search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமரி"

    • தஞ்சாவூர் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்
    • செப்டம்பர் மாதம் 2, 3, 4 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

    நாகர்கோவில்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றா கும்.

    விநாயகர் சதுர்த்தி விழா குமரி மாவட்டத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரு கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை ஓட்டி விநாயகர் ஊர்வலங்கள் நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமர்சையாக கொண்டாட இந்து அமைப்புகள் தயா ராகி வருகிறது.

    இந்து முன்னணி, இந்து மகா சபா, பாரதிய ஜனதா உள்பட இந்த அமைப்புகள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தயாராகி வருகின்றன.வருகிற 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் 10ஆயிரத்திற்கு மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய இந்து அமைப்புகள் ஏற்பாடுகள் செய்து வரு கிறார்கள். இந்து முன் னணி சார்பில் வழக்க மாக இரணியல் அருகே கண்ணாட்டு விளை பகுதி யில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்படும்.

    ஆனால் இந்த ஆண்டு கண்ணாட்டு விளை பகுதி யில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்படவில்லை. திருச்செந்தூரில் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகளை வாங்கி வந்து இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்ய ஏற்பா டுகள் செய்துள்ளனர். இந்து மகாசபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி நாகர்கோவில் அருகே சூரங்குடி பகுதியில் நடந்து வருகிறது.

    கடந்த நான்கு மாதங்களாக விநாயகர் சிலை செய்யும் பணியில் தொழி லாளர்கள் ஈடுபட்டு ள்ளனர். தஞ்சாவூரிலிருந்து வந்த தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ½ அடி முதல் 7½ அடி உயரத்திற்கு விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் இந்த விநாயகர் சிலைகள் இறுதி கட்டத்தை எட்டுமென்று எதிர் பார்க்கப்படுகிறது.

    அதைத் தொடர்ந்து வர்ணங்கள் தீட்டப்படும்.விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்ட பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.வெளி மாவட்டங்களில் இருந்து தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளும் குமரி மாவட்டத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும். விநாயகர் சிலைகளை விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    பிரதிஷ்டை செய்யப் படும் விநாயகர் சிலை களுக்கு காலை, மாலை நேரங்களில் பூஜைகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். விநாயகர் சிலைகளை மூன்று நாட் கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.

    செப்டம்பர் மாதம் 2, 3, 4 ஆகிய தேதிகளில் விநா யகர் சிலைகள் ஊர்வ லமாக எடுத்துச் செல்லப் பட்டு கன்னியாகுமரி கடல், சங்குத்துறை கடல், குழித்துறை தாமிரபரணி ஆறு உள்பட பல்வேறு நீர் நிலைகளில் கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    • ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்திய பொதுமக்கள்
    • இளைஞர்கள், இளம்பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கொேரானா பாதிப்பு அதிக மாக இருந்தது.

    கடந்த இரண்டு வாரங் களாக பாதிப்பு குறைந் துள்ளது. இருப்பினும் சுகாதாரத் துறை அதிகா ரிகள் மாவட்டம் முழுவ தும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று மாவட்டம் முழுவதும் 625 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 26 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 17 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவார்கள்.

    கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை 21 ஆயிரத்து 646 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும்பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போடாதவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் 2-வது தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதும், முதல் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வசதியாக ெமகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று குமரி மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. மாவட்டம் முழுவதும் 1780 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

    அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலை யங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் வடிவீஸ் வரம் ஆரம்ப சுகாதார நிலையம் தொல்லவிளை ஆரம்ப சுகாதார நிலையம், வடசேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    மேலும் மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்களிலும் தடுப்பூசி போடும் பணி நடந்தது. அண்ணா பஸ் நிலையம் மற்றும் வடசேரி பஸ் நிலையம், வேப்பமூடு பூங்கா பகுதிகளிலும் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளிலும் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து தடுப்பூசி செலுத்தினார்கள்.

    அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையம், கன்னி யாகுமரி அரசு ஆஸ்பத்திரி, குழித்துறை அரசு ஆஸ்பத்திரி, குளச்சல் அரசு ஆஸ்பத்திரி, தக்கலை அரசு ஆஸ்பத்திரிகளிலும் தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி செலுத்துவதற்கு கூட்டம் குறைவாகவே இருந்ததால் பொதுமக்கள் வந்தவுடன் அவர்களுக்கு மையங்களில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    காலை 7 மணிக்கு தொடங் கிய மெகா தடுப்பூசி முகாம் மாலை வரை நடக்கிறது. இந்த மெகா தடுப்பூசி முகாமில் மதியம் வரை சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில் இளைஞர்கள், இளம் பெண்கள் பலரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஆர்வ மாக வந்திருந்தனர்.

    • பேச்சிப்பாறை அணை 42 அடியை எட்டியது
    • திற்பரப்பில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் முழுவதும் மழை கொட்டி தீர்த்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை சற்று குறைந்திருந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே சாரல் மழை பெய்து வந்தது.

    இந்த நிலையில் இன்று காலையில் நாகர்கோவிலில் சாரல் மழை பெய்தது. இதே போல் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, புத்தன் அணை, சுருளோடு பகுதி களிலும் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருக் கிறது. மலையோர பகுதி யான பாலமோர் பகுதி யில் அதிகபட்சமாக 5.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது.

    மலையோர பகுதிகளிலும் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 42 அடியை எட்டியது. அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணைக்கு 621 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 257 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 68.80 அடியாக உள்ளது. அணைக்கு 653 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 535 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

    சிற்றார்-1 அணை யின் நீர்மட்டம் 13.32 அடியாகவும், சிற்றார்-2-அணையின் நீர்மட்டம் 13.41 அடியாகவும் உள்ளது. பொய்கை அணைநீர்மட்டம் 17 அடியாகவும் மாம்பழத் துறையாறு நீர்மட்டம் 36.58 அடியாகவும் உள்ளது.

    திற்பரப்பு அருவி பகுதி யில் விட்டு விட்டு சாரல் மழை பெய்வதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராள மான சுற்றுலா பயணி கள் வந்திருந்தனர். அவர் கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    • எம்.எல்.ஏ.க்கள் உள்பட 540 பேர் கைது
    • விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் நடந்தது

    நாகர்கோவில்:

    விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் 3 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்புள்ள இந்தியன் வங்கி முன் மாநகர காங்கிரஸ் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் ராபர்ட் புரூஸ், மாநில போலிங் பூத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கவுன்சிலர் அருள் சபீதா, நிர்வாகிகள் சகாய பிரவீன், சேவியர், ஜான் சவுந்தர், பொன் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சாலை யில் அமர்ந்து மறி யல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடு பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். டி.எஸ்.பி. நவீன்குமார் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ள மோடி சந்திப்பில் மறியல் போராட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் கே. டி.உதயம் தலைமை தாங்கினார். பிரின்ஸ் எம்.எல்.ஏ. மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். வட்டாரத் தலைவர்கள் டென்னிசன், ஜெய்சிங், முருகேசன், வைகுண்டதாஸ், அசோக் ராஜ் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பிரின்ஸ் எம்.எல்.ஏ. உட்பட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

    குழித்துறை சந்திப்பில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங் தலைமை தாங்கினார். ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் மத்திய மோடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மறியலில் ஈடுபட்டு கொண்டிருந்த ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. உள்பட காங்கிரஸ் கட்சியினர் 220 பேரை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்தனர். அதேபோல் நாகர்கோவிலில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் மணவளக்குறிச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட காங்கிரஸ் கட்சியினர் 220 பேரை போலீசார் கைது செய்தனர்.

    குழித்துறையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது தே.மு.தி.க. மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் ஐடன் சோனி தலைமையில் தே.மு.தி.க.வினர் வாழை மரத்தை கையில் பிடித்தவாறு கோஷத்துடன் உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக அங்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தே.மு.தி.க.வினர் தேசிய நெடுஞ்சாலையில் வாழை நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் 80 பேரை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர்.

    • ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
    • திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக குளிக்க தடை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது.

    நேற்று இரவு மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. இன்று காலையில் மழை நீடித்தது. மார்த்தாண்டம், தக்கலை, குலசேகரம் பகுதி களில் மழை கொட்டி தீர்த்தது. மேலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் அங்கு குளு குளு சீசன் நிலவுகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.அவ்வப் போது மழை பெய்தது.

    காலையில் பெய்த மழை யின் காரணமாக பள்ளிக்கு சென்ற மாணவ- மாணவிகள் குடைபிடித்த வாறு பள்ளிக்கு சென்ற னர். நாகர்கோவிலில் கொட்டி தீர்த்து வரும் மழை யின் காரணமாக கோட்டார் சாலை சேறும் சகதியு மாக காட்சி அளிக்கிறது. சாலையில் உள்ள பள்ளங் களில் மழைநீர் தேங்கி யுள்ளதால் வாகன ஓட்டி கள் கடும் அவதிக்கு ஆளாகி யுள்ளனர்.

    பூதப்பாண்டி, களியல், கன்னிமார், குழித்துறை, குளச்சல், கோழிப்போர் விளை பகுதிகளிலும் மழை நீடித்தது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் தொடர்ந்து வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. அருவி யில் குளிப்பதற்கு இன்று 3-ம் நாளாக தடை விதிக் கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. பொதுப் பணித்துறை அதிகா ரிகள் அணைகளின் நீர்மட் டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார் கள்.

    தச்சமலை, தோட்ட மலை, மோதிரமலை மற்றும் மலையோர பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறையாறு, வள்ளியாறு, பரளியாறு களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    சிற்றார்-1, சிற்றார்-2 அணைகளின் நீர்மட்டம் 12 அடியை கடந்ததையடுத்து கரையோர பொது மக்க ளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட் டுள்ளது. பொதுப்பணித் துறை சார்பில் தண்டோரா மூலமாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப் பட்டு வரு கிறது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வரு கிறார்கள். தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கி ளைகள் முறிந்து விழுந்தது. இதில் மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் தாலுகா பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் சரிந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தோவாளை, விளவங்கோட்டில் தலா ஒரு வீடு இடிந்து விழுந்தது.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 39.30 அடியாக உள்ளது. அணைக்கு 1078 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 250 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி நீர்மட்டம் 64.15 அடியாக உள்ளது. அணைக்கு 757 அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 33.30 அடியாக உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 10.40 அடியாக உயர்ந்துள்ளது.

    குமரி மாவட்டம் முழுவ தும் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை அதிகபட்சமாக கோழிப்போர் விளையில் 34.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-13.6, பெருஞ்சாணி-25.8, சிற்றார்-1-17.2, சிற்றார்-2-19.4, பூதப்பாண்டி-11.4, களியல்-24.8, கன்னிமார் -14.2 கொட்டாரம்-2.4, குழித்துறை-23.4, மயிலாடி- 3.2, நாகர்கோவில்-10.6, சுருளோடு-13.4, தக்கலை- 22.2, குளச்சல்-12.6, இரணியல்-27, பாலமோர்-29.4, மாம்பழத்துறையாறு- 19, திற்பரப்பு-19.4 ஆரல்வாய்மொழி 2.2 கோழிப்போர் விளை-34.6 அடையாமடை 16.2 குருந்தன்கோடு-25.8 முள்ளங்கினாவிளை-32.6 ஆணைக்கிடங்கு-16 முக்கடல்-9.2.

    • இணை ஆணையர் உத்தரவு
    • பத்மநாபபுரம் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஆனந்த், பூதப்பாண்டி தொகுதி கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் கண்காணிப்பாளர்களை அதிரடியாக இட மாற்றம் செய்து ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஆணையர் அலுவலகத்தில் கண்காணிப்பாள ராகபணியாற்றிய ஆனந்த், நாகர்கோவில் தேவசம் தொகுதி மற்றும் பத்மநாபபுரம் தேவசம் தொகுதி கண்காணிப்பாள ராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப் பில் இருந்த சிவக்குமார் அந்த பொறுப்பில் இருந்து விடு விக்கப்படுகிறார். பத்மநாபபுரம் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஆனந்த், பூதப்பாண்டி தொகுதி கண்கா ணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பூதப் பாண்டி தொகுதியில் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த ஆறுமுக நயினார் அப்பொறுப்பில் இருந்து விடுவிக் கப்படுகிறார்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வருகிற 5-ந் தேதி பகல் 11 மணிக்கு நடைபெறும்.
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளின் ஜல் ஜீவன் இயக்கத்தின் முலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு வீடு தோறும் குடிநீர் என்ற நிலையை ஏற்படுத்திய ஊராட்சியாக 9 ஊராட்சிகள் அறிவிக்கப்படு கிறது.

    அதன்படி அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரவிபுதூர் ஊராட்சி, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பறக்கை ஊராட்சி, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தலக்குளம் ஊராட்சி, தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்குறிச்சி மற்றும் முத்தலக்குறிச்சி ஊராட்சிகள், திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அருவிக்கரை, கண்ணனூர் மற்றும் ஏற்றக்கோடு ஊராட்சி, முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முஞ்சிறை ஊராட்சி ஆகிய 9 ஊராட்சிகளிலும் வருகிற 5-ந் தேதி பகல் 11 மணிக்கு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.

    எனவே பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றுக் கொள்ளவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் தற்பொழுது 2 பேர் மட்டுமே சிகிச்சை
    • பெரும்பாலானோருக்கு வீட்டு தனிமையிலேயே சிகிச்சை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் 764 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவார்கள்.

    கடந்த ஏழு மாதத்தில் 21,423 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் தற்பொழுது 2 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மீதமுள்ளவர்கள் பெரும்பாலானவர் வீட்டு தனிமையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    • நாளை மறுநாள் தொடங்குகிறது
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு தலின்படி வாக்காளர் பட்டி யலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனித்தக வல்களை உறுதிப்படுத்திட வும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதி யில் இருவேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இருவேறு தொகுதிகளில் இடம் பெறுதல் ஆகியவற்றை தவிர்க்கும் பொருட்டும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் தொடங்க உத்தர விடப்பட் டுள்ளது.

    அதன்படி, குமரி மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் அடங்கி உள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையதளத்திலோ அல்லது வோட்டர் ஹெல்ப் லைன் என்ற செயலி மூல மாகவோ அல்லது வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் கொண்டு வரும் படிவம் 6-பியை பூர்த்தி செய்து கொடுத்தோ, தங்கள் பகுதிக் குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் உதவி மையம் மற்றும் இ-சேவை மையத்தினை அணுகியோ தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டி யலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

    • அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    • திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. சுருளோடு பகுதியில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. அங்கு அதிகபட்சமாக 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பூதப்பாண்டி, கன்னிமார், மாம்பழத்துறையாறு, திற்பரப்பு, ஆரல்வாய்மொழி, அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. நாகர்கோவிலில் நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. ஆனால் மழை கண்ணாமூச்சி காட்டி விட்டு சென்று விட்டது. லேசாக சாரல் மழை மட்டுமே பெய்தது.

    பேச்சுப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து மட்டுமே பாசனத்திற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைகளில் இருந்து திறந்து விடப்பட் டுள்ள தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும் விட்டு விட்டு மழை பெய்வதாலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 38.33 அடியாக உள்ளது அணைக்கு 548 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 584 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 62.35 அடியாக உள்ளது அணைக்கு 191 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 175 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 18.15, சிற்றாறு-2 நீர்மட்டம் 11.25, பொய்கை அணை 16.60, மாம்பழத்துறை அணை 29.04 அடி ஆகும் நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 6.60 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு பேச்சுப்பாறை 5.8, பெருஞ்சாணி 17.8, சிற்றார்-1 2.4, பூதப்பாண்டி 12.4, கன்னிமார் 18.4, குழித்துறை 4, சுருளோடு 20, தக்கலை 6, பாலமோர் 15.4, மாம்பழத்துறையாறு 19, திற்பரப்பு 7.8, ஆரல்வாய்மொழி 2.2, கோழிப்போர்விளை 13.2, அடையாமடை 9, புத்தனாறு 17, ஆணைக்கிடங்கு 17.2

    • சாலையில் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும்.
    • மத்திய மந்திரியிடம் விஜய்வசந்த் எம்.பி. மனு

    நாகர்கோவில்:

    மத்திய நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரியை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து கன்னியாகுமரி மாவட்டம் மக்களின் சார்பாக கோரிக்கைகளை முன் வைத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    காரோடு- காவல்கிணறு இடையிலான நான்கு வழி பாதை சாலை பணிகள் முடிவடையாமல் இருப்பதை சுட்டிக்காட்டி அதை தக்க நடவடிக்கைகள் மூலமாக விரைவில் முடித்து வைக்க வேண்டும், கல், மண் பற்றாக்குறையினால் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் காலதாமதத்தை காரணம் காட்டி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது மாநில அரசு அண்டை மாவட்டங்களில் இருந்து கல், மண் தர ஒப்புக்கொண்ட நிலையில் புதிய ஒப்பந்ததாரரை முடிவு செய்து பணியினை விரைவாக தொடங்க வேண்டும்.

    தற்போதைய தேசிய நெடுஞ்சாலை பரா மரிப் பிற்காக சுமார் ரூ.15 கோடி பெற்று தந்த போதிலும் அதற்கான பணிகள் தொடங்காமல் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தி அப்பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். நாகர்கோவில் அப்டா மார்க்கெட் காவல்கிணறு இடையேயான நான்கு வழிச்சாலை பொது மக்களின் பயணத்திற்காக திறந்து கொடுக்க வேண்டும் எனவும் அந்த சாலையில் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும். அத்துடன் நான்கு வழி சாலைக்காக நிலத்தை விட்டுத் தந்த நில உரிமையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிவாரணத் தொகை நிலுவையை உடனடியாக கொடுத்து மேலும் அனை வரும் ஒரு போல் பய னடையும் வகையில் நிவாரணத் தொகை மறு ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்.இவ்வாறு இந்த மனுவில் கூறியிருந்தார்.

    கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட மத்திய மந்திரி விரைவில் கோரிக்கை களுக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

    • திற்பரப்பில் 83.6 மி.மீ. பதிவு
    • கோவிலுக்குள் புகுந்த வெள்ளம் வடியாததால் பக்தர்கள் அவதி

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கன மழை பெய்யுமென்று சென்னை வானிலை மையம் எச்சரித்து இருந்தது.

    இந்த நிலையில் நேற்று காலை முதல் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மாவட்ட முழுவதும் கன மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் மதியம் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் அவ்வை சண்முகம் சாலை, மீனாட்சி புரம் சாலை, அசம்பு ரோடு, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடியதையடுத்து இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளானார்கள். வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    கனமழைக்கு ஒழுகின சேரி பகுதியில் ராட்சத மரம் ஒன்று சாலையில் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து முடங்கியது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். இரவும் விட்டுவிட்டு மழை பெய்தது. இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு இருந்தது அவ்வப் போது மழை பெய்தது.

    திருப்பதி சாரம் பகுதியில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக திருவாழ் மார்பன் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது. இன்று காலையில் மழை வெள்ளம் கோவிலுக்குள் தேங்கி இருந்தது. இதனால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    திற்பரப்பு அருவி பகுதி யில் மழை வெளுத்து வாங்கி யது. அங்கு அதிகபட்சமாக 83.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழையின் காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    தக்கலை, சுருளோடு, களியல், பூதப்பாண்டி, குருந்தன்கோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணை பகுதிகளிலும் மழை நீடித்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை பெய்தது. இதையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 38.37 அடியாக இருந்தது. அணைக்கு 378 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 584 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    பெருஞ்சானி அணை நீர்மட்டம் 62.35 அடியாக உள்ளது அணைக்கு 99 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 175 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 11.12 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 11.21 அடியாகவும், மாம்பழத்துறை அணை நீர்மட்டம் 28.87 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 16.60 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 6.60 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-1, பெருஞ்சாணி-7.6, சிற்றாறு-1-37.2, சிற்றாறு-2-38.6, பூதப்பாண்டி-3.5, களியல்-16.4, கன்னிமார்- 2.2, குழித்துறை-2.6, மயிலாடி-7.4, நாகர் கோவில்-28.6 சுருளோடு- 8.4, தக்கலை-47.2, இரணியல்-32, பாலமோர்- 9.8, மாம்பழத்துறையாறு- 35, திற்பரப்பு-83.6, ஆரல்வாய்மொழி-7.4, கோழிப்போர் விளை-75 அடையாமடை-7.6, குருந்தன்கோடு-31.6, ஆணைக்கிடங்கு-32.

    ×