search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227058"

    • எனது சொந்த ஊர் கன்னியாகுமரி. எனது பெற்றோரான அமலன்-தமிழ்செல்வி தம்பதியினருக்கு நான் 3-வது மகன்.
    • இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த நான் சிறு வயதாக இருக்கும் போதே எனது தந்தை சார்மன்சினகா இறந்துவிட்டார்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ராஜசங்கீததெருவைச் சேர்ந்தவர் எழில்குமார் அமலன் (வயது33).

    இவர் ஓட்டல் மேனேஜ் மெண்ட் படித்து முடித்து விட்டு துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அதே ஓட்டலில் இந்தோனேசியாவைச் சேர்ந்த ரினாவதி ராஸ்மன் (வயது31) என்பவரும் வேலை பார்த்து வந்தார்.

    இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்ததால் அடிக்கடி பேசி பழகி வந்தனர். இது நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 11 வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் திருமண பந்தத்தில் இணைய விரும்பினர்.

    இவர்களது காதல் விவகாரம் தெரிய வந்ததும் இருவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் இன்று காலை எழில்குமார் அமலன்-ரினாவதி ராஸ்மன் திருமணம் நடந்தது.

    இந்த திருமண நிகழ்ச்சியில் 2 பேரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தொடர்ந்து மணமகன் எழில்குமார் அமலன் கூறியதாவது:-

    எனது சொந்த ஊர் கன்னியாகுமரி. எனது பெற்றோரான அமலன்-தமிழ்செல்வி தம்பதியினருக்கு நான் 3-வது மகன். 2 அக்காள், ஒரு தம்பி, ஒரு தங்கை உள்ளனர். மீனவ சமூகத்தைச் சேர்ந்த நான் கடலில்மீன்பிடிக்கும் தொழிலுக்குச் செல்லாமல் வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

    ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்த நான், கடந்த 12 வருடங்களுக்கு முன்பு துபாய் நட்சத்திர ஓட்டலில் மேலாளராக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு இந்தோனேசியா வைச்சேர்ந்த ரினாவதி ராஸ்மனும் வேலைபார்த்து வந்தார். எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    கடந்த11 வருடங்களாக காதலித்த நிலையில் எனது சொந்த ஊரான கன்னியாகுமரியில் திருமணத்தை நடத்த முடிவு செய்தேன். இதற்காக காதலி மற்றும் அவரது பெற்றோர், உறவினர்கள் கன்னியாகுமரிக்கு வந்தனர். அவர்கள் அனைவரது ஆசியுடன் இன்று திருமணம் நடந்து முடிந்தது. இது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    மணமகள் ரினாவதி ராஸ்மன் கூறுகையில்,

    இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த நான் சிறு வயதாக இருக்கும் போதே எனது தந்தை சார்மன்சினகா இறந்துவிட்டார். எனக்கு ஒரு அண்ணன், ஒருஅக்காள், ஒரு தங்கை உள்ளனர். தாயார் மினார் மார்பன் பராமரிப்பில் வாழ்ந்து வந்தேன் துபாய் நட்சத்திர ஓட்டலில் பணியாற்றிய போது எழில்குமார்அமலனுக்கும் எனக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 11 வருடங்களாக மனதாரக் காதலித்து வந்தோம். எங்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததால் இன்று நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் என்றார்.

    • விடுமுறை நாட்களில் துணைக்கு வீட்டு வேலைகளில் உதவுங்கள்.
    • துணையின் ஆடை, அலங்காரத்தை பாராட்ட தவறாதீர்கள்.

    காதலித்து திருமண வாழ்க்கையில் இணைந்தவர்கள் தங்கள் காதலை உயிர்ப்புடன் பின் தொடர்வதற்கு ஆர்வம் காண்பிக்க வேண்டும். குடும்ப பொறுப்பு, குழந்தை வளர்ப்பு என எதிர்கொள்ளும் வாழ்க்கை மாற்றங்கள் காதல் தீயை கட்டுப்படுத்தக்கூடும். வேலைக்கு செல்லுதல், குடும்பத்தை நிர்வகித்தல் என ஒரே மாதிரியான வாழ்க்கை முறைக்கு மாறக்கூடும். அப்படி ஒரே மாதிரியான வாழ்க்கை முறைக்கு பழகிவிடும்போது ஒருவித சலிப்பு எட்டிப்பார்க்கும். காதலிக்கும்போது தன்னிடம் காண்பித்த அன்பை இப்போது வெளிப்படுத்துவதில்லை என்ற எண்ணம் துணையிடம் குடிகொண்டுவிடும். சின்னச் சின்ன விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிவிட்டால் போதும். அதுபோன்ற எண்ணங்கள் தோன்றாது. அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    வாரத்திற்கு ஒருமுறை, இல்லாவிட்டால் மாதம் ஒருமுறையாவது வெளி இடங்களுக்கு செல்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அவை ஷாப்பிங், சுற்றுலா, கடற்கரை, பூங்கா, காபி ஷாப் என எந்த இடமாகவும் இருக்கலாம். அங்கு குடும்ப விஷயங்களை தவிர்த்து மற்ற விஷயங்களை பேசுங்கள். காதலித்த நாட்களை பற்றிய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். அந்த நாட்களை மீண்டும் அன்றாட வாழ்வில் நினைவுபடுத்தும் விதமான செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். அவ்வப்போது காதலை வெளிப்படுத்துங்கள். அரவணையுங்கள். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் எந்த அளவுக்கு காதல், அன்பு, அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள்.

    மாதம் ஒருமுறையேனும் துணைக்கு ஆச்சரியம் அளிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள். பரிசு வழங்குவது, திடீரென சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது, துணைக்கு பிடித்தமான விஷயங்களை செய்வது, பிடித்தமான பொருட்களை வாங்கிக்கொடுப்பது என `சர்ப்ரைஸ்' கொடுக்கும் விதத்தில் செயல்படுங்கள். அவை இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகரிக்க உதவும்.

    விடுமுறை நாட்களில் துணைக்கு வீட்டு வேலைகளில் உதவுங்கள். இந்த செயல் அவரின் வேலையை எளிமைப்படுத்தும். அவருடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பையும் வழங்கும். குழந்தைகள், குடும்பத்தினருடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யலாம். குழுவாக நடனம் ஆடலாம். அவை உடல் மற்றும் மன ரீதியாக உற்சாகத்தை வழங்கும். உணர்வு ரீதியாக ஒன்றிணைந்து செயல்படவும் வழிவகுக்கும்.

    காதலித்த சமயத்தில் நடை, உடை, அழகை பராமரிப்பதற்கு எவ்வளவு ஆர்வம் காட்டினீர்களோ அதனையே இப்போதும் பின் தொடருங்கள். மற்றவர்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுக்கொடுக்கவும் அவை உதவும். துணையின் ஆடை, அலங்காரத்தை பாராட்ட தவறாதீர்கள். சின்ன விஷயமாக இருந்தாலும் அவரது செயல்பாடுகளை மனம் திறந்து பாராட்டுங்கள். இன்னும் சிறப்பாக செயல்பட ஊக்குவியுங்கள். அவை கடந்த கால காதலை உயிர்ப்புடன் வைத்திருக்க பக்கபலமாக அமைந்திருக்கும்.

    • ரஞ்சித்துக்கும் அன்னாலுய்சாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
    • காதலர்கள் இருவரும் பெற்றோரின் சம்மதத்துக்காக காத்திருந்தனர்.

    கடலூர் :

    கடலூர் உண்ணாமலை செட்டிசாவடி பத்மாவதி நகரை சேர்ந்தவர் ராஜாமணி. ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவருடைய மகன் ரஞ்சித். என்ஜினீயரிங் படித்துள்ள இவர் கடந்த சில ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனை சேர்ந்த அன்னாலுய்சா என்பவரும் பணிபுரிந்து வந்தார்.

    அப்போது ரஞ்சித்துக்கும் அன்னாலுய்சாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியது. தொடர்ந்து இவர்களது கடல் கடந்த காதல் மலரும் வகையில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    இதையடுத்து காதலர்கள் இருவரும் பெற்றோரின் சம்மதத்துக்காக காத்திருந்தனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு இருவரின் பெற்றோரும் திருமணத்துக்கு பச்சைக்கொடி காட்டியதையடுத்து நேற்று கடலூர் அருகே திருவந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி ரஞ்சித்துக்கும், அன்னாலுய்சாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

    முன்னதாக அன்னாலுய்சா பட்டுச்சேலை அணிந்து மணப்பெண் அலங்காரத்தில் மணமேடையில் வந்து அமர்ந்தார். அதேபோல் பட்டுவேட்டி, சட்டை அணிந்து ரஞ்சித் மணமேடையில் அமர்ந்திருந்தார். பின்னர் புரோகிதர்கள் மந்திரங்கள் கூற, மங்கள வாத்தியம் இசைக்க மணமகன் ரஞ்சித் அன்னாலுய்சாவின் கழுத்தில் தாலி கட்டினார்.

    அப்போது அங்கே நின்ற பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அட்சதையை தூவி மணமக்களை வாழ்த்தினர். பார்க்காமல் காதல், கடிதம் மூலம் காதல், இணைய வழி காதல் என்று இருக்கும் நிலையில் கடலூர் என்ஜினீயர், கடல் கடந்து லண்டன் பெண்ணை காதலித்து இருவீட்டு பெற்றோரின் சம்மதத்துக்காக நீண்ட காலம் காத்திருந்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் மிகுந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×