என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கம்பெனியில்"
- சென்னிமலை அருகே கம்பெனியில் பூட்டை உடைத்து ஜெனரேட்டர், இரும்பு பொருட்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்த ஈங்கூர் பகுதியில் சிப்காட் தொழில் பேட்டை உள்ளது. இங்கு தங்கவேல் என்பவர் கம்பெனி நடத்தி வருகிறார்.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் இவர் கம்பெனியை நடத்த முடியாமல் மூடிவிட்டார். இந்நிலையில் அங்கு மின்வாரிய பணியாளர் ஒருவர் கணக்கு எடுப்பதற்காக சென்ற பொழுது மெயின் கேட் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அதன் உரிமையாளர் தங்கவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த தங்கவேல் உள்ளே சென்று பார்த்த பொழுது ஜெனரேட்டர் மற்றும் சில இரும்பு பொருட்கள் திருட்டுப் போனது தெரியவந்தது.
பின்னர் இது குறித்து சென்னிமலை போலீசில் தங்கவேல் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த கம்பெனியை லீசுக்கு நடத்திய திண்டல், செங்கோடம்பாளையம் சக்தி நகரை சேர்ந்த செல்வராஜ் (44) என்பவர் இரும்பு பொருட்களை வாங்கும் வியாபாரி தூத்துக்குடியை அடுத்த நசரேத் பகுதியை சேர்ந்த பட்டு ஜெபசிங் என்பவர் உடன் சேர்ந்து 2 பேரும் ஜெனரேட்டர் உள்பட இரும்பு பொருட்களை திருடி சென்றது விசாரணையில் தெரியவந்தது.
திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து செல்வராஜ், பட்டு ஜெபசிங் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- பெருந்துறை அருகே பிஸ்கட் கம்பெனியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
- பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பெருந்துறை:
பெருந்துறை குன்னத்தூர் ரோடு பகுதியில் பெருந்துறையை சேர்ந்த ரதீஷ்குமார் (33) என்பவருக்கு சொந்தமான பிஸ்கட் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த பிஸ்கட் கம்பெனியில் பிஸ்கட் பேக்கிங் செய்ய பயன்படும் கவர்கள் மூட்டைகளாக கட்டி அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பிஸ்கட் கவர்களில் தீபிடித்து புகை வந்தது. சிறிது நேரத்தில் மளமளவென தீ பற்றி எரியத் தொடங்கியது.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்