search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 226238"

    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    கன்னியாகுமரி:

    பள்ளம் கடற்கரை பகுதியில் இன்று காலை பெண் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது. இதை பார்த்த பொதுமக்கள் சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    கடற்கரை பகுதியில் பெண் பிணமாக கிடந்ததால் இது குறித்து கன்னியாகுமரி கடலோர காவல் படை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பலதா தலைமையிலான போலீசாரும் அங்கு வந்தனர். பிணமாக கிடந்தவர் 65 வயது மதிக்கத்தக்க பெண் என்பது தெரியவந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

    அவர் இன்று காலை கடலில் குளிக்கும் போது தவறி விழுந்தாரா? இல்லை தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிணமாக கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    • என்ஜின், 25 லிட்டர் டீசல் பறிமுதல்.
    • 5 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் 4-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

    வேதாரண்யம்:

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக தங்கு கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்ற மீனவர்களுக்கு கோடியக்கரை மீன்வள த்துறை அலுவலகத்தில் இருந்து 'வாக்கி- டாக்கி' மூலம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    எச்சரிக்கையை மீறி அதிராம்பட்டினத்தில் இருந்து செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கோடிய க்கரைக்கு வந்தனர்.

    இந்த படகை மீன்வளத்துறை ஆய்வாளர் நடேசராஜா, மீன்வள மேற்பார்வையாளர் விக்னேஷ் ஆகியோர் மற்றொரு படகில் கடலில் விரட்டி சென்று மடக்கி பிடித்து கரைக்கு கொண்டு வந்து படகை பறிமுதல் செய்தனர்.

    படகில் இருந்து என்ஜினையும், 25 லிட்டர் டீசலையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் அறிவிப்பை மீறி கடலுக்கு சென்ற மேலும் 2 மீனவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    மீன்வளத்துறை அறிவிப்பை தொடர்ந்து வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடற்கரையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்பதை அறிவிக்கும் வகையில் சிவப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5 ஆயிர த்துக்கும் அதிகமான மீனவர்கள் இன்று 4-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

    அங்கு கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் தங்கள் படகு களை பாதுகா ப்பான இட ங்களில் நிறுத்தி உள்ளனர்.

    • திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல முடியவில்லை
    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தின மும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி யில் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகா லையில் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலை யில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத் துடன் பயணம் செய்து விவே கானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர். திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    மேலும் கன்னியாகுமரி யில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமரா ஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற் கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தளங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்க ரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கட லோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண் காணிப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.

    • இடர்பாடுகள் ஏற்படும்போது இயற்கை அரணாக விளங்கும் பனைமரங்களை உருவாக்கும் முயற்சி.
    • நகராட்சி மூலம் கடற்கரை முழுவதும் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் புயல், வெள்ளம், மற்றும் பல்வேறு இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது இயற்கை அரணாக விளங்கும் பனைமரங்களை உருவாக்கும் முயற்ச்சியில் 20 ஆயிரம் பனை விதைகளை நடும்பணியை துவக்கினர்

    நிகழ்ச்சியில் பனைவிதை நடும்பணியினை நகராட்சி ஆணையர் ஹேமலாதா துவக்கிவைத்தார் நிகழ்ச்சியில்நகர் மன்ற தலைவர் புகழேந்தி துணை தலைவர் மங்களநாயகி நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹீம்,

    ஓவர்சியர் குமரன் மற்றும்நகர் மன்ற உறுப்பினர்கள் தேத்தாகுடி சாரதா மெட்ரிக் பள்ளி மாணவ - மாணவிகள் கலந்துகொண்டனர். வேதாரண்யம் பகுதியின் சுற்றுசூழல் இயற்கை வளங்களை மேம்படுத்தும் வகையில் நகராட்சி மூலம் கடற்கரை முழுவதும் இந்த பணி மேற்கொள்ளபட்டது என நகராட்சி ஆணையர் ஹேமலாதா தெரிவித்தார்.

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
    • பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் என். எஸ். எ.ஸ் மற்றும் என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை யொட்டி கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி, கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ், தமிழ்நாடு கடற்கரை தூய்மை இயக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கன்னியா குமரி கடற்கரையில் மெகா தூய்மை பணி நடந்தது.

    இந்த தூய்மைப்பணி தொடக்க விழா கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் நடந்தது. குமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் சீதாராமன் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கடற்கரை தூய்மை பணி முகாமை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரி போலீஸ் டி. எஸ். பி. ராஜா, சுற்றுச்சூழல் கோட்ட பொறுப்பாளர் கண்ணன், கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஸ், அகஸ்தீஸ்வரம் விவே கானந்தா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராம்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் முத்துசாமி நன்றி கூறினார்.

    அதன்பிறகு கன்னியா குமரி திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் தூய்மை பணி நடந்தது. இதில் பள்ளி, கல்லூரிமாணவ- மாணவிகள் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் என். எஸ். எ.ஸ் மற்றும் என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டு கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பை கூழங்களை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    • வடக்குசல்லிக்குளம் கடற்கரை பகுதியில், சுமார் 1 1/2 அடி உயரமுள்ள சுருங்கல்லால் ஆன முருகன் சிலை ஒன்று கரை ஒதுங்கியது.
    • கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது சிறிது உடைந்திருந்ததால் சிலையை கடலில் விட்டு சென்றர்களா.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு, வடக்குசல்லிக்குளம் கடற்கரை பகுதியில், சுமார் 1 1/2 அடி உயரமுள்ள சுருங்கல்லால் ஆன முருகன் சிலை ஒன்று கரை ஒதுங்கியது.

    இதை பார்த்த வடக்குசல்லிக்குளத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் கொடுத்த தகவலின் பேரில், வேட்டைக்காரனிருப்பு கிராம உதவியாளர்ரவி, முருகன் சிலையை கைப்பற்றி வேட்டைக்காரனிருப்பு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று வைத்து தாசில்தார் ரவிச்சந்திரனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    இந்த சிலையை யாராவது விட்டு சென்றர்களா? இல்லை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது சிறிது உடைந்திருந்ததால் சிலையை கடலில் விட்டு சென்றர்களா? என விசாரித்து வருகின்றனர்.

    • காலை கடற்கரை ஓரமாக மர்ம பொருள் கடல் அலையில் அடித்து வந்து கரை ஒதுங்கியது.
    • கடலூர் கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிலை குறித்து விசாரணை நடத்தி பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே தாழங்குடா மீனவ கிராமம் உள்ளது. இன்று காலை கடற்கரை ஓரமாக மர்ம பொருள் கடல் அலையில் அடித்து வந்து கரை ஒதுங்கியது. அப்போது அவ்வழியாக சென்ற மீனவர்கள் அதனை எடுத்து பார்த்தபோது பழங்காலத்து மரச்சிலையாக இருந்தது‌. மேலும் அந்த சிலை ஆங்கிலேயர் போலீஸ் மரசிலை என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கடலூர் கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிலை குறித்து விசாரணை நடத்தி பறிமுதல் செய்தனர்.

    • புதுக்கடை அருகேயுள்ள கடற்கரை பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக தகவல்
    • புதுக்கடை அருகேயுள்ள காப்புகாடு அரிசி குடோனில் பறிமுதல் செய்யப்பட அரிசி ஒப்படைப்பு.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகேயுள்ள கடற்கரை பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக புதுக்கடை தனிப்பிரிவு ஏட்டு சுனில் ராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்பெக்டர் செல்லதுரை, ஏட்டு ரமேஷ் ஆகியோர் இனயம் புத்தன்துறை பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதி 6-ம் அன்பியத்தை சேர்ந்த சேவியர் (வயது 49), 2-ம் அன்பியத்தை சேர்ந்த ஜெரால்டு மனைவி ஜெயந்தி (50) ஆகியோர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 1.5 டன் ரேசன் அரிசியை கைப்பற்றி போலீஸ் நிலையம் அனுப்பி வைத்தனர்.

    மேலும் ராமன்துறை பகுதியில் ஒரு பாழடைந்த வீட்டில் 2 டன் அரிசி பதுக்கி வைத்தி ருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டது. விசார ணையில் அரிசியை பதுக்கியது அதே பகுதி 2-ம் அன்பியத்தை சேர்ந்த ஜெரோண் மனைவி ஸ்டான்லி (57) என்பவர் எனவும் தெரிய வந்தது. இரண்டு இடங்களில் இருந்து பறிமுதல் செய்த இந்த அரிசிகள் கேரளாவுக்கு கடத்த பதுக்கி யது தெரிய வந்தது. போலீ சார் மொத்தம் 3½ டன் அரிசியையும் மாவட்ட கடத்தல் தடுப்பு பிரிவு போலீீசாரிடம் ஒப்ப டைத்த னர். அவர்கள் புதுக்கடை அருகேயுள்ள காப்புகாடு அரிசி குடோ னில் ஒப்ப டைத்தனர்.

    • மழையில் நனைந்து கொண்டே ஒற்றை காலில் நின்று நடனம் ஆடினார்.
    • மழையில் நனைந்தபடியே மதில் சுவரில் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரம் தியானம் செய்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. இந்தமழையினால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா தளங்களை சுற்றி பார்க்க முடியாமல் தாங்கள் தங்கி இருக்கும் லாட்ஜ்களில் உள்ள அறைகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

    ஆனால் இந்த கொட்டுகிற மழையிலும் 10 வயது சிறுவன் ஒருவன் நேற்று மாலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் கடற்கரையில் உள்ள மதில் சுவரில் ஏறி நின்று யோகாசனம் செய்தார். அப்போது அந்த சிறுவன் கொட்டுகிற மழையையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடியே மதில் சுவரில் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரம் தியானம் செய்தார்.

    அதன் பிறகு மழையில் நனைந்து கொண்டே ஒற்றை காலில் நின்று நடனம் ஆடினார். இந்த காட்சி பார்ப்பவர்கள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் பலர் அந்த சிறுவனின் சாகச காட்சிகளை தங்களது செல்போன்களில் படம் பிடித்துக் கொண்டே இருந்தனர். அந்த சிறுவனும் மழை நிற்கின்றவரை அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது யோகாசனசாகசங்களை செய்து கொண்டே இருந்தார்.

    • புனித நீராட வரும் பக்தர்கள் மூதாதயர்களுக்கு திதி கொடுப்பதற்கு வசதியாக அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளிட்ட தர்ப்பண மண்டபம் கட்டப்பட்டது.
    • தர்ப்பண மண்டபத்தை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் நகராட்சியின் சார்பில் 2020-22 ஆண்டு ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.69 லட்சத்தில் தை அமாவாசை, ஆடி அமாவாசை காலங்களில் புனித நீராட வரும் பக்தர்கள் மூதாதயர்களுக்கு திதி கொடுப்பதற்கு வசதியாக அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளிட்ட தர்ப்பண மண்டபம் கட்டப்பட்டது.

    தர்ப்பண மண்டபத்தை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பவுலின், நகர மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் இப்ராஹிம், ஒப்பந்தக்காரர் அன்பழகன், தாசில்தார் ரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராமலிங்கம், பாஸ்கரன், நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் வரும் 31-ந் தேதி நள்ளிரவுடன் தடைக்காலம் நீங்குகிறது
    • இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் விசைப்படகினர் படகுகளை பழுது பார்க்கின்றனர்

    கன்னியாகுமரி:

    மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது.குமரி மாவட்டத்தில் இந்த தடைக் காலம் 2 பருவ காலமாக உள்ளது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி, சின்ன முட்டம் பகுதியில் ஆண்டு தோறும் ஏப்ரல் 15ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை தடைக்காலம் இருக்கும்.

    மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங் காய்பட்டணம், கொல் லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமங்களில் கடந்த ஜூன் 1-ந் தேதி தடைக்காலம் தொடங்கியது. இந்த தடை வரும் ஜூலை 31 -ந் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.

    குளச்சல் பகுதி யில் சுமார் 300 விசைப்படகு கள் உள்ளன.இந்த தடைக்காலத்தில் விசைப்படகினர் தங்கள் படகுகளில் என்ஜின்களை பழுது பார்ப்பது, வர்ணம் பூசுவது, பேட்டரி மற்றும் ஓயரிங், வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒரு விசைப்படகு ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும்.ஆழ்கடல் பகுதியில்தான் உயர் ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை விசைப்படகில் எடுத்து செல்வர்.

    குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் வரும் 31-ந் தேதி நள்ளிரவுடன் தடைக்காலம் நீங்குகிறது.தடை நீங்க இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் விசைப்படகினர் படகுகளை பழுது பார்த்து, வலைகளை பின்னும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தவிர மீன்பிடி உபகரணங்களையும் தயார் செய்து வருகின்றனர்.

    • விழிஞ்ஞம் பகுதியில் தனது காதலியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்தவர்
    • பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் இரயுமன் துறை கடல் பகுதியில் இன்று காலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் குளச்சல் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை யடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பிணமாக கிடந்தவர் சேர்ந்த கிரண் (வயது 25) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் பகுதியில் தனது காதலியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

    போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கிரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ×