search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சம்பளம்"

    • கல்லூரியின் இடது, வலது பின்புறத்தில் ஏராளமான செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது.
    • கஜா புயலில் தரைமட்டமான இருசக்கர வாகன நிறுத்தகம் இதுநாள் வரை சரிசெய்யப்படாமல் உள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் 2011ம் ஆண்டு பாரதிதாசன் உறுப்பு கலைக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்லூரி இப்பகுதி மாணவர்களுக்கு ஒரு வரபிரசாதமாக அமைந்தது. இந்த கல்லூரியில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.

    இக்கல்லூரி 2018ம் ஆண்டு அரசு கலைக்கல்லூரியாக மாற்றப்பட்டது. இந்த கல்லூரிக்கு சுற்றுச்சுவா் கிடையாது. கல்லூரியின் இடது, வலது பின்புறத்தில் ஏராளமான செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது. இதனால் ஜன்னல் வழியாக கல்லூரிக்குள் பாம்பு போன்ற விஷ ஐந்துக்கள் உள்ளே நுழைய வாய்ப்புள்ளது. கல்லூரியின் முன்புறம் உள்ள கண்ணாடிகளும் கஜா புயலில் விழுந்து அதை அப்புறப்படுத்தாமலும், புணரமைக்கலும் உள்ளது.

    எந்த நேரத்திலும் அந்த கண்ணாடிகள் விழுந்து விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் மாணவா்கள் சென்று வருகின்றனா். மாணவா்கள் வரும் இருச்சக்கர வாகன நிறுத்தகமும் கஜா புயலில் தரை மட்டமானதை இதுநாள் வரை சரிசெய்யப்படாமல் அப்படியே உள்ளது. மாணவா்கள் வரும் வாகனங்கள் வெளியிலேயே வெயில் மற்றும் மழையில் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தி வைக்கப்படுகிறது.

    கல்லூரி நிர்வாகம் பேராசிரியா்களுக்கு ஊதியம் கொடுப்பதில் பல்கலை–க்கழகம் கொடுப்பதா? அரசு கொடுப்பதாக என்ற இழுபறியில் இருந்து கொண்டு மாதா மாதம் சம்பளம் கிடைக்காமல் பேராசிரியர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள். கல்லூரி முன்பக்கத்தில் உள்ள மேல்தளத்தில் உடைந்த கண்ணாடியும், அதை சுற்றி செடி, கொடி, மரங்கள் மண்டி உள்ளது. எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. விபத்துக்கள் ஏற்பட்டதற்கு பிறகு அரசு முனைந்து செயல்படுவதை விட்டு விட்டு விபத்து ஏற்படுவதற்கு முன்பே உரிய நடவடிக்கை எடுத்து ஆவன செய்ய வேண்டுமென மாணவர்கள். பெற்றோர்கள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    • திருவெண்ணை நல்லூர் அருகே சம்பளம் கேட்ட பெண் கட்டிட தொழிலாளி தாக்கப்பட்டார்.
    • பாஞ்சாலி நேற்று மாலை பார்த்தசாரதியிடம் சம்பளம் கேட்டுள்ளார்

    விழுப்புரம்:

    திருவள்ளூர் அருகே சித்தலிங்க மடம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி பாஞ்சாலி (வயது27) இவர் கட்டிட தொழிலாளி. அதே பகுதியில் பார்த்தசாரதி என்பவரின் வீட்டில் கடந்த ஒரு வருடமாக கட்டிட வேலை பார்த்து வருகிறார். இதனிடையே பாஞ்சாலி நேற்று மாலை பார்த்தசாரதியிடம் சம்பளம் கேட்டுள்ளார். அதற்கு பார்த்தசாரதி மற்றும் அவரது மகன் மருமகள் உள்ளிட்டோர் பாஞ்சாலியை ஆபாசமாக திட்டி அடித்து உதைத்தனர். இதனை தடுக்க சென்ற மற்றொரு தொழிலாளியையும் அவர்கள் அடித்தனர். இது குறித்து பாஞ்சாலி திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாரத்துக்கு குறைந்தது 6மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும்.
    • தன்னார்வலர்கள் பலர் உயர்கல்விக்காகவும், திருமணம் உள்ளிட்ட பல காரணங்களுக்காகவும் வெளியூர் சென்று விட்டனர்.

    திருப்பூர் :

    ஊரடங்கில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை நிரப்ப இல்லம் தேடி கல்வி திட்டத்தை அரசு கொண்டு வந்தது. திருப்பூர் கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 142 மையங்கள் திறக்க அரசு நிர்ணயித்தது. தற்போது வரை 7 ஆயிரத்து 255 மையங்கள் திறக்கப்பட்டு விட்டன. இதன்கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, பள்ளிகளின் நேரம் போக மாலை 5மணி முதல் 7மணி வரை தன்னார்வலர்கள் வழியே மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஒரு மையத்துக்கு ஒரு தன்னார்வலர், வாரத்துக்கு குறைந்தது 6மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் போன்ற கட்டுபாடுகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். கடந்த ஒரு மாதங்களாக இவர்களில் பலர் பணியில் இருந்து விலகிவருகின்றனர். சுமார் 170க்கும் மேற்பட்ட மையங்களில் தன்னார்வலர்கள் இல்லை.

    இது குறித்து தன்னார்வலர்கள் சிலர் கூறுகையில், இத்திட்டம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக உள்ளது. மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது மட்டுமின்றி, அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய், வறுமையில் உள்ளோருக்கு கூடுதல் வருவாய் அளிக்கிறது.அறிவுறுத்தியபடி தவறாமல் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறோம். இதற்கான சம்பளம் நாளுக்கு நாள் தாமதமாகி வருகிறது. கடந்த மார்ச் மாத சம்பளமே மே மாதம்தான் கிடைத்தது.இதன்காரணமாகவும் தன்னார்வலர் சிலர் விலகிவிட்டனர். கோடை விடுமுறையில் பயிற்சி நடக்கவில்லை. அதற்கு சம்பளம் வருமா என்பதும் தெரியவில்லை. வழங்குவது ஆயிரம் ரூபாய் என்றாலும் அதை காலம் தாழ்த்தாமல் வழங்கினால் நல்லது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றனர்.

    இந்த மையங்களில் மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்த, ரீடிங் மராத்தான் போட்டி ஜூன் 1-ந்தேதி துவங்கி 12-ந் தேதி வரை நடந்தது. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் செல்போன் செயலி மூலம் மாணவர்களை குறிப்பிட்ட வார்த்தைகளை வாசிக்க வைக்க வேண்டும்.அதிக வார்த்தைகள் வாசித்ததன் அடிப்படையில் மாவட்டம், ஒன்றியம் வாரியாக ரேங்க் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரம் 6 கோடியே 82 லட்சம் சொற்களை சரியாக வாசித்து முதலிடம் பிடித்தது.திருப்பூரில்ஊத்துக்குளி வட்டாரம் 413 வட்டாரங்களில் மாநில அளவில் 92வது இடத்தில் இருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் 974 செல்போன்களில் இருந்து 1.52 லட்சம் நிமிடங்களில் 76 லட்சம் சொற்கள் சரியாக வாசிக்கப்பட்டுள்ளன.ரீடிங் மராத்தானில் திருப்பூர் பின்தங்க தன்னார்வலர்கள் பற்றாக்குறையால் இல்லம் தேடி கல்வி செயல்பாடுகள் குறைந்ததும் முக்கிய காரணமாக இருக்கலாம்.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தன்னார்வலர்கள் பலர் உயர்கல்விக்காகவும், திருமணம் உள்ளிட்ட பல காரணங்களுக்காகவும் வெளியூர் சென்று விட்டனர். தன்னார்வலர் சிலரின் தகவல்கள் முறையாக கல்வித்துறைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. அவர்களுக்கு மட்டும் சம்பளம் வழங்க தாமதிக்கிறது. தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் காலிப்பணியிடங்கள் நிரப்பும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் சரிசெய்யப்பட்டு விடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×