search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமரி"

    • குமரி எல்லை பகுதியில் சோதனையை தீவிரப்படுத்த வலியுறுத்தல்
    • அதிகாரிகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமெடுத்து உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

    பாதிப்பு அதிகரிப்பதை அடுத்து சோதனையை தீவிரப்படுத்த சுகாதா ரத்துறை அதிகாரி கள் நடவடிக்கை மேற்கொ ண்டுள்ளனர். குமரி மாவட்டத்தை யொட்டி உள்ள கேரளாவில் பாதிப்பு அதிகமாக உள்ளதால் மாவட்ட எல்லைப் பகுதி களில் கண்காணிப்பு தீவி ரப்படுத்தப்பட்டுள்ளது.

    களியக்காவிைள சோதனை சாவடியில் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கொேரானா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று 818 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 40 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதில் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேல்புறம் ஒன்றியத்தில் 10 பேரும், முன்சிறையில் 9 பேரும், அகஸ்தீஸ்வரம், தோவாளை, திருவட்டார் ஒன்றியங்களில் தலா 2 பேரும், தக்கலை, ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு ஒன்றி யங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    நாகர்கோவில் மாநகர பகுதியிலும் கொரோனா தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று 9 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் 6 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 23 நாட்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் 450 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் பாதிப்பு 500 நெருங்கி வருகிறது.

    இதையடுத்து சுகாதா ரத்துறை அதிகாரிகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்த விவரங்களை சேக ரித்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    கேரளாவில் பாதிப்பு அதிகமாக உள்ளதால் எல்லை பகுதியான களியக்காவிளையில் மட்டும் சோதனை நடைபெற்று வருகிறது. சூழால், நெட்டா பகுதிகளில் சோதனை சாவடி அமைத்து கொரோனா சோதனையை தீவிரப்படுத்த வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
    • வெளி மாவட்டத்திற்கு சென்ற போலீசார்

    நாகர்கோவில்:

    தமிழக காவல் துறையில் காலியாக உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது.

    குமரி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுத 5 ஆயிரத்து 888 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது. நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி, ஆரல்வாய் மொழி ஜெயமாதா பொறியியல் கல்லூரி, தோவாளை லயோலா பொறியியல் கல்லூரி, தோவாளை சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி, சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரி, இறச்சகுளம் அமிர்தா பொறியியல் கல்லூரி ஆகிய 6 மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது.

    நாகர்கோவில்  பொன் ஜெஸ்லி கல்லூரியில் பெண்களுக்காக தனித் தேர்வு மையம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. தேர்வு மையத்திற்கு வந்த பெண்களை அவர்களது பெற்றோர்கள் அழைத்து வந்திருந்தனர். கல்லூரி வாசலில் அவர்களை விட்டு விட்டு வெளியே காத்திருந்தனர். பெண்கள் கொண்டு வந்திருந்த கைப்பைகளையும் வெளியே வைத்து விட்டு தேர்வு எழுத உள்ளே சென்றனர்.

    மற்ற தேர்வு மையங்களிலும் காலையிலேயே தேர்வு எழுதுபவர்கள் வந்திருந்தனர். தேர்வு எழுத வந்தவர்கள் பலத்த பரிசோதனைக்குப் பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். விண்ணப்பதாரர்கள் தேர்வு கூட சீட்டினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து வைத்திருந்தனர்.

    அதை பரிசோதனை செய்தபிறகே தேர்வு எழுதுபவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் செல்போன்கள், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது.

    இதைத்தொடர்ந்து மதியத்திற்கு பிறகு தேர்வு நடைபெறுகிறது. இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் பெரும்பாலானவர் அந்தந்த தேர்வு மையங்களிலேயே காத்திருந்தனர். தேர்வு மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் நடந்த எழுத்து தேர்வை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்பி ரசாத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மேற்கொண்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேர்வு எழுதுபவர் களுக்கு செய்யப்பட்டிருந்த அடிப்படை வசதிகளை பார்வையிட்டார்.

    குமரி மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் பலரும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். ஏற்கனவே போலீஸ் துறையில் பணியாற்றுபவர்களுக்கு குமரி மாவட்டத்திற்குள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படவில்லை. பெரும்பாலான போலீசாருக்கு ராமநாதபுரம் மாவட்டம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த போலீசார் அனைவரும் நேற்று இங்கிருந்து புறப்பட்டு ராமநாதபுரத்திற்கு சென்றனர். அவர்கள் அங்குள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதினார்கள்.

    • சிற்றார்-1-ல் 20.6 மி.மீ. பதிவு
    • திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழு வதும் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தது.

    நேற்று காலையில் வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்தது. இன்று காலையிலும் மழை நீடித்தது.

    நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. கொட்டாரம், மயிலாடி, சுசீந்திரம், பூதப்பாண்டி, ஆணைக் கிடங்கு, அடையாமடை, முள்ளங்கினா விளை, தக்கலை, புத்தன் அணை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. சிற்றார்-1-ல் அதிகபட்சமாக 20.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணை பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 41.32 அடியாக இருந்தது. அணைக்கு 614 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 871 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ெபருஞ்சாணி அணை நீர்மட்டம் 60.20 அடியாக உள்ளது. அணைக்கு 179 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 160 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது.அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டுகிறது. சனிக்கிழமை யான இன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்தக் குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    ேசறும் சகதியுமான சாலை

    நாகர்கோவில் சவேரியார் ஆலயத்தில் இருந்து ஈத்தாமொழி சந்திப்பு வரை உள்ள சாலை பாதாளச் சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டு பைப்லைன் அமைக்கப்பட்ட பிறகு ஜல்லிகள் நிரப்பப்பட்டு தற்காலிகமாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த வழியாக தற்போது பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இன்று அதிகாலையில் பெய்த மழையின் காரணமாக இந்த சாலை சேறும் சகதியுமாக மாறி உள்ளது. சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ள னர்.

    • புதிதாக 40 பேர் கொரோனாவால் பாதிப்பு
    • ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு தயார்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக திருவட்டார், முஞ்சிறை ஒன்றியங்களில் ஏராளமானோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால் அந்த பகுதிகளில் கொரோனா சோதனை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் 766 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் 40 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களில் 22 பேர் ஆண்கள், 18 பேர் பெண்கள் ஆவார் கள். அகஸ்தீஸ்வரம், தோவாளை தாலுகாவில் தலா ஒருவருக்கும், குருந்தன் கோடு ஒன்றியத்தில் 8 பேரும், மேல்புறத்தில் 6 பேரும், முஞ்சிறையில் 9 பேரும், திருவட்டாரில் 2 பேரும், தக்கலையில் 3 பேரும் கொரோனாவானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில் மாநகர பகுதியிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக ஒரு சிலர் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கேரளாவில் இருந்து வந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள். இருப்பினும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது.

    • குமரி மாவட்டத்தில் 22 ஆயிரத்து 875 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள்.
    • மாநில அளவில் பிளஸ்-2 தேர்வில் குமரி மாவட்டம் 13வது இடத்தை பிடித்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் அரசு பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி மெட்ரிக் பள்ளிகளில் படித்த 10 ஆயிரத்து 959 மாணவர்களும் 11 ஆயிரத்து 916 மாணவ மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 875 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

    இதில் 10 ஆயிரத்து 148 மாணவர்களும் 11 ஆயிரத்து 731 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 879 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 92.60 சதவீதம் பேரும் மாணவிகள் 98.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சராசரியாக 95.65சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாநில அளவில் பிளஸ்-2 தேர்வில் குமரி மாவட்டம் 13வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்வின் போது 95.06 பிடித்து 9வது இடத்தை பிடித்து இருந்த நிலையில் தற்போது 13-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    தேர்ச்சி விழுக்காடு அதிகரித்த நிலையிலும் மாவட்ட அளவில் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரால் சேர்த்தல், நீக்கல் அல்லது திருத்தம் செய்து தரப்படும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஊரக உள்ளாட்சி அமைப்பு களில் பல்வேறு காரணங்களினால் 30.04.2022 வரை ஏற்பட்ட காலி பதவியிடங்களுக்கு தற்செயல் நேரடி தேர்தல் களை நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய 10-வது வார்டு, குருந்தன்கோடு ஒன்றிய 7-வது வார்டு, ஊராட்சிக ளில் பள்ளம்துறை 9-வது வார்டு, மருதூர்குறிச்சி 5. கண்ணணூர் 4. காட் டாத்துறை 5 ஆகிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

    தற்செயல் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் கிராம ஊராட்சி வார்டுகளுக் கான வாக்காளர் பட் டியல்கள், அண்மை யில் வெளியிடப்பட்ட சட்ட மன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட ஊராட்சி கள் வாக்காளர் பதிவு அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்க ளால் 16.06.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மற்றும் அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு)-ல் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் ராஜாக்கமங்கலம் ஒன்றியம் 10-வது வார்டில் தர்மபு ரம் ஊராட்சியில் 2274 ஆண், 2251 பெண் என்று மொத்தம் 4525 வாக்காளர்கள் உள்ளனர். குருந்தன்கோடுஒன்றியம் 7-வது வார்டில் கக்கோட் டுத்தலை ஊராட்சியில் ஆண், 872 பெண் என 1744 பேரும், தலக்குளம் ஊராட்சியில் 1708 ஆண், 1759 பெண் என 3467 வாக்காளர்கள் உள்ளனர்.

    கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் பள்ளம்துறை 9-வது வார்டில் 279 ஆண் 233 பெண் என 512 பேரும், மருதூர்க்குறிச்சி 5-ம் வார்டில் 259 ஆண், 264 பெண் என்று 522 பேரும், கண்ணணூர் 4-ம் வார்டில் 285 ஆண், 266 பெண் என்று 551 பேரும், காட்டாத்துறை 5-ம் வார்டில் 445 ஆண். 407 பெண் என்று 853 பேரும் என்று ஒட்டு மொத்தமாக 6121 ஆண், 6052 பெண், ஒரு இதார் என்று 12 ஆயிரத்து 174 வாக்காளர் கள் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த வாக்காளர் பட்டியலில் தனது பெய ரைச் சேர்ப்பதற்கான விண்ணப்பமோ அல்லது பதியப்பட்டுள்ள ஒரு பெயருக்கோ அல்லது அப்பட்டியலில் கண்ட விவரத்திற்கோ மறுப் புரை தர விரும்புவோர், சம்பந்தப்பட்ட சட்டமன் றத்தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் தக்க கோரிக்கையோ மறுப்பு ரையோ முதலில் தந்து அதன் மூலம் தக்க மாற்றத்தை மேற்படிசட்டமன்றத்தொகுதி வாக்காளர் பட்டியலின் இணையான பதிவுற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    ஊராட்சி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யக் குறிப்பிடப்பட்டுள்ள இறுதி நாள் வரை, மாற்றம் கோரி வரப்பெறும் கோரிக் கைகள் மற்றும் மறுப்பு ரைகளின் மேல், மேற்படி சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரால் சேர்த்தல், நீக்கல் அல்லது திருத்தம் செய்து தரப்படும். ஆணைகள் ஊராட்சி வாக்காளர் பட்டியலில் முறையாக பதியப்படும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

    • முஞ்சிறை ஒன்றியத்தில் அதிகமானோர் பாதிப்பு
    • குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

    முஞ்சிறை, திருவட்டார் ஒன்றியங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக முஞ்சிறை ஒன்றியத்தில் கொத்துக்கொத்தாக பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் முஞ்சிறை ஒன்றியத்தில் 15 பேருக்கு கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது.

    இதில் பெரும்பாலா னோர் ஏற்கனவே பாதிக்க ப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். இதைத்தொடர்ந்து அவர்களும் தனிமைப் படுத்தப் பட்டுள்ள னர். முஞ்சிறை ஒன்றியத்தில் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகா ரிகள் தீவிரப்படுத்தி உள்ள னர்.

    பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. முஞ்சிறை ஒன்றியத்தில் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து அங்கு மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடுகள் சுகாதார பணிகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் மாநக ராட்சி பகுதியில் ஒருவ ருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. திருவட்டார் ஒன்றியத்தில் 5 பேர் பாதிப்புக்கு ள்ளாகி உள்ளனர். மாவட்டம் முழு வதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா ேசாதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    நேற்று ஒரே நாளில் 670 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. குமரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் மட்டும் 100 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குமரி மாவட்டத்தை யொட்டி உள்ள கேரளாவில் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து குமரி மாவட்டத்திலும் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் எல்லையோர பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகி றார்கள்.

    மாவட்டம் முழுவதும் தற்போது தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ெமகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது இருப்பினும் குமரி மாவட்டத்தில் 2¾ லட்சம் பேர் முதல் கட்ட தடுப்பூசி செலுத்தாதது தெரியவந்துள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் குறிப்பிட்ட நாள்கள் கழித்த பிறகும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்தாமல் உள்ளனர் அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தாமல் உள்ளவர்கள் உடனடியாக அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ளுமாறு சுகாதார துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

    ×