search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓஷோ"

    • கனவு காணும்பொழுது உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வராது.
    • முழு புண்ணிய ஆத்மாக்களுக்கும் தகுந்த பெற்றோர்கள் கிடைப்பது கடினம்.

    ஓஷோ, இரண்டு பிறவிகளுக்கிடையே உள்ள காலமற்ற இடைவெளியில் இந்த ஆன்மாவுக்கு என்ன நேரிடுகிறது ?

    ஒரு பிறவிக்கும் , மறுபிறவிக்கும் இடையில் ஏற்படும் அனுபவங்கள் ஒரு கனவுபோலத்தான்.

    அப்பொழுது அது உண்மையைப்போலத் தோன்றும் .

    ஆனால் புலன்களுக்கு வேலை இல்லை .

    ஏனெனில் உடல் இல்லை .

    அப்படிக் கனவு காணும்பொழுது உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வராது .

    ஆகவே , அந்த இடைவெளியில் நடப்பவை அனைத்தும் உண்மை போலவே தோன்றும் . அப்பொழுது தோன்றும் தோற்றங்கள் மிகவும் அசாதாரணமானவையாகக்கூட இருக்கக்கூடும் .

    ஆத்மா சொர்கத்தை அடைவது அல்லது நரகத்தை அனுபவிப்பது என்பது இந்தக் கனவு நிலையைக் குறிப்பிடுவதுதான் .

    உண்மையில் சொர்க்கமும் இல்லை , நரகமும் இல்லை ! 

    ஆனால் இது ஒருவித கனவு நிலை , அவ்வளவுதான்.

    முழுமையான பாப ஆத்மாக்களுக்குத் தகுந்த தாய், தகப்பன் கிடைப்பது மிகவும் கஷ்டம் .

    முழு புண்ணிய ஆத்மாக்களுக்கும் தகுந்த பெற்றோர்கள் கிடைப்பது கடினம் !

    இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள ஆன்மாக்கள் நல்லதும் , கெட்டதும் கலந்திருக்கின்றன .

    ஆனால் அடுத்த பிறவியில் இதில் எதுவும் ஞாபகம் இருக்காது .

    இந்த இடைப்பட்ட காலத்தில் அதாவது ஆன்மா மறுபிறவி எடுப்பதற்கு முன்பு அந்த ஆன்மா நிலையாகவும் இல்லை, அது அங்கும், இங்கும் அலைந்துகொண்டும் இல்லை. அது ஒரு இரண்டுங்கெட்டான் நிலையில் இருக்கிறது.

    இதை தர்க்கரீதியாகப் புரிந்துகொள்ள முடியாது . இந்த ஆன்மாவில் முற்பிறவியில் ஏற்பட்ட அனுபவங்கள் கருத்துக்கள் , தீய மற்றும் நல்ல செயல்களின் பலன்கள் அனைத்தும் கரு வடிவில் அப்படியே பதிந்திருக்கின்றன.

    அது மீண்டும் உடலை எடுக்கும்பொழுது அவை அனைத்தும் மெல்ல செயல்புரிய ஆரம்பித்துவிடுகின்றன.

    • ஓஷோ ஆசிரமத்தில் உள்ளவர்கள் உடலுறவு வைத்து கொள்வதை குழந்தைகள் தவறாமல் பார்க்க வேண்டும்.
    • எனது 7 முதல் 11 வயதுவரை ஆசிரமத்தில் உள்ள வயது வந்த ஆண்களுடன் பாலியல் செயல்களைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டேன்.

    இந்தியாவில் பிறந்து, தனது ஆன்மீக சொற்பொழிவுகளால் உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்தவர் ஓஷோ.

    இந்தியாவில் ஆசிரமம் தொடங்கி பின்னர் அமெரிக்காவில் உள்ள ஓரேகானில் குடியேறி அங்கேயே ஒரு ஆசிரமத்தையும் அமைத்தார். பாலியல் சுதந்திரம் குறித்து ஓஷோவின் சொற்பொழிவுகள் மிக புகழ்பெற்றவை.

    இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த 54 வயதான பிரேம் சர்கம் என்ற பெண் ஓஷோவின் ஆசிரமத்தில் 50க்கும் மேற்பட்ட முறை பலாத்தகாரம் செய்யப்பட்டேன் என்று பரபரப்பு குற்றசாட்டை கூறியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய பிரேம் சர்கம், 6 வயதில் எனது தந்தையுடன் இங்கிலாந்தில் இருந்து புனேவில் உள்ள ஓஷோவின் ஆசிரமத்தில் சேர்ந்தேன்

    ஆசிரமத்தில் உள்ளவர்கள் உடலுறவு வைத்து கொள்வதை குழந்தைகள் தவறாமல் பார்க்க வேண்டும் என்றும் பெண்கள், பருவமடைந்தவுடன் பாலியல் வழிகாட்டுதலுக்காக வயது வந்த ஆண்களைத் தேட வேண்டும் என்று கற்பிக்கப்பட்டது.

    தன்னுடைய 7 வயதில் முதல்முறையாக பாலியல் தொல்லைகளுக்கு ஆளானேன். எனது 7 முதல் 11 வயதுவரை ஆசிரமத்தில் உள்ள வயது வந்த ஆண்களுடன் பாலியல் செயல்களைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டேன். 12 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன்.

    பின்னர் புனேவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்று ஒரேகானில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தாயுடன் சேர்ந்தேன். அங்கு குறைந்தது 50 முறைக்கு மேல் பலாத்காரம் செய்யப்பட்டேன். 16 வயதில் தான் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து எனக்கு புரிந்தது

    ஓஷோ ஆசிரமத்தில் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்ட 2 பிரிட்டிஷ் பெண்களின் கதையுடன் என்னுடைய கதையையும் சேர்த்து எடுக்கப்பட்டுள்ள சில்ட்ரன் ஆஃப் தி கல்ட் ஆவணப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. எனக்கும், என்னைப் போன்றவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை உலகம் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • நான் பார்க்க முடிந்தவரையில் இங்கே கூடியுள்ளவர்களில் குறைந்த பட்சம் ஐம்பது சதவிகிதம் அதிமூடர்கள்!
    • கிணற்றின் மேல் மோகம் கொண்டு கடலை இழக்கிறார்கள், மதத்தின் மேல் மோகம் கொண்டு கடவுளையே இழக்கிறார்கள்.

    பெர்னார்ட்ஷா அமெரிக்காவுக்குச் சென்றார்.

    அவர் எப்போதும் அமெரிக்கா, முட்டாள்களின் நாடு மூடர்களுக்கிடையில் நான் போய் என்ன செய்யப்போகிறேன் என்று கூறிக்கொண்டிருப்பார்.

    இங்கே அவ்வளவு மட்டமாகப் பேசிக் கொண்டிருந்தார். மறுபுறம் அமெரிக்காவின் கவர்ச்சி அவருக்கு அதிகமாகிக் கொண்டிருந்தது.

    யார் திட்டிக்கொண்டிருக்கிறாரோ, அவரை நோக்கி ஆர்வம் அதிகமாவது இயற்கையே!

    ஏராளமான அழைப்புகள் குவிந்தன அவருக்கு! அதனால் அவர் அமெரிக்கா சென்றார்.

    அவர் இறங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் எக்கச்சக்கமான கூட்டம் கூடிவிட்டது. அதனால், கலவரத்தைத் தடுப்பதற்காக அவரைத் திருட்டுத்தனமாக வேறு இடத்தில் இறக்கி அழைத்துச் சென்றனர்.

    அவர் பேசிய முதல் சபையிலேயே கலவரம் ஆரம்பமாகி விட்டது!

    முதல் சபையில் பேச ஆரம்பிக்கும் போதே அவர் கூறினார், "நான் பார்க்க முடிந்தவரையில் இங்கே கூடியுள்ளவர்களில் குறைந்த பட்சம் ஐம்பது சதவிகிதம் அதிமூடர்கள்!"என்றார்.

    சபைத் தலைவர் பயந்து விட்டார்!

    அவையோர், "அவமானம்! வெட்கம்! நீ சொன்னதை வாபஸ் வாங்கு!' என்று கூக்குரலிட்டனர்.

    சபைத் தலைவர், "ஆரம்பத்திலேயே கலாட்டாவுக்கு இடம் கொடுத்துப் பேசிவிட்டீர்களே! எப்படியாவது ஜனங்களைச் சமாதானப்படுத்துங்கள்!" என்று கேட்டுக்கொண்டார்.

    அப்போது பெர்னார்ட்ஷா, "இருங்கள்! பொறுங்கள்! நானே சரி செய்கிறேன் என்றார்.

    மேலும் அவர் பேசினார் 'என் புத்திக்கெட்டியவரை இங்கே கூடியுள்ளவர்களில் ஐம்பது சதவிகிதம் அதிபுத்திசாலிகளாகத் தோன்றுகிறது!' என்றார்.

    உடனே ஜனங்கள் தலையாட்டிக் கை தட்டினார்கள்; அவர் கூறுவது சரிதான், என்று!

    பெர்னார்ட்ஷா குனிந்து தலைவரிடம், சொன்னார். "நிச்சயம் ஆகி விட்டது. இங்குள்ளவர்களில் ஐம்பது சதவிகிதம் அதிமுட்டாள்கள் என்று அவர்களே ஒத்துக்கொண்டர்கள்" என்றார்.

    இந்த இரண்டு கூற்றுகளிலும் பெரிய வித்தியாசம் இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் விஷயம் ஒன்றேதான்.

    இதே போல்தான் எல்லா மதத்தினரும், தம்முடைய மதத்தில் மட்டுமே விஷயம், விசேஷம் உள்ளது என்று நம்புகிறார்கள்.

    இவர்கள் கிணற்றின் மேல் மோகம் கொண்டு கடலை இழக்கிறார்கள், மதத்தின் மேல் மோகம் கொண்டு கடவுளையே இழக்கிறார்கள்.

    -ஓஷோ

    • ஒரு மணி நேரம் வாய்கிழியப் பேசுவதைப் புரிந்து கொள்ளாத ஒரு பெண், கணவன் கொண்டு வந்து தரும் சிறிய ரோஜாப்பூவின் பின்னால் இருக்கும் அவனது அன்பைப் புரிந்து கொள்கிறாள்.
    • நீங்கள் ஏன் அவளைக் காதலிக்கிறீர்கள் என்று நாட்கணக்கில் வாதம் செய்யுங்கள். உங்கள் வார்த்தைகளில் ஒன்று கூட அவள் மண்டையில் ஏறாது.

    பெண்களோடு நெருங்கிப் பழகும் எல்லா ஆண்களுக்கும், பெண்கள் வித்தியாசமானவர்கள் என்ற அடிப்படை உண்மை புரிந்திருக்கும்.

    ஒரு பெண்ணோடு தர்க்கரீதியாக விவாதம் செய்ய முடியாது. அதை அவள் புரிந்து கொள்ள மாட்டாள். புரிந்து கொள்ள முடியாது.

    அவளது போக்கைப் பார்க்கும் போது, அவள் வேறு கிரகத்தைச் சேர்ந்தவளோ என்று நமக்கு நினைக்கத் தோன்றும்.

    அதே போல் தான் ஒரு பெண்ணின் நிலையும். எப்போது பார்த்தாலும் அறிவின் மூலமாகவே உலகத்தை உணர முயன்று கொண்டிருக்கும் முட்டாள்கள் என்று தான் ஆண்களைப் பற்றி அவர்கள் நினைப்பார்கள்.

    உணர்வு சம்பந்தப்பட்ட எதையும் புரிந்து கொள்ள லாயக்கில்லாதவர்கள் ஆண்கள் என்றுதான் பெண்கள் நினைக்கிறார்கள்.

    ஆண் வாதம் செய்கிறான். தர்க்கரீதியாக உண்மையைப் புரிய வைக்க முயற்சி செய்கிறான். ஆனால் அதை பெண்ணின் மனம் ஏற்றுக் கொள்வதில்லை. அது அவளுடைய வழியில்லை. தர்க்கத்திற்கும், பெண்ணிற்கும் சம்பந்தமேயில்லை.

    தன் மனைவியோடு பல மணிநேரம் செய்யும் வாதத்தைவிட, ஒரு சிறிய ரோஜாப்பூ அதிக மதிப்புடையது என்பதைப் பல கணவர்கள் புரிந்து கொள்வதில்லை.

    ஒரு மணி நேரம் வாய்கிழியப் பேசுவதைப் புரிந்து கொள்ளாத ஒரு பெண், கணவன் கொண்டு வந்து தரும் சிறிய ரோஜாப்பூவின் பின்னால் இருக்கும் அவனது அன்பைப் புரிந்து கொள்கிறாள்.

    நீங்கள் ஏன் அவளைக் காதலிக்கிறீர்கள் என்று நாட்கணக்கில் வாதம் செய்யுங்கள். உங்கள் வார்த்தைகளில் ஒன்று கூட அவள் மண்டையில் ஏறாது.

    ஒரு சிறிய ரோஜா மலரைக் கொண்டு போய், "நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்று மென்மையாகச் சொல்லுங்கள். அவள் புரிந்து கொள்வாள்.

    பெண் உணர்ச்சிமிக்கவள். உணர்வு பூர்வமானவள். ஓர் ஆணால் ஒரு பெண்ணைப் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அவள் சொல்வது, செய்வது எல்லாமே காரண-காரிய அறிவுக்குப் புறம்பானதாக இருக்கும்.

    கணவன் மனைவியிடம் எதையும் தர்க்க ரீதியில் பேசி புரியவைக்க முடியாது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக கணவர்கள் மௌனமாகி விடுகிறார்கள். பின் செவிடுகளாகி விடுகிறார்கள்.

    பெண்களை பேச விடுகிறார்கள். அவள் "என்ன அபத்தத்தை வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகட்டும். நாம் ஏன் அதைக் கவனிக்க வேண்டும்?" என்ற மனோபாவத்துக்கு வந்துவிடுவார்கள்.

    ஆண்கள் ஏன் பெண்டாட்டி தாசர்களாக, ஆமாம்சாமிகளாக இருக்கிறார்கள்? ஏறக்குறைய எல்லா ஆண்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். அப்படித்தான் இருக்க முடியும்.

    எவ்வளவு நேரம் தான் மனைவியோடு வாதம் செய்ய முடியும் சொல்லுங்கள். மனைவியோடு வாதம் செய்வதில் பயனேயில்லை.

    அப்படி வாதம் செய்யும் போது நீங்கள் முட்டாளைப் போல் காட்சியளிப்பீர்கள். மனைவியோடு வாதிடுவதற்குப் பதிலாக சுவரோடு வாதிடலாம்.

    நீங்கள் வாதம் செய்வீர்கள். உங்கள் மனைவி பெருங்குரலெடுத்து அழுவாள். உங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாது. நீங்கள் அவளிடம், "அமைதி, அமைதி. நாம் உட்கார்ந்து பேசித் தீர்த்துக் கொள்ளலாமே!" என்று அவளிடம் மன்றாடிக் கொண்டிருக்கும் போது, அவள் சாமான்களைத் தூக்கியெறிய ஆரம்பிப்பாள். பாத்திரங்களைப் போட்டு உடைப்பாள். கதவை டமால் என்ற பெருஞ்சத்தத்துடன் சாத்துவாள்.

    அவளோடு பேசி என்ன பயன் என்று விரக்தி வந்துவிடும் உங்களுக்கு. அவளோடு எப்படித் தொடர்பு கொள்வது? அவளை எப்படிப் புரிந்து கொள்ளச் செய்வது என்று தவித்துக் கொண்டிருப்பீர்கள்.

    அவள் சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் வீண் வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிடுவீர்கள்.

    அதன் பின் பெண்டாட்டி தாசனாகிவிடுவீர்கள். அவளைப் பொறுத்த மட்டில் உங்கள் வாத-பிரதிவாதங்கள் எல்லாம் கவைக்கு உதவாத குப்பை.

    ஆண்கள் அறிவுபூர்வமானவர்கள்.

    பெண்கள் உணர்வுபூர்வமானவர்கள்.

    -ஓஷோ

    • உன் வடிவம் ஒவ்வொரு கணமும் மாறிவருகிறது.
    • இறப்பு என்பது ஒரு மாற்றம். முக்கியமான மாற்றமே தவிர வேறில்லை.

    நீ பிறக்கவுமில்லை... இறக்கவுமில்லை...

    வாழ்விருப்பு என்பது ஆரம்பமும் முடிவும் இல்லாதது. அது எப்போதும் இங்கு இருக்கும். நீயும் எப்போதும் இருப்பாய். வடிவங்கள் வேறாய் இருக்கலாம். இந்த வாழ்விலும் வடிவங்கள் மாறவே செய்கின்றன.

    உன் தாயின் கருப்பையில் நீ இருந்த முதல் நாளில், நீ ஒரு கேள்விக்குறியின் தலைப்புள்ளி அளவு கூடயில்லை. அதை ஒரு புகைப்படம் எடுத்து உன்னிடம் காண்பித்தால் அது நீதான் என்று உனக்குப் புரியவே புரியாது. உண்மையில் அதற்கு முன்னால்....?

    உன்னால், உன் தகப்பனாரிடம் நீ இருந்ததை நினைத்துப்பார்க்க முடியுமா? ஒரு படம் வேண்டுமானால் காட்டலாம். உன் வெறும் கண்களால் நீ காணும் அளவு அதைப் பெரிதுபடுத்தினாலும் உன்னால் அதை அடையாளம் காட்ட முடியாது. ஆனால் அது, அதே உயிர்தான். உனக்குள் இப்போது இங்கே துடிக்கும் அதே உயிரின் ஆதாரத் துடிப்புதான்.

    உன் வடிவம் ஒவ்வொரு கணமும் மாறிவருகிறது. இறப்பு என்பது ஒரு மாற்றம். முக்கியமான மாற்றமே தவிர வேறில்லை. கொஞ்சம் பெரிய மாற்றம்... ஒரு வேகமான மாற்றம்.

    குழந்தையிலிருந்து வாலிப வயது... உன் குழந்தைத்தனம் எப்போது மாறி வாலிபம் வந்தது என்றே உனக்குத் தெரியாது. பிறகு வாலிபன் வயோதிகன் ஆவது மெல்ல மிக மெல்ல நகருவதால், எந்த நாளில், எந்த கிழமையில், எந்த வருடத்தில் உன் வாலிபம் உன்னை விட்டுப் போனது என்றே உன்னால் கூறமுடியாது.

    அந்த மாற்றம் மெதுவாக சிறிது சிறிதாக நடக்கும். ஆனால் 'மரணம் ஒரு உடலிலிருந்து வேறு உடலுக்கு பெரிதாக தாவிக் குதித்து செல்லும் மாற்றம்.' ஒரு வடிவிலிருந்து மற்றொரு வடிவிற்கு செல்வதாகும்.

    ஆனால் அது உன் முடிவு அல்ல. "நீ பிறக்கவுமில்லை: இறக்கவுமில்லை: நீ எப்போதும் இங்கே உள்ளாய்."

    -ஓஷோ 

    ×