search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 226978"

    • சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப்பண்டிகை நடக்கும்போது அரசு பொருட்காட்சி, போஸ் மைதானத்தில் நடத்தப்படும்.
    • கடந்த 28-ம் தேதியில் இருந்து நேற்று வரை 15 நாளில் பொருட்காட்சிக்கு 41,479 பேர் வந்துள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 91 ஆயிரத்து 695 ரூபாய் வசூலாகியுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப்பண்டிகை நடக்கும்போது அரசு பொருட்காட்சி, போஸ் மைதானத்தில் நடத்தப்படும்.

    ஆனால் தற்போது கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணி நடந்து வருவதாலும், ேபாஸ் மைதானத்தில் தற்காலிக பழைய பஸ் நிலையம் செயல்பட்டு வருவதாலும் அரசு பொருட்காட்சியை சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மைதானத்திற்கு மாற்றினர்.

    நடப்பாண்டு கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பண்டிகை திருவிழா நடந்து முடிந்த நிலையில் கடந்த 28-ந்தேதி புதிய பஸ் நிலைய மாநகராட்சி மைதானத்தில் அரசு பொருட்காட்சி ெதாடங்கியது. இதில் அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை பார்க்க சேலம் மாநகர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் மக்கள் வந்து செல்கின்றனர்.

    நுைழவு கட்டமாக பெரியவர்களுக்கு ரூ.15-ம், 5 வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ரூ.10-ம் வசூலிக்கப்படுகிறது. 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது. கடந்த 28-ம் தேதியில் இருந்து நேற்று வரை 15 நாளில் பொருட்காட்சிக்கு 41,479 பேர் வந்துள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 91 ஆயிரத்து 695 ரூபாய் வசூலாகியுள்ளது.சேலம் அரசு பொருட்காட்சியை இதுவரை 41 ஆயிரம் பேர் பார்வைசேலம் அரசு பொருட்காட்சியை இதுவரை 41 ஆயிரம் பேர் பார்வை

    • பல இடங்களில் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் மட்டும் பெயரளவுக்கு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு செய்யப்பட்டது.

     பல்லடம் :

    கோவையிலிருந்து ஒட்டன்சத்திரம் செல்வதற்காக, முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவையில் இருந்து காரில் ஒட்டன்சத்திரம் செல்லும் வழியில் பல்லடம் பஸ் நிலையம் முன்பு அவருக்கு அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எடப்பாடிபழனிசாமி பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 15 அமாவாசைகள் கடந்துவிட்டன. மீதம் 45 அமாவாசைகள்உள்ளது. திட்டங்களை நிறைவேற்ற ஆய்வுக்குழு போடப்பட்டுள்ளதாக ஆட்சியாளர்கள் சொல்லுகிறார்கள் .ஆனால் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.குழுக்களை அமைத்து மக்களை ஏமாற்றுகின்ற வேளையில் அரசு ஈடுபட்டுள்ளது என்று எண்ணத் தோன்றுகின்றது. இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் திட்டம், கேஸ் சிலிண்டர் வாங்க ரூ. 100 மானியம் திட்டம், கல்வி கடன் ரத்து இது போல பல திட்டங்களுக்கு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. அவை யாவும் நிறைவேற்றப்படவில்லை .முதியோர் உதவித்தொகை அதிகரிக்கப்படும் என்று சொன்னார்கள் . ஆனால் பல இடங்களில் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல்,விலையை பல்வேறு மாநிலங்களில், மாநில அரசாங்கங்களால் விலை குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் பெயரளவுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டது. மக்கள் பயன்பெறும் வகையில் விலை குறைப்பு செய்யப்படவில்லை. கேட்டால் நிதி நிலை சரியில்லை என்கிறார்கள் . மக்கள் பயன்படக்கூடிய எந்த திட்டமும் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. சொத்து வரியும் உயர்த்திவிட்டனர். மின் கட்டணத்தையும் உயர்த்த உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில்முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி,. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், எம். எஸ். எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,கரைப்புதூர் நடராஜன், மாவட்ட அவைத்தலைவர் சிவாச்சலம், பொருளாளர் அரிகோபால், பல்லடம் தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ், பொங்கலூர் ஒன்றிய செயலாளர்கள் யூ.எஸ். பழனிச்சாமி, காட்டூர் பிரகாஷ், பல்லடம் நகரச் செயலாளர் ராமமூர்த்தி,மற்றும் பானுபழனிசாமி, அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
    • தஞ்சையில் இன்று புதிய பஸ்நிலை அருகே உள்ள ஒரு மஹாலில் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது.‌

    தஞ்சாவூர்:

    தமிழக பட்ஜெட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதன்படி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம்- புதுமைப்பெண் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த திட்டத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

    முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.

    தஞ்சையில் இன்று புதிய பஸ்நிலை அருகே உள்ள ஒரு மஹாலில் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது.‌

    சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி அகன்ற திரையில் ஒளிபரப்பப்பட்டது. முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததும் மாணவிகளுக்கு கையேடு அடங்கிய பை வழங்கப்பட்டது.

    அதில் ஏ.டி.எம். கார்டு, புதுமைப்பெண் திட்டத்தின் விளக்கம் கையேடு, மேல்படிப்பு படிப்பதற்கான கையேடு ஆகியவை அடங்கி இருந்தது.

    தஞ்சையில் 472 மாணவிகளுக்கு இந்த வரவேற்பு கையேடு அடங்கிய பையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு இந்த பை வழங்கப்பட்டது.

    மொத்தம் தஞ்சை மாவட்டத்தில் 3765 மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.

    தஞ்சையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். கூடுதல் கலெக்டர் சுகபுத்திரா வாழ்த்துரை வழங்கினார்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், ஜவாஹிருல்லா, தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • போலீசார் தகராறில் ஈடுபட்ட வாலிபர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்
    • வீட்டில் இருந்து பொருட்கள் வாங்குவதற்காக குழித்துறை வந்தபோது விபத்து

    நாகர்கோவில்:

    குழித்துறை அருகே ஈத்தவிளை பகுதியை சேர்ந்தவர் முத்தையன் (வயது 63). இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து பொருட்கள் வாங்குவதற்காக குழித்துறை வந்தார்

    பின்னர் பொருட்கள் வாங்கிவிட்டு முத்தையன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கோணம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முத்தையனை அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் (27) தடுத்து நிறுத்தி தகராறு செய்தார். அப்போது முத்தையனிடம் ஸ்ரீஜித் குடிக்க பணம் கேட்டார்.முத்தையன் பணம் கொடுக்காததால் அவரை பிடித்து ஸ்ரீஜித் கிழே தள்ளியுள்ளார்.இதில் முத்தையன் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் முத்தையன் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த முத்தையன் உயிருக்கு போராடினார்.இதை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முத்தையனை பரி சோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து களியக்காவிளை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள். இதுகுறித்து முத்தையன் மகன் சுஜின் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஸ்ரீஜித் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • தற்போது எல்லா விதமான பொருட்களின் மீதும் மத்திய அரசு வரி போட்டு உள்ளது.
    • வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் என மத்திய அரசு கூறி வருகிறது.

    தஞ்சாவூர்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய பிரசார இயக்கம் நடந்து வருகிறது.

    அதன்படி இன்று தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் வடிவேலன் தலைமையில் பிரச்சார இயக்கம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், மூத்த தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மத்திய குழு உறுப்பினர் வாசுகி கலந்து கொண்டு பேசியதாவது:-

    நாட்டில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான ஆட்சியின் தவறான கொள்கைகளே காரணமாகும்.

    பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு உள்ளிட்ட பல வகையான பொருட்களின் விலையை மத்திய அரசை தொடர்ந்து உயர்த்தி கொண்டே செல்கிறது.

    இதற்கு தீர்வு தான் என்ன என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் விளக்கங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் தான் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தி வருகிறோம்.

    சமீபத்தில் நடந்த 75-வது சுதந்திர தின விழாவில் நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன, அவற்றை தீர்ப்பதற்கு நாங்கள் என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்று தான் பிரதமர் பேசி இருக்க வேண்டும்.

    ஆனால் பிரதமர் அவ்வாறு பேசவில்லை.

    தற்போது எல்லா விதமான பொருட்களின் மீதும் மத்திய அரசு வரி போட்டு உள்ளது.

    வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் என மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் தற்போது பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படியாக தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது.

    பிறகு எப்படி வேலை கொடுப்பீர்கள். விவசாயிகள் போராடினால் தற்காலிகமாக வாக்குறுதி கொடுத்துவிட்டு அவர்கள் போராட்டம் முடிந்த பின்னர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்து அடிக்கிறது மத்திய அரசு. விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தீர வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே சாத்தியமாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க உள்ளோம்.
    • தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற தலைப்போடு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

    திருப்பூர் :

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- திராவிட அரசாங்கம் பெரியாரை பற்றி கட்டுரை போட்டி நடத்த வேண்டும் என பள்ளிகல்வி துறை அதிகாரிகள் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும் , சுதந்திரம் வேண்டாம் என்றும் சொன்னவர் பெரியார். அவர் வரலாறை பாடத் திட்டத்தில் கொண்டு வர சதி திட்டம் உள்ளது.இதற்கு இந்து முன்னனி கண்டனங்களை தெரிவித்து கொள்கிறது . மேலும் , தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க உள்ளோம். திருப்பூரில் 1200 இடங்களில் வைத்து வழிபட உள்ளோம். பிரிவினைவாதத்தை முறியடிப்போம் தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற தலைப்போடு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

    திருப்பூரில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையும் , கோவையில் எச்.ராஜா போன்றோரும் கலந்து கொள்ள உள்ளனர் .வீடுகளில் விநாயகர் சிலைகள் வைப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.1983 ஆம் ஆண்டு முதல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது முதலே அ.தி.மு.க., தி.மு.க., இரண்டு அரசாங்கமும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை தடை செய்ய நினைத்தார்கள். அதனை தாண்டி தான் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வந்தோம். இந்த ஆண்டு நடைபெறும் விழாவிற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும் .

    மேலும், பங்களாதேஷ் போன்ற நாட்டிலிருந்து வருபவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருக்கிறார்கள். திருப்பூர் போன்ற ஊர்களில் மாவோயிஸ்ட்டுகள் இருக்கிறார்கள். தமிழகம் குறிவைக்கப்பட்டு எந்நேரமும் கலவரம் வரும் என்ற சூழல் நிலவுகிறது. உளவுத்துறை சரிவர செயல்படுவதில்லை .இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆகஸ்டு 25 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் எஸ்.எம். ஆர்.வி. அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2022-ம் ஆண்டு சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண் ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 18.08.2022 முதல் 25.08.2022 வரை விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வி தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி (ஆடை தயாரித்தல் தொழிற்பிரிவு மட்டும்) மற்றும் 10-ம்வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் விண் ணப்பிக்கலாம். குறைந்த பட்ச வயது வரம்பு 15 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

    தகுதிவாய்ந்த மாணவி கள் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல் லாத தொழிற்பிரிவுகளான கம்மியர் மின்னணுவியல், டெஸ்க் டாப் பப்ளிசிங் ஆப்ரேட்டர், கம்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் புரோ கிராம் அசிஸ்டெண்ட், ஆடை தயாரித்தல் (எட் டாம் வகுப்பு தேர்ச்சி), சுருக்கெழுத்து (ஆங்கிலம்), நவீன ஆடை வடிவமைப்பு தொழிற்நுட்பம், மருத்துவ மின்னணுவியல்நுட்பவிய லாளர் ஆகிய தொழிற்பிரி வில் சேர்ந்து பயிற்சி பெற லாம். பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம்

    மாணவிகள் தொழிற் கல்வி சேர்க்கைக்கு 18.08.2022 முதல் 25.08.2022 வரை நாகர்கோவிலில் பொதுப்பணித்துறை சாலையில், வேப்பமூடு ஜங்சன் அருகில் உள்ள எஸ்.எம்.ஆர்.வி. அரசினர் தொழிற்பயிற்சி நிலையத் திற்கு (மகளிர்) நேரில் வந்து இலவசமாக விண் ணப்பிக்கலாம்.

    பயிற்சி பெறுபவர் களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் விலை யில்லா மடிக்கணினி, மிதி வண்டி, சீருடை, பாட புத்தகங்கள். காலணி. மாதந்தோறும் வருகைக் கேற்ப ரூ.750 உதவித் தொகை மற்றும் கட்டண மில்லா பேருந்து சலுகை வழங்கப்படும்.

    அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரைபடித்த மாணவிகளுக்கு கூடுத லாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.மேலும் பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை மற்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்து றையின் கீழ் செயல்படும் விடுதிகளில் தங்கி பயிற்சி பெற வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் தொழிற்பிரிவில் படிக்கும் போதே பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சி உதவி தொகையுடன் வழங்கப்படும்.

    பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற் கும் ஏற்பாடு செய்து தரப்ப டும். www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவ ரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ.50-ஐ விண்ணப்பதாரர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், கூகுள் பே வாயிலாக செலுத்தலாம்.

    இது தொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், 'அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் கலந் தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு காலியிடங்களை நிரப்பிடும் பொருட்டு விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 25 வரை கால நீட்டிப்பு செய் யப்பட்டுள்ளது. விண்ணப் பங்கள் www.skilltraining. tn.gov.in என்ற இணையத ளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை ஆகும்.

    பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கட்டண மின்றி பயிற்சிகள் வழங்கப் பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்க ளில்சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை மாதம் ரூ.750, பேருந்து கட்ட ணச் சலுகை, மிதிவண்டி, மடிக்கணினி, பாடப்புத்த கங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், 2 செட் சீருடை கள், செட் காலணிகள் அரசால் வழங்கப்படுகிறது.

    மேலும் விபரங்களுக்கு நாகர்கோவிலில், கோணம் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரை நேரில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அப்போது குறிப்பிட்ட காலத்திற்குள் தரமான அளவில் பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
    • இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் இந்த கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி வளாகத்தில் அரசு ஆதிதிராவிடர் நல 50 கல்லூரி மாணவிகள் விடுதி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.126.09 லட்சம் மதிப்பீட்டில் இந்த கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் இந்த கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார். சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா தலைமையில் உறுப்பினர்கள் முத்துராமலிங்கம், கிருஷ்ணசாமி , தமிழரசி, தளபதி, நாகை மாலி, நிவேதா முருகன், பாலாஜி, ஜெயக்குமார் மற்றும் குழுவினர் மாணவிகள் விடுதியை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

    இந்த கட்டுமான பணியை ஒப்பந்தம் எடுத்தவரிடம் பணிகள் எவ்வளவு காலத்தில் முடிக்கப்படும்? தரமான முறையில் நடந்து வருகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டு அறிந்தனர்.

    அப்போது குறிப்பிட்ட காலத்திற்குள் தரமான அளவில் பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

    இதைத் தொடர்ந்து அந்த குழுவினர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருந்து கிடங்கு, நாஞ்சிக்கோட்டை துணை மின் நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் என இச்சாகுபடிக்கு அதிக செலவாகிறது
    • தொடர் மழை காரணமாக சின்ன வெங்காய உற்பத்தி பாதித்தது.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் கிணற்றுப்பாசனத்துக்கு ஆண்டுக்கு இரு சீசன்களில், சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் என இச்சாகுபடிக்கு அதிக செலவாகிறது.கடந்த 2020 மற்றும் கடந்தாண்டு துவக்கத்தில் தொடர் மழை காரணமாக சின்ன வெங்காய உற்பத்தி பாதித்தது.தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாமல் விலை கிலோ 100 ரூபாய் அளவுக்கு உயர்ந்தது. நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பாதிப்பை தவிர்க்க தமிழக அரசு சார்பில், சின்னவெங்காயம் சாகுபடிக்கு ஊக்கமளிக்கப்பட்டது.

    இதனால் சாகுபடி பரப்பு அதிகரித்த நிலையில் கடந்த சீசனில் அறுவடையின் போது விலை வீழ்ச்சி ஏற்பட்டு, பல ஆயிரம் டன் சின்னவெங்காயம் விளைநிலங்களில் இருப்பு வைக்கப்பட்டது.பல மாதங்கள் இருப்பு வைத்தும் விலையில் மாற்றம் இல்லாததால் கிடைத்த விலைக்கு விற்பனை செய்து விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.தற்போது உடுமலை பகுதியில் குறைந்த பரப்பளவில், சாகுபடி செய்யப்பட்ட சின்னவெங்காயம் அறுவடை பணி துவங்கியுள்ளது.

    வியாபாரிகள் தரத்தின் அடிப்படையில், விளைநிலங்களில், கிலோவுக்கு 15 முதல் 25 ரூபாய் வரை விலை கொடுத்து கொள்முதல் செய்து வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- சின்னவெங்காயம் அறுவடையின் போது, விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. கடந்த சீசனில் இருப்பு வைத்தவர்களும், நிலையான விலை கிடைக்காமல், நஷ்டமடைந்தனர். சாகுபடியை கைவிட்டால், அடுத்த சீசனில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்து, நுகர்வோர் பாதிப்பு உருவாகும். இப்பிரச்சினைக்கு தீர்வாக சின்னவெங்காயத்துக்கு நிலையான விலை கிடைக்க செய்ய வேண்டும்.சாகுபடி பரப்பு, உற்பத்தி அடிப்படையில், அறுவடை சீசனில், சின்னவெங்காயத்துக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.இதனால் நிலையான விலை நிலவரம் நிலவி விவசாயிகள், நுகர்வோர் என இருதரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றனர்.

    • சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடி பாளையத்தை சேர்ந்தவர் குமார் இவர் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார்.
    • இவர் கடந்த 4-ந்தேதி ‘கண் காணாத இடத்துக்கு செல்கிறேன், யாரும் என்னை தேட வேண்டாம்’ என வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடி பாளையத்தை சேர்ந்தவர் குமார் (வயது 33). இவர், சேலத்தில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் கணினி தட்டச்சராக பணிபுரிகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் 6 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

    கடந்த 4-ந்தேதி 'கண் காணாத இடத்துக்கு செல்கிறேன், யாரும் என்னை தேட வேண்டாம்' என வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.

    இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஆத்தூர் ஊரக போலீசார், மாயமான அரசு ஊழியர் குமாரை தேடி வருகின்றனர்.

    • சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களைப் பழுது பாா்த்தல், சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-2017-ம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இதற்கான விண்ணப்பத்தை சான்றிதழ் மற்றும் உரிய ஆவணங்களுடன்மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களைப் பழுது பாா்த்தல், சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-2017-ம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவாலயத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகள், தேவாலய கட்டடத்தின் ஆண்டு ஆகியவற்றை கருத்தில் கொண்டு 10- 15 ஆண்டுகள் இருப்பின் ரூ. 1 லட்சமும், 15, -20 ஆண்டுக்குள் இருப்பின் ரூ. 2 லட்சமும், 20 ஆண்டுக்கு மேற்பட்ட தேவாலயத்திற்கு ரூ. 3 லட்சமும் நிதியுதவி வழங்கப்படுகிறது.

    இதற்கான விண்ணப்பத்தை சான்றிதழ் மற்றும் உரிய

    ஆவணங்களுடன்மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பபடிவம் மற்றும் சான்றிதழ் இணை யதள முகவரியில் வெளி

    யிடப்பட்டுள்ளது. இதனைப் படியிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் தலைமையிலான குழு விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதி யின் அடிப்படையில் சிறுபான்மை யினர் நல இயக்குநருக்கு அனுப்பி நிதியுதவி கோரி பரிந்துரை செய்யும்.இந்த நிதி உதவி 2 தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவா்த்தனை மூலம் செலுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுக லாம். இவ்வாறு அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பெரியகொடிவேரி அருகே உள்ள பகுதியில் கோபி வருவாய்த்துறையினருக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலம் 40 ஏக்கர் உள்ளது.
    • பட்டா வழங்கிய இடத்தில் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டாம் என கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் கூடியிருந்த மக்களை கேட்டு கொண்டதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

    டி.என்.பாளையம்:

    பெரியகொடிவேரி கிராமம் சென்றாயன்பாளையம் மலை மாதேஸ்வரன் கோவில் அருகே உள்ள பகுதியில் கோபி வருவாய்த்துறையினருக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலம் 40 ஏக்கர் உள்ளது.

    இந்த நிலத்தில் பெரிய கொடிவேரி கிராமங்களை சேர்ந்த நிலம் இல்லாத 508 நபர்களுக்கு வருவாய்த்துறையினர் சார்பில் ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கே.என்.பாளையம், நரசாபுரம், நாலிட்டேரி பகுதியை சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே பட்டா வழங்கிய இடத்தில், குடிசை அமைத்து ஆக்கிரமிப்பு செய்ய வந்ததாக தெரிகிறது.

    இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு கூடியிருந்த மக்களிடம் வருவாய் துறையில் முறையாக விண்ணப்பம் அளித்தால் மட்டுமே, தகுதி உள்ள நபர்களுக்கு பட்டா வழங்கப்படும்.

    ஏற்கனவே பட்டா வழங்கிய இடத்தில் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டாம் என கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் கூடியிருந்த மக்களை கேட்டு கொண்டதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர், இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    ×