search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227938"

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 8000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
    • சிறுவர்-சிறுமிகள் பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை தனுவர்ஷன் அறக்கட்டளை சார்பில் நம் கல்வி- நம் உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2-வது மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில் தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 8000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    போட்டியை குழந்தைகள் நல சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சாத்தப்பன், டாக்டர் சிங்காரவேலு, துணை நீதிபதி டாக்டர் ரவி ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் அஞ்சுகம் பூபதி முன்னிலை வகித்தார்.

    இந்த போட்டியில் 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக 20 கி.மீ. தூரமும் அதாவது மைதானத்தில் இருந்து புறப்பட்டு வல்லம் சென்று மீண்டும் மைதானம் வரையும், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்- சிறுமிகளுக்கு தனித்தனியாக 5 கி.மீ. தூரமும் அதாவது மைதானத்தில் இருந்து புறப்பட்டு மருத்துவ கல்லூரி முதல் கேட் வரை சென்று மீண்டும் மைதானம் வரையும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    அதன்படி போட்டியில் கலந்து கொண்டவர்கள் உற்சாகத்துடன் மாரத்தான் ஓடினர்.

    முடிவில் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த பரிசினை மாவட்ட தடகள சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், நெல்லை ஜீவா ஆகியோர் வழங்கி பாராட்டினர்.

    ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தனித்தனியாக முதல் பரிசாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.1 லட்சம், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 4-ம் பரிசாக ரூ.15 ஆயிரம், 5-ம் பரிசாக ரூ.10 பத்தாயிரம் மற்றும் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. இது தவிர 20 நபர்களுக்கு ரூ.500 மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    இதுபோல் சிறுவர் -சிறுமிகள் பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு ,கோப்பை வழங்கப்பட்டது. மேலும் மாணவிகள் தலா 3 பேர் என 6 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தனுவர்ஷன் அறக்கட்டளை நிறுவனர் உலகநாதன் செய்திருந்தார்.

    • பெரிய மாட்டு வண்டி போட்டியினை மாநில முன்னாள் ரேக்ளா பந்தய சங்கத் தலைவர் மோகன் சாமி குமார் தொடங்கி வைத்தார்.
    • விழாவிற்கு பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருேக உள்ள பன்னம்பாறையில் முரம்படி சுடலை தளவாய் மாடசாமி கோவில் கொடை விழாவையொட்டி பெரிய, சிறிய மாட்டு வண்டிகள் போட்டிகள் நடந்தன.

    பன்னம்பாறையில் இருந்து மெய்ஞானபுரம் வரை 7 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டி யில் 12 பெரிய மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

    இதே போல் பன்னம்பாறை யில் இருந்து நங்கமொழி வரை சிறிய மாட்டு வண்டிகளுக்கு நடை பெற்ற போட்டியில் 30 வண்டி போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    பெரிய மாட்டு வண்டி போட்டியினை மாநில முன்னாள் ரேக்ளா பந்தய சங்கத் தலைவர் மோகன் சாமி குமார் தொடங்கி வைத்தார். சிறிய மாட்டு வண்டி போட்டியினை பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

    போட்டி தொடங்கிய சில நொடிகளில் வண்டியில் பூட்டிய மாடுகள் பந்தைய இலக்கை நோக்கி சீறி பாய்ந்தன.

    பெரிய மாட்டு வண்டி போட்டியில் அவனியாபுரம் மோகன் சாமி குமார் காளை கள் முதல் பரிசை பெற்றன. 2-ம் பரிசை நாலாம் துலா மெடிக்கல் விஜயகுமார் காளைகளும், 3-ம் பரிசை வேலன்குளம் கண்ணன் காளைகளும் பெற்றன.

    சிறிய மாட்டு வண்டி போட்டிகள் இரு பிரிவுகளாக பிரித்து நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசு மறுகால் குறிச்சி சுப்பம்மாள் காளைகளுக்கும், சண்முகம் மெடிக்கல்ஸ் விஜயகுமார் காளைகளுக்கு 2-ம் பரிசும், வள்ளியூர் ஆண்டி காளைகளுக்கு 3-ம் பரிசும் கிடைத்தன.

    வெற்றி பெற்றவர்களுக்கு சுடலை தளவாய் மாடசாமி கோவில் வளாகத்தில் வைத்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார்.

    பெரிய வண்டியில் முதல் பரிசு பெற்ற காளை உரிமையாளருக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கிய ரூ.50 ஆயிரத்தை சாத்தான்குளம் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் பார்த்தசாரதி வழங்கினார். அவருக்கு வெற்றி கோப்பையினை நெல்லை மாநகர துணை மேயர் கே.ஆர்.ராஜூ வழங்கினார்.

    2-ம் பரிசு பெற்ற காளை உரிமையாளருக்கு பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன், ரூ.40 ஆயிரம் ரொக்கமும், வெற்றி கோப்பையையும் வழங்கினார்.

    போட்டிகளில் முதல் கொடியை பெற்றவர்களுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி சுந்தர் செல்போன்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் வழக்கைகிணறு சுப்பையா, சாத்தான்குளம் நகர காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் கதிர்வேல், காங்கிரஸ் பிரமுகர்கள் அகஸ்டின், மணி, பவுல், அ.தி.மு.க. பிரமுகர் பரமசிவ பாண்டியன், வியாபார சங்கத் தலைவர் சசிகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுடலை நன்றி கூறினார்.

    • மாநில அளவிலான ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து போட்டி கடந்த 6-ந்தேதி தொடங்கி 9-ந்தேதி வரை நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நேற்று சேலத்தில் நடைபெற்றது.

    சேலம்:

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் மாநில அளவிலான ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து போட்டி கடந்த 6-ந்தேதி தொடங்கி 9-ந்தேதி வரை நடைபெற்றது.

    இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சேலம் மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் பெண்கள் பிரிவில் சேலம் மாவட்ட அணி 2-வது இடமும், ஆண்கள் பிரிவில் சேலம் மாவட்ட அணி 3-வது இடமும் பிடித்து வெற்றி பெற்றனர். இதையடுத்து வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நேற்று சேலத்தில் நடைபெற்றது.

    இதற்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கி வெற்றி பெற்ற சேலம் மாவட்ட அணியில் இடம்பிடித்த வீரர், வீராங்கனைகளை பாராட்டி பரிசு வழங்கினார்.

    இதில் கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், துணைத்தலைவர் ராஜாராம், இணை செயலாளர்கள் சீனிவாசன், வடிவேல், வேங்கையன், நிர்வாகி நந்தன், தொழில் அதிபர் விஜயராஜ், பயிற்சியாளர் அருள் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நேபாளில் இந்தோ -நேபாள் சர்வதேச தடகள போட்டி நடைப்பெற்றது.
    • மேலும் பலரும் சாதனை படைத்த மாணவிகளை பாராட்டினர்.

    தஞ்சாவூர்:

    நேபாளில் இந்தோ -நேபாள் சர்வதேச தடகள போட்டி நடைப்பெற்றது. கூடைப்பந்து, வாலிபால், பேட்மிட்டன், டென்னிஸ், தடகளம் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியா சார்பில் 250 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தஞ்சையை சேர்ந்த சீதளாதேவி முதல் இடம் பிடித்து தங்கம் பதக்கம் வென்றார். 1500 மீட்டர் ஓட்டத்தில் வாளமர்கோட்டையை சேர்ந்த விமலா இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். வாகை சூடி சொந்த ஊரான தஞ்சை வந்த வீராங்கனைகள் சீதளாதேவி, விமலா ஆகியோருக்கு பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வீராங்கனைகளை வாழ்த்தி வரவேற்றார். மேலும் பலரும் சாதனை படைத்த மாணவிகளை பாராட்டினர்.

    • குற்றாலத்தில் சாரல் திருவிழா 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று வருகிறது.
    • மாணவ -மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    தென்காசி:

    குற்றாலத்தில் கடந்த 5-ந் தேதி தொடங்கிய சாரல் திருவிழாவில் தோட்டக்கலை துறை சார்பில் குற்றாலம் ஐந்தருவி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மலர் கண்காட்சியை தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்துகண்டு ரசித்தனர்.

    குற்றாலத்தில் சாரல் திருவிழா 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து பராசக்தி கல்லூரியில் புத்தக திருவிழாவை நடத்தி வருகிறது.

    காண வரும் மாணவ -மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. புத்தகத்திருவிழாவில் ரூ.ஆயிரத்துக்கு மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு கூப்பன் வழங்கப்படுகிறது. கடந்த 3 நாட்களில் ரூ.7 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

    • முதலிடம் பெற்ற மாணவ- மாணவிகள் தருமபுர ஆதீன மடாதிபதி முன்பு பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து காண்பித்து ஆசி பெற்றனர்.
    • பரதநாட்டியம், கர்நாடக இசைகச்சேரி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பள்ளியில் நடைபெற்ற விழாவில் திருச்சி மண்டல அளவிலான யோகாசன போட்டியில் முதலிடம் பெற்ற மாணவ- மாணவிகள் தருமபுர ஆதீன மடாதிபதி முன்பு பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து காண்பித்து ஆசி பெற்றனர்.

    மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குருஞானசம்ப ந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் இலக்கிய மன்ற தொடக்க விழா பள்ளி நிர்வாக செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் தருமபுரம் ஆதீனம் 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று மாணவ- மாணவிகளுக்கு அருளாசி வழங்கினார்.

    தொடர்ந்து பரதநா ட்டியம், கர்நாடக இசை கச்சேரி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். திருச்சி மண்டல அளவில் நடைபெற்ற யோகாசன போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்ற திருஞானசம்பந்தர் பள்ளி மாணவமாணவிகள் சக்கராசனம்,அர்த்தபா தாசனம், மயூராசனம் உள்ளிட்ட யோகாச னங்களை செய்துகாட்டினர். அவர்களுக்கு தருமபுர ஆதீனம் பரிசு கோப்பை வழங்கி ஆசி கூறினார்.

    • டி.மேட்டுப்பட்டி அரசு பள்ளியில் குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தது.
    • 1,200 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    அலங்காநல்லூர்

    பாலமேடு அருகே உள்ள டி.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் அலங்காநல்லூர், வாடிப்பட்டி ஒன்றிய அளவிலான குறுவட்ட குழு விளையாட்டு போட்டிகள் நடந்தது. குழு செயலாளர், தலைமை ஆசிரியர் சந்திரன், இணைச் செயலாளர், உடற்கல்வி ஆசிரியர் ராஜன் தலைமை தாங்கினர்.

    பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பரமசிவம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரங்கநாயகி தொடங்கி வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவர் கூடம்மாள் பழனிச்சாமி, உணவு பொருள் பாதுகாப்பு பகுப்பு ஆய்வாளர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் அழகர்சாமி ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் அலங்காநல்லூர், வாடிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட 36 பள்ளிகள் கலந்து கொண்டன. கபடி, கோகோ, கேரம் உள்பட 12 வகையான விளையாட்டுகளில் சுமார் 1,200 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    • ஈரோடு சிலம்ப கமிட்டி சார்பில் மாவட்ட அளவிலான திறந்த வெளி சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது,
    • போட்டிகளில் பங்கேற்று அதில் வெற்றி பெற்ற முதல் 3 மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் மெடல்கள் வழங்கப்பட்டது,

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர்மகளிர் கல்லூரி வளாகத்தில் ஈரோடு சிலம்ப கமிட்டி சார்பில் மாவட்ட அளவிலான திறந்த வெளி சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது,

    இந்த போட்டிகளில் பங்கேற்க திருவண்ணா–மலை, திருப்பூர்,கோவை, உடுமலை,நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டகளிலிருந்தும் 200 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி, மாணவ மாணவி–கள்வந்திருந்தனர்,

    இங்கு நெடுங்கம்பு, நடுங்கம்பு, இரட்டைகம்பு, ஒற்றைவாள்வீச்சு, இரட்டை வாள்வீச்சு, வேல்கம்பு, மான்கொம்பு, குத்து–வரிசைஉள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது,

    இதில் 10 வயதிற்கு உட்பட்டோர், 11 முதல் 14, 15 வயது முதல் 17, 18 வயது முதல் 25 என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகளில் ஒரு மாணவர் நான்கு போட்டி–களில் கலந்து கொள்ளலாம் என்ற விதிமுறைகளும் வழங்கப்பட்டிருந்தது.

    தொடர்ந்து மாணவ, மாணவிகள் போட்டிகளில் உற்சாகமாக பங்குபெற்றனர், போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களை அவரது பெற்றோர்கள் உற்சாகப்படுத்தினர்.

    மேற்கண்ட போட்டிகளில் பங்கேற்று அதில் வெற்றி பெற்ற முதல் 3 மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் மெடல்கள் வழங்கப்பட்டது,

    • கோட்டைமேட்டுப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற கிராமப்புற இளைஞர்களுக்கான சதுரங்க போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் கோட்டை மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விளையாடினர்.

    ஓமலூர்:

    ஓமலூர் ஒன்றியம் கோட்டைமேட்டுப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற கிராமப்புற இளைஞர்களுக்கான சதுரங்க போட்டி நடைபெற்றது. போட்டியில் கோட்டை மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விளையாடினர்.

    போட்டியை ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கணேசன் தொடங்கி வைத்தார். போட்டியில் ஆட்டோமேட்டிக் பகுதியில் சேர்ந்த இளைஞர் அன்பரசு முதல் பரிசை தட்டிச் சென்றார் அதே பகுதியைச் சேர்ந்த பிரேம் குமார் 2-ம் பரிசும் நந்தகோபால் 3-ம் பரிசும் பெற்றனர். இவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

    இதில் துணைத் தலைவர் மகாலட்சுமி வார்டு உறுப்பினர் ரமேஷ், ஊராட்சி செயலாளர் பூவராகவன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    • மாநில அளவிலான பாரா பேட்மிட்டன் போட்டி நடந்தது.
    • கோட்ட ெரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த்தை ஸ்டீபன் பிரகாஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    மதுரை

    திண்டுக்கல்லில் மாநில அளவிலான பாரா பேட்மிட்டன் போட்டி நடந்தது. இதில் மதுரை ெரயில்வே சிக்னல் ஊழியர் ஸ்டீபன்பிரகாஷ் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் கலந்து கொண்டு 3 கோப்பைகளை வென்றார். . இதன் மூலம் அவர் இந்தோனேசியாவில் நடக்கும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்கிறார். கோட்ட ெரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த்தை ஸ்டீபன் பிரகாஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    • கபடி போட்டியில் சுற்றுப்புற பகுதியிலிருந்து 25 கபடி அணிகள் கலந்து கொண்டது.
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது.

    உடன்குடி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு உடன்குடி வைத்தியலிங்கபுரம் 'யங்பிரண்ட்ஸ் கிளப்' கபடி அணியினர் நடத்திய மின்னொளி கபடி போட்டி நடந்தது. போட்டியில் சுற்றுப்புற பகுதியிலிருந்து 25 கபடி அணிகள் கலந்து கொண்டது.இறுதி போட்டியில் வைத்தியலிங்கபுரம் எங்பிரண்ட்ஸ்அணி முதலிடம்பெற்று வெற்றி கோப்பையை தட்டிச் சென்றது 2-வது இடத்தை லெட்சுமிபுரம் அணியும், 3-வது இடத்தை கார்த்திக் பிரதர்ஸ் அணியும், 4-வது இடத்தை முதலூர் அணியும் பெற்றது.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் வெற்றி கோப்பையை உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவரும், உடன்குடி பேரூர் தி.மு.க., செயலாளருமான சந்தையடியூர் மால் ராஜேஷ் வழங்கினார்.

    இதில் உடன்குடி பேரூர் தி.மு.க., துணைச் செயலாளர் தங்கம், மாவட்ட பிரதிநிதி ஹீபர் மோசஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க., ஒன்றிய பிரதிநிதி இசக்கிமுத்து நன்றி கூறினார்.

    • மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் 200- க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்குபெற்றனர்.
    • போட்டியில் வெற்றி பெற்ற வீரர் -வீரங்கனைகளுக்கு நாமக்கல் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கத்தின் தலைவர் சதீஷ்குமார் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கத்தின் சார்பாக மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி திருச்செங்கோடு குமரமங்கலம் மஹேந்திரா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

    இந்த மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்குபெற்றனர். சிலம்ப போட்டியை மஹேந்திரா மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் முதல்வர் ஸ்டாலின் பாக்கியநாதன் தொடங்கி வைத்தார்.

    வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு நாமக்கல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையர் கோகிலா மற்றும் திருச்செங்கோடு திமுக நகர செயலாளர் தாண்டவன் கார்த்திக்கேயன் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.

    மேலும் மாவட்ட போட்டியில் வெற்றிபெற்று முதல் இடம் பிடித்த மாணவ -மாணவியர்கள் அனைவரும் தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் நடத்தும் மாநில அளவிலான சிலம்ப போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். போட்டியில் வெற்றி பெற்ற வீரர் -வீரங்கனைகளுக்கு நாமக்கல் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கத்தின் தலைவர் சதீஷ்குமார் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    விழா முடிவில் நாமக்கல் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கத்தின் செயலாளர் நவீன்குமார் நன்றி தெரிவித்தார்.

    ×