search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்கன்வாடி"

    • ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது.
    • நாகூரில், ரூ.33.20 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளை ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி வார்டு எண் 4, நாகூர் பட்டினச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூபாய் 12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது.

    அதை, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கெளதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்க ப்பட்டன. அதுபோல், நாகூர் மியான் தெரு நகராட்சி இஸ்லாம் நடுநிலைப் பள்ளியில் ரூ.6.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர், வார்டு எண் 02 நாகூர் செய்யது பள்ளி குளத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் ஆகிய திட்டப்பணிகள் உள்பட நாகூரில் ரூ.33.20 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளை ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    இந்நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்கள் அஞ்சலி தேவி நாகரெத்தினம், பதுரு நிஷா மற்றும் நகராட்சி செயற் பொறியாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

    • நாகர்கோவிலை அடுத்த புது கிராமம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலை அடுத்த புது கிராமம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    கோரிக்கையை ஏற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டு தேரூர் பேரூராட்சி புதுகிராமம் 1-வது வார்டில் அங்கன் வாடி கட்டும் பணி நடந்து முடிந்தது. இதையடுத்து அதன் திறப்பு விழாவில் விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    முன்னதாக டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி. உதயம், வட்டார தலைவர் காலபெருமாள், குமரி கிழக்கு மாவட்ட எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு தலைவர் ஜோயல், தங்கம் நடேசன், தேரூர் பேரூராட்சி தலைவர் அமுதா ராணி வின்சென்ட், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பென்னி கிரகாம் மற்றும் தேரூர் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • தேர்தல் வாக்குறுதி 313-ன் படி முறையான சிறப்பு பென்சன் வழங்கவேண்டும்.
    • உண்ணாவிரதம் கூட்ட அமர்வில் ஒப்புக்கொண்ட மருத்துவ காப்பீடு ஈமச்சடங்கு நிதி ரூ.25000 வழங்க வேண்டும்.

    தருமபுரி, 

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட துணைத்தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் மாநில துணைத்தலைவர் கணேசன், மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் மதலைமுத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் காவேரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் குப்புசாமி, அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், நிர்வாகி கேசவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    தேர்தல் வாக்குறுதி 313-ன் படி முறையான சிறப்பு பென்சன் வழங்கவேண்டும். உண்ணாவிரதம் கூட்ட அமர்வில் ஒப்புக்கொண்ட மருத்துவ காப்பீடு ஈமச்சடங்கு நிதி ரூ.25000 வழங்க வேண்டும். சமூகநல முன்னாள் இயக்குநர் ஆப்பிரகாம் உத்தரவுபடி ஓய்வுகால பலன்களை ஓய்வுபெறும் அன்றே முழுமையாக வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    • ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ.4.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜையும், ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி திறப்பு விழாவும் நடைபெற்றது.
    • புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும் திறந்து வைத்தார்.

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் - பெருமாநல்லூர் அருகே உள்ள ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ.4.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜையும், ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி திறப்பு விழாவும் நடைபெற்றது.

    விழாவில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் கலந்து கொண்டு கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை செய்தும், புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும் திறந்து வைத்தார்.

    இதில் ஒன்றிய பெருந்தலைவர் சொர்ணாம்பாள், ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவசாமி, ஒன்றிய பேரவை செயலாளர் எஸ்.எம்.பழனிச்சாமி, முன்னாள் சேர்மன் தங்கராஜ், கொண்டத்துக்காளியம்மன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம், ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்யம் மகராஜ்,வார்டு உறுப்பினர்கள் யுவராஜ்,முருகேஷ், குமார், ராசப்பன் மற்றும் அங்கன்வாடி ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மதுரையில் அங்கன்வாடி மையத்துக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் பீரோ-நாற்காலி வழங்கினர்.
    • சதீஷ்குமார், சதீஷ், விஜய் விக்கி, தளபதி ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    இளைய தளபதி நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று ஏழை, எளிய மக்க ளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    தொகுதி, பகுதி வாரியா கவும், கிராம பகுதிகளிலும் ஏழை, எளிய மக்களுக்கு நிர்வாகிகள் இனிப்புகள், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி பொது மக்களுக்கு நல உதவிகளை மக்கள் இயக்க நிர்வாகிகள் வழங்கினர்.

    உசிலம்பட்டி நகர தலைவர் எஸ்.ஓ.பிம்.விஜய் ஏற்பாட்டில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி பகுதிகளில் மக்கள் இயக்க கிளை திறப்பு விழா நடந்தது. தெற்கு மாவட்ட பொருளா ளர் விக்கி ஏற்பாட்டில் மதுரை வடக்கு மாசி வீதி யில் அன்னதானம் வழங்கப் பட்டது.

    திருப்பரங்குன்றம் கைத்தறி நகர் பகுதியில் அமைந்துள்ள மனநிலை வளர்ச்சி குன்றியோருக்கான காப்பகத்தில் கைத்தறிநகர் சூர்யா விஜய் ஏற்பாட்டில் அன்னதான விழா நடந்தது.

    மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.தங்கப்பாண்டி தலைமையில் மதுரை மாவட்டம் கொடிமங்கலம் பகுதியில் உள்ள அங்கன் வாடி மையத்தில் படித்து வரும் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.

    மேலும் அங்கன்வாடி மையத்திற்கு தேவையான பீரோ மற்றும் நாற்காலி களையும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சி யில் நிர்வாகிகள் ஷாம், திலகர், சதீஷ்குமார், சதீஷ், விஜய் விக்கி, தளபதி ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலம் அருகே அங்கன்வாடி சிறுவர்களிடம் தங்க நகைகள் திருடப்பட்டதாக உதவியாளர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே லாலாபுரத்தை சேர்ந்தவர் ஜெயராமன். ஆடு மேய்த்து வருகிறார். இவரது மனைவி வைஜெயந்தி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அவர்கள் அங்குள்ள நடுநிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் அங்கன்வாடியில் படிக்கின்றனர். சம்பவத்தன்று அவர்களை பள்ளியில் இருந்து ஜெயராமன் வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது சிறுவனின் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்க தாயத்து காணாமல் போய் இருந்தது. வழியில் விழுந்திருக்கலாம் என நினைத்த ஜெயராமன் தேடிப்பார்க்க சென்றார்.

    அப்போது அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது அதே அங்கன்வாடியில் படிக்கும் முத்துமலை லட்சுமி மகன் முத்துவேல், கண்மணி செல்வன் மகன் வருண்பிரகாஷ், சங்கரேஸ்வரியின் மகள் கவுசிகா ஆகியோரின் தாயத்தும் காணாமல் போய் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சந்தேகமடைந்த அவர்கள் அங்கன்வாடி உதவியாளராக பணிபுரியும் பள்ளப்பசேரியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி தேவியிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதைத்தொடர்ந்து வில்லூர் ேபாலீஸ் நிலையத்தில் ஜெயராமன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.9.8 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
    • முடிவில் ஊராட்சி செயலாளர் பிச்சை நன்றி கூறினார்.

    கபிஸ்தலம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே திருவை காவூர் ஊராட்சி, புதுகண்டி ப்படுகை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் 2019-20 ஆண்டுக்கான நிதியிலிருந்து ரூ.9.8 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவிறகு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரை ச்செல்வன் தலைமை தாங்கினார். முன்னதாக ஊராட்சி தலைவர் பவுனம்மாள் பொன்னுசாமி அனைவரையும் வரவேற்றார்.

    விழாவில் பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன், ஒன்றிய கவுன்சிலர் விஜயன், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமார், ஊராட்சி துணை தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    இதில் பாபநாசம் வடக்கு ஒன்றிய தி.மு.க. அவைத்த லைவர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன், ஹாஜா மைதீன், ஒன்றிய துணை செயலாளர்கள் பிரபாகரன், சரவணன், புதுகண்டி படுகை கிளை நிர்வாகிகள் மோகன், சுப்பிரமணியன், வினோத், ஒன்றிய பிரதிநிதி கருப்பூர் மகேஸ்வரன், இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகாலன், உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஊராட்சி செயலாளர் பிச்சை நன்றி கூறினார்.

    • முன்னதாக சிலம்பாட்ட போட்டியை தொடங்கி வைத்தார்.
    • சின்னையாபாளையம் பகுதியில் கழிவறைகளை திறந்து வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலைஞர் அறிவாலயம் அருகே 29-வது வார்டு ரெசிடென்ஸ் பங்களா சாலையில் அங்கன்வாடி செயல்பட்டு வந்தது. பழமை வாய்ந்த இந்த அங்கன்வாடியை புதுப்பித்து நவீன முறையில் கட்ட மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நடந்து முடிந்தன. இதையடுத்து இன்று அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி நவீன அங்கன்வாடியை திறந்து வைத்து பார்வையிட்டார். முன்னதாக அவர் அங்கன்வாடி அருகே சிலம்பாட்ட போட்டியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கன்வாடி அருகே சின்னையாபாளையம் பகுதியில் கழிவறைகளை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, மேத்தா, ரம்யா சரவணன், கவுன்சிலர் ஸ்டெல்லா நேசமணி, பகுதி செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ. 12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது.
    • 10 பேருக்கு பழங்குடியினர் இன வகுப்புச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.6.18 கோடி மதிப்பீட்டில் 26 புதிய பல்வேறு துறை சார்ந்த அரசு கட்டிடத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் திறந்து வைத்தனர்.

    அப்போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் ஊராட்சி விருச்சவனத்தில் ரூ.49.60 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழு பயிற்சி மைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

    ஆலக்குடி ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடமும், பிள்ளையார்பட்டி ஊராட்சி ஆபுசு நகரில் ரூ.15.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய குழந்தைகள் விளையாட்டு பூங்காவும், நீலகிரி ஊராட்சி பாரதி நகரில் ரூபாய் 40.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய குழந்தைகள் பூங்காவும், ராஜேந்திரம் ஊராட்சியில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது. ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் ராஜேந்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடமும், மானாங்கோரை ஊராட்சியில் ரூ. 38 லட்சம் மதிப்பீ ட்டில் துணை வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடமும், ரூ. 23.56 லட்சம் மதிப்பீட்டில் மானாங்கோரை ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடமும், ரவுசப்பட்டி ஊராட்சியில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடமும் திறக்கப்பட்டது.

    இதேபோல் ஒரத்தநாடு வட்டம் காட்டுக்குறிச்சி ஊராட்சியில் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் உள்பட பல்வேறு புதிய கட்டிடங்கள் என மொத்தம் ரூ.6.18 கோடி மதிப்பீட்டில் 26 புதிய கட்டிடம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ. 58 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 64 பயனாளிகளுக்கும் , முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 5 நபர்களுக்கும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பூதலூர் வட்டம் புதுக்குடி வடபாதி கிராமத்தில் வசிக்கும் 10 நபர்களுக்கு பழங்குடியினர் இன வகுப்புச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் வளர்ச்சி ஸ்ரீகாந்த், எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், அண்ணாதுரை, அசோக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் பழனிவேல் தஞ்சாவூர் (பொ), பிரபாகர் (பட்டு க்கோட்டை), கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் தமிழ்ச்செல்வன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜேஸ்வரி, செயற்பொறியாளர் செல்வராஜ், செயற்பொறியாளர் நாகவேலு, மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஒன்றிய குழு தலைவர்கள் வைஜெந்தி மாலா, பார்வதி சிவசங்கர் , செல்வம் சௌந்தர்ராஜன், சசிகலா ரவிசங்கர், முத்துமாணிக்கம், அமுதா செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அங்கன்வாடி மையங்களுக்கு மின் கட்டணத்தை அரசு செலுத்த வேண்டும்.
    • மகப்பேறு விடுப்பு காலத்தை பிற துறையில் வழங்குவது போல் ஒரு வருடம் வழங்க வேண்டும்.

    திருவாரூர்:

    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் முதற்கட்ட போராட்டமாக மாநிலம் தழுவிய தொடர் காத்திருப்பு போராட்டம் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முன்னுரிக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த தொடர் காத்திருப்பு போராட்டம் மாவட்ட தலைவர் தவமணி தலைமையில் நடைபெற்று வருகிறது.

    இதில் குழந்தைகளின் நலன் கருதியும் வெயிலின் தாக்கத்தையும் தற்போது பரவிரும் காய்ச்சலையும் கருத்தில் கொண்டு கோடை விடுமுறை அளித்திட வேண்டும்.

    காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் பிரதான அங்கன்வாடி மையங்களை மினி மையமாக்குவதையும் குறு மையத்தை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும்.

    அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதிய வழங்கிட வேண்டும். குறுமைய ஊழியர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    10 ஆண்டுகள் பணி முடித்து தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு உடனடியாக பதவிய உயர்வு வழங்க வேண்டும்.

    பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.

    மருத்துவ காப்பீடு தொகை மருத்துவ செலவுகளுக்கு ஏற்ப முழுமையாக வழங்கிய வேண்டும் அங்கன்வாடி மையங்களுக்கு மின் கட்டணத்தை அரசு செலுத்த வேண்டும். மகப்பேறு விடுப்பு காலத்தை பிறத் துறையில் வழங்குவது போல் ஒரு வருடம் வழங்கிட வேண்டும்.

    இவைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த காத்திருப்பு போராட்டத்தில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

    மேலும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • புதிதாக கட்டப்படவுள்ள அங்கன்வாடி கட்டிடத்திற்கு பூமி பூஜை நடைப்பெற்றது.
    • பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின் நிலையம் சார்பில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 16வது வார்டு எம்.என் குப்பம் பகுதியில், 18 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்ட உள்ளது.

    அதற்கான பூமி பூஜை பேரூராட்சி தலைவர் யுவராஜ் தலைமையில் போடப்பட்டது. இதில் அப்பகுதி மக்கள் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதில் 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிவகாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஸ்ரீதர் பேசினார். இதில் 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    ×