search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "களியக்காவிளை"

    • கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்
    • களியக்காவிளை பகுதியில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்களால் மக்கள் பீதி

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே உள்ள நெடுங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய பிரகாஷ். இவருடைய மனைவி உஷாமேரி.

    இவர் பனங்காலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.தினமும் மாலை பள்ளி முடிந்த பிறகு களியக்கா விளை பஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து செல்வது வழக்கம்.

    நேற்று மாலை உஷாமேரி பஸ்சில் களியக்காவிளை பஸ் நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் வந்தனர்.

    அவர்கள் உஷாமேரியின் அருகில் வந்து முகவரி கேட்பது போல் ஒரு பேப்பரை காட்டி உள்ளனர். அதனை வாங்கி பார்த்த போது மர்ம நபர்களில் ஒருவன் உஷாமேரியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்தான்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த உஷாமேரி திருடன்....திருடன்... என கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் நகையுடன் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து களியக்கா விளை போலீஸ் நிலைய த்தில் உஷாமேரி புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த களியக்காவிளை போலீசார் ஆசிரியையிடம் நகை பறித்த மர்மநபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். களியக்காவிளை பகுதியில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்க ளால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    • தண்ணீர் கேட்பது போல் கைவரிசை
    • களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் குட்டப்பன் அவருடைய மனைவி லீலா (வயது 66).

    இவர்கள் மடிச்சல் பகுதியில் மகன் வீட்டில் தங்கி உள்ளனர். நேற்று காலை மகன் வேலைக்கு சென்று விட்டார். மருமகளும், பிள்ளையும் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். லீலா வீட்டின் முன் நிற்கும்போது இருசக்கர வாகனத்தில் 2 பேர் வந்துள்ளனர்.

    அதில் ஒருவன் கீழே இறங்கி மூதாட்டியிடம் தண்ணீர் கேட்பது போல் பக்கத்தில் வந்துள்ளான். அப்போது அவன், லீலா கழுத்தில் கிடந்த 8 பவுன் செயினை பறித்துள்ளான். ஆனால் அவர் விடாமல் செயினை பிடித்துக் கொண்டு திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு வீட்டின் உள் படுத்திருந்த கணவரும் அக்கம் பக்கத்தினரும் ஓடி வரவே கொள்ளை யர்கள் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர். அப்போது அவர்களது கையில் 5 பவுன் நகை சிக்கிக் கொண்டது. அதனுடன் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர். லீலா கையில் 3 பவுன் நகை கிடைத்தது.

    இது குறித்து லீலா கொடுத்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அருகில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

    • நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டு மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம் மெது கும்மல் பகுதியை சேர்ந்த வர் ராஜன், தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 4 பிள்ளைகள் உள்ளனர்.

    மெதுகும்மல் பகுதியில் வசித்து வந்த ராஜன் கடந்த சில மாத காலமாக நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இந்த நிலையில் சென்னை யில் வசிக்கும் ராஜனின் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது. எனவே மகள் மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக ராஜனின் மனைவி சென்னை சென்று உள்ளார்.

    இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜன் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். காலையில் வேலைக்கு செல்வதற்கு பக்கத்தில் உள்ளவர்கள் ராஜன் வீட்டில் வந்து கூப்பிட்டுள்ளனர்.

    ராஜனிடம் இருந்து எந்த பதிலும் வராததினால் சந்தேகமடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அவர் தூக்கீல் பிணமாக தொங்குவது தெரியவந்தது.

    இது குறித்து களியக்கா விளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை க்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வட்டவழங்கல் அதிகாரி நடவடிக்கை
    • தப்பியோடிய ஓட்டுநர் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே உள்ள சாமியார் மடம் பகுதியில் வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ் குமார் கொண்ட குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தே கத்துக்கிடமாக ஒரு ஆட்டோ வந்துள்ளது. அதனை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டினர். ஆனால் டிரைவர் ஆட்டோவை நிறுத்தாமல் சென்றார்.

    இதனால் வட்ட வழங்கல் குழுவினர் ஆட்டோவை விரட்டிச் சென்றனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று சாங்கை பகுதியில் வைத்து ஆட்டோவை மடக்கி பிடித்தனர். ஆனால் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

    ஆட்டோவை சோதனை செய்து பார்த்த போது சுமார் 500 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த ரேசன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வதும் தெரிய வந்தது.

    அரிசியை கைப்பற்றிய வட்ட வழங்கல் குழு, காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கில் ஓப்படைத்தது. மேலும் கடத்தல் ஆட்டோ வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க ப்பட்டது. தப்பியோடிய ஓட்டுநர் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    • கடத்தலுக்கு பயன்படுத்திய கார்-ஆட்டோ சிக்கியது
    • போலீசார் தீவிர சோதனை

    கன்னியாகுமரி:

    விளவங்கோடு வட்டவழங்கல் அதிகாரி கே.புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு குழித்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது சந்தேகத்துக்கு இடமாக சொகுசு கார் வந்துக் கொண்டிருந்தது.

    அந்த காரை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டினர், இருந்தும் அந்த கார் நிற்காமல் சென்று விட்டது. தொடர்ந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று திருத்தோபுரம் பகுதியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர். ஆனால் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

    காரை சோதனை செய்து பார்த்த போது சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பனச்சமூடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. ஓட்டுநர் அதிகாரிகளை பார்த்த உடன் ஆட்டோவை சாலையில் நிறுத்தி விட்டு ஓடிவிட்டார்.சந்தேகமடைந்த அதிகாரிகள் ஆட்டோவை சோதனை செய்து பார்த்த போது. சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கபட்டது.

    ரேஷன் அரிசியை கேரளாவிற்க்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. பிறகு காரிலும் ஆட்டோவிலும் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசி காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் கார்- ஆட்டோ, வட்டாச்சியர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய ஓட்டுநர்கள் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    • விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அதிரடி
    • தப்பி ஓடிய ஓட்டுநர் யார்? என்று விசாரணை

    கன்னியாகுமரி:

    விளவங்கோடு வட்டவழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமை யில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு அருமனை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று வந்துக் கொண்டிருந்தது அந்த காரை நிறுத்து மாறு சைகை காட்டினர் இருந்தும் அந்த கார் நிறுத்தாமல் சென்று விட்டது.

    தொடர்ந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று களியல் பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். ஆனால் கார் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

    இதனை தொடர்ந்து காரை சோதனை செய்து பார்த்த போது 1 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    பிறகு காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசி காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் கார் வட்டாட்ச்சியர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய ஓட்டுநர் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    • களியக்காவிளை அருகே திருத்தோபுரம் பகுதியில் பஸ் வந்த போது அதன் முன் பக்க டயர் வெடித்தது.
    • ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

    கன்னியாகுமரி:

    திருவனந்தபுரத்தில் இருந்து இன்று காலை கேரள அரசு பஸ் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு வந்தது. எர்ணா குளத்தைச் சேர்ந்த சோம சுந்தரம் பஸ்சை ஓட்டி வந்தார். களியக்காவிளை அருகே திருத்தோபுரம் பகுதியில் பஸ் வந்த போது அதன் முன் பக்க டயர் வெடித்தது.

    இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையில் வைத்திருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது. பஸ்சின் கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது.ஓட்டு நரின் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

    • குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.
    • குழித்துறை கோட்டத்துக்கு உள்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலைய பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது.

    கன்னியாகுமரி:


    குழித்துறை கோட்டத்துக்கு உள்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலைய பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின் பராமரிப்பு பணிக்காக முன்சிறை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் முன்சிறை, காப்புக்காடு, மங்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு, கிராத்தூர், ஐரேனிபுரம், விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காய்ப்பட்டனம், ராமன்துறை ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் இருக்காது.

    இதே போன்று நடைக்காவு துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூர், சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் இருக்காது.

    மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின் பாதைக ளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×