search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கிரமிப்புகள்"

    • நகரின் முக்கிய இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன.
    • மேம்பாலத்தின் அடியில் சமூக விரோதிகள் பதுங்குவதை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை மாநகரம் தமிழகத்தின் மையப்பகுதியாக அமைந்து உள்ளது. தினமும் மதுரைக்கு லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ,அழகர் கோவில், அரசு மருத்துவமனை, மதுரை ஐகோர்ட்டு உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    மதுரை மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்படாமல் உள்ளது.பல சாலைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன.

    நகரின் முக்கிய இடங்க ளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. அவைகள் பெயரளவில் அகற்றப்படுகின்றன. பின்னர் மீண்டும் ஆக்கிரமிப்புகள் வந்து விடுகின்றன. இதற்கு சில அதிகாரிகளும், அரசி யல்வாதிகளும் உடந்தை என்று கூறப்படுகிறது.

    மேம்பால வசதி குறை வாக உ ள்ளதால் தினமும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது. சிக்னல்களில் பொதுமக்கள் விதிமுறைகளை கடை பிடிக்காமல் சென்று வரு கின்றனர். இவர்களை கண்டுகொள்ளாத போக்கு வரத்து போலீசார் சில இடங்களில் சோதனை என்ற பெயரில் அபராதம் விதிக்கின்றனர்.

    முக்கிய சாலைகளை கடக்கும் இடத்தில் போலீசார் பொதுமக்களுக்கு உதவி செய்ய வருவதில்லை.சீறிப்பாய்ந்து செல்லும் வாகனங்களுக்கிடையே வயதானவர்கள் சாலைகளை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    மாநகராட்சி பகுதியில் ஆதரவற்றவர்கள், முதிய வர்கள் வசித்து வரு கின்றனர். அவர்கள் பாதுகாப்பாக வசிக்க எந்த நடவடிக்கையும் இல்லை. அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதியும் கிடைப்பதில்லை.

    ஒரு நகரின் வளர்ச்சி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தொடங்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மக்கள் சேவையில் ஆர்வம் காட்டாமல் இருப்பதை காண முடிகிறது. எனவே நகர வளர்ச்சியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    முக்கியமாக ஆக்கிரமிப்பு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். நகரில் சுகாதார பணிகளை இரவிலேயே செய்து எப்போதும் நகரம் சுத்தமாக இருக்கும் வகையில் பராமரிக்க வேண்டும். கொசு மருந்தடித்து கொசு தொல்லையை ஒழிக்க வேண்டும். மேம்பாலத்தின் அடியில் சமூக விரோதிகள் பதுங்குவதை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • நீலகண்டி ஊரணி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.200 லட்சம் மதிப்பீ ட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டிடம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது.செம்மங்குண்டு ஊரணியில் ரூ.103 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள நடைபாதை அமைப்பு உள்ளிட்ட மேம்படுத்தும் பணிகளும், முகவை ஊரணியில் ரூ.2.56 கோடி மதிப்பீட்டில் நடைபாதை, கைப்பிடி கம்பி, சுற்றுச் சுவர், தெரு விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள், கல் இருக்கை, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் அமைக்க ப்படவுள்ளது.இதற்கான பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டார்.

    தொடர்ந்து நீலகண்டி ஊரணியை பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை உடனடி யாக அகற்றி கரையில் போதுமான மரக்கன்றுகள் நட்டு தூய்மையாக வைத்துக் கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். இதேபோல் பல்ேவறு அரசு வளர்ச்சி திட்ட பணி களையும் கலெக்டர் ஆய்வு செய்தார்

    இந்த ஆய்வில், மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன், நகர் மன்றத் தலைவர் கார்மேகம், ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் சுரேந்திரன், ராமநாதபுரம் வட்டாட்சியர்கள் சுரேஷ்குமார், தமீம்ராஜா, ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவகப்பெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொட்டியம் பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன
    • நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் தேர்வுநிலை பேரூராட்சி 8-வது வார்டு பண்டிதர்த் தெருவில் நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்புகள் இருந்துள்ளது. இதை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கோரிக்கையை ஏற்று பேரூராட்சி கவுன்சிலர்கள் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்றினர். இதை தொடர்ந்து சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


    • வி.என்.எஸ். மார்க்கெட் பகுதி அமைந்துள்ள சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்காகவே அகலப்படுத்தப்பட்டுள்ளது.
    • ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகராட்சியின் கடைத்தெரு பகுதிகளில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டும் கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் இருந்ததால் கடைகளுக்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தி செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

    இதையடுத்து பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சௌந்தர்ராஜன், நகராட்சி தலைவர் சண்முகப்பிரியா தலைமையில் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பிரித்திவிராஜ் சவுகான் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமி ப்புகளை அதிரடியாக அகற்றினார்.

    குறிப்பாக பட்டுக்கோட்டை வி.என்.எஸ். மார்க்கெட் பகுதி அமைந்துள்ள சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்காகவே அகலப்படு த்தப்பட்டு, உயரபடுத்தப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. தற்போது அனைத்து ஆக்கிரமிப்புகளும் அதிரடியாக அகற்றப்பட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த ஆக்கிரமிப்புகள் இன்றோடு இல்லாமல் தொ டர்ந்து ஆக்கிரமிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

    • வருவாய் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோவில்வழியில் ஆய்வு நடத்தினர்.
    • நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்கள் அளவீடு செய்து எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளது

    திருப்பூர் : 

    திருப்பூர் தாராபுரம் ரோடு கோவில்வழி பஸ் நிலையம் நிழற்குடை அருகே குடியிருப்பு பகுதி, கடைகள் நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்பில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறைக்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் மனு அளித்திருந்தனர்.

    இதையடுத்து வருவாய் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோவில்வழியில் ஆய்வு நடத்தினர்.

    அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் அளித்த புகாரை தொடர்ந்து ஆவணங் களில் உள்ளவற்றுக்கு மாறாக ஏதேனும் குடியிருப்புகள் ஆக்கிரமிப்பில் உள்ளதா என்பது குறித்த ஆய்வு நடத்தப்பட்டது .நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்கள் அளவீடு செய்து எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளது.விரைவில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் என்றனர். 

    • அலங்காநல்லூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
    • அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் இருந்து பழைய காவல் நிலையம் வழியாக அய்யப்பன் கோவில் வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் இருந்து பழைய காவல் நிலையம் வழியாக அய்யப்பன் கோவில் வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. கடைகள், ஓட்டல்கள், வளையல், கறி, மருந்து, பலசரக்கு கடைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்பு தடுப்புகள், தாழ்வாரங்கள், வாசல்படிகளை ஏற்கனவே வருவாய், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் அளந்து குறியீடு செய்திருந்தனர்.

    அதன்படி, ஜே.சி.பி. மூலம் இடித்து அகற்றப்பட்டது. வாடிப்பட்டி உதவி கோட்ட பொறியாளர் ராதா முத்துக்குமாரி, உதவி பொறியாளர் வெங்கடேஷ் பாபு, மற்றும் வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனிருந்தனர். அலங்காநல்லூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

    • மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதாக புகார்
    • உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தகவல்

    நெமிலி:

    நெமிலி அடுத்த பரமேஸ்வர மங்களத்தில் தென்றல் நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    பல வருடங்களாக வசித்து வரும் இந்த பகுதியில் சிமெண்ட் சாலை வசதி இல்லை இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல தேங்கி இருக்கிறது.

    மேலும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா டெங்கு போன்ற விஷக் காய்ச்சல் பரவுகிறது. இந்த வழியாக ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி கல்லூரி வாகனங்கள் கூட செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்ப டுகின்றனர்.

    தென்றல் நகர் வரும் வழியில் நீர் நிலை கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் வழி குறுகலாக உள்ளது. எனவே நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நெமிலி பி.டி.ஓ. அலுவலகம் சென்று ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, துணை சேர்மன் தீனதயாளன் மற்றும் பி.டி.ஓ. சிவராமன் முன்னிலையில் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரியிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    • கழிவுநீர் ஓடைகளை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும்.
    • சாலையோரம் குப்பை கள் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் 15- வது வார்டு பகுதியில் மேயர் மகேஷ் தெரு, தெருவாக நடந்து ஆய்வு மேற்கொண்டார் .

    அவர் அந்த வார்டு பகுதியில் உள்ள ஹென்றி ரோடு, புது குடியிருப்பு, தேவ சகாயம் தெரு , ரேச்சல் தெரு, காமராஜபுரம், எம்.எஸ்.ரோடு, குமரி காலனி, பரமதெரு , புதுக்குடியிருப்பு, சாஸ்தான் கோவில்தெரு, டிஸ்டிலரி ரோடு , டிஸ்டிலரி அப்ரோச் ரோடு ஆகிய பகுதியில் ஆய்வு செய்தார். 

    ஆய்வின்போது வெட்டூர்ணி மடம் கால்வா யில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.கழிவுநீர் ஓடைகளை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். சாலையோரம் குப்பை கள் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் .

    மேலும் குப்பைகளை தரம்பிரித்து தூய்மை பணியாள ரிடம் வழங்க வேண்டும் எனவும் , ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது எனவும் பொதுமக்களிடம் கூறினார். பொதுமக்கள் தங்கள் வார்டு பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு கோரிக்கைகள் கொடுத்த னர்.

    அதனை மேயர் மகேஷ் வாங்கிக்கொண்டு விரைவில் செய்துகொடுக்கப்படும் என உறுதி அளித்தார் . ஆய்வின்போது நிர்வாக அதிகாரி ராமமோகன், மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. மாநகர செய லாளர் வக்கீல் ஆனந்த், துணை செயலாளர் வேல்முருகன்,கவுன்சிலர் லீலாபாய், பகுதி செயலாளர் ஷேக்மீரான் உள்பட பலர் உடன் சென்றனர்

    • திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக விவசாயிகள் வந்தனா்.
    • திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலங்களில் பலமுறை மனு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் தெற்கு அவிநாசிபாளையம் செங்காட்டுபாளையம் பகுதியில் பி.ஏ.பி. கிளை கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, நீா் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா் இல்லாததால் விவசாயிகள் உள்பட பலா் சிரமத்தை சந்தித்து வருகின்றனா் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் சாா்பில், திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலங்களில் பலமுறை மனு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இருப்பினும், உரிய நடவடிக்கை எடுக்காததால், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்துவதாக விவசாயிகள் சாா்பில் அறிவிக்கப்பட்டது.அதன்படி, திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக விவசாயிகள் வந்தனா்.

    இதற்கிடையே, போராட்டத்துக்கு வந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி, விவசாயிகளுடன் வட்டாட்சியா் கோவிந்தராஜ் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.இதில், பி.ஏ.பி. வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்பட்டு, விவசாயிகளுக்கு நீா் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தாா்.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட வந்த விவசாயிகள் கலைந்து சென்றனா்.

    • இந்த சந்தை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 260 கடைகள் உள்ளன. இதில் 130 கடைகள் தற்போது செயல்பட்டு வருகிறது. மற்ற கடைகள் காலியாக உள்ளன
    • காலையில் மாநகராட்சி அதிகாரிகள் கனகமூலம் சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வந்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரியில் கனகமூலம் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு 260 கடைகள் உள்ளன. இதில் 130 கடைகள் தற்போது செயல்பட்டு வருகிறது. மற்ற கடைகள் காலியாக உள்ளன.

    இந்த நிலையில் கனகமூலம் சந்தையில் வியாபாரிகள் தங்களது கடைக்கு முன் நடைபாதையில் மேற்கூரை அமைத்து காய்கறிகள் மற்றும் பொருள்களை அதில் வைத்து வியாபாரம் செய்து வருவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார்கள் வந்தன.

    இதைத் தொடர்ந்து கடைகளுக்கு முன் போடப்பட்டுள்ள மேற்கூரையை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளிடம் பலமுறை தெரிவித்தனர். ஆனால் வியாபாரிகள் அவற்றை அகற்றவில்லை. இதையடுத்து வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும் மேற்கூரை அகற்றப்படவில்லை.

    இந்த நிலையில் இன்று காலையில் மாநகராட்சி அதிகாரிகள் கனகமூலம் சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வந்தனர்.

    மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராம் மோகன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் ஞானப்பா, சுப்பையா சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர். அப்போது சந்தையின் ஒரு புறத்தில் இருந்த பொருட்களை மட்டும் வியாபாரிகள் மாற்றினார்கள்.

    மறுபுறத்தில் இருந்த பொருட்களை மாற்றவில்லை. அவர்கள் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் முதலில் சந்தையில் அமைக்கப்பட்டு இருந்த ஒரு செட் இடித்து அகற்றப்பட்டது. அதன்பிறகு கடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனர். ஆனால் வியாபாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற கொண்டு வந்திருந்த ஜே.சி.பி. எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து வியாபாரிகள் ஜே.சி.பி. எந்திரம் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

    இதைத் தொடர்ந்து நாகர்கோவில் டி.எஸ்.பி. நவீன் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நீடித்தது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    தொடர்ந்து அதிகாரிகளும், போலீசாரும் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள் தரப்பில் நாங்கள் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள மேல் கூரையின் கீழ் பொருட்கள் எதுவும் வைக்க மாட்டோம். அப்படி பொருட்கள் எதுவும் வைத்தால் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி மாநகராட்சி அதிகாரிகள் பொருட்களை எடுத்து செல்லுங்கள் ஆனால் மேற்கூரைகளை அகற்றக்கூடாது என்று கூறினார்கள்.

    இதையடுத்து அதிகாரிகள் இது தொடர்பாக மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேச முடிவு செய்யலாம் என்று தெரிவித்தனர்.இதை தொடர்ந்து அங்கிருந்து அதிகாரிகள் மேற் கூரைகளை அகற்றாமல் சென்றனர்.தொடர்ந்து வியாபாரிகளும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    வியாபாரிகள் கூறுகையில், "ஏற்கனவே கொரோனா காலத்துக்கு பிறகு நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். தற்பொழுது ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் மேற்கூரைகளை அகற்றுவது எங்கள் வயிற்றில் அடிப்பதற்கு சமமானதாகும். நாங்கள் ஏற்கனவே பல லட்ச ரூபாய் செலவு செய்து மேற் கூரைகளை அமைத்துள்ளோம். மேற்கூரைகளை அகற்றுவதால் காய்கறிகள் வெயிலில் நாசமாகி விடும். எனவே இதை அகற்ற கூடாது" என்று தெரிவித்தனர்.தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவியது.

    • பார்வதிபுரம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி நடந்தது.
    • போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.

    கழிவு நீர் ஓடைக்கு மேல் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள் மற்றும் படிக்கட்டுகள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.வெட்டூர்ணிமடம் பகுதியில் இன்று மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அகற்றினார்கள். பார்வதிபுரம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி நடந்தது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் ஓடையின் மேல் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி மேயர் மகேஷ் கமிஷனர் ஆனந்த மோகன் ஆகியோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அதன்படி நாகர்கோவில் நகரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. ஒழுகினசேரியிலிருந்து பார்வதிபுரம் வரை உள்ள சாலையில் கழிவுநீர் ஓடையின் மேல் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று நடந்தது.

    ஜே.சி.பி. எந்திரம் மூலமாக மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கடைகள் முன்பு போடப்பட்டிருந்த சிலப்புகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் சீட்டுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதையடுத்து அங்குபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×