search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறப்பு"

    • இன்று காலை ஒரு ஆண் யானை இறந்து கிடப்பதாக போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
    • யானை எப்படி இறந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் மான், கரடி, செந்நாய்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. மேலும் இந்த பகுதிகளில் யானைகள் அதிகளவில் வசித்து வருகிறது. இந்த பகுதியில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறுவது வழக்கம்.

    இந்நிலையில் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் இன்று காலை ஒரு ஆண் யானை இறந்து கிடப்பதாக போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனத்துறையினர் பர்கூர் வனப்பகுதி கோவில் நத்தம் 2-வது பீட்டுக்கு உட்பட்ட செங்குளம் வனப்பகுதிக்கு சென்றனர்.

    அப்போது அந்த பகுதியில் ஒரு ஆண் யானை இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் அந்த பகுதியில் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் அந்த யானை எப்படி இறந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் பர்கூர் தேவர்மலை கால்நடை மருத்துவர்கள் பரத் மற்றும் சதாசிவம் ஆகியோரும் யானையை பிரேத பரிசோதனை செய்வதற்காக வனப்பகுதிக்கு சென்றனர்.

    இதை தொடர்ந்து இன்று இறந்த கிடந்த யானை பிரேத பரிசோதனை செய்யபடுகிறது. அதன் பிறகு தான் அந்த யானை எப்படி இறந்தது என்பது தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • இறந்து கிடந்த வாலிபர் உடல் அருகே மது பாட்டில்கள் சிதறி கிடந்தன.
    • இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த நத்தக்கடையூர் செல்லும் வழியில் கண்ணமாபுரம் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு தோட்டத்தில் இன்று காலை சுமார் 38 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

    இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இறந்து கிடந்த வாலிபர் உடல் அருகே மது பாட்டில்கள் சிதறி கிடந்தன.

    நேற்று இரவு அந்த வாலிபர் மற்றும் அவருடன் வந்த சிலர் தோட்டத்தில் வைத்து மது அருந்தி இருக்கலாம் என்றும் இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அந்த வாலிபர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

    இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    அவரது உடலை மீட்ட அரச்சலூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த அரச்சலூர் போலீசார் அந்த பகுதியில் பொருத்த ப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வனப்பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க மக்னா யானை இறந்து கிடப்பதை கண்டு பிடித்தனர்.
    • யானையின் உடலை வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் உடற் கூறு ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட எக்கத்தூர் வனப்பகுதி கச்சப்பள்ளம் என்ற இடத்தில் வனக்காப்பாளர் அர்த்த நாரீஸ்வரன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியதை அறிந்த வனத்துறை ஊழியர்கள் ஏதாவது வனவிலங்குகள் இறந்து கிடக்கிறதா என தேடி பார்த்தனர். அப்போது வனப்பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க மக்னா யானை இறந்து கிடப்பதை கண்டு பிடித்தனர்.

    இது குறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பெயரில் கடம்பூர் வனச்சரக அலுவலர் (பொறுப்பு) மாரியப்பன், வன குழு மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் முன்னிலையில் யானையின் உடலை வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் உடற் கூறு ஆய்வு மேற்கொண்டார்.

    இதன் முடிவில் தான் யானை எவ்வாறு இறந்தது தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • காருக்குள் பேராசிரியர் இறந்து கிடந்தார்.
    • கிழக்கு போலீஸ் நிலையத்தில் சசிகலா புகார் கொடுத்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் கண்ணன்(வயது44). இவர் ஆலங்குளத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்தார். இவரது மனைவி சசிகலா மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்க்கிறார். கண்ணனுக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த சில மாதங்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். சம்வத்தன்று காலை 8 மணிக்கு வேலைக்கு சென்றார். மனைவி 10 மணியளிவில் செல் போனில் அழைத்தபோது உடல்நிலை சரியில்லை எனவும், அதனால் விடுமுறை எடுத்து வீட்டிற்கு வந்து கொண்டிருப்ப தாகவும் கூறி உள்ளார். மாலையில் மனைவி மற்றும் மகன் வீட்டிற்கு வந்தபோது கணவர் வீட்டில் இல்லை.

    ஆனால் செட்டில் கார் நின்றுகொண்டிருந்தது. சந்தேகமடைந்த மனைவி அருகில் சென்று பார்த்தபோது முன்கதவு பூட்டப்படாமல் சாத்தி யிருந்தது. கண்ணன் ஸ்டேரிங்கில் சாய்ந்தபடி கிடந்தார். சாவி ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்தது. ஏ.சி.யும் ஓடிக்கொண்டு இருந்தது. பதட்டமடைந்த மனைவி கணவரை எழுப்பி பார்த்தார். ஆனால் அவர் பேச்சு மூச்சின்றி கிடந்தார்.

    உடனடியாக அவரை ஆம்புலன்சு மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி பரிந்துரைத்தனர். அங்கு கொண்டு சென்றபோது பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் சசிகலா புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரேத பரிசோதனைகளின் முடிவில் புலிகளின் உடல் உள்ளுறுப்புகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு நச்சுயியல் ஆய்வுக்கு அனுப்பப்படும்.
    • ஒரே மாதத்தில் 6 புலிகள் பலியான சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஊட்டி:

    ஊட்டி தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட எமரால்டு நேருநகர் பாலத்தில் இருந்த அவலாஞ்சி அணை உபரி நீர் வாய்க்கால் அருகே 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக எம்ரால்டு பீட் வனப்பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து நீலகிரி ஊட்டி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் கவுதம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்கு ஒரு புலி தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தது. மற்றொரு புலி நீரோடைக்கரையில் சடலமாக கிடந்தது. அவற்றை வனத்துறையினர் மீட்டு ஆய்வு செய்தனர்.

    இதில் அவை பெண் புலிகள் என்பதும், உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதும் தெரிய வந்தது. இறந்து கிடந்த புலிகளின் உடம்பில் காயங்கள் எதுவும் இல்லை. எனவே அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டதால் பலியாகவில்லை என்று வனத்துறையினர் கருதுகின்றனர்.

    அவலாஞ்சி வனப்பகுதியில் மர்மமாக இறந்து கிடக்கும் 2 புலிகளுக்கும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டிதலின்படி இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதில் 3 வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் 2 கால்நடை மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    பிரேத பரிசோதனைகளின் முடிவில் புலிகளின் உடல் உள்ளுறுப்புகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு நச்சுயியல் ஆய்வுக்கு அனுப்பப்படும். அதன்பின்னரே புலிகள் இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    நீலகிரி வனப்பகுதியில் புலிகள் சாவு தொடர்கதையாக நீடித்து வருகிறது. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிறியூர் வனப்பகுதியில் பிறந்து 2 வாரங்களே ஆன 2 புலிக்குட்டிகள் இறந்து கிடந்தன. அங்கு உள்ள மற்றொரு இடத்தில் மேலும் ஒரு புலி செத்து கிடந்தது.

    நடுவட்டம் தேயிலை தோட்டத்தில் 7 வயதான புலி இறந்து கிடந்த நிலையில் அவலாஞ்சி வனப்பகுதியில் தற்போது மேலும் 2 புலிகளின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 6 புலிகள் பலியான சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்கு வேட்டைக்காரர்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அவர்கள் காட்டு விலங்குகளை கொன்று அவற்றை ஊருக்குள் எடுத்து சென்று விற்பனை செய்து வருகின்றனர். புலியின் தோல், பற்கள் ஆகியவை மதிப்புவாய்ந்தது. எனவே வனவிலங்கு வேட்டைக்காரர்கள் வியாபார நோக்கத்துக்காக புலிகளுக்கு விஷம் வைத்து கொன்று இருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் உள்ளது.

    புலிகள் இறப்பு தொட ர்பாக உண்மை நிலையை கண்டறிய வனத்துறை சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஊட்டி வனக்கோட்ட தலைமையிட மாவட்ட அலுவலர் தேவராஜ் தலைமையில் ஊட்டி வடக்கு வனசரக அலுவலர் மற்றும் ஊட்டி தெற்கு வனசரக அலுவலர் (பொறுப்பு) சசிகுமார் மேற்பார்வையில் வனவர்கள், வனக்கா ப்பாளர், வனகாவலர்கள் என 20 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    அவர்கள் சம்பவ இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா அல்லது எப்படி இறந்தது என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

    • வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்றபோது மோட்டார் சைக்கிளில் தப்பிஓடிய 3 பேரும் சிறிது தூரத்தில் தவறி விழுந்தனர்.
    • வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் கானட்டி முனியப்பன் கோவில் அருகில் வனக் காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை வனத்துறையினர் நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் நிற்காமல் சென்றனர். அவர்களில் ஒருவர் நெற்றியில் டார்ச் லைட் மாட்டி இருந்தார். மற்ற 2 பேரில் ஒருவர் கையில் நாட்டுத் துப்பாக்கியும், மற்றொருவர் வாகனத்தை ஓட்டியபடியும் இருந்தார்.

    இதையடுத்து வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்றபோது மோட்டார் சைக்கிளில் தப்பிஓடிய 3 பேரும் சிறிது தூரத்தில் தவறி விழுந்தனர்.

    இந்நிலையில் தவறி விழுந்தவர்களில் ஒருவர் மட்டும் வனத்துறையினரிடம் பிடிபட்டார்.

    வனத்துறையினர் பிடித்த நேரத்தில் அந்த நபர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கிய அவருக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நாட்றாம்பாளையத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்தனர்.

    அவர்கள் பரிசோதித்த போது அவர் இறந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கும், அஞ்செட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் இறந்தவர் பெயர் வெங்கடேஷ் (வயது 48), கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா சேசுராஜபுரம் அருகே உள்ள அட்டப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், முயல் வேட்டைக்காக அங்கு வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் உடலை தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    இந்நிலையில் வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் அட்டப்பள்ளம் அருகே பூமரத்துகுழி என்னும் இடத்தில் திரண்டனர்.

    அவர்கள் அங்குள்ள வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடியை சூறையாடி தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் வெங்கடேஷின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள 2 பேரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, அட்டப்பள்ளம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.
    • தீ விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த மேட்டுநாசுவம் பாளையம், பச்சபாலி ஆண்டிகாடு தோட்டம் பகுதியில் முத்துச்சாமி (45) என்பவர் கோழி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த கோழிப்பண்ணையில் ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகள் வளர்த்து வந்தார். இதற்காக தகர செட்டு கூரை அமைத்திருந்தார்.

    இந்நிலையில் இன்று காலை முத்துசாமி கோழி பண்ணைக்கு வந்து கோழிகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் தகரசெட்டால் வேயப்பட்ட கூரைகள் தீப்பிடித்து முழுவதும் எரிந்தது.

    இது குறித்து பவானிக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் எரிந்து பரிதாபமாக இறந்தன.

    இந்த விபத்தில் ரூ.18 லட்சம் மதிப்பிலான கோழி பண்ணை செட்டுகள், ரூ.5 லட்சம் மதிப்பிற்கான கோழிக்குஞ்சுகள் என மொத்தம் ரூ.23 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக உரிமையாளர் தெரிவித்தார்.

    இந்த தீ விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தையின் உடலை கையில் வைத்துக்கொண்டு பஸ்நிலைய பிளாட்பாரத்தில் அமர்ந்த படி அலறினார்.
    • சம்பவத்தால் நள்ளிரவு கோயம்பேடு பஸ்நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    போரூர்:

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சூர்யா. இவரது மனைவி சிவகன்னி. இவர்களுக்கு ரம்யா என்கிற ஒரு வயது பெண் குழந்தை இருந்தது.

    குழந்தை ரம்யாவிற்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது குழந்தையின் 2 சிறுநீரகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    சிகிச்சைக்கு பணம் இல்லாமல் வறுமையில் தவித்து வந்த சூர்யா கூலிவேலைக்காக தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னை வந்தார். பின்னர் அவர்கள் குடும்பத்துடன் கோயம்பேடு மாநகர பஸ் நிலைய வளாகத்தில் உள்ள பிளாட்பாரத்தில் தங்கி இருந்தனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு குழந்தை ரம்யாவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக இறந்து போனது.

    இதனை கண்ட தாய் சிவகன்னி கதறி துடித்தார். அவர் இறந்த தனது குழந்தையின் உடலை கையில் வைத்துக்கொண்டு பஸ்நிலைய பிளாட்பாரத்தில் அமர்ந்த படி அலறினார். அங்கிருந்த அவரது கணவர் சூர்யா என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.

    இதனை கண்ட பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் குழந்தை ரம்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக சூர்யா மற்றும் அவரது மனைவி சிவகன்னி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் சென்னை வந்ததாகவும் என்ன செய்வது என்று தெரியமால் பஸ்நிலைய பிளாட்பாரத்தில் தங்கி வேலைக்கு சென்று வந்ததாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். இச்சம்பவத்தால் நள்ளிரவு கோயம்பேடு பஸ்நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    • ரியல்எஸ்டேட் புரோக்கர் திடீரென இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணாநகர் பகுதியை சேர்ந்தர் பாலமுருகன்(45). இவருக்கு திருமணமாகவில்லை. வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி புரோக்கர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது அறையில் பேச்சு மூச்சில்லாமல் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலமுருகனின் சகோதரர் கோவிந்தராஜ் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.26½ லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
    • சார்பு நீதிபதி பசும்பொன் சண்முகையா ஆகியோர் முன்னிலையில் இந்த தொகை உரியவர்களிடம் வழங்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று லோக் அதாலத் சிறப்பு முகாம் நடந்தது. இதில் தீர்வு காணப்படாத வழக்குகளுக்கு இருதரப்பினரிடமும் பேசி முடித்து வைக்கப்பட்டது.

    அதன்படி சாலை விபத்தில் இறந்த ஒருவரின் குடும்பத்திற்கு ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் பேசி அந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.

    மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம், மாவட்ட நீதிபதிகள் ராஜவேல், ரஜினி, மக்கள் நீதிமன்ற நீதிபதி தமிழரசன், சார்பு நீதிபதி பசும்பொன் சண்முகையா ஆகியோர் முன்னிலையில் இந்த தொகை உரியவர்களிடம் வழங்கப்பட்டது.

    • கவுன்சிலரால் வளர்க்கப்பட்ட மருது என்ற காளை பாம்பு கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தது
    • கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலியுடன் காளையின் உடல் அடக்கம்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவுக்கு உட்பட்ட புதுக்கோ ட்டை விடுதி ஊராட்சியை சேர்ந்தவர் உஷா செல்வம். இவர் மாவட்ட கவுன்சிலராக உள்ளார்.இந்நிலையில் இவர் மருது என்ற ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வள ர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த காளை பல்வேறு ஜல்லிக்கட் டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடி வந்துள்ளது.இந்நிலையில் நேற்று இரவு மருது என்ற காளையை பாம்பு கடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மருது காளை உயிரிழந்த து. இது காளை வளர்த்த உஷா செல்வம் மட்டுமின்றி அந்த கிராம ம க்கள் மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு பெரு ம் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த காளைக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி பின்னர் உரிய மரியாதை உடன் அந்த ஜல்லிக்கட்டு காளை உஷா செல்வம் வீட்டருகே நல்லடக்கம் செய்யப்பட்டது

    • ஏற்காடு பெட்பெட் ரோடு பகுதியில் பூசாரி தோட்டம் என்னும் தனியார் தோட்டத்தில் ஆண் மான் ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது.
    • மானை கைப்பற்றி ஏற்காடு சூழல் சுற்றுலா பூங்காவிற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைத்தார்.

    ஏற்காடு:

    ஏற்காடு வனப்பகுதியில் மான்கள். காட்டெருமை, குரங்கு போன்ற வனவிலங்குகள் இருக்கின்றன. தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில் ஏற்காடு பெட்பெட் ரோடு பகுதியில் பூசாரி தோட்டம் என்னும் தனியார் தோட்டத்தில் ஆண் மான் ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது. இதை தோட்டத்தில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்கள் பார்த்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.இதை தொடர்ந்து வனவர் சக்தி வேல் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மானை கைப்பற்றி ஏற்காடு சூழல் சுற்றுலா பூங்காவிற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைத்தார்.

    இது குறித்து ஏற்காடு வனக்காப்பாளர் பழனிவேல் கூறுகையில், இறந்த மானுக்கு சுமார் 4 வயது இருக்கும். மர்ம விலங்கு கடித்ததில் மான் இறந்துள்ளது. மர்ம விலங்கு வீடுகளில் வளர்க்கப்படும் நாயாக இருக்கலாம். எனி னும் கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தால் தான் அந்த மான் இறப்பு குறித்து தெரியவரும் என்றார்.

    ×