வராஜுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன், சிலம்பரசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் படம் குறித்து தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • வாழை படம் வருகிற 23-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
    • நடிகர் சிலம்பரசன் வாழை படத்தைப் பார்த்துவிட்டு மாரி செல்வராஜை நேரில் அழைத்துப் பேசியுள்ளார்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 23-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    இதையொட்டி படத்தின் Pre Release விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர்கள் ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஷ்கின், அருண் மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் படம் குறித்து தங்களின் பார்வையை வெளிப்படுத்தினர்.

    அந்த வகையில், நடிகர் சிலம்பரசன் வாழை படத்தைப் பார்த்துவிட்டு மாரி செல்வராஜை நேரில் அழைத்துப் பேசியுள்ளார். மேலும் படம் குறித்த தனது பார்வையை வீடியோவிலும் பேசி பதிவு செய்துள்ளார். வாழை படம் கண்டிப்பாக மக்களுக்கு பிடிக்கும். படம் சிம்பிளான ஒரு படம் தான் ஆனால் படத்திற்குள் அவ்வளவு வலி இருக்கிறது என்றும் சிம்பு தெரிவித்தார்.  

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×