என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பேராசிரியர் வீட்டில் கொள்ளையடித்தது வடமாநில கும்பலா?
- பேராசிரியர் வீட்டில் கொள்ளையடித்தது வடமாநில கும்பலா? என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
மதுரை
மதுரை மாட்டுத்தாவணி லேக் ஏரியாவை சேர்ந்தவர் பேராசிரியர் பிராங்கிளின் ரூபன் ஜெபராஜ் (வயது 52). இவரது வீட்டில் 56 பவுன் நகைகள் திருடு போனது.
இது தொடர்பாக மாட்டுத்தாவணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜு, வெள்ளத்துரை அடங்கிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்த னர்.
அப்போது 2 பேர் முன் கதவு பூட்டை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் செல்வது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் பழைய குற்றவாளிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பேராசிரியர் வீட்டில் கொள்ளை அடித்த கும்பல் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் போல உள்ளது என்று தெரிவித்த னர்.
பேராசிரியர் வீட்டுக்குள் புகுந்து கொள்ளை அடித்த கும்பல், பீரோவை உடைத்து திருட்டில் ஈடுபட்டு உள்ளனர். இது வட மாநில கும்பலின் கைவரிசைகளில் ஒன்று என்று போலீசார் கருதுகின்றனர். எனவே இந்த கும்பல் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.