search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேராசிரியர்"

    • 2013, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
    • இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.

    சென்னை :

    பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் அறிவிப்புக்குரிய தகுதியை பல்வேறு வகையில் பெறவில்லை எனக்கூறி, 152 பேருக்கும் அறக்கட்டளையை நிர்வகித்த ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் நோட்டீஸ் பிறப்பித்தார்.

    மேலும், உதவி பேராசிரியர்கள் தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இந்த நியமனங்கள் தொடர்பாக சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் ஆர்.பிரேமலதா, எஸ்.சாந்தி உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் வக்கீல் ரவிச்சந்தர், சென்னை பல்கலைக்கழகம் சார்பில் வக்கீல் எம்.பழனிமுத்து, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் சந்திரசேகர், எதிர்மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் திலகவதி, வக்கீல்கள் எம்.ரவி, ஜி.சங்கரன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.

    இதையடுத்து, 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேராசிரியர்களின் கல்வித்தகுதியை ஆராய வேண்டும். இவர்களின் கல்விச் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என்று அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.

    இதன்படி, கல்லூரிக் கல்வி இயக்குனர், 254 உதவிப் பேராசிரியர்களின் கல்வித்தகுதியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ஆசிரியர் பணி அனுபவத்துக்காக வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்பட்டு இருந்தது.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், ''தேர்வு நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான சென்னை, காஞ்சீபுரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த 254 உதவி பேராசிரியர்களின் நியமனமும் செல்லாது. உதவிப் பேராசிரியர் நியமனங்களுக்கு அகில இந்திய அளவில் விண்ணப்பங்களை வரவேற்கவில்லை. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, இந்த பதவிக்கான தேர்வும், அதை தொடர்ந்த நடந்த நியமனமும் செல்லாது" என்று கூறியுள்ளார்.

    • குன்றத்தூர் பஸ் நிலையத்தில் நேற்று காலை செருப்புகளுக்கு பாலிஷ் செய்து நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார்.
    • செருப்பு மற்றும் ஷூக்களுக்கு பாலிஷ் செய்து அதில் வரும் தொகையை வைத்து ஆதரவற்ற மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார்.

    குன்றத்தூர்:

    தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் செல்வகுமார். இவர் கடந்த 18 ஆண்டுகளாக விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று செருப்பு மற்றும் ஷூக்களுக்கு பாலிஷ் செய்து அதில் வரும் தொகையை வைத்து ஆதரவற்ற மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார்.

    இந்த நிலையில் குன்றத்தூர் பஸ் நிலையத்தில் நேற்று காலை செருப்புகளுக்கு பாலிஷ் செய்து நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு சென்ற கோவூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் ரூ.10 ஆயிரத்தை வழங்கினார். அதே போன்று குன்றத்தூர் நகர மன்ற தலைவர் சத்தியமூர்த்தியும் நிதி வழங்கினார்கள்.

    இதனை கண்ட அந்த பகுதி மக்கள் தாமாக முன்வந்து தங்களது செருப்புகளுக்கு பாலிஷ் செய்துவிட்டு ஏழை மாணவர்களின் கல்விக்காக நிதிகளை வழக்கினார்கள்.

    ஏழை மாணவர்களின் கல்விக்காக பேராசிரியர் ஒருவர் பொதுமக்களின் செருப்புகளுக்கு பாலிஷ் செய்து நிதி சேகரிப்பதை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    • ராமநாதபுரம் அருகே கல்லூரி பேராசிரியருக்கு சிறந்த ஆய்வாளர் விருது வழங்கப்பட்டது.
    • செய்யது அம்மாள் கல்லூரி இயற்பியல் துறை, திருச்சி ராமன் ஆய்வு குழுமம் இணைந்து 2 நாட்கள் பண்பாட்டுக் கருத்தரங்கு நடத்தியது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை-மதுரை சாலை அருகே உள்ள சருகனி இதயா மகளிர் கல்லூரி, செய்யது அம்மாள் கல்லூரி இயற்பியல் துறை, திருச்சி ராமன் ஆய்வு குழுமம் இணைந்து 2 நாட்கள் பண்பாட்டுக் கருத்தரங்கு நடத்தியது. இதயா கல்லூரி இயற்பியல் துறை தலைவர் ஹெலன் வரவேற்றார். முதல்வர் ஜோதி மேரி தலைமை தாங்கினார். வித்யாகிரி கல்லூரியின் ஆராய்ச்சி ஆலோசகர் சந்திரமோகன் கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார். சர்வதேச அளவில்100-க்கும் மேற்ப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த ஆய்வாளர்கள் காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் திருவாடானையைச் சேர்ந்த கருணாகரன், கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் வளனரசு ஆகியோருக்கு சிறந்த ஆய்வாளர் விருதும், திருச்சி தேசியக் கல்லூரிப்பேராசிரியர் ரவிச்சந்திரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.

    • பேராசிரியர் வீட்டில் கொள்ளையடித்தது வடமாநில கும்பலா? என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி லேக் ஏரியாவை சேர்ந்தவர் பேராசிரியர் பிராங்கிளின் ரூபன் ஜெபராஜ் (வயது 52). இவரது வீட்டில் 56 பவுன் நகைகள் திருடு போனது.

    இது தொடர்பாக மாட்டுத்தாவணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜு, வெள்ளத்துரை அடங்கிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்த னர்.

    அப்போது 2 பேர் முன் கதவு பூட்டை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் செல்வது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் பழைய குற்றவாளிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பேராசிரியர் வீட்டில் கொள்ளை அடித்த கும்பல் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் போல உள்ளது என்று தெரிவித்த னர்.

    பேராசிரியர் வீட்டுக்குள் புகுந்து கொள்ளை அடித்த கும்பல், பீரோவை உடைத்து திருட்டில் ஈடுபட்டு உள்ளனர். இது வட மாநில கும்பலின் கைவரிசைகளில் ஒன்று என்று போலீசார் கருதுகின்றனர். எனவே இந்த கும்பல் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    • பேராசிரியர் வீட்டில் 56 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
    • மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி லேக் ஏரியா பகுதியைச் சேர்ந்தவர் பிராங்கிளின் ரூபன் ஜெபராஜ் (வயது 52). இவர் மதுரை கோரிப்பா ளையத்தில் செயல்படும் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விக்டோரியா ராணி. இவரும் பேராசி ரியராக உள்ளார்.

    இந்த நிலையில் பிராங்கி ளின் ரூபன் ஜெபராஜ் மற்றும் விக்டோரியா ராணி ஆகிய 2 பேரும் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு கல்லூரிக்கு சென்று விட்ட னர். இதனை நேட்ட மிட்ட மர்ம நபர்கள் வீட்டின் முன் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 56 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் பிராங்கி ளின் ரூபன் ஜெபராஜ் மற்றும் விக்டோரியா ராணி ஆகிய 2 பேரும் நேற்று மாலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

    அப்போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. உடனே பிராங்கிளின் லாக்கரை திறந்து பார்த்தார். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த 56 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். இதுதொடர்பாக போலீசார் மேல்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ், உதவி கமிஷனர் சூரக்குமார் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இதற்கிடையே மோப்ப நாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது தெருமுனை வரை ஓடியது. மேலும் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் ரேகைகளை தடயவியல் சேகரித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பேராசிரியர் வீட்டில் நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்ற னர்.

    இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடி யாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜு, வெள்ளத்துரை தலைமை யில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி, அவற்றில் இடம் பெற்றுள்ள காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் பேராசிரியர் வீட்டின் முன்கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணைைய முடுக்கி விட்டுள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர்திடீரென பேராசிரியை கத்தியால் குத்தியதுடன் கழுத்தில் கிடந்த 7 1/2 பவுன் நகையை பறித்துக் கொண்டு வேகமாக தப்பினர்.
    • திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காங்கயம் ரோடு பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா தேவி (வயது 40). தனியார் கல்லூரி பேராசிரியை. அதிகாலை காங்கயம் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.

    அப்போது தனியார் பள்ளி அருகே சென்றபோது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர்திடீரென பேராசிரியை கத்தியால் குத்தியதுடன் அவரை மிரட்டி கழுத்தில் கிடந்த 7 1/2 பவுன் நகையை பறித்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து தப்பினர். காயம் அடைந்த பேராசிரியை சத்தம் போட்டார். உடனே அப்பகுதி மக்கள் மஞ்சுளாதேவியை மீட்டு திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இது தொடர்பாக மஞ்சுளாதேவி அளித்த புகாரின் பேரில், திருப்பூர் நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • சாகிர்உசேன் கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.
    • கணித பேராசிரியை கல்பனா பிரியா தொகுத்து வழங்கினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரியில் ஆய்வக திறப்பு, கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழாவாக நடந்தது. முதல்வர் முஹம்மது முஸ்தபா வரவேற்று ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.

    கல்லூரி செயலர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முஹம்மது உசைன் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

    ஆட்சிக்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி ஆகியோர் பேசினர். உடற்கல்வி துறை ஆண்டறிக்கையை உடற்கல்வி இயக்குனர் கோகுல் சமர்ப்பித்தார். கல்லூரி சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் ஷபினுல்லாஹ் கான் உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    பொருள் அறிவியல் உதவிப்பேராசிரியர் சுரேஷ் குமார் நன்றி கூறினார். கணித பேராசிரியை கல்பனா பிரியா தொகுத்து வழங்கினார்.

    ×