search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 226419"

    • சோனுபரீத் (20)என்பவரும் தங்கி அதை ஆலையில் வேலை பார்த்து வந்தார்.
    • தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    ஈரோடு, 

    சத்தீஸ்கர் மாநிலம் ஜனிஹீர் பகுதியை சேர்ந்தவர் டிஜோராம் (20). இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த ஈங்கூர் நல்லி கவுண்டன் பாளையத்தில் உள்ள ஒரு ஆலையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    அவரது அறையில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சோனுபரீத் (20)என்பவரும் தங்கி அதை ஆலையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கலந்த 10 நாட்களுக்கு முன்பு டிஜோராம் சத்தீஸ்கருக்கு சென்றார். அதன் பிறகு மீண்டும் தான் வேலை செய்யும் ஆலைக்கு வந்தார். சொந்த ஊர் சென்று திரும்பி வந்ததிலிருந்து நிஜோராம் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

    அதன் பிறகு வேலைக்கு செல்லாமல் அறையிலேயே இருந்து வந்துள்ளார். இது குறித்த அவரிடம் கேட்டபோது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினார்.

    இந்நிலையில் நேற்று அறையில் உடன் இருந்த சோனுபரீத் வேலைக்கு சென்று விட்டார். அறையில் டிஜோராம் மட்டும் இருந்துள்ளார். மாலையில் வேலையை முடித்து கொண்டு சோனுபரீத் அறைக்கு வந்தபோது டிஜோராம் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிஜோராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுதன் சேகர்தக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • இந்த சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஒடிசா மாநிலம் மொசிந்தா பகுதியை சேர்ந்தவர் சுதன் சேகர்தக்கு (33). இவர் மொடக்குறிச்சி அருகே உள்ள ஆலூத்து பாளையம் பகுதியில் தங்கி, அங்கு இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான மில்லில் கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை மொடக்குறிச்சியில் இருந்து பூந்துறை செல்லும் வழியில் ஆலுத்து பாளையம் பிரிவு அருகே சுதன் சேகர்தக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அதிவேகமாக வந்து மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் சுதன் சேகர்தக்குவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    எனினும் சிகிச்சை பலனின்றி சுதன் சேகர்தக்கு இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதால் விவசாய துறை தடுமாறுகிறது.
    • வேலைக்கு வரும் தொழிலாளர்களும் அதிக சம்பளம் எதிர்பார்க்கின்றனர்.

    திருப்பூர் :

    விவசாய குடும்பத்தை சேர்ந்த பல இளைஞர்கள் விவசாய தொழிலில் ஈடுபட விரும்புவதில்லை. அதேபோல விவசாய தொழிலாளர்களின் வாரிசுகளும் விவசாய பணிக்கு செல்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. பெரும்பாலும் பனியன் நிறுவனங்களிலும், ஐ.டி., நிறுவனங்களிலும் பணியாற்றுகின்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதால் விவசாய துறை தடுமாறுகிறது. உள்ளூர் தொழிலாளர்கள் கடினமான வேலைகளை செய்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். வேலைக்கு வரும் தொழிலாளர்களும் அதிக சம்பளம் எதிர்பார்க்கின்றனர். கணிசமான விவசாயிகள் தங்கள் தோட்டங்களை குத்தகைக்கு விட்டு விட்டு வேறு தொழிலுக்கு செல்வது அதிகரித்துள்ளது.

    சிறிய பண்ணைகளில் குடும்ப உறுப்பினர்களே வேலைகளை பகிர்ந்து கொள்கின்றனர். பெரிய பண்ணைகளில் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை சமாளிக்க வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி வடமாநில வாலிபர் ஒருவர் படுகாயமடைந்தார்.
    • டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் நால்ரோடு அருகே நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி வடமாநில வாலிபர் ஒருவர் படுகாயமடைந்தார். அக்கம் -பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். போலீசார் விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பூபாதர் தாஸ் மகன் சக்தி தாஸ்(28) என்பதும் வெள்ளகோயில் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரியவந்தது. கோடங்கிபாளையத்தில் வசிக்கும் தனது சித்தப்பா ஜெகபந்து தாஸை பார்க்க வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது சித்தப்பா ஜெகபந்து தாஸ் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • சம்பவத்தன்று சோட்டுபுனியா 2-வது மாடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கால் தடுமாறி மேலே இருந்து கீேழ விழுந்து விட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு இறந்து விட்டார்.
    • இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஜார்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டம் உத்சுகி பகுதியை சேர்ந்தவர் சோட்டுபுனியா (30). இவர் ஈேராடு மாவட்டம் பெருந்துறை அருகே கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று சோட்டுபுனியா 2-வது மாடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கால் தடுமாறி மேலே இருந்து கீேழ விழுந்து விட்டார்.

    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு இறந்து விட்டார். இதுகுறித்து அவரது அண்ணன் சுகான்புனியா கொடுத்த தகவலின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனமுடைந்த நிலையில் ஒபர்னாசிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

    அந்தியூர்:

    மேற்கு வங்காளம் நடியா மாவட்டம் சோனக்கூர் பகுதியை சேர்ந்தவர் ஒபர்னாசிங் (வயது 36). இவரது முதல் கணவர் திலிப் சிங் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய 3 மகள்கள் மேற்கு வங்கத்தில் உள்ளனர். இதேபோல் ஜெந்துசிங் (26) என்பவரின் மனைவி 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கும் 3 மகன்கள் உள்ளனர்.

    இதனையடுத்து ஒபர்னாசிங்கும், ஜெந்துசிங்கும் கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றாக இருந்து வருகின்றனர். பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுமேட்டூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் 2 பேரும் வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஒபர்னாசிங் முதல் கணவரின் மகள்களுக்கு ரூ.15 ஆயிரம் அனுப்ப பணம் கேட்டு உள்ளனர். ஜெந்துசிங் இப்போது பணம் இல்லை என கூறியதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த நிலையில் ஒபர்னாசிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவலறிந்து வந்த அந்தியூர் போலீசார் உடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

    • சிக்கன் சாப்பிட்டுவிட்டு, மது அருந்தி விட்டு அவர் இரவு படுக்க சென்று விட்டார். பின்னர் காலை வேலைக்கு செல்ல அவரை அவரது நண்பர்கள் எழுப்பிய போது உமேஷ் ராம் எழுந்திருக்கவில்லை.
    • இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெருந்துறை:

    பீகார் மாநிலம் நிர்பூர் பகுதியை சேர்ந்தவர் உமேஷ் ராம் (வயது 42). இவரும் இவருடைய அண்ணன் தினேஷ் ராம் என்பவரும் பெருந்துறை, சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.

    சம்பவத்தன்று இரவு வேலையை முடித்துவிட்டு உமேஷ் ராம் தொழிலாளர்கள் தங்கம் அறைக்கு வந்துள்ளார். பின்னர் இரவு சிக்கன் சாப்பிட்டுவிட்டு, மது அருந்தி விட்டு அவர் இரவு படுக்க சென்று விட்டார். பின்னர் காலை வேலைக்கு செல்ல அவரை அவரது நண்பர்கள் எழுப்பிய போது உமேஷ் ராம் எழுந்திருக்கவில்லை.

    உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதா கூறினர். இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இந்த நிலையில், நேற்று காலை ராம்சர்தார் திடீரென வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • புகாரின்பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    மேற்கு வங்க மா நிலம், பர்கானாஸ் பகுதியைச் சேர்ந்தவர் திலீப்முண்டா (31). இவரது தங்கை கணவர் ராம்சர்தார் (27). இருவரும், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

    இந்த நிலையில், நேற்று காலை ராம்சர்தார் திடீரென வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு வந்து, ராம்சர்தாரை பரிசோதனை செய்த ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர், அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

    இதுகுறித்து, திலீப்முண்டா அளித்த புகாரின்பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு சரிவர செல்லாமல் குடித்து விட்டு சுற்றி கொண்டு இருந்தார்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பீகார் மாநிலம் பெருசு ராய் மாவட்டம் கிசான்பூர் பகுதியை சேர்ந்தவர் சுனில்சர்மா (40). இவர் ஈரோடு, நசியனூர் ரோடு கைகாட்டிவலசில் உள்ள கிளாஸ் கம்பெனியில் கார்பென்டராக வேலை பார்த்து அங்கேயே தங்கியிருந்து வந்தார். சுனில் சர்மாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு சரிவர செல்லாமல் குடித்து விட்டு சுற்றி கொண்டு இருந்தார். நேற்று இரவு அதே பகுதியில் ரோட்டோரம் இருந்த கல் மேல் உட்கார்ந்து இருந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த சுனில் சர்மா நிலைதடுமாறி கழிவுநீர் கால்வாயில் விழுந்தார். இதில் மூச்சு திணறி, பலத்த காயம் ஏற்பட்டு இறந்து விட்டார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுனில்சர்மா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×