search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாலட்சுமி"

    • வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள்.
    • உடனே சித்திரநேமி பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள்.

    சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள்.

    அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள்.

    ஒருமுறை அவள் பாரபட்சமாக நடத்துக்கொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள்.

    சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதி காலில் விழுந்தாள்.

    வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள்.

    உடனே சித்திரநேமி பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள்.

    புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும்.

    குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும்.

    நாளை பெண்கள் புண்ணியநதிகளில் தீர்த்தமாடினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வரலட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும்.

    • இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள் போல் கருதாமல்,
    • இறைவனே அவர்களது வடிவில் எழுந்தருளி இருப்பதாக கருதி, அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள்.

    மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருமதி.

    இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள் போல் கருதாமல்,

    இறைவனே அவர்களது வடிவில் எழுந்தருளி இருப்பதாக கருதி, அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள்.

    அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை தந்தது.

    மகாலட்சுமி சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள் புரிந்தாள்.

    என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களது இல்லத்தில் நான் வசிப்பேன் என்று அப்போது சாருமதிக்கு அருளிய வரலட்சுமி, அந்த விரத முறையை கூறி மற்றவர்களுக்கு எடுத்துரைக்குமாறும் கேட்டுக் கொண்டாள்.

    அதை அப்படியேச் செய்தாள் சாருமதி. இப்படித் தான் வரலட்சுமி விரதம் பிறந்தது.

    • பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.
    • கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள்.

    மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என எட்டு அஷ்ட லட்சுமிகளாகப் பிரித்துள்ளனர்.

    எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் அவள்.

    லட்சுமிதேவி பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

    குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக்கொள்ள முடியாது.

    அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள்.

    கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள்.

    பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.

    வரலட்சுமி விரதம் இருப்பதால் பல பலன்கள் ஏற்படும்.

    ஆடி மாத பவுர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு ஆகஸ்ட 16ந் தேதி வரலட்சுமி விரதம் தினமாகும்.

    சுமங்கலிகள் அனுஷ்டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது.

    இதை செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும்.

    கன்னிப்பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையப்பெறுவார்கள்.

    இது தொடர்பான மேலும் தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

    • இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள்.
    • ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப் பட்டாள்.

    விஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியைக் குறித்து செய்யப்படுவதே வரலட்சுமி விரதமாகும்.

    விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள்.

    லட்சமம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள்.

    விஷ்ணு பகவான் தான் எங்கும் நிறைந்துள்ளதை விளக்க, உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே லட்சுமி ஆகும்.

    தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.

    லட்சுமி தேவி பாற்கடலில் தோன்றினாள்.

    இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள்.

    ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப் பட்டாள்.

    தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக் குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதென கருதி நடந்தாள்.

    இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்க சுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

    • தீபாவளியன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள்.
    • அவளுக்கு பிரியமான பூ “செவ்வந்தி” எனப்படும் சாமந்திப்பூ.

    1. மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள்.

    2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.

    3. அவளுக்கு பிரியமான பூ "செவ்வந்தி" எனப்படும் சாமந்திப்பூ.

    4. நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும்.

    5. ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.

    6. மகாலட்சுமி வில்வ மரத்தில் இருப்பதால் அதை மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கக் கூடாது.

    7.பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.

    8. மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபட்டு வந்தால் எல்லா செல்வங்களும் கிடைக்கும்.

    9.வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

    10. தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.

    11. தீபாவளியன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள்.

    12. யானையின் முகத்திலும் குதிரையின் முகத்திலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.

    13. ஸ்ரீவைஷ்ணவத்தை நிலை நாட்டிய வேதாந்த தேசிகர் "ஸ்ரீஸ்துதி" என்னும் ஸ்தோத்திரத்தில் ஸ்ரீமகாலட்சுமியை மங்களத்துக்கெல்லாம் மங்களமானவள் என்று புகழ்ந்து பாடுகிறார்.

    14. ஒரு பக்தனுக்கு பகவானின் அனுக்ரகம் வேண்டும் என்றால் புருஷகார பூதையான மகாலட்சுமியை முதலில் சரணடைய வேண்டும்.

    15. நம்மாழ்வார் "அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா" என்ற கணப்பொழுதுகூட பிரியாது மகாவிஷ்ணுவுடன் கூடி இருக்கும் மகாலட்சுமியை சரணடைவதே உயர்ந்தது என்று கூறியுள்ளார்.

    16. திருமழிசையாழ்வாருக்கு குழந்தைப் பருவத்தில் ஞானப்பால் ஊட்டியது மகாலட்சுமியே.

    17. குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.

    18. மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிவிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.

    19. வீரம் உடையவர்கள், சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பவர்கள், தவம் உடையவர்கள், ஈகை குணம் கொண்டவர்கள் செல்வத்தை நன்கு அனுபவிப்பவர்கள் ஆகியவர்களை நான் அடைகிறேன் என்கிறாள் மகாலட்சுமி.

    20. மகாலட்சுமி ஓரிடத்தில் நிலைக்க மாட்டாள். அதனால் சஞ்சலா, சபலா என்ற பெயர்கள் அவளுக்கு உண்டு.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திரன் தனது தகாத செயலால் பதவியை இழந்து அலைந்திருக்கிறார்.
    • மீண்டும் பதவியை பெற பால்கடலில் பூஜை நடத்தினார். அப்போது விஷ்ணு சில உபதேசங்களை சொன்னார்.

    மனிதனுக்கு முக்கிய தேவை பணம். ஆனால் ஒரு சிலரிடமே பணம் தங்குகிறது.

    பணத்தையும், பதவியையும் இழந்து மனிதர்கள் மட்டுமல்ல, தேவர்கள் கூட சிரமப்பட்டிருக்கிறார்கள்.

    இந்திரன் தனது தகாத செயலால் பதவியை இழந்து அலைந்திருக்கிறார்.

    மீண்டும் பதவியை பெற பால்கடலில் பூஜை நடத்தினார்.

    அப்போது விஷ்ணு சில உபதேசங்களை சொன்னார்.

    இந்த உபதேசத்தை நாமும் நமது வீட்டில் பூஜை அறையில் அமர்ந்து சொன்னால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

    நம்மால் முடிந்த அளவிற்கு லட்சுமிக்கு நிவேதனங்கள் படைத்து இதை சொல்ல வேண்டும்.

    அந்த உபதேச பிரார்த்தனை வருமாறு:

    ஆயிரம் இதழ்களை கொண்ட தாமரைப்பூவில் வசிப்பவளே! ஆயிரம் நிலாக்களின் பிரகாசத்தைப் போன்ற முகத்தைப் பெற்றவளே! இனிமை தருபவர் உள்ளத்திற்கு உற்சாகத்தை அளிப்பவளே! தங்கத்தைபோல் மின்னுபவளே! ஒளி பொருந்திய ஆடையை அணிந்திருப்பவளே! பலவகை ஆபரணங்களால் ஒளி வீசும் தெய்வீக தன்மை கொண்ட தாயே! மலர்முகம் கொண்டவளே! மந்தகாச புன்னகையை உடையவளே! என்றும் குறையாத இளமையைக் கொண்டவளே! உன்னை வணங்குவோருக்கு சகல செல்வங்களையும் அள்ளித் தருபவளே! மகாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்.

    சகல உலகங்களிலும் உள்ளவர்களால் போற்றப்படும் தாயே! உலக உயிர்களுக்கு மகிழ்ச்சியை தருபவளே! ரத்தினங்களாலும், தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டு விஸ்வகர்மாவால் செய்யப்பட்ட அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவளே! தாமரையில் வசிப்பவளே! உனக்கு தூய்மையான கங்கை நீரை அர்ப்பணம் செய்கிறேன்.

    மிகவும் புனிதமானதும், பாவங்களை அழிக்கக் கூடியதுமான அக்னியைப் போன்றது இந்த கங்கை நீர், இந்த நீரை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். உனக்கு பூக்கள், சந்தனம் ஆகியவற்றுடன் கூடிய கங்கையின் புனித நீரை சங்கால் அபிஷேகம் செய்கிறேன் இதை நீ ஏற்றுக் கொள்வாயாக.

    அன்பிற்குரிய ஹரிக்கு மனைவியானவளே! உனது தேகத்தின் அழகைக் கூட்ட நறுமண தைலத்தையும், நறுமண திரவியங்களையும் கொண்ட இந்த கங்கை நீரை அர்ப்பணிக்கிறேன். பரந்தாமனின் அன்பிற்குரிய செல்வமே! உனக்கு நறுமண திரவியங்கள் சேர்க்கப்பட்ட இந்த சாம்பிராணியைத் தருகிறேன். ஏற்றுக் கொள்.

    பொதிகை மலையில் விளையும் சந்தனத்தை உனக்கு அர்ப்பணம் செய்கிறேன். ஏற்றுக் கொள்வாயாக. அழகிய வடிவம் கொண் டதும், ஒளி பரப்புவதும் சகல உயிர்களுக்கும் கண் போன்றதுமான இந்த தீபத்தை உனக்கு அர்ப்பணிக்கிறேன். ஏற்றுக் கொள்வாயாக.

    அறுசுவை நிரம்பியதும் உடலுக்கு நல்லதுமான இந்த நைவேத்தியத்தையும் அளிக்கிறேன். இதையும் ஏற்றுக் கொள்.

    இவ்வாறு கூறி வணங்க வேண்டும்.

    ஒவ்வொரு பிரார்த்தனையை சொல்லும்போது அந்தந்த பொருட்களை அம்பாளிடம் ஒப்படைக்க வேண்டும்.

    வசதி இல்லாதவர்கள் தீபம் ஏற்றி வழிபாட்டாலே போதுமானது.

    அதே நேரம், மானசீகமாக இந்த பொருட்களை எல்லாம் அம்பாளுக்கு அர்ப்பணிப்பதாக கருதி இந்த உபதேசத்தை சொன்னால் நீங்கள் பணம் குவிக்கும் வகையில் லட்சுமி தேவி செல்வத்தை அள்ளித் தருவாள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காலையிலும், மாலையில் இருட்டுவதற்கு முன்பாக வீட்டில் விளக்கேற்ற வேண்டும்.
    • மாலையில் விளக்கு ஏற்றிய உடன் வெளியே செல்லக் கூடாது.

    பிரம்ம முகூர்த்த நேரம் என்ற அதிகாலை நேரத்திலே படுக்கையை விட்டு எழ வேண்டும்.

    அந்த நேரத்தில் தேவர்களும், பித்ருக்களும் நம் வீடு தேடி வருவார்கள்.

    அப்போது நாம் உறங்கக் கூடாது.

    காலையில் எழுந்ததும் வீட்டுக் கதவைத் திறக்கும் போது மகாலட்சுமியே வருக என்று 3 முறை கூற வேண்டும்.

    காலையில் 4.30லிருந்து 6.00 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும்.

    இவ்வாறு செய்வதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

    காலையிலும், மாலையில் இருட்டுவதற்கு முன்பாக வீட்டில் விளக்கேற்ற வேண்டும்.

    மாலையில் விளக்கு ஏற்றிய உடன் வெளியே செல்லக் கூடாது.

    விளக்கு வைத்த பிறகு தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது.

    விளக்கு வைத்த பிறகு குப்பை, கூளங்களை வெளியே வீசக்கூடாது.

    பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன்கொடுத்தல் கூடாது.

    நெற்றியில் எப்பொழுதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்குமுன் குடும்பத் தலைவி தான் குங்குமம் இட்டுக் கொண்டு பிறகு அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

    பால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது அதிர்ஷ்டம் மற்றும் எல்லாவித செல்வங்களையும் கொடுக்கும்.

    வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது ஆகியவை செய்யக்கூடாது.

    செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

    பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.

    வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.

    ரவிக்கைத் துணி வைத்துக் கொடுத்தால் தட்சணையாக ஒரு ரூபாய் நாணயம் வைத்துக் கொடுக்கவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒருசமயம் லட்சுமிதேவி எந்த வீட்டில் வாசம் செய்யலாம் என்று பார்க்க வந்தாள்.
    • ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

    ஒருசமயம் லட்சுமிதேவி எந்த வீட்டில் வாசம் செய்யலாம் என்று பார்க்க வந்தாள்.

    ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

    இன்னொரு வீட்டில் மாடும், கன்றும் இருந்தாலும் ஒரே தூசியும், குப்பையுமாக இருந்தது. மூன்றாவது வீட்டில் ஒரே சண்டை.

    மனைவி தலையை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

    நான்காவது வீட்டில் வாசலில் கோலம் போட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து அந்த இல்லத்தரசி ஸ்லோகங்களாக சொல்லிக் கொண்டு இருந்தாள்.

    வாசலில் நின்ற வரலட்சுமியை பார்த்து பழுத்த சுமங்கலியாக வந்திருப்பவளைக் கண்டு மகிழ்ந்து உள்ளே அழைத்தாள்.

    மனையை போட்டு அமர வைத்து விட்டு உள்ளே போய் பால் எடுத்துக்கொண்டு வெளியே வந்தால் அந்த சுமங்கலி இல்லை.

    பூஜை அறையில் செல்வம் மட்டும் குவிந்து கிடந்தது.

    அதாவது லட்சுமிதேவி எங்கும், எப்பொழுது வேண்டுமானாலும் வருவாள்... வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்பவர்களுக்கு செல்வத்தை அள்ளித் தருவாள்...

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சரி நாளை நீங்கள் போகும் போது அவ்வரத்தை கேட்கிறேன் என்று போஜன் கூறிவிட்டான்.
    • மறுநாள் வந்தது, ஒவ்வொரு லட்சுமியாக அவனிடம் விடைபெற்றுக் கொண்டார்கள்.

    அஷ்டலட்சுமிகளில் அடிப்படையானவள் தைரிய லட்சுமி தான். இதை விளக்குவதற்கு ஒரு கதை.

    போஜ மகாராஜாவிற்கு அஷ்டலட்சுமிகளின் பாக்கியம் இருந்து வந்தது.

    அவன் அவர்களை தினம் பூஜித்து வந்தான்.

    ஒருநாள் பூஜையின் போது அவர்களின் முகம் வாடியிருப்பதை கண்டு காரணம் கேட்டான்.

    அவர்கள் நாளையுடன் உன்னுடன் எங்களுக்கு தொடர்பு அறுபடுகிறது. நாளை நாங்கள் உன்னை விட்டுப் போகிறோம்.

    நீ இத்தனை நாட்கள் எங்களை வழிபட்டு வந்ததற்காக நீ கேட்கும் வரத்தை தருகிறோம் என்றார்கள்.

    சரி நாளை நீங்கள் போகும் போது அவ்வரத்தை கேட்கிறேன் என்று போஜன் கூறிவிட்டான்.

    மறுநாள் வந்தது, ஒவ்வொரு லட்சுமியாக அவனிடம் விடைபெற்றுக் கொண்டார்கள்.

    அவன் யாரிடமும் எவ்வரமும் கேட்கவில்லை. ஏழு லட்சுமிகள் போன பின்பு கடைசியாக தைரிய லஷ்மி வந்தாள்.

    அம்மா நான் கேட்கும் வரம் நீ மட்டும் என்னிடம் தங்க வேண்டும் என்பதே என்றான் போஜன்.

    பக்தன் கேட்ட வரத்தின்படி தைரியலட்சுமி மட்டும் அங்கேயே தங்கி விட்டாள்.

    மறுநாள் போஜன் பூஜைக்கு புறப்படும் போது தினம் எட்டு லட்சுமிகளை பூஜிப்பேன், இன்று ஒரு லட்சுமியை மட்டுமே பூஜிக்க போகிறேன் என்று நினைத்துக் கொண்டு பூஜைக்கு போனான்.

    அங்கு பூஜாக் கிரகத்தில் அஷ்ட லட்சுமிகளும் இருக்கக் கண்டு ஆச்சரியம் அடைந்தான்.

    நீங்கள் ஏழு பேரும் நேற்று போய் விட்டீர்களே, இப்போது இங்கு இருக்கிறீர்களே என்று கேட்டான் போஜன்.

    எங்கள் தலையில் தைரிய லட்சுமி எங்கு இருக்கிறாளோ அங்கு நாங்கள் ஏழு பேரும் இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறது.

    நீ தைரிய லட்சுமியை உன்னுடனேயே இருத்திக்கொண்டதால் நாங்கள் மீண்டும் இங்கேயே வந்து தங்க நேர்ந்தது என்றார்கள் அந்த ஏழு லட்சுமிகள்.

    • லட்சுமியை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு பதினைந்து பேறுகள் கிடைக்கும்
    • பலவிதமான ஐசுவரியங்கள் செழிக்கும்.

    லட்சுமியை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு பதினைந்து பேறுகள் கிடைக்கும் அவை வருமாறு

    2.பசுக்களும், வேலைக்காரர்களும் கிடைப்பார் ள்.

    3.பகை அழிந்து அமைதி உண்டாகும்.

    4.கல்வி ஞானம் பெருகும்.

    5. பலவிதமான ஐசுவரியங்கள் செழிக்கும்.

    6.நிலைத்த செல்வம் அமையும்.

    7.வறுமை நிலை மாறும்.

    8.மகான்களின் ஆசி கிடைக்கும்.

    9.தானிய விருத்தி ஏற்படும்.

    10.வாக்கு சாதுரியம் உண்டாகும்.

    11.வம்ச விருத்தி ஏற்படும்.

    12.உயர் பதவி கிடைக்கும்.

    13.வாகன வசதிகள் அமையும்.

    14.ஆட்சிப்பொறுப்பேற்கும் யோகம் கிடைக்கும்.

    15.பல்வேறு வகையான ஞானங்கள் ஏற்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எங்கு பாத்திரங்கள் பரப்பப்படாமலும், தானியங்கள் சிந்தாமலும் இருக்கிறதோ, அங்கு நான் இருப்பேன்" என்றாள்.
    • எங்கு கோபூஜை நடத்தப்படுகின்றதோ அங்கு நான் எப்போதும் இருப்பேன்" என்றாள்.

    மகாலட்சுமியை வணங்கிய பக்தர்கள் "அன்னையே, தங்களை சிரமமின்றி தரிசித்து தங்கள் அருளைப்பெற வழி என்ன?

    பொதுவாக தாங்கள் இருக்கும் இடம் எது," என கேட்டனர்.

    மகாலட்சுமி கூறுகையில், எந்த இல்லத்தில் அதிகாலையில் விழித்தெழுந்து, நீராடி தங்களைப் புனிதப்படுத்திக் கொண்டு

    என்னுடைய நாமங்களைச் சொல்லி வழிபடுகின்றனரோ, எந்த இல்லத்தின் முன் அதிகாலையில் பசுஞ்சாணம் தெளித்து

    தரையை சுத்தம் செய்து கோலம் போட்டு திருவிளக்கு ஏற்றி வைக்கிறார்களோ, எந்த குடும்பத்தில் கணவனும் மனைவியும்

    நியம நிஷ்டைகளை முறைப்படி அனுஷ்டித்து தங்களுக்குள் சிறு மனவேறுபாடும் இல்லாமல் என்னை வழிபடுகிறார்களோ,

    எங்கு ஆசாரம் குறை இல்லாமல் கடைப்பிடிக்கப்படுகிறதோ, எங்கு தர்மம் நன்கு அனுஷ்டிக்கப்படுகிறதோ,

    எங்கு பூஜை, நடக்கின்றனவோ, எங்கு பாத்திரங்கள் பரப்பப்படாமலும், தானியங்கள் சிந்தாமலும் இருக்கிறதோ,

    எங்கு கோபூஜை வேதத்துடன் நடத்தப்படுகின்றதோ அங்கு நான் எப்போதும் இருப்பேன்" என்றாள்.

    • மனித வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் எட்டு வித செல்வங்களுக்கு மகாலட்சுமி அதி தேவதையாகும்.
    • இந்த எட்டு போகங்களும் முழுமையாக அமையப் பெற்றதுதான் உயர்ந்த வாழ்க்கை.

    மனித வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் எட்டு வித செல்வங்களுக்கு மகாலட்சுமி அதி தேவதையாகும்.

    மகாலட்சுமியின் எட்டு விதமான தோற்றத் உருவங்களை, முழுமையான பக்தியோடு வழிபடும் எவரும் மகாலட்சுமியின் அருளால் இன்பமும் மகிழ்ச்சியும் இழையோடும் எட்டு விதமான அஷ்ட போக வாழ்க்கையைப் பெறுவார்கள்.

    அவை வருமாறு:

    1.குடும்பத்தில் அன்பும், பண்பும், அழகும் கொண்ட,

    கணவன் மனைவி அமைவார்கள்.

    2.மன உல்லாசத்துக்கு ஆதாரமாக விளங்கும் சிறந்த

    உடைகளைப் பெறுவார்கள்.

    3.அழகு மிளிரும் அணிகலன்களை அடைவார்கள்.

    4.ருசி மிளிரும் உணவு வகைகள் கிடைக்கும்.

    5.நலன் தரும் தாம்பூல வகைகள் குறைவில்லாமல் கிடைக்கும்.

    6.அற்புதமான நறுமணப் பொருள்களைப் பெறுவார்கள்.

    7.மனத்திற்கு மகிழ்ச்சியூட்டும் இன்னிசை.

    8.மன உல்லாசத்துக்கு உதவும் மண மலர்கள் கிடைக்கும்.

    இந்த எட்டு போகங்களும் முழுமையாக அமையப் பெற்றதுதான் உயர்ந்த வாழ்க்கை.

    ×