search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமரி"

    • தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம். எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வந்த பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் அலுவலகம், பூதப்பாண்டி கட்டிடபிரிவு உதவி பொறியாளர் அலுவலகம் ஆகியவை பராமரிப்புக்கு என்று தென்காசி மாவட்டம் ஆலங்கு ளம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதே போன்று தக்கலையில் இயங்கி வந்த கட்டிட பிரிவு அலுவலகம் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

    தமிழக பொதுப்பணித்து றையில் கட் டிடஅமைப்பு உருவாக்கப்பட்டபோது, குமரி மாவட்டத்தில் ஒரு கோட்டம், 4 உப கோட்டம் மற்றும் 10 பிரிவு அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அரசு கட்டிடங்களை பராமரிப்பு செய்து வருவ துடன், புதிய கட்டிடங்க ளையும் கட்டி வருகிறது.

    இந்த அலுவலகங்கள் குமரி மாவட்டத்தில் இருந்து மாற் றப்படுவதால் ஒரு உதவி செயற்பொறியாளர் பணியிடம், 3 உதவி பொறி யாளர் இளம் பொறியாளர், ஒரு கண்காணிப் பாளர், ஒரு உதவியாளர் பணியிடம் போன்றவை இந்தமாவட் டத்தில் இருந்து பறிபோய் விடுகிறது. இதனைக் கருத் தில் கொண்டு, குமரி மாவட்டத்தில் இயங்கி வந்த அலுவலகங்களை பிற மாவட்டங்களுக்கு மாற்றுவதற்கு பிறப்பிக்கப் பட்ட அரசு உத்தரவை உடனே ரத்து செய்ய வேண் டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    மேலும் இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம் அனுப்பியுள்ளார்.

    • கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக விற்றது
    • தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் 111 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக இந்த கடைகளில் ரூ.2 கோடி முதல் ரூ.2½ கோடி வரை தினமும் மதுபானங்கள் விற்பனையாகி வருகிறது. பண்டிகை காலங்களில் விற்பனை அதிகமாக நடைபெறும்.

    தீபாவளி பண்டி கையையொட்டி கடந்த 3 நாட்களாக டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் அலைமோதியது. மதுபான பிரியர்கள் வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.பீர் வகைகள் மதுபான வகைகள் அதிக அளவு விற்பனையாகி உள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாள் அதிகளவு மதுபானங்கள் விற்று தீர்ந்துள்ளன. 23-ந் தேதி ரூ.5 கோடியே 50 லட்சத்திற்கு மது பானங்கள் விற்று தீர்ந்து உள்ளது. கடந்த 22-ந் தேதி ரூ.4 கோடியே 75 லட்சத்திற்கும்,

    24-ந்தேதி ரூ.3 கோடியே 75 லட்சத்திற்கு என மொத்தம் 3 நாட்களில் ரூ.14 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

    இந்த ஆண்டு விற்ப னையை பொருத்தமட்டில் கடந்த ஆண்டு விட கூடுதலாக மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு
    • கோவையில் கார் வெடித்து தீப்பிடித்த சம்பவம் எதிரொலி

    கன்னியாகுமரி:

    கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் இன்று அதிகாலை கார் ஒன்று வெடித்து சிதறியது.

    இதில் காரில் இருந்த மர்மநபர் பலியானார். இதையடுத்து தமிழகம் முழு வதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்த ப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்திலும் பாதுகாப்பை பலப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். மாவட்ட எல்லை பகுதி களில் பாதுகாப்பு பலப்படு த்தப்பட்டு உள்ளது. களியக்காவிளை சோதனை சாவடியில் போலீசார் தடுப்பு வேலி கள் அமைத்து வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பலத்த சோதனைக்கு பிறகு குமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. போலீசார், கார்களில் வருபவர்கள் குறித்த விபரங்களை கேட்டறிந்து வருவதுடன் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.

    இதே போல் ஆரல்வாய் மொழி, அஞ்சு கிராமம் சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் பணி யமர்த்தப்பட்டு வாகன சோதனை நடைபெற்று வரு கிறது. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படு த்தப்பட்ட தையடுத்து முக்கிய சந்திப்புகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி யிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் ரெயில்களில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி, நாங்குநேரி, இரணியல், குழித்துறை ரயில் நிலையங்களில் போலீசார் பிளாட்பாரங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    • போலீசார் பொதுமக்களிடம் பேசும் போது மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.
    • பொதுமக்களிடம் கண்ணியமாகவும், பொறுப்பாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள களி யக்காவிளை, சூழால் சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தி கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கஞ்சா கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.

    இந்த நிலையில் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீசாரிடம் குறைகளை கேட்டு அறிந்தார். போலீஸ் நிலையத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்தார்.

    போலீஸ் நிலையத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், வழக்கு தொடர்பான கோப்புகள் அனைத்தும் சரியான முறையில் கையாள வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து கோழி விளை, சூழால் சோதனை சாவடிகளில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், போலீசார் பொதுமக்களிடம் பேசும் போது மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். பொதுமக்களிடம் கண்ணியமாகவும், பொறுப்பாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.

    வாகன தணிக்கை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். வாகன சோதனையின் போது சாலை விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் உடல் நிலையில் கவனம் கொள்ள வேண்டும் என்றார்.

    • மப்டி உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ளன.

    நாகர்கோவில்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும்.

    குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். புதுமண தம்பதியினர் புத்தாடை அணிந்து கோவில்களில் தரிசனம் செய்தும், இளைஞர்கள் முதல் புதுமணத் தம்பதியினர், பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தீபாவளி பண்டிகை கொண் டாடப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தற்பொழுது தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாட அனைவரும் தயாராகி வருகிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள கடை வீதிகளில் கூட்டம் அலை மோத தொடங்கியுள்ளது.

    விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் உள்ள கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. செம்மங்குடி ரோடு, மீனாட்சி புரம், கலெக்டர் அலுவலக ரோடு, மணிமேடை, வடசேரி பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் பொதுமக்கள் புத்தாடைகள் எடுக்க குவிந்திருந்தனர்.அனைவரும் குடும்பத் தோடு வந்து புத்தாடை களை எடுத்துச் சென்றனர்.

    தீபாவளி பண்டிகை யையடுத்து துணிக்கடை களில் புத்தம் புது கலெக் சன்கள் விற்பனைக்கு வந்தி ருந்தது. புத்தாடைகளை குடும்பத்தோடு வந்து எடுத்து மகிழ்ந்தனர். கடை வீதிகளில் கூட்டம் அலை மோதியதையடுத்து நாகர் கோவில் நகரில் வடசேரி, செட்டிகுளம், கோட்டார், மணிமேடை பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

    மார்த்தாண்டம், அஞ்சுகிராமம், தக்கலை இரணியல் உள்பட மாவட் டத்தின் முக்கிய பகுதி களில் உள்ள அனைத்து கடை களிலும் இன்று பொது மக்களின் கூட்டம் அதிகமா கவே காணப்பட்டது. கடை வீதிகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். கடைவீதிகளில் போலீசார் மப்டி உடைகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    பிக்பாக்கெட் திருடர்கள் அதிக அளவு நாகர்கோவில் நகரப் பகுதியில் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக் கையுடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் வடசேரி பஸ் நிலையம் அண்ணா பஸ் நிலையம் உட்பட அனைத்து பஸ்நிலையங்களிலும் பஸ்களில் பயணம் செய்யும் போது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தால் தங்களது செயின் மற்றும் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள்.

    பட்டாசு கடைகளிலும் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது.புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பட்டாசு கடைகளில் இன்று கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.பட்டாசு கடைகளில் விற்பனையை முறைப்படுத்த கடை உரிமையாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    பட்டாசுகள் விற்பனைக்கும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அரசின் விதிமுறைகளுக்குட்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    • மக்கள் கூடும் இடங்களில் டிரோன்கள் பறக்க விட்டு கண்காணிப்பு
    • பெண்களிடம் சில்மி ஷத்தில் ஈடுபடும் நபர்களை பிடிக்கவும் சாதாரண உடையில் பெண் போலீசார் களம் இறங்கியுள்ளனர்.

    நாகர்கோவில்:

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் மக்கள் புத்தாடைகள் எடுப்ப தற்கும், பண்டிகைக்கு தேவையான பொருட் களை வாங்குவதற்கும் கடை வீதிகளில் அலை மோதி வருகிறார்கள்.

    தீபாவளி பண்டிகையை யொட்டி ஆண்டு தோறும், பண்டிகைக்கு முந்தைய 2 ஞாயிற்றுக் கிழமைகளிலும் வணிக பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் ஞாயிற்றுக் கிழமையான நாளை வடசேரி, அப்டா மார்க்கெட், மீனாட்சிபுரம், செட்டிகுளம்,கோட்டார் பகுதிகளில் மக்கள் அதிக அளவில் சென்று பொரு ட்களை வாங்குவார்கள்.

    இது போன்று அடுத்தடுத்து வரும் 2 ஞாயிற்றுக்கிழமை களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.இதனால் அடுத்து வரும் நாட்களில் அனைத்து வணிக பகுதிகளிலும் திருவிழா கூட்டம் போல மக்கள் கூடி புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு வகைகளை வாங்கி செல்வார்கள்.

    இதனை கருத்தில் கொண்டு குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன. போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் என 4 சப்-டிவிஷன்களிலும் சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்கள் காலை, இரவு என 2 சிப்டுகள் அமைத்து பாதுகாப்பு பணி செய்கின்றர்.

    முக்கிய தெருக்களில் நெரிசல் ஏற்படும் அளவுக்கு மக்கள் கூட்டம் காணப்படும். இதையொட்டி அங்கு கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்க ளின் உதவியுடன், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் முழு வீச்சில் மேற்கொள்ள இருக்கி றார்கள். இப்போதே கண் காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    மக்கள் கூடும் இடங்கள் அனைத்திலும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த தேவை யான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்கவும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    மக்கள் கூட்டங்களில் ஊருடுருவி கண்காணிப்ப தற்கு வசதியாக டிரோன் களை பறக்க விடவும் திட்ட மிடப்பட்டுள்ளது. குறிப்பாக கடற்கரை சுற்றுலா தலங்க ளான மண்டைக்காடு, குளச்சல், கன்னியாகுமரி பகுதிகளில் டிரோன்கள் மூலம் கண்காணிக்க திட்ட மிடப்பட்டு உள்ளது.

    குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைதான பழைய குற்றவாளிகளின் புகைப் படங்களை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேனர்களாக வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கூட்ட நெரிசலில் பிக்பாக்கெட் குற்றவாளிகள் புகுந்தால் காட்டி கொடுக் கும் வசதி கொண்ட தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளாக பயன் படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த தீபாவளிக்கும் அந்த நடைமுறையை பின்பற்ற போலீசார் முடிவு செய்துள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச் சம்பவங்களில் ஈடு படுவோரை பிடிக்க மாறு வேடத்திலும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    பெண்களிடம் சில்மி ஷத்தில் ஈடுபடும் நபர்களை பிடிக்கவும் சாதாரண உடை யில் பெண் போலீசார் களம் இறங்கியுள்ளனர்.

    இப்படி பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னை மாநகர் முழு வதும் தேவையான அனைத்து முன் ஏற்பாடு களையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    • உலக புலம் பெயர்ந்த பறவைகள் தினம் நிகழ்ச்சி
    • மாவட்ட வன அதிகாரி தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ளபுத்தளத்தில் உலக புலம் பெயர்ந்த பறவைகள் தினம் குறித்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை தாங்கினார்.

    கலெக்டர் அரவிந்த், வருவாய் அதிகாரி சிவ பிரியா, பால பிரஜாபதி அடிகளார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் ரஷ்யா, சைபிரியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்த உள்ளான், ஆளா உள்ளிட்ட பறவைகளை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டார்.

    பின்னர் அந்த பறவை களை கலெக்டர் அரவிந்த், வன அலுவலர் இளைய ராஜா, பறவைகள் ஆராய்ச்சி யாளர் பாலச்சந்திரன் உள்ளி ட்டோர் பறக்க விட்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் நிருபர்களிடம் கூறு கையில், குமரி மாவட்டத்தில் புலம்பெயர்ந்த பற வைகள் அதிக அளவு வருகின்றன. பறவைகள் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறியும் வகையில் பறவைகளின் கால்களில் வளையங்கள் மாட்டப்படுகிறது.

    ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன.இங்கு இருந்தும் பறவை கள் அங்கு செல்கிறது. சுற்றுச்சூழல் மாசடைவதன் காரணமாக பறவைகள் வரத்து குறைய தொடங்கி உள்ளது. இது தொடர்பாக மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்ற போது 170 வகையான 70 ஆயிரம் பறவைகள் வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    சைபிரியா,ரஷ்யா, ஆர்டிக் பகுதிகளில் இருந்து ஏராளமான பறவைகள் கன்னியாகுமரி மாவட்டம் வருகின்றன. சூரிய ஒளி அடிப்படையில் இந்த பறவைகள் வருகிற நிலையில் தற்போது ஒளியில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக அவைகள், திசைமாறிச் சென்று கட்டிடங்களில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

    ஒரு வருடத்திற்கு 10 கோடி பறவைகள் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புலம் பெயர்ந்த பறவைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இதன் மூலம் பொது மக்களுக்கு பறவைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

    • காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சியினர் ஆலோசனை.
    • விஜய் வசந்த் எம்.பி. அலுவலகத்தில் நடந்தது.

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் இடதுசாரிகள் கட்சிகள் சார்பில் வருகிற 11-ந்தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடக்கிறது . குமரி மாவட்டத்திலும் மனிதசங்கிலி போராட்டம் நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் இன்று நாகர்கோவிலில் உள்ள விஜய்வசந்த் எம்.பி. அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு முன்னாள் எம்.பி.பெல்லார்மின் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர் பினுலால் சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லச்சாமி, விடுதலை சிறுத்தை கட்சி பகலவன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மனித சங்கிலி போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் மனிதசங்கிலி போராட்டம் நடத்தவும், வடசேரியில் இருந்து கோட்டார் வரையிலும், தக்கலை பஸ்நிலையத்தில் அழகிய மண்டபம் வரையிலும், குழித்துறையில் இருந்து களியக்காவிளை வரையிலும் வருகிற 11-ந்தேதி மாலை 4 மணிக்கு மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • வழி நெடுக சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • ஞாயிற்றுகிழமை மாலையுடன் சுவாமி விக்ரகங்கள் குமரி மாவட்டம் வந்தடைகிறது.

    நாகர்கோவில்:

    திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழா வில் பங்கேற்க கடந்த மாதம் 23-ந் தேதி சுசீந்தி ரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோயில் வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி தேவி விக்ரகங் கள் ஊர்வலமாக சென்றன.

    நவராத்திரி விழா கடந்த 26-ந்தேதி தொடங்கிய நிலையில் சுவாமி விக்ர கங்கள் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.

    நவராத்திரி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்துநேற்று முன்தினம் காலை கரமனை ஆரியசாலை கோயிலில் இருந்து வேளிமலை முருகன், வெள்ளிக்குதிரை மீது அமர்ந்து ஊர்வலமாக புறப்பட்டு பூஜைப்புரை மண்டபம் வந்து சேர்ந்தார்.

    மாலை 4.30 மணிக்கு பள்ளி வேட்டைக்கு குமாரசாமி சரஸ்வதி மண்டபத்தில்எ ழுந்தருளினார். வேட்டைக் களத்தை மூன்று முறை சுற்றி வந்த அவர் வேட்டை முடிந்த பின்னர் மீண்டும் சரஸ்வதி மண்டபம் வந்து சேர்ந்தார். சில நிமிடங்கள் ஓய்வுக்கு பின்னர் ஸ்ரீ பத்ம நாபசுவாமி கோயிலுக்கு சென்றார்.பள்ளிவேட் டையை தரிசிக்க பூஜைப் புரை சரஸ்வதி மண்டபத் தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    மாலையில் செந் திட்டை பகவதி கோயிலில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மனையும், குமாரசாமி யையும் கோட்டைக்ககம் நவராத்திரி மண்டபத் தில் முன்னே எழுந்தருள செய்தனர். அங்கு மன்னர் குடும்பத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் விக்கரங்கள் மீண்டும் கோயில்களுக்கு சென்றன.

    நவராத்திரி விக்ரகங் களுக்கு நேற்று நல்லிருப்பு எனப்படும் ஓய்வு அளிக் கப்பட்டது. தொடர்ந்து வேளிமலை குமாரசாமி, முன்னுதித்த நங்கை அம் மன், சரஸ்வதி தேவி விக்ரகங்கள் இன்று மீண்டும் பத்மநாப புரம் புறப்பபட்டன. வழி நெடுக சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. நாளை மறுநாள் ஞாயிற்றுகிழமை மாலையு டன் சுவாமி விக்ரகங்கள் குமரி மாவட்டம் வந்தடைகிறது.

    • 225 மதுபாட்டில்கள் பறிமுதல்
    • காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது.

    நாகர்கோவில்:

    காந்தி ஜெயந்தியொட்டி நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது.இதையடுத்து அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது.இதை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் உத்தரவிட்டார்.

    கன்னியாகுமரி நாகர்கோவில் தக்கலை குளச்சல் சப் டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அப்போது அனுமதி இன்றி மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 23 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 225 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    ஆசாரிப்பள்ளம் போலீ சார் வசந்தம் நகர் பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு அனுமதியின்றி மது விற்ற செல்வக்குமார் என்பவரை கைது செய்தனர் .அவரிடம் இருந்து 21 மது பாட்டில்களும் ரூ. 4400 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. கோட்டார் போலீசார் வட்டவிளை பகுதியில் ரோந்து சென்ற போது அந்த பகுதியில் மது விற்றுக் கொண்டிருந்த கண்ணன் என்பவரையும் தாமஸ் என்பவரையும் கைது செய்தனர்.

    இவர்களிடமிருந்து 16 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பார்வதிபுரம் பகுதியில் மதுவிற்ற காந்திமதி நாதன் என்பவரை போலீசார் கைது செய்தவுடன் அவரிடம் இருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போல் தக்கலை மார்த்தாண்டம் இரணியல் மற்றும் மதுவிலக்கு போலீஸ் நிலையங்களிலும் மது விற்பனை செய்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • பாலமோரில் 19.4.மி.மீ. பதிவு
    • குமரி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளிலும் சூறைக் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    இரவும் மழை நீடித்தது.நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

    பூதப்பாண்டி, சுருளோடு, கன்னிமார், கோழிப்போர் விளை, ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் அதிகபட்சமாக 19.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது. பேச்சி பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு -1 அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. தற்பொழுது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதையடுத்து திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.78 அடியாக உள்ளது. அணைக்கு 776 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 538 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சானி அணையின் நீர்மட்டம் 68.77அடியாக உள்ளது.அணைக்கு 170 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1அணையின் நீர்மட்டம் 8.98 அடியாக உள்ளது. அணைக்கு 121 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்ட முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிபாறை 12 பெருஞ்சாணி 16.6 சிற்றாறு-1- 13.4 சிற்றார்- 2 -4.2 நாகர்கோவில் 6 பூதப்பாண்டி 3.2 சுருளோடு 18.4 கன்னிமார் 4.2 பாலமோர் 19.4 ஆணைகிடங்கு 2.4 குருந்தன் கோடு 6.4 அடையாமடை 3.2 கோழி போர் விலை6 முள்ளங்கினாவிளை 5.2 புத்தன் அணை-12.8

    குமரி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.குளச்சல் முட்டம் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்தது. சூறைகாற்றும் வீசிவரு வதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப் படகுகள் வள்ளல்கள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
    • 52 வார்டுகளிலும் சுகாதார பணியாளர்கள் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள். ஒரு வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அடுத்தடுத்து உள்ளவர்களும் காய்ச்சலால் அவதிப்படும் நிலை உள்ளது.

    இந்த காய்ச்சல் பாதிப்பில் பள்ளி மாணவர்கள் பலரும் தற்போது பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சில மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    காய்ச்சல் பாதிப்பின் காரணமாக ஆஸ்பத்திரி களுக்கு வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தனியார் ஆஸ்பத்திரி கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் வழக்கமாக 1500 பேருக்கு மேற்பட்டோர் புற நோயாளி யாக வந்து மருந்து வாங்கி வருகிறார்கள். ஆனால் சமீப காலமாக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு மருந்து வாங்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் 2000-க்கும் மேற்பட்டவர்கள் மருந்து வாங்கி செல்கிறார்கள்.

    இதில் ஏராளமானோர் காய்ச்சல் பாதிப்புடன் வந்து செல்கின்றன. டெங்கு காய்ச்சல் பாதிப்புடனும் ஆஸ்பத்திரியில் சிலர் சிகிச்சை பெற்று வரு கிறார்கள். அவர்களுக்கு டாக்டர் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கன்னியா குமரி, குளச்சல், குழித்துறை அரசு ஆஸ்பத்திரிகள் மட்டுமின்றி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தினமும் காய்ச்சல் பாதிப்பால் மருந்து வாங்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கொசு அடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் சுகாதார பணியாளர்கள் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ×