search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227127"

    • சாக்கடை கழிவுநீர் செல்வதற்கு போதிய சாக்கடை வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
    • குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக கூறி 50க்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 45-வது வார்டு காங்கேயம் ரோடு புளியமரத்தோட்டம் பகுதியில் 25 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் பலதரப்பட்ட கூலி தொழிலாளர்கள் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் செல்வதற்கு போதிய சாக்கடை வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் கூறும்போது , நாங்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் . நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என கூறிக்கொண்டு திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • முதல் கூட்டம் ஏப்ரல் மாதம் நடந்தது. அப்போது மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
    • மாநகராட்சி மேற்கொள்ளும் பணிகளுக்கு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் இன்று நடந்தது. மேயர் பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஸ்குமார், கமிஷனர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.

    முதல் பெண் மேயராக பிரியா பதவியேற்ற பிறகு அவர் தலைமையில் நடந்த 3-வது மாமன்ற கூட்டம் இது.

    முதல் கூட்டம் ஏப்ரல் மாதம் நடந்தது. அப்போது மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    மாநகராட்சி மேற்கொள்ளும் பணிகளுக்கு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும்.

    ஏற்கனவே அனைத்து மண்டல குழுக்களுக்கும் மேயர் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில், 'ஒவ்வொரு மாதமும் 10-ந்தேதிக்குள் மண்டல கூட்டங்களை நடத்தி முடித்து தீர்மானங்களை மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

    மண்டல குழுக்களில் முன் வைக்கப்படும் தீர்மானங்களின் அடிப்படையிலேயே பணிகள் தேர்வு செய்யப்பட்டு மாமன்ற கூட்டத்தில் தீர்மானங்கள் கொண்டு வரப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • சென்னையில் கொரேனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
    • தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் மாநகராட்சிக்கு வருவதில்லை

    சென்னையில் கொரோனா அறிகுறி உள்ள நபர்களின் விவரங்களை தனியார் மருத்துவமனைகள் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

    சென்னையில் கொரேனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

    தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் மாநகராட்சிக்கு வருவதில்லை என்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளோர் விவரங்களும் மாநகராட்சிக்கு வழங்க வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

    • காலை மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் துவரங்காடு பகுதியில் உடைந்து கிடக்கும் குழாயினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த னர்.
    • பணியை துரித மாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    நாகர்கோவில், ஜூன்.17-

    முக்கடல் அணையிலிருந்து பைப் லைன் மூலமாக நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு நாக ர்கோவில் நகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ப்பட்டு வருகிறது.

    அணையில் நீர் மட்டம் குறைவாக இருந்த போதிலும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ள்ளனர்.

    இந்த நிலையில் துவர ங்காடு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்புஏற்பட்டு தண்ணீர் அந்த பகுதியில் வீணாக செல்கிறது.இது தொடர்பாக மாநக ராட்சி மேயர்மகேஷ் மற்றும் அதி காரிகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் துவரங்காடு பகுதியில் உடைந்து கிடக்கும் குழாயினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த னர்.

    பணியை துரித மாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதா வது:-

    முக்கடல் அணையில் இருந்து கிருஷ்ணன் கோவி லுக்கு வரும் பைப்லைனில் துவரங்காடு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. அதை உடனடியாக சீரமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவு பகலாக இந்த பணியை மேற்கொண்டு நாளைக்குள் சிரமைப்பு பணியை முடிக்க அதிகாரிகளுக்கு அறி வுறுத்தியுள்ளேன்.

    இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க ப்படும். நாகர்கோவில் கோட்டாறு சவேரியார் ஆலயத்தில் இருந்து நாராயணகுரு மண்டபம் வரை உள்ள சாலையை ரூ.20 லட்சம் செலவில் சீரமைக்க டெண்டர் விட ப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணி தொடங்கப்படும்.

    கோட்டார் சாலைகளில் மழை நீர் தேங்காதவாறு கழிவுநீர் ஓடைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். இந்த பணிகள் அனைத்தும் ஒரு மாத காலத்துக்குள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×