என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 226542"
- குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி தினத்தினை முன்னிட்டு 28-ந்தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
- 28-ந்தேதி அன்று உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 13-8-22 அன்று இயங்கும்
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத் திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி தினத்தினை முன்னிட்டு வியாழக்கிழமை (28-ந்தேதி) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
28-ந்தேதி அன்று உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 13-8-22 (சனி) கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும். 28-ந்தேதி அன்று கன்னியா குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப்பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.
இவ்வாறு கூறி உள்ளார்.
- தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில்.
- இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா 12 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெறும். இந்த திருவிழாவில் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலிருந்து இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
அன்று காலை 7.30 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8 மணிக்கு கேடயசப்பரத்தில் அருணாசலசாமி கோவில் வளாகத்தில் வலம் வருதல், 20-ந்தேதி இரவு 8 மணிக்கு திரு ஆல் வாகனத்தில் குறி சொல்லும் கூத்தன் அலங்காரத்தில் வலம் வருதல், 21-ந்தேதி இரவு 8 மணிக்கு முல்லை சப்பரத்தில் சதாசிவ மூர்த்தி அலங்காரம், 22-ந்தேதி பூங்குயில் சப்பரத்தில் நடராஜர் அலங்காரம், 23-ந்தேதி திருப்புண்ணை சப்பரத்தில் நவநீதகிருஷ்ணன் அலங்காரத்தில் வலம் வருதல், 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஏக சிம்மாசன சப்பரத்தில் பாலசேமன் அலங்காரம், 25-ம் தேதி திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு பல்லாக்கில் தவழ்ந்த கிருஷ்ணர் திருக்கோலம், 26-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு வில்வச்சப்ரத்தில் ராஜங்க அலங்காரம், 27-ம் தேதி புதன்கிழமை இரவு 8 மணிக்கு சின்ன சப்பரத்தில் பிச்சாண்டவ மூர்த்தி திருக்கோலத்தில் கோவில் மற்றும் ஏரல் நகரத்தில் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முக்கிய திருவிழா 28-ந் தேதி நடக்கிறது. அன்று பகல்1 மணிக்கு சாமி உருகுபலையில் கற்பூர விலாசம் வரும் சிறப்பு காட்சியும், அதனை தொடர்ந்து அபிஷேக ஆராதனை, மாலை 5 மணிக்கு இலாமிச்சைவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலம், இரவு 11 மணிக்கு கற்பகப்பொன் சப்பரத்தில் சாமி எழுந்தருளல் காட்சி நடைபெறுகிறது. 29-ந் தேதி காலை 4 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு கோவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி திருக்கற்பூர தீப தரிசனம் நடைபெறுகிறது.
30-ந்தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரி பொருனை நதியில் சகல நோய் தீரும் திருத்துறையில் நீராடல், பகல் 12:30 மணிக்கு அன்னதானம், பகல் 3 மணிக்கு ஆலிலைச் சயன அலங்காரம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கல தரிசனம் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.
- தினமும் அல்லது அமாவாசை அன்று நாம் காகத்திற்கு உணவு படைக்கிறோம்.
- காகத்தின் உருவில், நம் முன்னோர்கள் வந்து உணவருந்துவதாக ஒரு நம்பிக்கை.
அமாவாசை தினத்தில் காகத்திற்கு வைக்கும் உணவை, காகம் மட்டும்தான் சாப்பிட வேண்டுமா? பிற உயிரினங்கள் சாப்பிட்டால் தவறா? என்ற சந்தேகத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
தினமும் உணவு சமைத்ததும் அதில் சிறிதளவை எடுத்து காகத்திற்கு வைத்துவிட்டு, அதன்பின் உணவருந்துபவர்கள் பலர் இருக்கிறார்கள். குறைந்த பட்சம், அமாவாசை தினத்திலாவது, காகத்திற்கு சாதம் வைத்தபிறகு உணவருந்தும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. சரி.. அப்படி காகத்திற்கு வைக்கும் உணவை, காகம் மட்டும்தான் சாப்பிட வேண்டுமா? பிற உயிரினங்கள் சாப்பிட்டால் தவறா? என்ற சந்தேகம் எழலாம்.
காகத்தின் உருவில், நம் முன்னோர்கள் வந்து உணவருந்துவதாக ஒரு நம்பிக்கை. அந்த வகையில்தான் நாம் காகத்திற்கு உணவு படைக்கிறோம். அப்போது, அணில், குருவி போன்ற மற்ற உயிரினங்களும் உணவை பங்கிட்டுக்கொள்வதை நாம் தவிர்க்க முடியாது, தடுக்க முடியாது.
கடவுள் படைப்பில் எல்லா உயிர்களும் சமம். அப்படிப் பார்த்தால், எந்த உயிர்கள் உணவருந்தினாலும் புண்ணியம் கிடைக்கும். ஏன்? இயலாதவர்களாக இருக்கும் மனிதர்களுக்கும் கூட நாம் அன்னத்தை அளித்தால், அது பெரும் புண்ணியம்தானே.
- அமணலிங்கேஸ்வரர் கோவிலில் விசேஷ நாட்களில் மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
- பக்தர்கள் மலைமீது உள்ள பஞ்சலிங்க நீர்வீழ்ச்சிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர்.
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஓரே குன்றில் ஒன்றாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்து உள்ளது.அருவியில் குளித்து மகிழவும் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர். அமணலிங்கேஸ்வரர் கோவில் அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம், மகாசிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
ஆனி அமாவாசையை யொட்டி சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வாகனங்கள் மற்றும் பஸ் மூலமாகவும் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்தனர். பின்னர் மலைமீது உள்ள பஞ்சலிங்க நீர்வீழ்ச்சிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். அதன் பின்பு அடிவாரப் பகுதிக்கு வருகை தந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மும்மூர்த்திகள், விநாயகர், சுப்பிரமணியர், சப்தகன்னிகளுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனால் கோவில் மற்றும் அருவிப் பகுதியில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. அதேபோன்று உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கோடந்தூர் கட்டளை மாரியம்மன் கோவிலில் அமாவாசையை ஒட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
- பக்தர்கள் செவ்வாய் தோஷம் மற்றும் நாக தோஷம் விலக வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
- சங்கமேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் சென்று நீண்ட வரிசையில் நின்று சாமியை வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. பவானி கூடுதுறையில் பவானி ஆறு மற்றும் காவிரி ஆறுடன் கண்ணுக்கு புலப்படாத தேவர்களின் அமுத நதியும் கூடுவதாக ஐதீகம். இதனால் இங்கு புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தால் குடும்பத்தில் நல்லது நடக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் பவானி கூடுதுறையில் தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற நாட்களில் பவானி கூடுதுறையில் புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுப்பதற்காக அதிக பக்தர்கள் குவிவார்கள்.
இந்த நிலையில் ஆனி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் ஆற்றில் புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். சில பக்தர்கள் செவ்வாய் தோஷம் மற்றும் நாக தோஷம் விலக வேண்டியும் சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் சென்று நீண்ட வரிசையில் நின்று சாமியை வழிபட்டனர்.
- இன்று மாலை வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
- நாளை மற்றும் நாளை மறுநாளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் அமா வசை தினங்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமியை வழிபட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் ஆனி அமாவாசையான இன்று சாமி தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்றிரவு முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் கோவில் சுற்றுப்புற பகுதியில் தங்கி இருந்தனர்.
இன்று அதிகாலை முதலே பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்துவிட்டு வீரராகவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திரண்டனர்.
ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் எழுந்தருளிய உற்சவர் வீரராகவ பெருமாள், மூலவர் வீரராகவ பெருமாளை வழிபட்டனர்.
இன்று மாலை 6 மணியளவில் உற்சவர் வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதே போல் நாளை மற்றும் நாளை மறுநாளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
- சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆனி மாதம் எனப்படுகிறது.
- ஆனி மாதம் இறைவழிபாடு மேற்கொள்ள ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது.
ஆனி மாத அமாவாசை தினமான இன்று காலையில் குளித்து விட்டு, ஆற்றங்கரையில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து தீபமேற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலிருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் வைத்து, தூபங்கள் கொளுத்தி வணங்க வேண்டும்.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.
ஆனி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் அல்லது எலுமிச்சை பழம் வாங்கி , அதன் மீது கற்பூரம் கொளுத்தி உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய பூசணிக்காயை உடைத்தும், எலுமிச்சம் பழத்தை நசுக்கியும் திருஷ்டியை கழித்திட வேண்டும்.
ஆனி மாதம் இறை வழிபாடு மேற்கொள்ளதக்க ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த ஆனி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் தர்ப்பணம் தந்து நமது முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் சுபிட்சங்கள் பெருகும். திருமணம் காலதாமதம் ஆகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். காரிய தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்