search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக்கடல் அணையில் இருந்து   நாகர்கோவிலுக்கு குடிநீர் வழங்கும் பிரதான குழாயில் உடைப்பு  மேயர் மகேஷ், அதிகாரிகள் ஆய்வு
    X

    முக்கடல் அணையில் இருந்து நாகர்கோவிலுக்கு குடிநீர் வழங்கும் பிரதான குழாயில் உடைப்பு மேயர் மகேஷ், அதிகாரிகள் ஆய்வு

    • காலை மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் துவரங்காடு பகுதியில் உடைந்து கிடக்கும் குழாயினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த னர்.
    • பணியை துரித மாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    நாகர்கோவில், ஜூன்.17-

    முக்கடல் அணையிலிருந்து பைப் லைன் மூலமாக நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு நாக ர்கோவில் நகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ப்பட்டு வருகிறது.

    அணையில் நீர் மட்டம் குறைவாக இருந்த போதிலும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ள்ளனர்.

    இந்த நிலையில் துவர ங்காடு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்புஏற்பட்டு தண்ணீர் அந்த பகுதியில் வீணாக செல்கிறது.இது தொடர்பாக மாநக ராட்சி மேயர்மகேஷ் மற்றும் அதி காரிகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் துவரங்காடு பகுதியில் உடைந்து கிடக்கும் குழாயினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த னர்.

    பணியை துரித மாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதா வது:-

    முக்கடல் அணையில் இருந்து கிருஷ்ணன் கோவி லுக்கு வரும் பைப்லைனில் துவரங்காடு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. அதை உடனடியாக சீரமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவு பகலாக இந்த பணியை மேற்கொண்டு நாளைக்குள் சிரமைப்பு பணியை முடிக்க அதிகாரிகளுக்கு அறி வுறுத்தியுள்ளேன்.

    இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க ப்படும். நாகர்கோவில் கோட்டாறு சவேரியார் ஆலயத்தில் இருந்து நாராயணகுரு மண்டபம் வரை உள்ள சாலையை ரூ.20 லட்சம் செலவில் சீரமைக்க டெண்டர் விட ப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணி தொடங்கப்படும்.

    கோட்டார் சாலைகளில் மழை நீர் தேங்காதவாறு கழிவுநீர் ஓடைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். இந்த பணிகள் அனைத்தும் ஒரு மாத காலத்துக்குள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×