search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227938"

    கந்தர்வகோட்டை, அறந்தாங்கி சிலட்டூரில் நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    அறந்தாங்கி தாலுகா சிலட்டூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளை முன்னிட்டு வடமஞ்சுவிரட்டு போட்டி நடைபெறும். இந்தாண்டு நடைபெற்ற போட்டியில் தஞ்சை, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 13 காளைகள் போட்டியில் பங்கேற்றன. அதே போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 117 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளனரா என மருத்துவர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர்.ஒரு காளைக்கு 9 வீரர்கள் என 25 நிமிடங்கள் ஒவ்வொரு போட்டியும் நடைபெற்றது.போட்டியில் வீரர்கள் காளைகளை அடக்கியும், காளைகள் வீரர்களிடமிருந்து தப்பித்ததும் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்ச்சாகத்தை ஏற்படுத்தியது.மொத்தம் 13 காளைகளில் பெரும்பாலான காளைகள் வீரர்களிடம் சிக்காததால், காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும் ரொக்கப்பணம், அண்டா உள்ளிட்ட நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதே போல் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுக்கா குளத்தூர் நாடு அருள்மிகு முனியாண்டவர் அருள்மிகு பிடாரியம்மன் கோவில் மகா சிவராத்திரியை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.பிடாரியம்மன் கோவில் எதிரில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு தாசில்தார் ( பொறுப்பு) தயாவதி கிறிஸ்டினா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சிக்கு கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பரமசிவம், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தமிழ் அய்யா முன்னிலை வகித்தனர்.மஞ்சுவிரட்டில் காயம் அடைந்த 11 வீரர்களுக்கு உரிய சிகிச்சை மருத்துவக் குழுவினரால் அளிக்கப்பட்டது. மஞ்சுவிரட்டை தொடர்ந்து சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும்மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் , பறவை காவடி, கரும்பு தொட்டில் காவடி, அழகு குத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.ம ற்றும் ஏராளமான பொதுமக்கள் விசிலடித்து, கைத்தட்டி ஆரவரத்துடன் கண்டு ரசித்தனர். காவல் துறை கண்காணிப்பாளர் தினேஷ்குமார் மற்றும் கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கூகனூரில் 51 ஜோடி மாடுகள் சீறிப்பாய்ந்து சென்றன

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி தாலுகா கூகனூர் கிராமத்தில் ஆண்டுதோறும்மாட்டு வண்டி எல்கை பந்தையம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு நடைபெற்ற பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை,மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 51 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன.3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 8 ஜோடி மாடுகளும், கரிச்சான்மாடு பிரிவில் 22 ஜோடி மாடுகளும், ஆறு பல் மாடு பிரிவில் 21ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடு உரிமையாளர்களுக்கு மொத்தம் 2 லட்சம் ரூபாய் பணமும், கோப்பைகளும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.கூகனூர் கிராமத்தார்கள் விழாவிற்கான ஏற்பாடு களை செய்திருந்தனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்
    • மொத்தம் ரூ.18 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட மகளிர் திட் டம் சார்பில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூ ராட்சிக்கு உட்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு இடையே கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் நடந்தன.

    இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய விடுதி காப்பா ளினிகளுக்கும் காசோலை மற்றும் கேடயங்கள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத் தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை மற்றும் கேடயம் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:-

    தமிழ்நாடு நகர்புற வாழ் வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர் கள் மற்றும் பகுதி அளவி லான கூட்டமைப்பு உறுப்பி னர்களிடையே ஒற்றுமையை பலப்படுத்தவும், குழுக்களி டையே ஆரோக்கியமான போட்டிகளை உருவாக்கிட வும்போட்டிகள் நடத்தப்பட் டன. மாநகராட்சி, நகராட்சி கள் மற்றும் பேரூராட்சி பகு திகளில் சுய உதவிக் குழுக்க ளால் அடைந்த பலன்கள், சமூக அங்கீகாரம், சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப் புகளில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டி களில் மொத்தம் 329 பேர் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டிகளில் மாநக ராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் முதல் 3 இடங்களை பெற்ற நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அந்த வகை யில் ஒவ்வொரு தலைப்பிற் கும் முதல் 3 இடங்களை பெற்ற 27 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்க பட்டன.

    மாவட்ட பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத்துறை சார்பில் 2021-2022-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான சிறந்த விடுதி காப்பாளினிகளாக தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.5 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.18 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, தனித்துணை கலெக்டர் திருப்பதி, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) இலக்குவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலர் ஹரிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மொத்தம் 41 மனமகிழ் மன்றங்கள் உள்ளன.
    • சேலம் சரக காவல்துறை துணை தலைவர் ராஜேஸ்வரி உத்தரவின் படி 41 மனமகிழ் மன்றங்களிலும் ஓவிய போட்டி நடத்தப்பட்டது. இதில் 2000 மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

    சேலம்:

    சேலம் சரகத்தில் உள்ள சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மொத்தம் 41 மனமகிழ் மன்றங்கள் உள்ளன. இதில் நலிவுற்ற குழந்தைகளை ஊக்குவிக்கவும், அவர்களை சிறுவயதிலேயே குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்கவும் மற்றும் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாக்கவும் காவல் மனமகிழ் மன்றங்கள் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

    சேலம் சரக காவல்துறை துணை தலைவர் ராஜேஸ்வரி உத்தரவின் படி 41 மனமகிழ் மன்றங்களிலும் ஓவிய போட்டி நடத்தப்பட்டது. இதில் 2000 மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அவர்களுக்கு அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்கள். இந்த தகவலை சேலம் சரக காவல்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • நாமக்கல் மாவட்டம், ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் நவீன்குமார், சென்னையில் நடந்த மாநில அளவிலான இளையோர் செஸ் போட்டியில், முதலிடம் பெற்றார்.
    • 17 மாநிலங்களை சேர்ந்த, மாணவ, மாணவியர் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    நாமக்கல்:

    மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தி முடிக்கப்பட்ட பின்னர், தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் செஸ் போட்டி பற்றிய விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்பட்டு உள்ளது. பள்ளி மாணவர்கள் மாநில, தேசிய அளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள்.

    அந்த வகையில் நாமக்கல் மாவட்டம், ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் நவீன்குமார், சென்னையில் நடந்த மாநில அளவிலான இளையோர் செஸ் போட்டியில், முதலிடம் பெற்றார்.

    அதையடுத்து, மும்பையில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டார். அதில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், மகாராஸ்டிரா உள்பட, 17 மாநிலங்களை சேர்ந்த, மாணவ, மாணவியர் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    போட்டியில், செமி பைனலில், மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மாணவரை எதிர்த்து விளையாடிய நவீன்குமார் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதி போட்டியில், தமிழக மாணவரை எதிர்த்து விளையாடி, வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

    தேசிய அளவில் சாதனை படைத்து, தமிழகத்துக்கும், நாமக்கல் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்த மாணவர் நவீன்குமாரை, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் குமார், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் ரவி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், பள்ளி தலைமை யாசிரியர் ஆன்ட்ரூஸ் உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    • கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டி தொடங்கியது
    • கரூர் டி.எஸ்.பி. தேவராஜ் போட்டியை தொடங்கி வைத்தார்.

    கரூர்:

    கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம், கரூர் பிஎன்ஐ இணைந்து நடத்தும் அகில இந்திய அளவிலான பெண்கள் கூடைப்பந்து போட்டி கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் மின்னொளியில் தொடங்கியது. முதல்போட்டியில் சாய் ஸ்போர்ட்ஸ் சென்டர் சட்டீஸ்கர் அணியும், ரைசிங் ஸ்டார் சென்னை அணியும் மோதின. வீராங்கனைகளை அறிமுகத்திற்கு பின்னர் கரூர் டிஎஸ்பி தேவராஜ் போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்ட கூடைப்பந்து கழக சேர்மன் தனபதி, தலைவர் கார்த்தி, துணைத் தலைவர் குழந்தைவேல், செயலாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள், பிஎன்ஐ நிர்வாகிகள், கரூர் நகர பிரமுகர்கள், கூடைப் பந்து ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

    • 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
    • வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு

    ஆலங்குடி, 

    ஆலங்குடி அருகே கலிபுல்லா நகரில் உள்ள நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நூலக வளாகத்தில் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த ஓவியப் போட்டியில் கல்லாலங்குடியை சேர்ந்த சுவேதாஸ்ரீ முதலிடமும், கமலி இரண்டாமிடமும், தர்ஷினி மூன்றாமிடமும் பெற்றனர்.ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக வரைந்த மாணவர்களைப் பாராட்டி ஆலங்குடி வாசகர் வட்டத்தலைவர் பாபு ஜான் மற்றும் கவிஞர்.ராமராமநாதன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். விழாவினை நூலகர் ரெங்கசாமி, ஆசிரியர் கருணாகரன், ஆசிரியர் சசிகுமார்,தன்னார்வலர் அரங்குளவன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் தங்களை நூலத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். நூலகர் ரெங்கசாமி நன்றி கூறினார்.

    • 1856 மாணவர்கள் கலந்து கொண்டனர்
    • மாவட்ட எஸ்பி தொடங்கி வைத்தார்

    அரியலுார்,

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இந்த போட்டிகளானது பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொது பிரிவு, அரசு ஊழியர்கள,் மாற்றுத்திறனாளிகள் என தனித்தனியாக நடைபெற உள்ளது. நேற்று தடகளம் பிரிவில் 364 மாணவர்கள், 305 மாணவிகள் என மொத்தம் 669 மாணவர்கள், கபடி போட்டியில் 780 மாணவ, மாணவிகள், வலைப்பந்து போட்டியில் 192 மாணவர்கள், சிலம்பம் போட்டியில் இரட்டை கம்பு வீச்சு, ஒற்றைக் கம்புவீச்சு, மான் கொம்பு, சுருள்வாள் உள்ளிட்ட பிரிவுகளில் 128 மாணவ, மாணவிகள், டேபிள் டென்னிஸ் போட்டியில் 87 மாணவ, மாணவிகள் என மொத்தம் 1,856 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வருகிற 24-ந் தேதி இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. அரியலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம், கீழப்பழூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தடகளம், குழு விளையாட்டு போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிப்பு
    • மாற்றுத்திறனாளிகளுக்கும் போட்டி

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் கீழ்கண்ட தேதிகளில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்தது: பள்ளி மாணவ, மாணவிகளுக்காக இன்று கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து மேசை பந்து போட்டிகளும், 6.2.2023 அன்று கையுந்துபந்து, வளைகோல்பந்து, இறகுபந்து, கால்பந்து ஆகிய போட்டிகளும், 21.2.2023 அன்று நீச்சல் போட்டியும் நடைபெறுகிறது. 11.2.2023 அன்று கிரிக்கெட் விளையாட்டு கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.கல்லுரி மாணவ மாணவிகளுக்கு ....10.2.2023 அன்று தடகளம், கபாடி, மேசைபந்து, சிலம்பம், கையுந்துபந்து, இறகுபந்து கால்பந்து கூடைப்பந்து போட்டியும், 21.2.2023 அன்று நீச்சல் போட்டியும், 20.2.2023 அன்று கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிரிக்கெட் போட்டியும் நடைபெறுகிறது.பொதுப்பிரிவினருக்கு.... 14.2.2023 அன்று தடகளம், கபாடி, சிலம்பம், கையுந்துபந்து. இறகுபந்து போட்டியும், 24.2.2023 அன்று கிரிக்கெட் விளையாட்டில் ஆண்களுக்கு மட்டும் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.மாற்றுத்திற னாளிகளுக்கு 21.2.2023 அன்று தடகளம், இறகுபந்து, கபாடி, எறிபந்து, வாலிபால் ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது.அரசு ஊழி யர்களுக்கு... 16.2.2023 அன்று தடகளம், இறகுபந்து, கபாடி ஆகிய விளையாட்டுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கும், கையுந்துபந்து விளையாட்டில் ஆண்களுக்கு மட்டும் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், 17.2.2023 மான்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செஸ் போட்டியும் நடைபெறுகிறது.ஆன்லைனில் பதிவு செய்து கொள்பவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள கண்டிப்பாக அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் பதிவு விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்கள் கொண்டு வராத வீரர், வீராங்கனைகள் கண்டிப்பாக மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கைப்பேசி 7401703499 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • ஆண்கள் பிரிவில் பங்கேற்ற 4 அணிகளும் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
    • வீரர், வீராங்கனைகளை தமிழக போல்ரிங் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.

    தஞ்சாவூர்:

    தேசிய அளவிலான 9-வது போல்ரிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் பஞ்சாப் மாநிலம் சர்தூல்கர் மாநிலத்தில் நடைபெற்ற நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா, டெல்லி, ராஜஸ்தான் உள்பட 14 மாநிலங்களைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    இதில் மினி சப் -ஜூனியர், சப்- ஜூனியர், ஜுனியர்,சீனியர், சூப்பர் சீனியர் என 4 பிரிவுகளின் அடிப்படையில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டன.

    இந்த போட்டியில் தமிழ்நாட்டி னைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகளும் பங்கேற்றனர்.

    ஒவ்வொரு பிரிவிலும் 9 வீரர், வீராங்கனைகள் என தஞ்சை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என ஆண்கள்பிரிவில் 36 வீரர்களும், பெண்கள் பிரிவில் 36 வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.

    இதில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் அனைத்து பிரிவிலும் சிறப்பாக பங்கேற்று விளையாடினர். இதில் ஆண்கள் பிரிவில் பங்கேற்ற 4 அணிகளும் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    பெண்கள் பிரிவில் பங்கேற்ற அணிகளில் 4-ல் 3 பிரிவினர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    இந்த வீரர் , வீராங்கனைகள் தமிழ்நாடு போல்ரிங் கழகத்தின் செயலாளரும், தென்னந்திய போல் ரிங் கழகத்தின் செயலாளருமான செந்தில்நாதன் (காஞ்சீபுரம்), தலைவர் புவேனஸ்வரி (தஞ்சை), தலைமை பயிற்சியாளர் சுந்தரமூர்த்தி (சென்னை) ஆகியோரின் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டு பங்கேற்றனர்.

    மேலும் சாம்பியன் பட்டம் பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளை, தமிழக போல் ரிங் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.

    தமிழக அணி சார்பில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மார்ச் மாதம் நடைபெற உள்ள, சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    மேலும் மார்ச் மாதம் நடைபெறக்கூடிய சர்வதேச போட்டி தமிழகத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் சைக்கிள் ஓட்டி வந்து போட்டியை தொடங்கி வைத்தார்.
    • பரவை, பாப்பாகோயில் உள்ளிட்ட பகுதி வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் வரை போட்டி நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரி மற்றும் தனியார் மருத்துவமனை சார்பாக போதை பழக்கங்களுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    21 கிலோமீட்டர், 10.5 கிலோமீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    செருதூர் முதல் தெத்தி வரை 21 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் போட்டியை புத்தூரில் இருந்து பால்பண்ணைசேரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேம்ப் அலுவலகத்தில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் சைக்கிள் ஓட்டி வந்து தொடங்கி வைத்தார்.

    வேளாங்கண்ணி, பரவை, பாப்பாகோயில் உள்ளிட்ட பகுதி வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த போட்டியை, வழி நெடுகிலும் சாலையின் இருபுறம் நின்ற ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்ததனர்.

    மேலும் போட்டியில் பங்கு பெற்றவர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.

    • வெற்றி ெபற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
    • ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.இதில், புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 9 அணிகள் கலந்துகொண்டன.தொடக்கத்தில் ஒவ்வொரு அணியில் இருந்தும் ஒருவர் மீது ஒருவராக 3 பேர் வீதம் வழுக்கு மரத்தில் ஏ றுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.ஆனால், இலக்கை யாரும் தொடாததால் வீரர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் 7 பேர் வீதம் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், பனங்குளம் கிங்க் பிஷர் எனும் அணியினர் 47 அடி உயரமுள்ள மரத்தின் உச்சி வரை லாவ கமாக ஏறி வெற்றி பெற்றனர்.இது வரை நடைபெற்ற போட்டிகளில் இல்லாத அளவிற்கு, அதிக உயரமுள்ள மரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான வீரர்கள் ஏறி இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பதாக விழாக்குழுவினர் தெரிவி த்தனர்.வெற்றி பெற்ற அணியினருக்கு ரூ.15, ஆயிரம் ரொக்கம், கோப்பை மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும், கலந்துகொண்ட அனைத்து அணியினருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. சுமார் 5 மணி நேரம் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியை நூற்றுக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர்.

    ×