என் மலர்
நீங்கள் தேடியது "திருட்டு வழக்கு"
- பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் மட்டும் அவர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- கடந்த 2013-ம் ஆண்டு சென்னை தி.நகரில் நடந்த திருட்டு சம்பவத்தில் ஞானசேகரன் ஈடுபட்டுள்ளார்.
சென்னை:
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் ஞானசேகரனிடம் விசாரணை நடத்திய போது அவர் திருட்டு உள்பட மேலும் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஞானசேகரன் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் மட்டும் அவர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஞானசேகரன் மீது மேலும் ஒரு திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாம்பலம் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு சென்னை தி.நகரில் நடந்த திருட்டு சம்பவத்தில் ஞானசேகரன் ஈடுபட்டுள்ளார்.
இந்த வழக்கில் அவரை கைது செய்வதற்காக போலீசார் இன்று ஞானசேகரனை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இந்த வழக்கு தொடர்பாக அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
- ஆரல்வாய்மொழி பகுதியில் நடந்த மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் அரவிந்துக்கு தொடர்பு உள்ளதாக போலீசார் அவரை தேடி வந்துள்ளனர்.
- கடந்த 5 நாட்களுக்கு முன் வெளியே சென்ற அரவிந்த் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் போலீசாருக்கு அங்குள்ள கிளாக்குளம் குளத்துக்கரையில் வாலிபர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபர் உடலை மீட்டு யார் அவர்? எந்த ஊரைச் சார்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அவர் இறந்து 4 அல்லது 5 நாட்கள் ஆகி இருக்கலாம் என்றும் தெரியவந்தது. இதன் பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் கூடங்குளம் அருகே உள்ள சவுந்தரலிங்கபுரத்தை சேர்ந்த அரவிந்த் (வயது 29) என்பதும், அவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது என்பதும் தெரிய வந்தது. அரவிந்த் டிரைவர் வேலை பார்த்து வந்துள்ளார்.
ஆரல்வாய்மொழி பகுதியில் நடந்த மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் அரவிந்துக்கு தொடர்பு உள்ளதாக போலீசார் அவரை தேடி வந்துள்ளனர். இதனால் போலீசார் எப்படியாவது தன்னை பிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் அரவிந்த் தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் வெளியே சென்ற அரவிந்த் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இந்நிலையில்தான் அவர் குளத்துக்கரையில் உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். எனவே அவர் போலீசாருக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
- சொரத்தூர் பிரிவு ரோடு அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு சிலர் நடமாடுவதாக துறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
திருச்சி
திருச்சி மாவட்டம் துறையூர் பைபாஸ் சாலையில் உள்ள சொரத்தூர் பிரிவு ரோடு அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு சிலர் நடமாடுவதாக துறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் அங்கு சென்ற போது, 3 பேர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் துறையூர் விநாயகர் தெருவை சேர்ந்த சரனிஷ் (22), போண்டா கார்த்திக் (எ) கார்த்திக் (20), செங்காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த பரத் (24) என்பதும், 3 பேரும் சேர்ந்து துறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டாத்தூர், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மங்கப்பட்டி மற்றும் எரகுடி ஆகிய பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு,திருடிய நகைகளை திருச்சி செங்குளம் காலனியை சேர்ந்த மூர்த்தி (36) என்பவரிடம் கொடுத்து வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சரனிஷ், பரத், கார்த்திக் மற்றும் திருட்டு நகைகளை விற்க உதவிய மூர்த்தி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்த துறையூர் போலீசார், அவர்களிடம் இருந்து சுமார் 20 பவுன் எடையுள்ள தங்க நகைகளை மீட்டனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கடந்த பிப்ரவரி 27-ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை திருடு போனது.
- அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பல்லடம் :
பொங்கலூர் எஸ். ஏ. பி ஸ்டார் ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 60) என்பவரது வீட்டில் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை திருடு போனது. அதுபோல் கொடுவாய், வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த அருணகிரி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து இரண்டேகால் பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது. மேலும் பொங்கலூர் ஏ.எல்.ஆர் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவரது வீட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி வீட்டின் பூட்டை உடைத்து ஐந்தரை பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.90 ஆயிரம் திருடு போனது.
அதுபோல் ஆண்டிபாளையத்தை சேர்ந்த தங்கவேல் என்பவர் மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் அவினாசி பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசனுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட கோவை வெள்ளமடை, வையம்பாளையத்தை சேர்ந்த நாச்சிமுத்து என்பவரது மகன் பால்கார செந்தில் (52), திருப்பூர், சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த சென்னியப்பன் என்பவரது மகன் சுரேந்திரன் (38) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
அது போல் இந்த திருட்டுச் சம்பவத்தில் நகைகளை வாங்கிய கோவை பிரபு நகரை சேர்ந்த பழனியப்பன் என்பவரது மகன் செந்தில்குமார் (49) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 10.50 தங்க நகைகள் மற்றும் மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் 3 பேரையும் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய பால்கார செந்திலின் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- திருட்டு வழக்கில் தொடர்புடைய 2 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- மேற்கண்ட தகவலை மதுரை தெற்குவாசல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜக்குபாய் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை கீழவெளி வீதி, சுங்கம் பள்ளி வாசல், பதிமுத்து இல்லத்தை சேர்ந்தவர் அப்துல்ஹமீது. இவரது மகன் சம்சுதீன் (வயது30). இவர் 2003-ம் ஆண்டு கீழவாசல் பஸ் நிறுத்தம் முன்பு 4 ½ பவுன் நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும் கோர்ட்டில் ஆஜராகாததால் சம்சுதீனை மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளார். இந்த வழக்கில் வருகிற 12-ந் தேதி சம்சுதீன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மற்றொரு வழக்கு
திருப்பூர் முருகப்பாளையபுரம், குமார் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ஸ்டீபன் (37). இவர் 2008-ம் ஆண்டு மதுரை தெற்காவணி மூல வீதி எம்.எஸ். தங்க மாளிகை நகை கடை முன்பு நின்ற இருசக்கர வாகனத்தின் மீது வைத்திருந்த சுமார் 520 கிராம் தங்க நகைகள் கொண்ட பையை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமைறைவாகி விட்டார்.பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும் கோர்ட்டில் ஆஜராகாததால் ஸ்டீபனை மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளார். இந்த வழக்கில் வருகிற 12-ந் தேதி ஸ்டீபன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேற்கண்ட தகவலை மதுரை தெற்குவாசல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜக்குபாய் தெரிவித்துள்ளார்.
- மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் ஜோதி மாரியப்பனை போலீசார் கைது செய்தனர்.
- தப்பிக்க முயன்ற கைதியை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் சிறைக்கு கொண்டு சென்றனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி பாண்டியன். இவரது மகன் கார்த்திக். இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருவள்ளுவர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.
சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து அவர் டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மோட்டார் சைக்கிளை திருடியதாக ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஜோதி மாரியப்பனை கைது செய்தனர்.
பின்னர் அவரை சங்கரன்கோவில் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் அங்கிருந்த மின்விளக்கை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றதாக கூறப்படுகிறது. உடனே அங்கு நின்று கொண்டிருந்த போலீசார், ஜோதி மாரியப்பனை சுற்றி வளைத்து பிடித்தனர். இதைத்தொடர்ந்து அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
- ஆட்டோவை திருட முயன்ற வழக்கில் யுவராஜ் என்ற டேனியை போலீசார் கைது செய்தனர்.
- திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்(வயது36). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அப்பொழுது நாய் கத்தியதால் வெளியே வந்து பார்த்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த ஆட்டோவை தள்ளிக் கொண்டு சென்றதைப் பார்த்து திருடன்! திருடன்! என்று கூச்சலிட்டார். இதனால் அந்த மர்ம நபர் ஆட்டோவை நடுரோட்டில் விட்டுவிட்டு தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து குறித்து வினோத் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் அந்த நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஆட்டோவை திருட வந்தவர் மாகரல் கிராமம், எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்ற டேனி(வயது28) என்பது தெரியவந்தது. எனவே, போலீசார் அந்த வாலிபரை கைது செய்து வெங்கல் காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் யுவராஜ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 24 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. எனவே,அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.
நேற்று இரவு மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் குற்றவாளியை போலீசார் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். சிறைச்சாலை அருகே சென்றபோது யுவராஜ் தான் இரண்டு உடைந்த பிளேடுகளை விழுங்கி விட்டதாக போலீசாரிடம் கூறினார். இதனால் போலீசார் உடனடியாக அவரை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- பணங்களை வசூல் செய்து வேனில் கொண்டு வருவது வழக்கம்
- பணத்தை திருடிக்கொண்டு சென்று விட்டனர்
பல்லடம் :
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள நல்லசெல்லிபாளை யத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரதுமகன் ராஜசேகர்(வயது 47). இவர் பல்வேறு இடங்களுக்கு பருப்புகளை கொண்டு சென்று மொத்தமாக விற்பனை செய்துவிட்டு பணங்களை வசூல் செய்து வேனில் கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் 27-ம் தேதி பொள்ளாச்சியில் இருந்து ஈரோடு செல்வதற்காக கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்துள்ளனர். அப்போது பொங்கலூரை அடுத்த அவினாசிபாளையம் அருகே உள்ள ஒரு பேக்கரியில் வாகனத்தை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பல்வேறு இடங்க ளில் வசூல் செய்த ரூ.19 லட்சத்து 54 ஆயிரத்தை ஒரு பேக்கில் வைத்து வாகனத்தில் உள்ளே வைத்து சென்றனர். இதை நோட்டமிட்ட மர்ம நப ர்கள் டீ குடித்து விட்டு வருவதற்குள் அந்த பணத்தை திருடிக்கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து ராஜசேகர் அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரி வித்தார். புகாரின் அடி ப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் அந்த பணத்தை திருடிச் செல்வது பதிவாகியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனி ப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசார் அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிரு ந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் இந்த வழக்கில் சம்பந்த ப்பட்டது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்து போலீசார் மேற்கொ ண்டு உடன் வந்த 2 நபர்கள் மற்றும் பணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள போலீஸ் புறக்காவல் மையத்தில் இருவரையும் அமர வைத்தனர். அப்போது போலீசார் அசந்த நேரத்தில் சுகன், தமிழ்செல்வி தப்பி சென்று விட்டனர்.
- அரக்கோணம் பகுதியில் கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மின்னல் காலனியை சேர்ந்தவர் மாணிக்கம் . இவரது மனைவி சுசீலா (வயது 70).
இவர் வீட்டை பூட்டி விட்டு காட்டுப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். இதனை நோட்டமிட்டு பூட்டை திறந்து நகை, பணத்தை திருடி சென்று விட்டனர்.
திருடிய ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.58 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். பணம் எடுத்தது குறித்து சுசிலா செல்போனுக்கு தகவல் வந்தது.
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசில் சுசிலா புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் பாராஞ்சி கிராமம் அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்த சுகன் (25), இவரது மனைவி தமிழ்ச்செல்வி (22) ஆகியோர் சுசீலாவின் வீட்டுக் கதவை திறந்து மூக்குத்தி மற்றும் ஏ.டி.எம். கார்டை திருடியது தெரியவந்தது. கணவன்-மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களை பரிசோதனை செய்து உடல் சான்று பெறுவதற்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள போலீஸ் புறக்காவல் மையத்தில் இருவரையும் அமர வைத்தனர். அப்போது போலீசார் அசந்த நேரத்தில் சுகன், தமிழ்செல்வி தப்பி சென்று விட்டனர்.
இதை சற்றும் எதிர்பாராத போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் ரெயில் நிலையம், பஸ்நிலையம் போன்ற இடங்களில் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரக்கோணம் பகுதியில் கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அவிநாசி பாளையத்தில் வேனை நிறுத்திவிட்டு டீ சாப்பிட சென்றார்.
- ஐந்து லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் :
ஈரோடு மாவட்டம் கொடுமுடி நல்லசெல்லி பாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகர்,47; பருப்பு வியாபாரி. அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம்,45 என்பவரிடம் பொள்ளாச்சியில் பருப்பு விற்ற பணத்தை வாங்கி வருமாறு கூறியுள்ளார். இவர் கடந்த மாதம், 27ல் பொள்ளாச்சி சென்று பணத்தை வசூல் செய்து விட்டு வரும் வழியில், பொங்கலுார், அவிநாசி பாளையத்தில் வேனை நிறுத்திவிட்டு டீ சாப்பிட சென்றார். பின், வந்து பார்த்த பொழுது வேனில் வைத்திருந்த, 19.54 லட்சம் ரூபாயை காணவில்லை.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் அவிநாசிபாளையம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கடந்த மே, 5ல் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபு, 26 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஐந்து லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அவருடன் பணத்தை திருடி சென்ற மேலும் இருவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அவிநாசிபாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்துக்கிடமான நபரை பிடித்து விசாரித்தனர்.
அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். அவரிடம் மேலும் விசாரித்ததில், அவர் கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் ராமு, 25 என்பதும், பணம் திருடிய வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
- மோகனுக்கு ஜாமீன் கிடைத்தது. அவர் செங்கல்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார்.
- போலீசார் ஜெயில் வாசல் முன்பே வேறொரு திருட்டு வழக்கில் மோகனை கைது செய்ய முயன்றனர்.
செங்கல்பட்டு:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சங்கராபுரத்தை சேர்ந்தவர் மோகன் (32). வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்போரூர் அடுத்த ஏகாட்டூர் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கும் விடுதிகளில் லேப்-டாப் மற்றும் செல்போன்கள் திருடு போனது.
இந்த வழக்கு தொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏகாட்டூர் பகுதியில் இரவு நேரத்தில் சுற்றி திரிந்த மோகனை கைது செய்து செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே மோகனுக்கு ஜாமீன் கிடைத்தது. அவர் செங்கல்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்காக அவரது மனைவி, மகனுடன் வந்து இருந்தார். அவர்களுடன் வக்கீலும் இருந்தார்.
ஜெயிலில் இருந்து மோகன் வெளிய வந்ததும் அவரை பாசத்துடன் மனைவி கட்டி அணைத்து வரவேற்றார். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
அப்போது அங்கு சாதாரண உடையில் இருந்த கேளம்பாக்கம் போலீசார் ஜெயில் வாசல் முன்பே வேறொரு திருட்டு வழக்கில் மோகனை கைது செய்ய முயன்றனர். அவர்கள் மோகனை வலுக்கட்டாயமாக அவர்களது வாகனத்தில் ஏற்ற இழுத்து சென்றனர். இதனை கண்ட மோகனின் மனைவி அதிர்ச்சி அடைந்தார். அவர் கணவரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தார். மேலும் அவரது வக்கீலும் பிடிவாரண்டு இல்லாமல் எப்படி கைது செய்யமுடியும்? பிடிவாரண்டை காட்டிவிட்டு மோகனை அழைத்து செல்லுங்கள் என்றார்.
எனினும் இதனை போலீசார் கண்டு கொள்ளாமல் மோகனை தங்களது வாகனத்தில் ஏற்றி செல்வதில் மும்முரமாக இருந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் கணவரை காப்பாற்ற என்ன செய்வது என்று தெரியாமல் மோகனின் மனைவி தவித்தார்.
திடீரென அவர் தனது கணவர் மோகனை கட்டி அணைத்தபடி கதறி அழுதார். மேலும் தனது மகனையும் ஒரு கையில் வைத்தபடி போலீசாரிடம் கெஞ்சினார். இதனால் ஜெயில் வாசல் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. கணவரை காப்பாற்ற வேண்டும் என்ற மனைவியின் பாசப்போட்டம் அங்கிருந்தவர்களின் மனதை கனக்க செய்தது.
இந்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் தவித்து நேரத்தில் கணவர் மோகனை அழைத்துக்கொண்டு அவரது மனைவி மகனுடன் வேறொரு காரில் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் மோகனை கைது செய்ய வந்த போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, ஏகாட்டூர் பகுதியில் உள்ள விடுதிகளில் 100-க்கும் மேற்பட்ட லேப்டாப் மற்றும் செல்போன்கள் திருடு போனதாக புகார்கள் வந்து உள்ளன. இதுபற்றி மோகனிடம் விசாரிக்க முடிவு செய்து வந்தோம் என்றனர்.
- உமா பிரசாத் ஆந்திராவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது.
- திருவனந்தபுரம் விமான நிலையத்தின் வெளியே போலீசார் மறைந்து நின்று கண்காணித்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் போர்ட் மற்றும் பேட்டை போலீஸ் நிலையங்களின் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்தது. அந்த வீடுகளில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த சம்பவங்கள் குறித்து போர்ட் மற்றும் பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். கொள்ளையில் ஈடுபட்ட நபரை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் கொள்ளையில் ஈடுபட்ட நபர் யார்? என்பதை கண்டறிய முடியவில்லை.
ஆகவே கொள்ளை சம்பவம் நடந்த வீடுகள் இருந்த பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் ஒரு நபர் ஆட்டோவில் சந்தேகப்படும் வகையில் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து அந்த ஆட்டோவின் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள ஓட்டலில் இருந்து வாலிபர் ஒருவரை அழைத்து வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அந்த ஓட்டலுக்கு சென்ற போலீசார், அந்த வாலிபரை பற்றி விசாரித்தனர்.
அதில் அவர், ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த உமா பிரசாத் (வயது 32) என்பதும், ஆந்திராவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அடிக்கடி வந்து சென்றதும் தெரிய வந்தது. ஆகவே திருவனந்தபுரத்தில் நடந்த திருட்டு சம்பவங்களில் அந்த வாலிபருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதினர்.
அவர் எப்படியும் திருவனந்தபுரத்திற்கு மீண்டும் வரலாம் என்று கணித்த போலீசார், அவரது வருகையை கண்காணித்தனர். இந்நிலையில் வாலிபர் உமா பிரசாத் ஆந்திராவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வருவது போலீசாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து திருவனந்தபுரம் விமான நிலையத்தின் வெளியே போலீசார் மறைந்து நின்று கண்காணித்தனர். அப்போது அங்கு வந்த உமா பிரசாத்தை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் திருவனந்தபுரத்தில் பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஆந்திர மாநிலத்தில் சிறு சிறு திருட்டுகளில் உமா பிரசாத் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவர் மீது பல திருட்டு வழக்குகள் ஆந்திராவில் உள்ளன. இந் நிலையில் கேரள மாநிலத்தில் திருட்டில் ஈடுபட அவர் திட்டமிட்டார்.
அதன்படி அவர், ஆந்திர மாநிலத்தில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரத்திற்கு வந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். முதலில் அவர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ஆட்டோவில் சென்று அந்த பகுதியில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிடுவார். அவ்வாறு நோட்டமிடும் போது, பூட்டியுள்ள வீடுகளின் முகவரியை குறித்து கொள்வார்.
பின்பு இரவு நேரத்தில் அந்த வீடுகளுக்கு கூகுள் மேப்பை பயன்படுத்தி வந்து, கதவை உடைத்தோ அல்லது ஜன்னல் கம்பிகளை வளைத்தோ வீடுகளுக்கு புகுந்து நகைகளை கொள்ளையடித்திருக்கிறார். கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதும், கொள்ளையடித்த நகைகளுடன் மீண்டும் ஆந்திராவிற்கு விமானத்தில் சென்று விடுவார்.
கடந்த மே மாதம் முதல் அவர், திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வந்து இதேபோல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டபடி இருந்துள்ளார். கொள்ளையடிக்கும் நகைகளை ஆந்திராவிலேயே விற்று, அதில் கிடைக்கும் பணத்தின் மூலம் அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
ஆந்திராவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சுற்றுலா பயணியை போன்று விமானத்தில் வந்து சென்றபடி இருந்துள்ளார். அதற்கு தகுந்தாற்போல் ஒவ்வொரு முறையும் திருவனந்தபுரம் வரும்போது, முதலில் சுற்றுலா தலங்களுக்கு செல்வார். அதன் பிறகே ஏதாவது பகுதிக்கு சென்று பூட்டி இருக்கும் வீடுகளை கண்டறிந்து கைவரிசை காட்டி இருக்கிறார்.
மேற்கண்ட தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவர், திருவனந்தபுரத்தில் எத்தனை வீடுகளில் திருட்டில் ஈடுபட்டார் என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் ஆந்திராவில் அடகு கடைகளில் விற்ற நகைகளை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.